ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- துலாம்.

25-2-2019- விருச்சிகம்.

28-2-2019- தனுசு.

2-3-2019- மகரம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 2, 3, 4.

செவ்வாய்: பரணி- 1, 2.

புதன்: பூரட்டாதி- 2.

குரு: கேட்டை- 4.

சுக்கிரன்: உத்திராடம்- 1, 2, 3.

சனி: பூராடம்- 1.

ராகு: புனர்பூசம்- 3.

கேது: உத்திராடம்- 1.

கிரக மாற்றம்:

25-2-2019- மகரச் சுக்கிரன்.

27-2-2019- புதன் வக்ரம் ஆரம்பம்.

3-3-2019- புதன் அஸ்தமனம்.

Advertisment

perumal

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் மேஷத்தில் ஆட்சியாக இருக்கிறார். 2, 7-க்குடைய சுக்கிரன் சாரம் பெறுகிறார். (பரணி). ராசி என்பது ஜென்ம லக்னத்திற்குச் சமம். திறமை, கௌரவம், மதிப்பு, மரியாதை, கீர்த்தி, செல்வாக்கு ஆகிய வற்றைக் குறிக்கும். அந்த வீட்டுக்குடைய செவ்வாய் ஆட்சி பெறுவதால், இவற்றுக்கு பங்கமில்லை; பாதிப்பில்லை. மதிப்பு, மரியாதை எல்லாம் கூடும். 2, 7-க்குடைய சுக்கிரன் சாரம் பெறுவதால், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். கணவன்- மனைவிக் குள் அன்யோன்யம் அதிகமாகும். குடும் பத்தில் ஆனந்தம் உண்டாகும். வாக்கு நாணயத் தைக் காப்பாற்றலாம். பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்றுசேரும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை அகலும். தாராளமான வரவு- செலவு ஏற்படும். குடும்ப நலன் கருதி எடுக்கும் எதிர்கால முயற்சிகள் கைகூடும். 9-க்குடைய குரு 8-ல் மறைந்து 12-ஐப் பார்ப்பது ஒரு மைனஸ் பாயின்ட். பாக்கியாதிபதி மறைந்து, விரய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தவிர்க்கமுடியாத விரயங்களும், வீண் அலைச்சல்களும் உண்டாகலாம். தேவை யற்ற பயணங்களும் ஏற்படலாம். அதே சமயம் ராசிநாதன் செவ்வாய் குருவைப் பார்ப்பதால், குருவின் மறைவு தோஷம் விலக இடமுண்டு. குருவின் மறைவு தோஷம் விலக வியாழக் கிழமைதோறும் 27, 54, 108 எண்ணிக்கையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை அணிவிக்கலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 8-ல் மறைவு. என்றாலும் சுக்கிரனுக்கு வீடு கொடுத்த குரு, ராசிக்கு 7-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். பொதுவாக, ஒரு ஜாதகத்தில் ராசிநாதனோ, லக்னநாதனோ மறைந்தால், அந்த ஜாதகருடைய முயற்சிகள் தளர்ச்சியடையும்; பலன் தராது. செயல்கள் தேக்கமடையும். தெம்பு இருக்காது. வெற்றியை எட்டிப்பறிக்க முடியாது. தோல்விகள் தொடரும். விழலுக்கிறைத்த நீர்போல எல்லாம் வீணாகும் என்பது பொதுவிதி. அதேசமயம் குரு சம்பந்தமோ அல்லது 5, 9 என்ற திரிகோணாதிபதியின் சம்பந்தமோ ராசி அல்லது லக்னம் அல்லது அதன் அதிபதிகளுக்குக் கிடைத் தால் மறைவுதோஷம் விலகும். அது ஏனென்றால், குரு இயற்கை சுபர் என்ப தால், நல்லாரைக் காண்பதும் நன்று- நல்லாரோடு இணங்கியிருப்பதும் நன்று- நல்லார் சொல் கேட்பதும் நன்று என்று சொன்னதுபோல கெடுதல்கள் மறையும். தவிரவும், இராமாயண காவியத்தில் ஸ்ரீராமர் வாலிலியை மறைந்திருந்துதான் தாக்கி வெற்றி பெற்றார். (யுத்த தர்மத்தில் மறைந்திருந்து தாக்குவதும் ஒரு மரபு). ஆகவே, மறைவும் வெற்றிக்கு வழிவகுக்கும். மேலும், ராசிநாதன் சுக்கிரன், குரு வீட்டில் இருப்ப தாலும், திரிகோணாதிபதி சூரியன் சாரம் (உத்திராடம்) பெறுவதாலும் குறையில்லை- நிறைவாகும். ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால், சிலருக்கு தொழில் அல்லது உத்தியோகம் அல்லது குடியிருப்பில் மாற்றம் ஏற்படலாம். தவிரவும், அட்டமச்சனி நடப்பதால் வேலை விஷயமாக சிலர் வெளிநாடு போகலாம். ஒருசிலருக்கு கம்பெனிமூலமாகவே வெளிநாட்டு யோகம் அமையலாம். 8, 11-க்குடைய குரு 7-ல் அமர்ந்து, 2, 5-க்குடைய புதன் சாரம் பெறுவதோடு (கேட்டை 4-ல் குரு), அம்சத்தில் மீனத்தில் ஆட்சி! எனவே எதிர்பாராத அதிர்ஷ்டமும், யோகமும், லாபமும், முன்னேற்றமும் உண்டாகும். 10-ல் சூரியன், புதன் சேர்க்கையால், படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும், வெற்றி வாய்ப்பும் ஏற்படும். படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பும் உண்டாகும். தஞ்சாவூர் அருகில் பரிதியப்பர்கோவில் சென்று பாஸ்கரேஸ்வர சுவாமியை வழிபட்டால், சூரிய பகவான் அனுக்கிரகத்தால் நன்மை உண்டாகும்.

