Advertisment

இந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை

/idhalgal/balajothidam/week-rasi-palan-16-6-2019-22-6-2019

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

17-6-2019- தனுசு.

19-6-2019- மகரம்.

22-6-2019- கும்பம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: மிருகசீரிடம்- 3, 4, திருவாதிரை -1.

செவ்வாய்: புனர்பூசம்- 2, 3.

புதன்: புனர்பூசம்- 1, 2, 3.

குரு: கேட்டை- 3.

சுக்கிரன்: ரோகிணி- 2, 3, 4.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 2.

கேது: பூராடம்- 4.

கிரக மாற்றம்:

குரு, சனி வக்ரம்.

செவ்வாய் அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைவு. 9, 12-க்குடைய குரு சாரம். (புனர்பூசம்). அவருடன் 3, 6-க்குடைய புதனும், 5-க்குடைய சூரியனும் சம்பந்தம். இதில் புதன் செவ்வாய்க்கு வீடுகொடுத்தவர். 2-ல் சுக்கிரன் ஆட்சி. அவருக்கு 9-க்குடைய குரு பார்வை. எனவே எல்லா நன்மைகளையும் அடையும் வாரம் இந்த வாரம். அதேசமயம் பாக்கியாதிபதி குரு 8-ல் மறைந்ததால், "முயற்சி திருவினையாக்கும்' என்ற பழமொழியைப் பின்பற்றி செயல்பட வேண்டும். அதாவது 5-ஆம் இடமும், 9-ஆம் இடமும் பூர்வபுண்ணிய ஸ்தானமாகும். அவை வலுவாக இருந்தால், "ஜனனீ ஜென்ம சௌக்யானாம் வர்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம்' என்ற வாசகத்துக் கிணங்க நற்குடிப் பிறப்பு, பதவி, செல்வம், செல்வாக்கு, இனிய வாழ்க்கை ஆகிய எல்லா நன்மைகளும் அதிர்ஷ்ட வரமாக- அது இஷ்டமாக தேடி வந்தடையும். அவை கெட்டுப் போனால், அதிர்ஷ்டம் நூலிழையில் தவறிப் போகும். 5-ம், 9-ம் லட்சுமி ஸ்தானம்- பூர்வ புண்ணிய ஸ்தானம். 4, 7, 10 கேந்திர ஸ்தானம்- விஷ்ணு ஸ்தானம், முயற்சி ஸ்தானம். இதை வள்ளுவப் பெருமகனார், "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார். முயற்சி என்பதற்கு வள்ளுவர் தரும் விளக்கம், தவம் என்று அர்த்தம்! அதனால்தான் "தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்று ஒரு புலவர் பாடினார். வசிஷ்டர் இயற்கையாகவே கடும் தவமிருந்து எல்லா ஆற்றல்களையும் பெற்றார். விசுவாமித்திரர் தன் சுயமுயற்சியால் தவமியற்றி (வைராக்கிய சாதனையால்) ஆற்றல் பெற் றார்; பிரம்மரிஷியானார். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஆகவே நீங்கள் விசுவாமித்திரரைப்போல சாதனையால் சோதனைகளை விரட்டியடித்து, பெருமைபெற வேண்டும்- வெற்றிபெற வேண்டும்! விடாமுயற்சி வெற்றிதரும் என்பதன் அர்த்தம் அதுதான்! ராசிநாதன் அஸ்தமனம் என்பது ஒருவகையில் மைனஸ்தான். ஆனால் குருவும் சனியும் வக்ரம் என்பது பிளஸ் பாயின்டு. 2-ல் சுக்கிரன் ஆட்சி என்பதால், குடும்பச் சூழ்நிலையிலும், பொருளாதாரத்திலும் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று திருப்தியடையலாம். வாக்கு நாணயத்தையும் காப்பாற்றலாம். அமைதியும் ஆனந்தமும் திருப்தியுமான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசியில் ஆட்சிபெறுவதால், செல்வாக்கு, கௌரவம், கீர்த்தி, புகழ், செயல் ஈடுபாடு ஆகியவற்றுக்குக் குறையேதும் வராது! அதேசமயம் அட்டமத்துச்சனி, அட்ட மத்துக் கேது- இரண்டாமிடத்து ராகு காரணமாக எந்த ஒரு சிறு செயலையும் தீவிர முயற்சிக்குப் பிறகுதான் சாதிக்க முடியும். காத்திருந்து பொறுமையாகத்தான் நிறைவேற்ற வேண்டும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், முட்டிக் குனிகிறமாதிரி தடைகளையும் தாமதத் தையும் சந்தித்துதான் ஆகவேண்டும். அதேசமயம் 11-க்குடைய குரு ராசி யைப் பார்ப்பதால் தோல்விக்கு இடமில்லை- வளைவான ரோடுகளில் வேகத்தடை (ஸ்பீடுபிரேக்கர்) இருப் பதுபோல! இந்தத் தடையும் தாமதமும் ஏற்படக்காரணம் அட்டமச்சனிதான்! 10-க்குடைய சனி 10-ஆம் இடத்தையே பார்ப்பதாலும், ராசிநாதன் ராசியில் ஆட்சிபெறுவதாலும், 11-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதாலும் கருதிய காரியங்கள் கைகூடும்- எண்ணியவை ஈடேறும்- நினைத்தவை நிறை வேறும்! சிலசமயம் தடையும் தாமதமும் ஒரு நன்மையாகவே முடியும். ஒருசமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ரஷ்யாவுக்குப் போனார். ஒரு ஊரில் விமான நிலையத்தில் தங்கி, வேறொரு விமானத்தில் மாறிப் பயணிக்க வேண்டும். அந்த விமான நிலைய கேண்டினில் சாப்பிடப்போனபோது முட்டை ஆம்லெட் கேட்டார். அந்த ஊர் பாஷை அவருக்குப் புரியவில்லை. உடன் வந்த டைரக்டர் கே. சுப்பிர மணியம் ஆங்கிலத்தில் கூறியும், அந்த சப்ளையருக்குப் புரியவில்லை. உடனே கலைவாணர் ஒரு பேப்பரில் ஒரு கோழியை வரைந்து, முட்டை போட்டமாதிரி படம்போட்டு விளக் கியதும், சப்ளையர் புரிந்துகொண்டு ஆம்லெட் தயாரித்து எடுத்துவர நேரமாகி விட்டது. அதற்குள் அவர் புறப்பட வேண்டிய விமானம் புறப்பட்டுப் போய் விட்டது. அடுத்த விமானத்துக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை. அந்தச் சமயம் புறப்பட்டுப் போன விமானம் விபத்துக்குள்ளானதாக செய்தி வந்தது. கலைவாணருடன் வந்தவர்கள், ""நல்ல நேரம்; அதை நாம் "மிஸ்' பண்ணிவிட்டோம்'' என்று ஆறுதல் அடைந்தார்கள். ஆனால் கலைவாணரோ, ""நான் அதில் பயணித் திருந்தால் விபத்தே ஏற்பட்டிருக்காது'' என்று ஜோக் அடித்தார். இப்படி பல நிகழ்ச்சிகள் தாமதமாவதும், தடையா வதும் ஒரு நன்மைக்காவே

