ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 1, 2, 3.
செவ்வாய்: அஸ்வினி- 1, ரேவதி- 4 (வ).
புதன்: அஸ்தம்- 4, சித்திரை- 1, 2.
குரு: உத்திராடம்- 1.
சுக்கிரன்: உத்திரம்- 2, 3, 4, அஸ்தம்- 1.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 2.
கேது: கேட்டை- 4.
கிரக மாற்றம்:
26-10-2020- மீனச் செவ்வாய். (வக்ரம்).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
25-10-2020- கும்பம்.
28-10-2020- மீனம்.
30-10-2020- மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் மேˆத்தில் ஆட்சியாக இருக்கிறார். 26-ஆம் தேதி 12-ஆமிடத்துக்கு (மீனத்தில் வக்ரமாக) மாறுகிறார். பொதுவாக, ராசிநாதனோ லக்னநாதனோ வக்ரமாக இருந்தால், எந்த வீட்டிலிருக்கிறாரோ அந்த வீட்டு ஆதிபத்தியப் பலனை மிகவலுவாகச் செய்வாரென அர்த்தம். இதுதான் வக்ரத்தில் உக்ரபலம் என்பதன் பொருள். நல்ல ஆதிபத்தியம் பெற்றால் நற்பலனும், கெட்ட ஆதிபத்தியம் பெற்றால் துர்பலனும் உண்டாகும். உங்கள் ராசிக்கு அவர் ராசியிலேயே வக்ரமாக இருக்கிறார். 26-ஆம் தேதி விரய ஸ்தானத் துக்கு வக்ரமாக மாறுகிறார். எனவே, ஜாதகரீதியாக நல்ல தசாபுக்திகள் நடந்தால் நற்பலன்களை வலுவாகச் செய்யும். கெட்ட தசாபுக்திகள் நடந்தால் கெட்ட பலன்களை வலுவாகச் செய்யும். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற குறளுக்கேற்றபடி, அதன் உண்மை நிலையை ஆராய்ந்து செயல்படவேண்டும். "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்றில்லாமல் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து, தேர்ந்து தெளிந்து செயல்பட வேண்டும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்ப தால், இனிப்பு முலாம் பூசிய கசப்பு மாத்திரைபோல (சுகர் கோட்டட் டேப்லட்), உங்களுக்கு உண்மையை நிலையை உணர்த்தாமல் ஏமாற்றும். கடும் விஷமான பாம்புக்கு "நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகவே, ராகுவும் கேதுவும் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானத்திலும், 8- சஞ்சல ஸ்தானத்திலும் இருப்பதால் உங்களைக் குழப்பலாம். குழப்பத்திலிருந்து விடுபட்டுத் தெளிந்து செயலாற்றவேண்டும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசியில் ஜென்ம ராகுவும், 7-ல் சப்தமக் கேதுவும் இருக்கிறார்கள். ராகுவுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் கன்னியில் நீசபங்க ராஜயோகமாகிறார். கேது வுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 12-ல் மறைந்தாலும் ஆட்சிபலம் பெறுகிறார். நவகிரகங்கள் ஒன்பது எனச் சொல்லப்பட்டாலும், ராகு- கேதுவுக்கு ஆட்சி, உச்ச வீடுகள் அமையவில்லை, எந்த இடத்தில் இருக்கிறார் களோ அந்த வீட்டுப் பலனைச் செய்வார்கள். மேலும், தினசரி ராகு காலத்தில் ராகுவுக்கும், எமகண்ட நேரத்தில் கேதுவுக்கும் உரிய காலமாகும். தினசரி ராகுவும் கேதுவும் தனித் தனியே ஒன்றரை மணிநேரம் எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள். ராகு காலத்தில் ராகுவும், எமகண்ட நேரத்தில் கேதுவும் பலம்பெறுவார்கள். ராசிநாதன் சுக்கிரன் நீச ராசியிலிருந்தாலும் நீசபங்க ராஜயோகமாகி றார். அதனால் உங்களுடைய திட்டங்களும், செயல்களும் தொடக்கத்தில் மந்தகதியாகத் தெரிந்தாலும், முடிவில் முயலை முந்திய ஆமைபோல வெற்றியாக முடியும். ஒருசமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணர் கவிஞர் வாலியிடம், ""முயல்- ஆமைக்கதையில் முயல் ஏன் தோற்றது?'' என்று கேட்டார். வாலிக்கு உடனே பதில் தெரியவில்லை. யோசித்துப் பார்த்து மறுநாள், ""முயலாமைதான் காரணம்'' என்றார். அதற்கு கலை
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 03065.