மிதுனம்

Advertisment

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் திரிகோணத்தில் (9-ல்) சூரியனோடு சம்பந்தம். புதனுக்கு வீடு கொடுத்த சனி புதனையும் பார்க்கிறார்; ராசியையும் பார்க்கிறார். ஆக, புதனுக்கு திரிகோணாதிபதிகள் சம்பந்தம் கிடைப்ப தால், குருவருளும் திருவருளும் உண்டாகும். அதாவது சுக்கிரனும் சனியும் (இரண்டு திரிகோணாதிபதிகள்) சேர்ந்திருப்பதாலும், ராசியைப் பார்ப்பதாலும், புதனை சனி பார்ப்பதாலும் திரிகோணாதிபதிகள் சம்பந்தம் ஏற்படுகிறது. ஜென்மத்தில் ராகு நின்றாலும், 7, 10-க்குடைய குரு சாரம் பெறுவதால் மதிப்பு, மரியதை, செல்வாக்கு ஆகியவற்றுக்கு குறைவு ஏற்படாது. தொழில், வாழ்க்கை, உத்தியோகம் ஆகியவற்றிலும் பிரச்சினைகள் இல்லை. திருமணத்தில் பிரச்சினைகளைச் சந்தித்தவர்களுக்கு விடிவும், விமோசனமும் பிறக்கும். சிலர் மனைவியின் பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். வருமானம் தேடலாம். அல்லது படித்த மனைவிமார்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். கணவரால் மனைவிக்கும் அந்தஸ்து உயர்வு உண்டாகும். 11-க்குடைய செவ்வாய் 11-ல் ஆட்சி என்பதால், எந்த முயற்சியிலும் எதிர்பாராத வெற்றி, லாபம், முன்னேற்றங்களை அடையலாம். எடுத்த காரியங்களில் தடையின்றி வெற்றிபெற செவ்வாய்க்கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