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

17-6-2019- தனுசு.

19-6-2019- மகரம்.

22-6-2019- கும்பம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: மிருகசீரிடம்- 3, 4, திருவாதிரை -1.

செவ்வாய்: புனர்பூசம்- 2, 3.

புதன்: புனர்பூசம்- 1, 2, 3.

குரு: கேட்டை- 3.

சுக்கிரன்: ரோகிணி- 2, 3, 4.

சனி: பூராடம்- 2.

ராகு: புனர்பூசம்- 2.

கேது: பூராடம்- 4.

கிரக மாற்றம்:

குரு, சனி வக்ரம்.

செவ்வாய் அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாய் 3-ல் மறைவு. 9, 12-க்குடைய குரு சாரம். (புனர்பூசம்). அவருடன் 3, 6-க்குடைய புதனும், 5-க்குடைய சூரியனும் சம்பந்தம். இதில் புதன் செவ்வாய்க்கு வீடுகொடுத்தவர். 2-ல் சுக்கிரன் ஆட்சி. அவருக்கு 9-க்குடைய குரு பார்வை. எனவே எல்லா நன்மைகளையும் அடையும் வாரம் இந்த வாரம். அதேசமயம் பாக்கியாதிபதி குரு 8-ல் மறைந்ததால், "முயற்சி திருவினையாக்கும்' என்ற பழமொழியைப் பின்பற்றி செயல்பட வேண்டும். அதாவது 5-ஆம் இடமும், 9-ஆம் இடமும் பூர்வபுண்ணிய ஸ்தானமாகும். அவை வலுவாக இருந்தால், "ஜனனீ ஜென்ம சௌக்யானாம் வர்தனீ குல சம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம்' என்ற வாசகத்துக் கிணங்க நற்குடிப் பிறப்பு, பதவி, செல்வம், செல்வாக்கு, இனிய வாழ்க்கை ஆகிய எல்லா நன்மைகளும் அதிர்ஷ்ட வரமாக- அது இஷ்டமாக தேடி வந்தடையும். அவை கெட்டுப் போனால், அதிர்ஷ்டம் நூலிழையில் தவறிப் போகும். 5-ம், 9-ம் லட்சுமி ஸ்தானம்- பூர்வ புண்ணிய ஸ்தானம். 4, 7, 10 கேந்திர ஸ்தானம்- விஷ்ணு ஸ்தானம், முயற்சி ஸ்தானம். இதை வள்ளுவப் பெருமகனார், "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார். முயற்சி என்பதற்கு வள்ளுவர் தரும் விளக்கம், தவம் என்று அர்த்தம்! அதனால்தான் "தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்' என்று ஒரு புலவர் பாடினார். வசிஷ்டர் இயற்கையாகவே கடும் தவமிருந்து எல்லா ஆற்றல்களையும் பெற்றார். விசுவாமித்திரர் தன் சுயமுயற்சியால் தவமியற்றி (வைராக்கிய சாதனையால்) ஆற்றல் பெற் றார்; பிரம்மரிஷியானார். 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். ஆகவே நீங்கள் விசுவாமித்திரரைப்போல சாதனையால் சோதனைகளை விரட்டியடித்து, பெருமைபெற வேண்டும்- வெற்றிபெற வேண்டும்! விடாமுயற்சி வெற்றிதரும் என்பதன் அர்த்தம் அதுதான்! ராசிநாதன் அஸ்தமனம் என்பது ஒருவகையில் மைனஸ்தான். ஆனால் குருவும் சனியும் வக்ரம் என்பது பிளஸ் பாயின்டு. 2-ல் சுக்கிரன் ஆட்சி என்பதால், குடும்பச் சூழ்நிலையிலும், பொருளாதாரத்திலும் "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று திருப்தியடையலாம். வாக்கு நாணயத்தையும் காப்பாற்றலாம். அமைதியும் ஆனந்தமும் திருப்தியுமான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் தன் ராசியில் ஆட்சிபெறுவதால், செல்வாக்கு, கௌரவம், கீர்த்தி, புகழ், செயல் ஈடுபாடு ஆகியவற்றுக்குக் குறையேதும் வராது! அதேசமயம் அட்டமத்துச்சனி, அட்ட மத்துக் கேது- இரண்டாமிடத்து ராகு காரணமாக எந்த ஒரு சிறு செயலையும் தீவிர முயற்சிக்குப் பிறகுதான் சாதிக்க முடியும். காத்திருந்து பொறுமையாகத்தான் நிறைவேற்ற வேண்டும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், முட்டிக் குனிகிறமாதிரி தடைகளையும் தாமதத் தையும் சந்தித்துதான் ஆகவேண்டும். அதேசமயம் 11-க்குடைய குரு ராசி யைப் பார்ப்பதால் தோல்விக்கு இடமில்லை- வளைவான ரோடுகளில் வேகத்தடை (ஸ்பீடுபிரேக்கர்) இருப் பதுபோல! இந்தத் தடையும் தாமதமும் ஏற்படக்காரணம் அட்டமச்சனிதான்! 10-க்குடைய சனி 10-ஆம் இடத்தையே பார்ப்பதாலும், ராசிநாதன் ராசியில் ஆட்சிபெறுவதாலும், 11-க்குடைய குரு ராசியைப் பார்ப்பதாலும் கருதிய காரியங்கள் கைகூடும்- எண்ணியவை ஈடேறும்- நினைத்தவை நிறை வேறும்! சிலசமயம் தடையும் தாமதமும் ஒரு நன்மையாகவே முடியும். ஒருசமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் ரஷ்யாவுக்குப் போனார். ஒரு ஊரில் விமான நிலையத்தில் தங்கி, வேறொரு விமானத்தில் மாறிப் பயணிக்க வேண்டும். அந்த விமான நிலைய கேண்டினில் சாப்பிடப்போனபோது முட்டை ஆம்லெட் கேட்டார். அந்த ஊர் பாஷை அவருக்குப் புரியவில்லை. உடன் வந்த டைரக்டர் கே. சுப்பிர மணியம் ஆங்கிலத்தில் கூறியும், அந்த சப்ளையருக்குப் புரியவில்லை. உடனே கலைவாணர் ஒரு பேப்பரில் ஒரு கோழியை வரைந்து, முட்டை போட்டமாதிரி படம்போட்டு விளக் கியதும், சப்ளையர் புரிந்துகொண்டு ஆம்லெட் தயாரித்து எடுத்துவர நேரமாகி விட்டது. அதற்குள் அவர் புறப்பட வேண்டிய விமானம் புறப்பட்டுப் போய் விட்டது. அடுத்த விமானத்துக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை. அந்தச் சமயம் புறப்பட்டுப் போன விமானம் விபத்துக்குள்ளானதாக செய்தி வந்தது. கலைவாணருடன் வந்தவர்கள், ""நல்ல நேரம்; அதை நாம் "மிஸ்' பண்ணிவிட்டோம்'' என்று ஆறுதல் அடைந்தார்கள். ஆனால் கலைவாணரோ, ""நான் அதில் பயணித் திருந்தால் விபத்தே ஏற்பட்டிருக்காது'' என்று ஜோக் அடித்தார். இப்படி பல நிகழ்ச்சிகள் தாமதமாவதும், தடையா வதும் ஒரு நன்மைக்காவே அமையும். அது அப்போது தெரியாது- பின்னால் தான் புரியும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)