கிரக பாதசாரம்:
சூரியன்: சுவாதி- 1, 2, 3.
செவ்வாய்: அஸ்வினி- 1, ரேவதி- 4 (வ).
புதன்: அஸ்தம்- 4, சித்திரை- 1, 2.
குரு: உத்திராடம்- 1.
சுக்கிரன்: உத்திரம்- 2, 3, 4, அஸ்தம்- 1.
சனி: பூராடம்- 4.
ராகு: மிருகசீரிடம்- 2.
கேது: கேட்டை- 4.
கிரக மாற்றம்:
26-10-2020- மீனச் செவ்வாய். (வக்ரம்).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- மகரம்.
25-10-2020- கும்பம்.
28-10-2020- மீனம்.
30-10-2020- மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் மேˆத்தில் ஆட்சியாக இருக்கிறார். 26-ஆம் தேதி 12-ஆமிடத்துக்கு (மீனத்தில் வக்ரமாக) மாறுகிறார். பொதுவாக, ராசிநாதனோ லக்னநாதனோ வக்ரமாக இருந்தால், எந்த வீட்டிலிருக்கிறாரோ அந்த வீட்டு ஆதிபத்தியப் பலனை மிகவலுவாகச் செய்வாரென அர்த்தம். இதுதான் வக்ரத்தில் உக்ரபலம் என்பதன் பொருள். நல்ல ஆதிபத்தியம் பெற்றால் நற்பலனும், கெட்ட ஆதிபத்தியம் பெற்றால் துர்பலனும் உண்டாகும். உங்கள் ராசிக்கு அவர் ராசியிலேயே வக்ரமாக இருக்கிறார். 26-ஆம் தேதி விரய ஸ்தானத் துக்கு வக்ரமாக மாறுகிறார். எனவே, ஜாதகரீதியாக நல்ல தசாபுக்திகள் நடந்தால் நற்பலன்களை வலுவாகச் செய்யும். கெட்ட தசாபுக்திகள் நடந்தால் கெட்ட பலன்களை வலுவாகச் செய்யும். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில் "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்ற குறளுக்கேற்றபடி, அதன் உண்மை நிலையை ஆராய்ந்து செயல்படவேண்டும். "கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்றில்லாமல் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து, தேர்ந்து தெளிந்து செயல்பட வேண்டும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்ப தால், இனிப்பு முலாம் பூசிய கசப்பு மாத்திரைபோல (சுகர் கோட்டட் டேப்லட்), உங்களுக்கு உண்மையை நிலையை உணர்த்தாமல் ஏமாற்றும். கடும் விஷமான பாம்புக்கு "நல்ல பாம்பு' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஆகவே, ராகுவும் கேதுவும் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானத்திலும், 8- சஞ்சல ஸ்தானத்திலும் இருப்பதால் உங்களைக் குழப்பலாம். குழப்பத்திலிருந்து விடுபட்டுத் தெளிந்து செயலாற்றவேண்டும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசியில் ஜென்ம ராகுவும், 7-ல் சப்தமக் கேதுவும் இருக்கிறார்கள். ராகுவுக்கு வீடுகொடுத்த சுக்கிரன் கன்னியில் நீசபங்க ராஜயோகமாகிறார். கேது வுக்கு வீடுகொடுத்த செவ்வாய் 12-ல் மறைந்தாலும் ஆட்சிபலம் பெறுகிறார். நவகிரகங்கள் ஒன்பது எனச் சொல்லப்பட்டாலும், ராகு- கேதுவுக்கு ஆட்சி, உச்ச வீடுகள் அமையவில்லை, எந்த இடத்தில் இருக்கிறார் களோ அந்த வீட்டுப் பலனைச் செய்வார்கள். மேலும், தினசரி ராகு காலத்தில் ராகுவுக்கும், எமகண்ட நேரத்தில் கேதுவுக்கும் உரிய காலமாகும். தினசரி ராகுவும் கேதுவும் தனித் தனியே ஒன்றரை மணிநேரம் எடுத்துக் கொண்டு செயல்படுவார்கள். ராகு காலத்தில் ராகுவும், எமகண்ட நேரத்தில் கேதுவும் பலம்பெறுவார்கள். ராசிநாதன் சுக்கிரன் நீச