வாரத்தில் முற்பகுதிவரை கடக ராசிநாதன் சந்திரன் அவரோகண கதியாகவும், பிறகு ஆரோகணகதியாகவும் சஞ்சரிக்கிறார். விருச்சிகத்தில் சந்திரன் நீசம். அதன்பிறகு உச்சவீடான ரிஷபத்தை நோக்கிப் பயணம். அது ஆரோகணம். எனவே, வாரத்தின் முற்பகுதியில் உங்களுடைய முயற்சிகளிலும், செயல் நடவடிக்கைகளிலும் தடை, தாமதம், குறுக்கீடுகள் காணப்பட்டாலும், வாரத்தின் பிற்பகுதியில் துரிதவேகமாக எல்லாம் செயல்பட்டு வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். 5-ல் உள்ள குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய இனிய கனவுகள் எல்லாம் நிறைவேறும். குழந்தைகளின்மேல் அன்பும், அரவணைப்பும் கொண்டு ஆதரிப்பீர்கள். இதுவரை நீங்கள் தெய்வத்திடம் உங்களுக்கென்று எதையும் யாசிக்கவில்லை. உங்கள் குடும்பத்திற்காகவும், மனைவி மக்களுக்காகவும்தான் வேண்டிக் கொண்டீர்கள். பாதயாத்திரை போனீர்கள். அவையெல்லாம் இப்போது எந்தத் தடையும் இல்லாமல் இனிமையாக நிறைவேறும். 9-க்குடையவர் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சிலருக்கு குரு உபதேசம் கிடைக்கும். தீட்சை வாங்கலாம். குருவருளும் திருவருளும் பெருகும். குருவருள் கிடைக்க திருப்பரங்குன்றத்தில் குரு சோமப்பா சுவாமிகளை வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். ராசிநாதனோ, லக்னநாதனோ, பாவக நாதனோ தன் வீட்டைத் தானே பார்ப்பது சிறப்பு! அத்துடன் 2, 11-க்குடைய புதனும் சூரியனோடு சேர்ந்து ராசியைப் பார்க்கிறார். 11-ல் ராகு நிற்பது ஒரு பலம். கடந்த காலத்தில் அனுபவித்த தோல்விகளும், சிரமங்களும், தொய்வுகளும் இந்த வாரத் தொடக்கத்திலிலிருந்தே முழுமையாக நிவர்த்தியாகும். வேகமும் விறுவிறுப்பும் உண்டாகும். ஆர்வமும் அக்கறையும் உண்டாகும். தளர்ச்சியில்லாத முயற்சிகள் வெற்றியைத் தேடித்தரும். 8-க்குடைய குரு 8-ஆமிடத்தைப் பார்ப்பதால், சிலசமயம் எதிர்பாராத இடையூறுகளும், தடைகளும், தாமதங்களும் உருவாகலாம் என்றாலும், சிம்ம ராசிக்கு குரு 5-க்குடைய திரிகோணாதி பதி- அவர் 4-ஆமிடமான கேந்திரத்தில் நின்று 4-க்குடைய செவ்வாயின் பார்வை யைப் பெறுவதால் எல்லாத் தடைகளும் விலகும். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற மாதிரி, உங்கள் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்கும் குருவருளும் திருவருளும் துணைநிற்கும். அதாவது கேந்திரம் என்பது முயற்சி ஸ்தானம் (விஷ்ணு ஸ்தானம்); திரிகோணம் என்பது அதிர்ஷ்ட ஸ்தானம் (லட்சுமி ஸ்தானம்). லட்சுமி நாராயணரை புதன், வெள்ளிக்கிழமை களில் வழிபடவேண்டும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. அவருடன் 12-க்குடைய சூரியன் சம்பந்தம். சூரியன் 10-ல் நிற்கும் ராகுசாரம் (சதயம்). புதன் 4, 7-க்குடைய குரு சாரம். (பூரட்டாதி). எனவே 6-ஆமிடத்து மறைவு தோஷம் விலகும். 