Advertisment

மிதுன ராசியில் சூரியன், செவ்வாய், புதன், ராகு சேர்க்கை. ஏழில் சனி- கேது! 7, 10-க்குடைய குரு 6-ல் மறைவு. 12-க்குடைய சுக்கிரன் 12-ல் மறைவு- ஆட்சி! எவ்வளவு நல்லது செய்தாலும், அதற்குப் பாராட்டும் பெருமையும் கிடைக்காது. மாறாக, பழியும் பாவமும் குற்றமும்தான் வரும்! குறிப்பாக, சொந்தக் குடும்பத்தில் உள்ளவர்களே உங்களைப் பற்றி புரிந்துகொள்ள முடிய வில்லையென்றால், மற்றவர்கள் எப்படி உங்களைப் புரிந்து செயல்படுவார்கள்? தலைவலிக்கு மருந்து கேட்டால், பத்துபேர் பத்துவிதமான மருந்தும் வைத்தியமும் சொல்வதுதான் உலக வழக்கு! சும்மா அசை போடும் வாய்க்கு அவல் கிடைத்தால் சொல்லவா வேண்டும்? வம்பும் வழக்கும் விமர்சனமும் கேட்காமலேயே வரத்தானே செய்யும்! இப்படிப்பட்ட சூழ்நிலையை நீங்கள் சந்திக்கத்தான் வேண்டும்- சமாளிக் கத்தான் வேண்டும். சிலருக்கு உறவினர்களால் அன்புத் தொல்லை! சிலருக்கு அறிமுக மில்லாதவர்களால் வம்புத் தொல்லை! சிலருக்கு கடன் தொல்லை! சிலருக்கு சத்ரு தொல்லை! சிலருக்கு நோய் நொடி, வைத் தியச்செலவு. இப்படி 6-ஆம் இடத்து சங்கடங்கள், விரும்பியோ விரும்பாமலோ- வேண்டியோ வேண்டாமலோ உங்களை வந்தடையும். அவற்றை போராடித்தான் விலக்க வேண்டும். சமாளிக்க வேண்டும். அதேசமயம் ஆணோ- பெண்ணோ, திருமணத்தடையும் தாமதமும் உண்டாகும். அப்படித் தடையிருந்தால், ஆண்கள் கந்தர்வ ராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வர கலா ஹோமமும்செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். செவ்வாய்- சனி பார்வை இருப்பதால், சிலருக்கு காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் போன்ற பிரச்சினைகள் உருவாகும். அதை விலக்க காமோகர்ஷண ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். நாகதோஷம் இருப்பதால் சூலினிதுர்க்கா ஹோமமும், திருஷ்டி துர்க்கா ஹோமமும் செய்துகொள்ள வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட ஹோமம், மந்திர முறைகள் உங்கள் ஊரில் இல்லாவிட்டால், காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்பு கொண்டு செய்யலாம். செல்: 99942 74067.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 12-ல் சூரியன், செவ்வாய், புதன், ராகு மறைவு. 6-ல் சனி, கேது மறைவு. எனவே அடையவேண்டிய நன்மைகளும் வெற்றிகளும் தடைப்படும் அல்லது தாமதமாகும். ஆனால் குரு 5-ல் இருந்து ராசியைப் பார்ப்பதால், தோல்விக்கு இடமில்லை. தோல்வி என்பது வேறு; வெற்றி தாமதமாகிறது என்பது வேறு! பொதுவாக, வீரனுக்கு தோல்வி என்பது வெற்றிக்குப் போடப்படும் முதல் படிக்கட்டு. சாலமன் என்று ஒரு பேரரசன் இருந்தான். வஞ்சகர்களின் சூழ்ச்சியால், எதிரியிடம் தோல்வியடைந்து, நாட்டை விட்டுக் கொடுத்து நாடோடியாக வெளியேறி விட்டான். காட்டில் கவலையோடு பாறையில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்த போது, அவன் பார்வையில் ஒரு சிலந்தி வலைபின்னி மேலேற முயற்சிப்பது கவனத் துக்கு வந்தது. சிலந்தி வலைபின்னி மேலேறும்போது, கீழே விழுந்து விழுந்து மீண்டும் முயற்சிசெய்து முன்னேறியது. அதைப் பார்த்து அவனுக்கு தைரிய மும் நம்பிக்கையும் உருவானது. தன் படைவீரர்களுக்கு உற்சாகமூட்டி, நம்பிக்கை யூட்டி, தைரியம் தந்து, ஒரே குறிக் கோளோடு வெற்றிவெறியோடு படை யெடுத்துப் போரிட்டு, எதிரியை வெற்றி பெற்று நாட்டை மீட்டுவிட்டான். அதுபோல 5-ஆம் இடத்து குரு, உங்களுக்கு தைரியத் தையும் நம்பிக்கையையும் உருவாக்கும். 9-ஆம் இடத்தை 9-க்குடைய குருவே பார்ப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் துணையாக அமையும். இந்தக் கலியுகத்தில் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொண்டு சமாளிக்க மூன்று துணை- பக்கபலம் வேண்டும். ஒன்று- தைரியம், இரண்டு- பணபலம், மூன்று- படைபலம். இந்த மூன்றில் தைரியம் என்பது இறையருளால் கிடைப்பது. இறையருளால் கிடைக்கும் தைரியமும் உறுதியும் வெற்றிக்கு வழி வகுக்கும். பணபலமும் படைபலமும் சமயத்தில் தோல்வியடையும்! அதற்கு உதாரணம் அரசியல்தான்! பணம் கொடுக்கும் கட்சிகளும், தொண்டர்படையுள்ள கட்சிகளும் தேர்தலில் சிலசமயம் டெபாசிட்கூட இழக்கவில்லையா?