ராசியிலிருந்தாலும் நீசபங்க ராஜயோகமாகி றார். அதனால் உங்களுடைய திட்டங்களும், செயல்களும் தொடக்கத்தில் மந்தகதியாகத் தெரிந்தாலும், முடிவில் முயலை முந்திய ஆமைபோல வெற்றியாக முடியும். ஒருசமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணர் கவிஞர் வாலியிடம், ""முயல்- ஆமைக்கதையில் முயல் ஏன் தோற்றது?'' என்று கேட்டார். வாலிக்கு உடனே பதில் தெரியவில்லை. யோசித்துப் பார்த்து மறுநாள், ""முயலாமைதான் காரணம்'' என்றார். அதற்கு கலைவாணர், ""நீ சொன்னது சரிதான். லேட்டாகப் (தாமதமாக) பிழைத்துக் கொள்வாய்'' என்றார். இவ்வாறே, ராசிநாதன் நீச ராசியில் நின்ற விளைவு- எல்லாம் தாமத மாக செயல்படும். 8-ல் குருவும் சனியும் கூடிய தால், தாமதமாக உங்கள் முயற்சிகள் வெற்றியடை யும். அதனால் விடாமுயற்சி அவசியமாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 4-ல் ஆட்சியாக இருக்கிறார். மிதுன ராசியை குருவும் சனியும் பார்க்கிறார் கள். மிதுன ராசிக்கு சனி 9-க்குரியவர். குரு 10-க்குரியவர். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. அடுத்து 11-ல் செவ்வாய் ஆட்சி. எனவே, உங்களின் முயற்சிகளில் தளர்ச்சியிருக்காது; வளர்ச்சியே காணப்படும். வெற்றிவாகை சூடலாம். 3-க்குரிய சூரியன் 5-ல் நீச ராசி யிலிருந்தாலும், அவருக்கு வீடுகொடுத்த சுக்கிரன் 4-ல் நீசம் என்பதால், இருவரும் நீசபங்க ராஜயோகமடைகிறார்கள். ஆகவே, அரசு சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களும் முழுமையாக வெற்றி யடையும்; எதுவும் சோடை போகாது. தெளிவாகச் சொன்னால் அரசு ஊழியர் களுக்கும், அரசியல் கட்சியில் செயல்படு வோருக்கும் இக்காலம் நற்காலம், பொற்காலமாகும். 5-க்குரிய சுக்கிரன் 4-ல் புதனோடு சேர்ந்து நீசபங்கமாவதால், பிள்ளைகள்வகையில் நல்லவை நடைபெறும். மனதில் வகுத்த திட்டங் களெல்லாம் நிறைவேறும். மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பிள்ளைகளால் பெற்றோ ரும், பெற்றோரால் பிள்ளைகளும் பெருமை யடையும் காலமிது. "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்', "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்' ஆகிய குறள்களுக்குத் தகுந்தவாறு, பெற்றோரும் பிள்ளைகளால் பெருமை பெறலாம். பிள்ளைகளும் பெற்றோரால் புகழ்பெறலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 10-ல் செவ்வாய் ஆட்சியாக இருக்கிறார். அவரை 9-க்குரிய குரு 6-ல் மறைந்தாலும் ஆட்சிபெற்றுப் பார்க்கிறார். கடக ராசிக்கு குரு 9-க்குரியவர். செவ்வாய் 10-க்குரியவர். இந்தப் பார்வை யின் பலனாக தர்மகர்மாதிபதி யோகம் அமைகிறது. ஆயிரக்கணக்கான யோகங்கள் இருந்தாலும், ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதி பதி யோகம் அமைந்துவிட்டால், அந்த ஜாதகர் எப்பொழுதும் தோல்வியடை வதில்லை. வற்றாத ஜீவநதியைப்போல, புகழுக்கும் பெருமைக்கும் பாத்திரமாகலாம். "நெய் தொன்னைக்கு ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா?' எனப் பிரித்துப் பார்க்கமுடியாத