6-ஆமிடம் என்பது 10-ஆமிடத்திற்கு பாக்கிய ஸ்தானம், யோக ஸ்தானம். விபரீத ராஜயோகம் ஏற்படும். எதிர்பாராத தனப்பராப்தி உண்டாகும். அதிர்ஷ்டயோகம் அரவணைக்கும். நோய்நொடி, வைத்தியச் செலவு ஒருபுறம் இருந்தாலும், தாராளமான வரவு- செலவுகளினாலும், பொருளா தாரப் புழக்கத்தினாலும் சமாளிக்கலாம். நடிகர் வடிவேலு, "எட்டணா இருந்தால் என் பாட்டு எட்டு ஊருக்கு கேட்கும்' என்று பாடியமாதிரி, கையில் தாராளமாக காசுபணம் புரண்டால் எல்லாருக்கும் தைரியம் வந்துவிடும். ஒன்று பணபலம் வேண்டும் அல்லது படைபலம் வேண்டும். சமயத்தில் பணபலமும் பயன்படாமல் போகும். கோடிகோடியாகப் பணம் சேர்த்த அரசியல்வாதிகள் சிறைத்தண்டனை யில் வாடுகிறார்கள் அல்லவா! ஸ்ரீ ராமருக்கு பணபலம் இல்லை; படைபலம் இருந்தது. (வானரப் பட்டாளம்). அதனால் தான் இராவணனை வெற்றிகொண்டு சீதையை சிறைமீட்டார். சுதர்சன சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 3-ல் குரு வீட்டில். 3-ஆமிடம் மறைவு ஸ்தானம் என்றாலும், 11-ஆமிடத்துக்குரிய சூரியன் சாரம். துலா ராசிக்கு யோகாதி பதியான சனி சம்பந்தம். எனவே, சுக்கிரனுக்கு மறைவு தோஷம் விலகும். மேலும் 8-க்கு டையவர் (சுக்கிரன்) 8-க்கு 8-ல் மறைவதால் விபரீத ராஜயோகம். எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற ரீதியாக, ஒருசிலர் கூட்டணி சேர்ந்து வெற்றிபெறலாம். அதற்கு உதாரணம் இராவணனுக்கு எதிரியாக மாறிய விபீஷணன், ராமருக்கு வேண்டிய நண்பராக மாறி வெற்றிக்குத் துணைசெய்தார். இன்றைய அரசியல் வட்டாரத்திலும் பல நிகழ்வுகளைக் காணலாம். அதுவும் ஒருவகை ராஜதந்திரம்தான். இன்னொரு வகை ராஜதந்தரம்- கூடவே சேர்ந்து குழிபறித்து எதிரிக்கு மறைமுக அனுகூலம் செய்வது. இதற்கு ஐந்தாம்படை என்று பெயர். அதற்கு உதாரணம் சகுனிதான். 7-ல் செவ்வாய் ஆட்சி பெற்றதாலும், குரு 2-ல் பலம்பெறுவதாலும் திருமணமா காதவர்களுக்கு திருமணம் கைகூடும். வெளிநாட்டில் வேலை செய்தவர்கள் தாயகம் திரும்பி சொந்தத் தொழில் செய்யலாம். திண்டுக்கல் அருகில் கசவனம் பட்டி சென்று ஸ்ரீமௌன ஜோதி நிர்வாண சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைகிறார். 8-ஆமிடம் என்பது ஏமாற்றம், இழப்பு, விபத்து, நஷ்டம், அவப்பெயர் ஆகியவற்றைக் குறிப்பிடும் இடம். அதற்குடைய செவ்வாய் அங்கேயே ஆட்சிபெறுவதால், இவை அத்தனையும் பாதிப்பில்லாமல் மறைந்துவிடும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம். (டபுள் மைனஸ்= ஒரு ப்ளஸ்). அத்துடன் ஜென்ம ராசியில் குரு நின்று, ராசிநாதன் செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். குரு 2, 5-க்குடையவர். எதிரி, சத்ரு ஜெயம், கடன் நிவர்த்தி, ரோக நிவாரணம், தனலாபம், குடும்ப ஒற்றுமை, மகிழ்ச்சி, வாரிசு யோகம், திருமண யோகம், சுபமங்கள காரியங்கள் ஆகிய எல்லா நன்மைகளும் உண்டாகும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். பிரிந்திருக்கும் நண்பர்களும் ஒருவரையொருவர் புரிந்து, மீண்டும் நண்பர்களாவார்கள். இதெல்லாம் இன்றைய அரசியலில் தேர்தல் காலத்தில் காணக்கூடிய அற்புதங்கள். "இதெல்லாம் சகஜமப்பா' என்று சொல்லும்படி கூட்டணி சேருவார்கள். விரைவில் தேர்தல் வரப்போ கிறது. சம்பந்தப்பட்ட ராசிக்காரர்கள் இணையலாம்; இணைந்து செயல்படலாம். எதிரியை