ttt

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் இருப்பது சிறப்பு. அவருடன் செவ்வாயும் ராகுவும் இருப்பது அதனிலும் சிறப்பு. இவர்களுடன், அவர்களுக்கு வீடுகொடுத்த புதன் ஆட்சிபெறுகிறார். ஆக, உபஜெய ஸ்தானம் என்ற 11-ஆம் இடத்தில் இந்த நான்கு கிரகங்களும் கம்பீரமாக இருப்ப துடன், அவர்களை சனியும் கேதுவும் பார்ப்பது விசேஷம்! ஆகவே, உங்கள் முயற் சிகள் எல்லாம் தளர்ச்சியில்லாமல் வளர்ச்சி யடையும். கிளர்ச்சியுண்டாக்கும். பிரச்சினைகளையெல்லாம் வேரோடு களையெடுத்து, வெற்றிப்பாதையில் பயணிக்கலாம். மேலும், 10-ல் 10-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெற, அவரை குரு பார்ப்பதும் சிறப்பு! 10-ஆம் இடம் கேந்திர ஸ்தானம். குரு 5-க்குடைய திரிகோணாதிபதி. ஒரு திரிகோணமும், ஒரு கேந்திரமும் தொடர்புடையதாக அமைந் தால் ராஜயோகமாகும். அதேபோல 9-க்குடையவர் 10-ல் கேந்திரம் பெற்றால் தர்மகர்மாதிபதி யோகமாகும். இந்தமாதிரி ராஜயோகமோ, தர்மகர்மாதிபதி யோகமோ ஒரு ஜாதகத்தில் அமைந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு எப்போதும் செல்வாக்கும், சொல்வாக்கும் நிரந்தரமாக அமைந்துவிடும். காமராஜரும் அண்ணாவும்கூட தத்தம் சொந்தத் தொகுதியிலேயே தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார்கள். ஆனால் கலைஞரோ எந்தத் தேர்தலிலும் தோற்றதே இல்லை. சொந்தத் தொகுதியிலும் சரி; மற்ற தொகுதியிலும் சரி- வெற்றிபெற்றுள்ளார். அதுவொரு ராஜயோகம்தான். அதேபோல மனிதருள் மாணிக்கம் என்று புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு, பதவி ஏற்ற காலம்முதல் அந்திமக் காலம்வரை பிரதமர் பதவியிலேயே அமர்ந்து பெருமை பெற்றார். இதற்கெல்லாம் ஒரு யோகம் வேண்டும் என்பதே ஜாதக ரகசியம்! உங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு யோகத்தை, நடப்பு கோட்சாரம் தருவது உறுதி. 11-ல் சூரியன் நிற்குமாறு ஒரு லக்னம் அமைத்து செயல்பட்டாலும், ஒரு காரியத்தைத் தொடங் கினாலும், அது தோல்விக்கே இடமில்லா மல் நிரந்தர வெற்றியைத் தரும் என்பது ஜோதிட விதி! அரசியல், பொதுவாழ்ககை, சொந்தத் தொழில், பணிபுரியும் இடம், குடும்பம் எல்லாவற்றிலும் முதன்மையாகத் திகழலாம். எத்தனை எதிர்ப்புகள் உருவானாலும், அத்தனையையும் தூள்தூளாக்கி வெற்றிக் கொடி நாட்டலாம்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சி பெறுகிறார். அது உங்களுக்கு பிளஸ் பாயின்டுதான். ஆனால் அவருடன் 10-ல் 8-க்குடைய செவ்வாயும், 12-க்குடைய சூரியனும் சம்பந்தம் பெற்று, ராகுவும் சேர்க்கை என்பதால், மைனஸ் பாயின்டுதான். "ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன் றாகும்; அன்றி அது வரினும் வந்தெய்தும். ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும்' என்று ஒரு புலவர் பாடியமாதிரி, நினைப்ப தொன்று- நிகழ்வதொன்றாக இருக்கும். அதேசமயம், 9-க்குடைய சுக்கிரன் ஆட்சிபெற, அவரை 4, 7-க்குடைய குரு பார்ப்பதால், தெய்வானுகூலம் உங்களை வழிநடத்தும். ஆகவே நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று ஆறுதல் அடையலாம். கீதையில் கண்ணன் சொன்னபடி "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கவிருக் கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.' 