அளவில், பிள்ளை களுக்கும் பெற்றோருக்கும் ஏற்படும் நட்பும் உறவும் செயலும் பிரித்துப் பார்க்க முடியாதபடி பெருமையாக அமையும்; பாலும் நீரும் கலந்ததுபோல கலந்துவிடும். ஒட்டாத உறவு எப்படியிருக்குமெனில், நீரும் எண்ணெயும்போல ஒட்டாமலிருக்கும் அல்லது தாமரை இலை தண்ணீர் தண்ணீர்போல எனவும் சொல்லலாம். குருவும் சனியும் 6-ல் மறைவெனினும், 9-க்குரிய குரு 10-க்குரிய செவ்வாயைப் பார்க்கும் பலன் மேற்சொன்னதுதான். 4-ல் சூரியன் நீச ராசியில் நின்றாலும், சுக்கிரனும் நீசமடைவதால் நீசபங்க ராஜயோகம். எனவே, தாயார் அல்லது தன்சுகம் ஆகியவற்றில் சிலசமயம் மைனஸ் பாயின்ட் பலன்கள் நடைபெற இடமுண்டு.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 3-ல் நீசமாக இருந்தாலும், வீடுகொடுத்த சுக்கிரன் 2-ல் நீசமென்பதால் சூரியன், சுக்கிரன் இருவருமே நீசபங்க ராஜயோகமடைகிறார்கள். சூரியன் ராசிநாதன்; சுக்கிரன் 10-ஆமிடத்து அதிபதி. எனவே, உங்களுடைய திட்டங்களும், முயற்சிகளும், செயல்பாடுகளும் குற்றங் குறை கூறமுடியாதபடி, தடையேதும் இல்லாதபடி வெற்றிகரமாக இயங்கும். ராஜகாரியங்களில் முழுவேகமும் வெற்றியும் உண்டாகும். 6-க்குரியவரான சனியும், 8-க்குரியவரான குருவும் இணைந்து 5-ல் இருப்பது ஒருவகையில் உங்களுக்கு மனக் கிலேசம் அல்லது மனவருத்தங்களை உண்டாக்கும். பெரும்பாலும் மனைவி அல்லது பிள்ளைகள்வகையில் அந்தத் தொல்லைகளை அனுபவிக்கலாம். அதேசயம் "நீரடித்து நீர் விலகாது' என்பதுபோலவும், "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை' என்பதுபோலவும் பெருந்தன்மையாக நடந்துகொண்டால் பிரிவினை பேதத்துக்கும் பகைமை உணர்வுக்கும் இடமில்லை. பைபிளில், "எவனொருவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறானோ அவன் இறைவன் சந்நிதியில் உயர்த்தப்படுகிறான்' என்றொரு வாசகம் உண்டு. இதன்பொருள்- பணிவு உயர்வு தரும் என்பதுதான். அதாவது, "ஈகோ' எல்லாரையும் கீழே தள்ளிவிடும். அதற்கு இடம் தரக்கூடாது. தேக ஆரோக்கியம், பொருளாதாரம், வாழ்க்கை முன்னேற்றம் எல்லாவற்றிலும் சிறப்பான பலன்களை அடையலாம்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 2, 9-க்குரிய சுக்கிரன் நீசபங்க ராஜயோகமாக சம்பந்தப்படுகிறார். இன்னொருவகையில் சுக்கிரன் 9-க்குரியவர். புதன் 10-க்குரியவர். அவர்களின் சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கை எனப்படும். ஏற்கெனவே கூறியபடி, ஆயிரக்கணக்கான யோகங்கள் ஒரு ஜாதகத்தில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமிருந்தால், அந்த ஜாதகர் சொல்லி கில்லியடிக்கலாம். தர்ம ஸ்தானம் என்பது திரிகோண ஸ்தானம். (9-ஆமிடம்). இது இறையருளைக் குறிக்கும். கர்ம ஸ்தானம் என்பது கேந்திர ஸ்தானம்- முயற்சியைக் குறிக்கும். மனிதன் முயல்கிறான்; இறைவன் ஈடேற்றி வைக்கிறான் எனப் பொருள். (மனிதன் நினைக்கிறான், இறைவன் நிறைவேற்றுகிறான்). இங்கொரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். கவியரசர் கண்ணதாசன், "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை' என்று எழுதினார். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, "எழுதி எழுதி மேலே செல்லும் விதியின் கை' என்று பாடினார். அதாவது, காலண்டரில் கிழிக்கப்பட்ட தேதி மீண்டும் வராது என்பதுபோல, கடந்தகாலத்தையே நினைத்துக் கலங்காமல், நிகழ்காலத்தை நினைத்துக் கடமைகளை நிறைவேற்றுங்கள். தொழில், வியாபாரத் துறையில் முற்போக்கான சூழ்நிலை ஏற்படும். உறவினர் நடத்தும் விருந்து விழாக்களில் கலந்துகொள்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். எதிர்கால இன்ப வாழ்வுக்கு நல்ல அஸ்திவாரம் அமைக்கப்படும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 12-ல் நீச ராசியிலிருந்தாலும், அவருக்கு வீடு கொடுத்த புதன் ஆட்சியென்பதால் சுக்கிரன் நீசபங்கமடைகிறார். அதேபோல, துலா ராசி யில் நீசமாக நிற்கும் சூரியனும் நீசபங்க ராஜயோகமடைகிறார். 7-ல் செவ்வாய் ஆட்சிபெறுவதாலும், அவரை குரு பார்ப்ப தாலும் நடந்துமுடிந்த ஏழரைச்சனியில் பிரிந்த குடும்பம் இப்போது ஒன்றுசேரும். சிதைந்துபோன உறவு கசந்த நிலை கடந்து, இணைந்து வாழும் சூழ்நிலை உண்டாகும். 7-ஆமிடத்தை குரு பார்ப்பதன் பலன் அது தான். 3-ல் குரு, சனி கூடி நின்று 7-ஆமிடத் தையும், 7-க்குரிய செவ்வாயையும் பார்ப்பதால், திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண யோகம் ஏற்படும். வருத்தமோடு பிரிந்திருக்கும் தம்பதிகள் கருத்தொற்றுமையாகி இணைந்து இல்லறத்தை நல்லறமாக்கலாம். "இல்லாள்' என்பதன் பொருள் "எல்லாமுடையவள்' என்பதாகும். "இல்லத்தில் ஆள்கிறவள்' எனவும் சொல்லலாம். ஆனால், "இல்லான்' எனில் "எல்லாமிருந்தும் எதுவுமில்லாதவன்' எனப் பொருள். தமிழ் வார்த்தைக்கு எவ்வளவு வேறுபட்ட அர்த்தம் காணப்படுகிறது பாருங் கள்! அமெரிக்காவுக்கு சுவாமி விவேகானந்தர் சென்றிருந்தபோது, அங்குள்ள நாத்திகவாதி ஞ்ர்க் ண்ள் ய்ர் ஜ்ட்ங்ழ்ங் என்று எழுதினார். விவேகானந் தர் ஜ்-க்கு அருகில் இடம்விட்டு ஞ்ர்க் ண்ள் ய்ர்ஜ் ட்ங்ழ்ங் என்றாக்கிவிட்டார். ஆக, எப்போது இல்லை எனச் சொல்கிறோமோ அதன் அர்த்தம் மறைவாக இருக்கிறது என்பதாகும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் ஆட்சிபெறுகிறார். ஆட்சி, உச்சம் பெறும் கிரகங்களை மறைவு தோˆம் பாதிக்காது. செவ்வாயை நீசமடைந்த சுக்கிரன் பார்க்கிறார். செவ்வாய் நின்ற வீட்டுக்கு 9, 10-க்குரிய குருவும் சனியும் ராசிக்கு 2-ல் இருப்பது சிறப்பு. நடக்குமா- நடக்காதா என ஏங்கித் தவித்த காரியங்களெல்லாம் எதிர்பாராதவிதமாகக் கைகூடும். குரு ஆட்சிபெறுவதால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வீடு, மனை, கட்டடம், வாகனம் போன்ற வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். சுபமுதலீடுகள் செய்யலாம். பணப் பற்றாக்குறையை சமாளிக்க தவணைமுறையில் கடன் வசதிகளும் கிடைக்கும். ஏழரைச்சனியின் கடைசிக்கூறு நடைபெறுகிறது. 2020, டிசம்பரில் சனிப்பெயர்ச்சி. அப்போது ஏழரைச்சனி முழுமையாக முடிந்துவிடும். 