வெல்லலாம். சேலம்- மேட்டூர் அருகே நங்கவள்ளி சென்று ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது ஜென்மச்சனி நடக்கிறது. இதுவரை மங்குசனியாக தனுசு ராசிக்காரர்களை மருகவைத்த சனி, இனி பொங்கு சனியாக மாறி பூரிப்பையும் பொலிவையும் தருவார். தனுசு ராசிக்கு 6, 11-க்குடைய சுக்கிரன் 25-ஆம் தேதி மகரத்திற்கு மாறுவதால்- மகரம் 2-ஆம் இடம் என்பதால் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், லாபமும், வெற்றியும், நன்மையும், அனுகூலமும் உண்டாகும். குரு 1, 4-க்குடையவர் 12-ல் மறைவதால், சுபவிரயச் செலவுகள் உண்டாகும். 4-க்குடையவர் 4-ஆம் இடத்தையே பார்ப்பதால் பூமி, மனை, வீடு, வாகனம் போன்ற வகையில் சுபமங்களச் செலவுகள் ஏற்படும். 5-க்குடைய செவ்வாய் 5-ல் ஆட்சி! பிள்ளைகள் வகையில் பேரானந்தமும், பேருவகையும் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். பிள்ளைகள் படிப்பில் முதலிடம் பெறுவதாலும், சாதனைபுரிவதாலும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடப்பதாலும் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் அனுசரிப்புத்தன்மையும் உருவாகும். ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவதால் பிரச்சினைகளை விரட்டியடிக்கலாம். இஷ்டதெய்வ வழிபாட்டால் எல்லாம் இனிதாக நிறைவேறும். மனைவி, மக்களின் விருப் பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் விரும்பியபடி காரியமாற்றி மனம் நிறைவடையலாம். நண்பர்கள், பங்காளிகள் வகையில் நிலவிய கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு உடன்பாடும் ஒற்றுமையும் நிலவும். சிறுசிறு வைத்தியச்செலவுகள் காணப்பட்டாலும், பெரும்பாலும் ஆரோக்கியத்தில் பாதிப்பு இருக்காது. குறை இருக்காது. தன்வந்திரி பகவானை வழிபடலாம். தன்வந்தரி மந்திரத்தை ஜெபிக்கலாம்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. கேது சம்பந்தம். ராகு பார்வை. ஏழரைச்சனியில் விரயச்சனி என்றாலும், சனிக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 11-ல் - பாக்கியாதிபதி புதன் சாரம். (கேட்டை). புதன் ஆறுக்குடையவர் என்பதால், சிலருக்கு சிலசமயம் கடன் உருவானா லும் அது சுபக்கடன்தான். சிலர் தொழில் வளர்ச்சிக்காகவும், தொழில் மேன்மைக்காகவும் கடன் வாங்கலாம். சிலர் பூமி, மனை, வீடு, வாகன வகையில் முதலீடு செய்ய கடன் வாங்கலாம். இவையெல்லாம் விருத்திக்கடன். அந்தக் கடன்களுக்காக செலுத்தும் வட்டிச் செலவு விரயச் செலவாகும். விரயச்சனியில் இப்படி சுபவிரயச் செலவை உருவாக்கலாம். வேறுசிலர் கல்விக்காக செலவு செய்யலாம். அல்லது கல்விக்கடன் படலாம். சிலர் வேலை தேடி வெளிநாடு போக பணம் கொடுக்கலாம். அதுவும் கடன்பட்டுக் கொடுக்கலாம். 6-ல் உள்ள ராகு போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறு, கடன், சத்ரு, நோய், வைத்தியச்செலவு போன்ற 6-ஆம் இடத்துப் பலன்களையெல்லாம் வேரோடு அகற்றிவிடும். 