4, 7-க்குடைய குரு மூன்றில் நின்று 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்ப்பதால், திருமணத்தடை விலகி நல்ல மனைவி, நல்ல கணவன் அமைவார். பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேரும். வாரிசு இல்லாதோருக்கு வாரிசு யோகம் உண்டாகும். பிள்ளைகளைப் பெற் றெடுத்த பெரியோர்களுக்கு (பெற்றவர் களுக்கு) பிள்ளைகளினால் பெருமையும் நன்மையும் முன்னேற்றமும் உண்டாகும். 5-க்கு 4-ல் செவ்வாய், புதன், ராகு சேர்க்கையால், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டாகும். மருத்துவத்துறை படிப்பில் இடம் கிடைக்கும். சனி, ராகு, கேது சம்பந்தப்பட்ட தசாபுக்தி நடப்பவர்களுக்கு, முதலில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு சஞ்சலமும் சங்கடமும் உண்டானாலும், அடுத்து நிவர்த்தியும் விமோசனமும் உண்டாகும். உதாரணமாக, நீட் தேர்வில் கட்டாப் மார்க் 107 என்று விதிக்கப்பட்டு, 103, 104, 105, 106 மார்க் எடுத்தவர்கள் கவலைப்படலாம். இருந்தாலும், தேர்வு பெறாதவர்கள் தோல்வி விரக்தியால் தற்கொலைக்கு முடிவெடுத்த காரணத்தால், அரசுத் தரப்பில் ஆலோசித்து கட்டாப் 100 என்று நிர்ணயிக்கலாம். புதுசட்டம் இயற்றலாம். அதனால் அவசர முடிவுக்கு ஆளாகாமல் காத்திருக்கலாம். அப்படியே மாறுதல் விதி ஏதும் வராவிட்டாலும், இந்த வருடத்தைவிட்டு அடுத்த வருடம் தேர்வெழுதி வெற்றிபெறலாம். இந்த பஸ் போனால் என்ன, அடுத்த பஸ்ஸில் பயணம் போகலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைந்தாலும், ஆட்சியாக இருப்பதால் மறைவு தோஷமில்லை என்பது விதிவிலக்கு! எந்த விதிக்கும் விதிவிலக்கு என ஒன்று இருக்கும். 2-ல் குரு இருப்பதால், பணப் புழக்கம் தாராளமாக இருக்கும். அதேசமயம், அவர் 3, 6-க்குடையவர் என்பதால், பலருக்கு கடன் வாங்கும் யோகம் அமையும். அதாவது 2-க்குடையவர் 6-ல் மறைந்தால், நமது பணம் (தனம்) அந்நியர்களுக்கு (மற்றவர்களுக்கு) போகும். 6-க்குடையவர் 2-ல் இருந்தால், மற்றவர்கள் பணம் நம்மிடம் புரளும். பொதுவாக, அரசியல்வாதிகளுக்கும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், பிக்பாக்கெட் திருடர் களுக்கும் 6-க்குடைய கிரகம் 2-ல் இருக்கும்! இதற்கு விதிவிலக்கு கர்மவீரர் காமராஜர். ஊழல் இல்லாத அரசியல்வாதி. மதுரையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு (தமுக்கம் மைதானத்தில் என்று நினைக் கிறேன்) நடந்தது. பிரதமர் நேருவும், காம ராஜரும் அங்கு நடந்த கண்காட்சியைச் சுற்றிப்பார்த்தபோது, எடைபார்க்கும் மிஷின் ஒன்று காணப்பட்டது. அதில் காசு போட்டால் எடையும், அந்த டிக்கட்டில் ஜோதிட வாசகமும் வரும். நேரு காசுபோட்டுப் பார்த்ததும், காம ராஜரை காசுபோட்டு எடைபார்க்கச் சொன்னார். அவர் அதெல்லாம் வேண்டாம். "நோ, நோ' என்றும், இந்தியில் "நஹி' என்றும் கூறினார். பிறகுதான் அவரிடம் பைசா இல்லை என்பது தெரியவந்தது. பிறகு, அவருக்காக வேறொரு காங்கிரஸ் தலைவர் காசுபோட்டு எடை பார்த்தார். அப்படிப்பட்ட கர்மவீரரைத் தான் திராவிடக் கட்சியினர் ஸ்விஸ் பேங்கில் பணம் போட்டிருப்பதாகப் பொய் பிரசாரம் செய்தனர். (அது ஒரு காலம்). அரசியலிலில் காமராஜரும், ஆன்மி கத்தில் காஞ்சிமகாப் பெரியவரும் வாய்மையானவர்கள் மட்டுமல்ல; தூய்மை யானவர்களும் ஆவார்கள். அதற்கடுத்து சொல்லிலின் செல்வர் ஈ.வி.