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு இது முதல் சுற்று, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் சுற்று, 60 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு மூன்றாம் சுற்று. முதல் சுற்று மங்கு சனி, இரண்டாம் சுற்று பொங்குசனி, மூன்றாம் சுற்று மரணச்சனி எனப் பொதுவாகச் சொல்வார்கள். சனியோடு குரு கூடியிருப்பதால், உங்களுக்கு எந்தச் சுற்று நடந்தாலும் அந்தச் சுற்று பொங்குசனிக்குச் சமமாகவே பூரிப்பான பலன்களைத் தரும். தேன் தானும் கெடாது. தன்னுடைய பொருட் களையும் கெடவிடாது. அதேபோல, நல்லோர் சேர்க்கை நல்லதாகவே அமையும். குரு நல்லவர்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு அங்கு ஆட்சியாக இருக்கிறார். 5-க்குரிய செவ்வாயும் 5-ல் ஆட்சியாக இருக்கிறார். 9-க்குரிய சூரியனும் 11-ல் நீசபங்க ராஜ யோகமாக நின்று செவ்வாயின் பார்வை யைப் பெறுகிறார். செவ்வாய் சூரியனின் உச்ச ராசிநாதனாவார். மேற்கண்ட காரணங் களால் உங்களுக்கு ஜென்மச்சனி நடந்தாலும்- அது எந்தச் சுற்றாக இருந்தாலும் பொங்கு சனிக்குச் சமமாகவே நற்பலனைத் தரும். மேலும், ராசிநாதன் குரு ஆட்சிபெற்று செவ்வாயையும் பார்க்கிறார்; சூரியனின் வீடான சிம்மத்தையும் பார்க்கிறார். எனவே, ஒருவகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், அவை பயனுள்ள செலவு களாகவும், பலன் தரும் செலவுகளாகவும் மாறிவிடும். சிலர் தொழில் சம்பந்தமாக வியாபார விருத்தியைக் கருதி கடல்கடந்து தூரதேச இடஙகளுக்குப் பயணம் செய்யலாம். குடும்பத்தைவிட்டு விலகி தொலைதூர இடத்தில் வேலை பார்ப்பவர்கள் விரும்பிய இடப்பெயர்ச்சியை ஏற்று குடும்பத்தோடு இணைந்து மகிழ்ச்சியடையலாம். கல்வி அல்லது வேலை விˆயமாக வெளியூர் அல்லது வெளிமாநில முயற்சி செய்கிற வர்களுக்கும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இடப்பெயர்ச்சியும் அமையும். அதேபோல, ராசியில்லாத அல்லது வசதிக் குறைவான வீடுகளில் வசிப்போரும் சௌகரிய மான, வசதியான இடங்களுக்கு மாறலாம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு 2020, டிசம்பர்வரை ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. அவருடன் குருவும் கூடியிருப்பதால், எல்லா விரயங்களும் நல்ல விரயங்களாக- சுபச்செலவுகளாக மாறிவிடும். படிப்பு, வேலை, உத்தியோகம், தொழில் என எல்லாவகையிலும் முன்னேற்றமான நற்பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த ஏழரைச்சனியைப் பொங்குசனியெனப் போற்றி வரவேற்கலாம். டிசம்பர்வரை விரயச்சனி நடைபெற்றாலும் சுபவிரயச் சனியாக ஏற்றுக்கொள்ளலாம். சில காரியங் களில் விரயச்சனியின் காரணமாக சாதக பாதகங்கள் நிறைந்த குறைகளாகத் தோன்றி னாலும், முடிவில் குறைகள் நீங்கி நிறைவாகும். அதற்குக் காரணம், குருவோடு சேர்ந்த சனி. சுபரோடு சேர்ந்த பாவரும் சுபப் பலனைத் தருவார் என்பது சந்திர காவிய விதி. 