12-ஆம் இடத்துக் கேது வீடு, தொழில், உத்தியோக வகையில் இடம் மாறுதலை ஏற்படுத்தலாம். அந்த மாறுதல் விரும்பத்தக்க மாறுதலாகவும், நன்மைதரும் மாறுதலாகவும் அமையும். (12-ஆம் இடம் என்பது மாறுதல் அல்லது வெளியூர் வாசம்). 5, 10-க்குடைய சுக்கிரன் 25-ஆம் தேதி ஜென்ம ராசிக்கு (மகரத்துக்கு) மாறுவதால், பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். மனம்போல் மாங்கல்யம் அமையும். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் இடம்பெறும். வாழ்வாதாரத்துக்கான அஸ்திவாரம் அமையும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 11-க்குடைய குரு 10-ல் நின்று 2-ஆமிடத்தைப் பார்க்கிறார். 5-க்குடைய புதன் ஜென்ம ராசியில் சூரியனோடு சம்பந்தம். 4, 9-க்குடைய சுக்கிரன் 11-ல் ராசிநாதனோடு சம்பந்தம். உடல்நலம், மனநலம், வாழ்க்கை நலம் எல்லாம் பலமாக அமையும். பணபலம் பலம்பெறும். "தனம், தான்யம் பதிம் பசும் பகுபுத்திர லாபம்' என்று ஆசிர்வாதம், மந்திரம் சொல்லுவதுபோல எல்லாம் சிறப்பாகவும், செழிப்பாகவும் அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பு, வேலை, சுபமங்கள காரியங்களில் முன்னேற்றமும் தெரியும். இஷ்டதெய்வ வழிபாடு இதமாக நிறைவேறும். குலதெய்வ வழிபாடும் குறையின்றி நடக்கும். குலதெய்வமும், எல்லையும் தெரியாதவர்களுக்கு எல்லாம் ஆரூடம், பிரசன்னம் மூலமாகவும், அருள்வாக்கு மூலமாகவும் எல்லையும், தெய்வமும் தெரிந்து வழிபாடு நடத்தலாம். இந்த மகாசிவராத்திரி புண்ணிய காலத்தில் தெய்வக்குற்றம், குறைகள் எல்லாம் விலகி, பூஜைகள் நடத்தி உயர்வடையலாம். உய்வடையலாம். ஆரோக்கியத்திலும் எந்தக் குறையும் இருக்காது. பொருளா தாரத்திலும் எந்தக் குறையும் இருக்காது. உங்கள் மனம் விரும்பும் சித்தர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று மீன ராசியைப் பார்க்கிறார். இது ஒரு ப்ளஸ் பாயின்ட். அடுத்து 10-க்குடையவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 25-ஆம் தேதி 3, 8-க்குடைய சுக்கிரன் 11-ல் வருவதும் தனிபலம். ஆக, 12 ராசிக்காரர்களிலும், நடப்புக் கோட்சாரம் மீன ராசிக்காரர்களுக்குத்தான் அதிராஜயோகமாக அமைகிறது. ஆகவே எல்லாவிதமான யோகங்களும் உங்களுக்கே உரித்தாகும். எங்கும் தங்கும் மங்களம் உங்கள் ஒருவருக்கே சொந்தமாகி, பொங்கும் பூரிப்பை வழங்கும். மார்ச் 13-ல் தனுசுவுக்கு குரு மாறினாலும், குருவின் யோகம் தொடர்ந்து உங்களுக்கு நீடிக்கும்; நிலைக்கும். ஆகவே, மீன ராசிக்காரர்களே, "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற மாதிரி, சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக்கொண்டு, வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். "போனால் வராது பொழுது விடிந்தால் கிடைக்காது' என்று வியாபாரிகள் விரும்பி அழைப்பது போன்ற அதிர்ஷ்டமும் யோகமும் உங்களைத் தேடிவரும். இக்காலத்தை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள் ளுங்கள். வாழ்க்கை வசதிகள், தொழில் சௌகரியங்கள், முன்னேற்றங்கள் எல்லாவற்றுக்கும் பலமான அஸ்திவாரம் அமையும். சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடவும்.