கி. சம்பத் (இளங் கோவன் தகப்பனார்). ஒருசமயம் "மாலை முரசு'க்காக சம்பத் அவர்களைப் பேட்டி கண்டபோது, ""உங்கள் வாழ்க்கையில் இரண்டு பெரிய அரசியல் தலைவர் களைவிட்டுப் பிரிந்திருக்கிறீர்கள். ஒன்று பெரியார் (அவருக்கு பெரியப்பா முறை); இன்னொன்று அறிஞர் அண்ணா. இதில் எந்தப் பிரிவு உங்கள் மனதை அதிகம் வாட்டியது?' என்று கேட்டேன். அவர் பதில் சொல்வதற்கு முன்பு சுலோசனா சம்பத், (அவர் மனைவி) வேகமாக' ""அண்ணாவின் பிரிவுதான்'' என்று பதில் சொன்னார். இதையெல்லாம் இங்கு எழுதவேண்டிய காரணம், அரசியலிலில் சம்பாதிக்கத் தெரியாத தலைவர் சம்பத் அவர்கள்தான். (எனக்கு நல்ல பழக்கம்). குடும்பத்தேவைக்காக பெரியார் அவர்களின் சிபாரிசில், காமராஜர் அவர்கள் ஒரு உணவுப்பொருள் ஏஜென்ஸியை எடுத்துக்கொடுத்தார். காமராஜர் காலத்தில் சம்பத் அவர்களும், கண்ணதாசன் அவர்களும் காங்கிரசில் சேர்ந்தார்கள். கண்ணதாசனும் தன் கைக்காசை செலவு செய்தவர்! நல்லவர்கள் அரசியலுக்கு அதிர்ஷ்டமில்லாதவர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் அப்பழுக்கற்ற அறிஞர் அண்ணாவும் முதல்வராக நீடிக்க முடியவில்லை.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 8-ல் மறைவு. அவருடன் 10-க்குடைய சூரியனும், 11-க்குடைய புதனும், ராகுவும் சேர்க்கை. இத்துடன் ஏழரைச்சனியில் கடைசிக் கட்டம்! எனவே உங்கள் சொந்தத் தேவைகளுக்கே தடுமாற வேண்டிய நிலை. அதேசமயம் ஜென்ம குரு உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு ஆகியவற்றைக் காப்பாற்றுவார். 2, 5-க்குடையவர் குரு; 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். எனவே ஒருபக்கம் ஏழரைச்சனி நடந்தாலும், சனி- குரு வீட்டில் இருக்க, குரு ஜென்மத்தில் நின்று சுபஸ் தானங்களைப் பார்ப்பதால், சனியின் பாதிப்பு குறையும். ஏழரைச்சனி எந்தச் சுற்றாக இருந்தாலும், (முதல்சுற்று- மங்கு சனி, இரண்டாம் சுற்று- பொங்குசனி, மூன்றாம் சுற்று- மரணச்சனி எனப்படும்) குரு பார்வை பலத்தால் சனி பொங்குசனியாகவே நற்பலனைத்தர இடமுண்டு. குருவும் வக்ரம்; சனியும் வக்ரம். எனவே குருவும் சனியும் உக்ரபலம்; நன்மைகளையே தருவார் என எதிர்பார்க்கலாம். அஸ்தமனமடையும் கிரகம்தான் நல்லது செய்யாது. வக்ரமடையும் கிரகம் நல்ல ஆதிபத்தியம் என்றால், நல்ல பலன்களையும், கெட்ட ஆதிபத்தியம் என்றால் கெட்ட பலன்களையும் வலுவாகச் செய்யும். அதுதான் வக்ரத்தில் உக்ரபலம் என்பதன் சூட்சுமம். 2-ல் சனியும் கேதுவும் நிற்க, அவர்களை சூரியன், புதன், செவ்வாய், ராகு 8-ல் நின்று பார்ப்பதால், முயற்சிகளில் தளர்ச்சியும், மனதில் கிளர்ச்சியும் உருவாகும். சிலருக்கு குடும்பத்தில் குழப்பமும், கௌரவப் போராட்டமும் உண்டாகும். சிலருக்கு முடிவெடுக்க முடியாத பிரச்சினைகளும் குழப்பங்களும் நூல்கண்டுச் சிக்கலாக இருக்கும். அரும்பாடுபட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நேரம் புதுப்பிரச் சினைகள் தோன்றி, கிணறுவெட்ட பூதம் புறப்பட்ட கதையாக வேதனை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசியில் ஜென்மச்சனியும் கேதுவும் நிற்க, ராசிநாதன் குரு 12-ல் மறைவதால், காரணம் தெரியாத கவலைகளும், மனக்கலக்கமும் உங்கள் ஆனந்தத்தையும் அமைதியையும் கெடுக்கலாம்! உணவு, உடை, உறைவிடம் போன்ற வசதி வாய்ப்புகளுக்கும், சௌகர்யங்களுக்கும் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனால் நான்கு ரோடு, முச்சந் தியில் கைகாட்டி இல்லாமலும், வழிகேட்க யாருமில்லாத நிலையிலும் நின்று, எந்த பக்கம்போவது என்று புரியாமல் தவிப்பது போல, எதிர்காலத்தில் எப்படி செயல்படுவது, என்ன செய்வதென்று முடிவுவெடுக்கமுடி யாத