5-க்குரிய சுக்கிரன் 9-ல் நீசபங்க ராஜயோகமடைந்து ராசிநாதன் சனியின் பார்வையைப் பெறுகிறார். அதனால் மனைவி, பிள்ளைகள்வகையில் தொல்லைகள் விலகி நல்லவை நடக்கும். அவர்கள் பெயரில் இல்லங்கள் வாங்குவதும், மனை, மண், கட்டடங்கள் வகையில் சுபச்செலவுகள் செய்வதுமான நன்மைகள் நடக்கும். பிரிந்திருக்கும் குடும்பம் இணைந்து ஒன்றுசேரும். பதவி நீக்கத்திலுள்ள பணியாளர் கள், அதை ரத்துசெய்து மீண்டும் பதவியில் சேர்ந்து பணியாற்றலாம். இழந்த பொருட்கள் மீண்டும் கிடைக்கும். இடத்துப் பிரச்சினைகள் சாதகமாக முடியும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று தன் ராசியைப் பார்க்கிறார். பொதுவாக, சனிக்கு 3, 6, 11 ஆகியவை யோகமான இடங்களாகும். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்குமாகில் கூறுபொன் பொருளுமுண்டாம் குறைவிலாச் செல்வ முண்டாம் ஏறு பல்லக்குண் டாம் இடம்பொருள் ஏவலுண்டாம் காறு பாலாஷ்டமி கடாட்சமுண் டாகும் தானே' என்பது பாடல். அதன்படி, எல்லா நலமும் வளமும் உண்டா கும். எதில் ஈடுபட்டாலும் அதில் உற்சாகமாக மனமுவந்து செயல்படுவீர்கள். மற்றவர்கள் விவகாரங் களாகட்டும்; உங்கள் சொந்தப் பிரச்சினைகளாகட்டும்- எல்லா வற்றிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன்களை அடையலாம். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். அரசு அல்லது தனியார்துறையில் பணி புரிகிறவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டாகும். பங்காளிவகையில் அல்லது அக்கம்பக்கத்தவர்களின் வகையில் நிலவும் பங்குபாகப் பிரச்சினைகளும், சொத்துப் பிரச்சினைகளும் உங்களுக்கு சாதகமாக நிறைவேறும். சிலர் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி, கோவில் கைங்கரியங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வீர்கள். திருப்பணிக் கைங்கர்யங்களிலும் ஈடுபடலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் திக்பலம் பெறுகிறார்; ஆட்சியாகவும் இருக்கிறார். அவருடன் 11, 12-க்குரிய சனி சம்பந்தம். 7-ல் புதன், சுக்கிரன் சேர்க்கை- அவர் களுக்கு சனியின் பார்வை. திருமணமாகாத வர்களுக்குத் திருமண யோகமும், வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகமும் அமையும். வேலையில்லாதோருக்கு புதிய வேலையும், வேலையிலிருப்போருக்கு புதிய பதவியோகமும் எதிர்பார்க்கலாம். 2-ல் செவ்வாய் ஆட்சி. அவருக்கு 6-க்குரிய சூரியன் பார்வை, சனியோடு சம்பந்தப்பட்ட குருவின் பார்வை இரண்டும் கிடைக்கிறது. "ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும்' என்பதால், பேச்சில் நிதானம் தேவை. எந்தச் சூழ்நிலையிலும் வாக்குறுதிகளை அள்ளிவீசக் கூடாது. கொடுத்த வாக்கை நிறைவேற்ற மிகவும் போராட வேண்டியதிருக்கும். அதேபோல, "பாத்திர மறிந்து பிச்சை போடு, கோத்திரமறிந்து பெண் ணைக் கொடு' என்பார்கள். அதைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். 10-ல் குரு, சனி சேர்க்கை. இது காரியத் தோல்வியை ஏற்படுத்தலாம். அல்லது காலதாமதத்தை உருவாக்கலாம். தன்னம்பிக்கையும் தைரியமும் விடா முயற்சியும் இருந்தால், தோல்வியும் தொய்வு மில்லாமல் தொட்டதெல்லாம் துலங்கும்; வெற்றியாக விளங்கும். தேக ஆரோக்கியம், பொருளாதாரம் இரண்டிலும் பாதிப்பில்லை.