நிலையில் தவிக்கும் நிலை! சிலருக்கு ஆரோக்கியக் குறைவு, சிலருக்கு கண் உபாதை, சிலருக்கு முழங்கால், மூட்டுவலிலி. இப்படி மாறிமாறி ஏதாவது நோய்த் தொந்தரவு. சிலருக்கு வசதி வாய்ப்பு எல்லாம் இருந்தும், பிள்ளைகளுக்கு திருமணம் போன்ற நல்ல காரியம் தள்ளித்தள்ளிப் போவதால் கவலை! படிப்பு, அழகு, அரசு உத்தியோகம், நல்ல சம்பாத்தியம் இருந்தும் ஆண்மகனுக்கு பெண் அமையாத கவலையும் இருக்கும். பெண்ணுக்கு நல்ல வரன் அமையாத கவலையும் சிலருக்கு! செவ்வாய்- சனி பார்வையால், ஒருசிலருடைய பிள்ளைகள் வகையில் முதல் திருமணம் முறிவு ஏற்பட, மறுமண முயற்சிகள் மேற்கொள்ளும் நிலையும் உருவாகும். அதாவது, தோஷமான ஜாதகங்களுக்கு 27 வயதுக்கு முன்பு திருமணம் நடந்தால், அந்த மணவாழ்வு மனநிறைவான வாழ்வாக அமையாது. அப்படிப்பட்டவர்களுக்கு மறுமணம் நடக்க வாய்ப்பு உண்டு! 27 வயது முடிந்தபிறகு 30-ல் திருமணம் நடந்தால், நறுமணம் பரப்பும் மணமாக அமையும். இப்படி நாகதோஷம், களஸ்திரதோஷம் உடைய ஜாதகர்களுக்கு- ஆண்களுக்கு கந்தர்வராஜஹோமமும், பெண்களுக்கு பார்வதிசுயம்வரகலா ஹோமமும், இருசாராருக்கும் காமோகர்ஷண ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்தால், நல்ல மணவாழ்க்கை அமையும். ராகு தசை, புக்தி நடந்தால் சூலினிதுர்க்கா ஹோமமும் சேர்த்து செய்யலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அத்துடன் வக்ரம் என்றாலும், மகர ராசிக்கு ராஜயோகாதிபதியான சுக்கிரன் சாரம் பெறுவதோடு, சுக்கிரனும் 5-ல் ஆட்சி என்பதால், கோட்சாரம் உங்களுக்கு சாதக மாக அமைகிறது. எந்த ஒரு கிரகத்துக்கும் திரிகோணாதிபத்தியமும், கேந்திராதிபத்திய மும் கிடைக்கிறதோ, அந்த கிரகம், அந்த ராசி அல்லது லக்னத்துக்கு ராஜயோகாதி பதியாவார்! அதனால் ஏழரைச்சனியில் விரயச்சனி நடந்தாலும், உங்களுக்கு அனைத் தும் சுபவிரயச் செலவுகளாக அமைந்து மகிழ்ச் சியையும் ஆறுதலையும் தரும். 4-க்குடைய செவ்வாய் 6-ல் பலம்பெறுவதால் பூமி, கட்டடம், வாகனம் போன்ற சுபச்செலவு களுக்காக சிலர் கடன்வாங்க நேரும். அதுவும் சுபக்கடன்தான். கடன்களில் பலவகை உண்டு. சுபக்கடன், தேவையற்ற கடன், வாராக் கடன், தொல்லைக் கடன், அத்தியாவசியக் கடன், அனாவசியக் கடன் என்று பலவகை உண்டு. நெருங்கியவர்களுக்காக நீங்கள் ஜாமின் பொறுப்பேற்று வாங்கித் தரும் கடன் அனாவ சியக்கடன். வாகனம் அல்லது படிப்பு, திருமணம், வீடுகட்ட வாங்கும் கடன் அத் தியாவசியமான கடன் அல்லது சுபக்கடன்! ஒருமாதத் தவணையில் திருப்பித் தருவதாக வாங்கிய கடனை மறுநாளே, எப்போது திருப்பித் தருவீர்கள் என்று நச்சரித்தால், அது தொல்லைக் கடன். சிலர் மற்றவர்களுக்குக் கடன் கொடுத்துவிட்டு, திருப்பித் தருவார் களா, மாட்டார்களா, கேட்டால் பகை வந்துவிடுமோ, வருத்தம் ஏற்படுமோ என்று கவலைப்பட்டால் அது வாராக் கடன்! இப்படி பல கடன்கள் உண்டு! தேக ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளுக்கு இடமிருக்காது என்றாலும், சின்னச்சின்ன உபத்திரவங் களைச் சந்தித்து, சிகிச்சை செய்யும் சூழ்நிலை உருவாகலாம். சிலர் காலிலில் குத்திய முள் அல்லது ஆணியைப் பிடுங்கி எறிந்துவிட்டு, அலட்சியமாக விட்டுவிட்டு அது சீழ்வைத்த தும், வேதனை தாங்காமல் கட்டுப்போட வேண்டிய அவசியமும் உண்டாகும்! அதிலும் சர்க்கரைச்சத்து உடையவர்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருப்பது பலம் என்றாலும், அவர் கேதுவுடன் சேர்ந்து, 6-ல் மறைந்த ராகு, செவ்வாய், சூரியன், புதனின் பார்வையைப் பெறுவது பலவீனம் தான். வெண்ணெய் திரண்டுவரும்போது பானை உடைந்த கதையாக, கடைசி நேரத்தில் எல்லாம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத் தினாலும், 5-ல் உள்ள சுக்கிரனும், 11-ல் உள்ள குருவும் எல்லாவற்றையும் சந்தித்து விரட்டி யடித்து, வெற்றியை நிலைநாட்டும் சாதனையைப் படைப்பார்கள். அதேசமயம் 6-ஆம் இடம் என்பது 10-ஆம் இடமாகிய தொழில் ஸ்தானத்துக்கும், வாழ்க்கை ஸ்தானத்துக்கும் 9-க்குடைய பாக்கிய ஸ்தானம் என்பதால், தொழில், வாழ்க்கை தொய்வில்லாமல் இயங்கும். அதேபோல பணிபுரியும் இடத்திலும், உங்களுக்கு தனி மரியாதையும், செல்வாக்கும் நிலைக்கும். 8-க்குடைய சூரியன் 6-ல் மறைவது நல்லது. அதேபோல அசுபகிரகம் ராகுவும், செவ்வாயும் 6-ல் மறைவதும் நல்லதே! 6-க்குடைய புதன் 6-ல் ஆட்சி என்பதால், 6-ஆம் இடத்து தொல்லை அணுகாது. ஆகவே 6-ல் மறைவுபெற்ற கிரகங்களினால் பாதிப்புக்கு இடமில்லை. தெளிவாகச் சொன்னால், மறைந்திருந்துதான் ராமபிரான் வலிôலியைத் தாக்கி, சுக்ரீவனுக்கு பட்டம், பதவியை வாங்கித்தந்தார். தேர்தலிலில் மறைமுகமாகப் பணம் கொடுத்துதான் சில வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்! ஆகவே "தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் பாடியமாதிரி, ""மறைந் திருந்தே பார்க்கும் மர்மம் என்ன?'' திருப்பூர் ரசிகர் ஒருவர் ஜாதகம் பார்க்க வந்தார். கும்ப ராசிக்காரர்களை அனுதாபத்துக்குரியவர்கள் என்றுதான் எப்போதும் எழுதுவீர்கள். சமீபகாலமாகத்தான் நல்ல பலனாக எழுது கிறீர்கள் என்று சந்தோஷப்பட்டார். அனுதாப அலையும் சிலசமயம் வெற்றியைத் தேடித்தரும். சில கட்சிகள், தலைவர்கள் இறந்தநிலையில் மக்களிடம் அனுதாபம் பெற்று எதிர்பாராத வெற்றி பெற்றதுண்டு.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் வக்ரம். அவர் 10-க்குடையவரும் ஆவார். அதனால் உங்களுக்கு தர்மகர்மாதிபதி யோகம் அமை கிறது. 9-க்குடைய செவ்வாய், 9-ஆம் இடத்துக்கு 8-ல் மறைந்தாலும், 4-ல் கேந்திரம் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதுவும் கர்மாதிபதி யோகமாகும்! குரு ராசியைப் பார்க்கிறார். 3-ஆம் இடம், 5-ஆம் இடங் களையும் பார்க்கிறார். எனவே 12 ராசிக் காரர்களிலும், நடப்பு கோட்சார கிரக அமைப்பு மீன ராசிக்காரர்களுக்குதான் வலுவாக இருக்கிறது. 11, 12-க்குடைய சனி 10-ல் இருப்பதும் திக்பலம். ஆனால் கேது, ராகு சம்பந்தம் பெறுவதால், சொந்த ஊரைக் காட்டிலும் வெளியூரில் உங்களுக்கு அதிர்ஷ்ட மும் யோகமும் காத்திருக்கிறது. ஆகவே வெளியூரில் உங்கள் வெற்றியையும் முன்னேற் றத்தையும் பதிக்கலாம். ஊரைவிட்டுப் போக விரும்பாதவர்கள் சொந்த ஊரில் அல்லது குடியிருக்கும் ஊரில் வீடுமாறி வசிக்கலாம். ஆக, மாற்றம் ஏற்றம் தரும். ஒருசிலர் பணிமாற் றம் செய்யலாம் அல்லது தொழில்மாற்றம் செய்யலாம். 7-ஆம் இடத்தை சனி பார்க்க, 7-க்குடைய புதன் ராகு- கேது, சூரியன் சம்பந்தம் பெறுவதால், சிலர் (தாரம் இழந்தவர்கள்- தாரத்தைப் பிரிந்தவர்கள்) மறுதாரம் (மறுமணம்) செய்துகொள்ளலாம். அதில் பிரச்சினை இருந்தால் புனர்விவாக ஹோமம் செய்யலாம். ஆரோக்கியம், தொழில் மேன்மை, வரவு- செலவு எல்லாவற்றிலும் திருப்பதியான பலனை எதிர்பார்க்கலாம். சிலருக்கு தவிர்க்கமுடியாத பயணங்கள் ஏற்பட்டாலும் அதனால் பலனும் பயனும் உண்டாகும்!

bala210619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe