இந்த வார ராசிபலன் 23-2-2020 முதல் 29-2-2020 வரை

/idhalgal/balajothidam/week-rasi-23-02-2020-29-02-2020

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

25-2-2020- மீனம்.

27-2-2020- மேஷம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 1, 2, 3, 4.

செவ்வாய்: மூலம்- 3, 4, பூராடம்- 1.

புதன்: அவிட்டம்- 2, 1.

குரு: பூராடம்- 4.

சுக்கிரன்: ரேவதி- 2, 3, 4.

சனி: பூராடம்- 4, உத்திராடம்- 1.

ராகு: திருவாதிரை- 2, 1.

கேது: மூலம்- 4, 3.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம், அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணமாக இருக்கிறார். தொடக் கத்தில் கேது சாரத்திலும் (மூலம்), பிறகு சுக்கிரன் சாரத்திலும் (பூராடம்) சஞ்சாரம். 9-க்குடைய குருவும், 10-க்குடைய சனியும் ஒன்றுகூடியிருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்தவொரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்தாலும், பரிவர்த்தனை கிரக அமைப்பிருந்தாலும் அந்த ஜாதகர் எந்தவொரு கட்டத்திலும் வீழ்ச்சியடைவதில்லை; தாழ்வடைவதில்லை. அந்த கிரக அமைப்பு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் ஜாதகத்தில் உண்டு. பெருந்தலைவர் காமராஜரும், பேரறிஞர் அண்ணாவும் தமது தொகுதியிலேயே தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், கருணாநிதி எந்தத் தொகுதியிலும், எப்போதும் தோல்வியே அடைந்ததில்லை. இது பரிவர்த்தனை யோகத்தின் சிறப்பு, ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களைவிட, பரிவர்த் தனை யோகம் பெறும் ஜாதகங்கள் தாழ்வடை வதில்லை; வீழ்ச்சியடைவதில்லை. அதே சமயம் 9-ஆமிடத்திற்கு கேது- ராகு சம்பந்தமும், செவ்வாய், சனி சம்பந்தமும் இருப் பதால், சிலருக்கு தகப்பனார்வகையிலும், சிலருக்குப் பூர்வீக சொத்துவகையிலும் பிரச்சினைகள் வரலாம். குரு அங்கிருப்பதால் சமாளித்துவிடலாம். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம். 7, 12-க்குடைய செவ்வாய் சுக்கிரனைப் பார்க் கிறார். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த குரு 8-ல் மறைவு; என்றாலும் ஆட்சி. ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடப்பதால், சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம், வேலைமாற்றம், பதவிமாற்றம் ஏற்பட இடமுண்டு. எந்த மாற்ற மாக இருந்தாலும், அந்த மாற்றம் முன்னேற் றமாக அமையும். 2-ல் ராகு இருப்பதால் வாக்கு, பேச்சு ஆகியவற்றில் வன்மை கூடாது; மென்மை வேண்டும். குரு பார்ப் பதால் வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். பொருளாதாரத்திலும் நெருக்கடி நிலையைத் தவிர்க்கலாம். 2, 5-க்குடைய புதன் 9-ல் திரிகோணம் ஏறுவதால், இறையருளும் குருவருளும் உங்களை வழிநடத்தும். 10-ல் சூரியன் நின்று 4-ஆமிடத்தைப் பார்ப்பதால், அரசு சம்பந்தமான இடத்துப் பிரச்சினைகள், நிலத்துப் பிரச்சினைகள், பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான 4-ஆமிடத்துப் பிரச்சினைகள் அனைத்தும் சாதகமாக நிறைவேறும். சிலருக

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கும்பம்.

25-2-2020- மீனம்.

27-2-2020- மேஷம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: சதயம்- 1, 2, 3, 4.

செவ்வாய்: மூலம்- 3, 4, பூராடம்- 1.

புதன்: அவிட்டம்- 2, 1.

குரு: பூராடம்- 4.

சுக்கிரன்: ரேவதி- 2, 3, 4.

சனி: பூராடம்- 4, உத்திராடம்- 1.

ராகு: திருவாதிரை- 2, 1.

கேது: மூலம்- 4, 3.

கிரக மாற்றம்:

புதன் வக்ரம், அஸ்தமனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணமாக இருக்கிறார். தொடக் கத்தில் கேது சாரத்திலும் (மூலம்), பிறகு சுக்கிரன் சாரத்திலும் (பூராடம்) சஞ்சாரம். 9-க்குடைய குருவும், 10-க்குடைய சனியும் ஒன்றுகூடியிருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எந்தவொரு ஜாதகத்திலும் தர்மகர்மாதிபதி யோகம் அமைந்தாலும், பரிவர்த்தனை கிரக அமைப்பிருந்தாலும் அந்த ஜாதகர் எந்தவொரு கட்டத்திலும் வீழ்ச்சியடைவதில்லை; தாழ்வடைவதில்லை. அந்த கிரக அமைப்பு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் ஜாதகத்தில் உண்டு. பெருந்தலைவர் காமராஜரும், பேரறிஞர் அண்ணாவும் தமது தொகுதியிலேயே தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், கருணாநிதி எந்தத் தொகுதியிலும், எப்போதும் தோல்வியே அடைந்ததில்லை. இது பரிவர்த்தனை யோகத்தின் சிறப்பு, ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களைவிட, பரிவர்த் தனை யோகம் பெறும் ஜாதகங்கள் தாழ்வடை வதில்லை; வீழ்ச்சியடைவதில்லை. அதே சமயம் 9-ஆமிடத்திற்கு கேது- ராகு சம்பந்தமும், செவ்வாய், சனி சம்பந்தமும் இருப் பதால், சிலருக்கு தகப்பனார்வகையிலும், சிலருக்குப் பூர்வீக சொத்துவகையிலும் பிரச்சினைகள் வரலாம். குரு அங்கிருப்பதால் சமாளித்துவிடலாம். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 11-ல் உச்சம். 7, 12-க்குடைய செவ்வாய் சுக்கிரனைப் பார்க் கிறார். சுக்கிரனுக்கு வீடுகொடுத்த குரு 8-ல் மறைவு; என்றாலும் ஆட்சி. ரிஷப ராசிக்கு அட்டமத்துச்சனி நடப்பதால், சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம், வேலைமாற்றம், பதவிமாற்றம் ஏற்பட இடமுண்டு. எந்த மாற்ற மாக இருந்தாலும், அந்த மாற்றம் முன்னேற் றமாக அமையும். 2-ல் ராகு இருப்பதால் வாக்கு, பேச்சு ஆகியவற்றில் வன்மை கூடாது; மென்மை வேண்டும். குரு பார்ப் பதால் வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். பொருளாதாரத்திலும் நெருக்கடி நிலையைத் தவிர்க்கலாம். 2, 5-க்குடைய புதன் 9-ல் திரிகோணம் ஏறுவதால், இறையருளும் குருவருளும் உங்களை வழிநடத்தும். 10-ல் சூரியன் நின்று 4-ஆமிடத்தைப் பார்ப்பதால், அரசு சம்பந்தமான இடத்துப் பிரச்சினைகள், நிலத்துப் பிரச்சினைகள், பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான 4-ஆமிடத்துப் பிரச்சினைகள் அனைத்தும் சாதகமாக நிறைவேறும். சிலருக்கு மனைவிவகையில் எதிர்பாராத சொத்துசுகங்கள், நன்மைகள் உண்டாகும். ஒரு இடத்தைக் கொடுத்து பரிவர்த்தனை செய்து, இன்னொரு இடம் வாங்கலாம். வாகனப் பரிவர்த்தனையும் செய்யலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசியில் ஜென்ம ராகு நிற்கிறார். ராசிநாதன் புதன் 8-ல் மறைகிறார். நவகிரகங் களில் புதனுக்கு மட்டும் மறைவு தோஷம் விதிவிலக்காகும். அதனால்தான் "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்றார்கள். மேலும், சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கும் கிரகம் புதன் என்பதால், அவரை அஸ்தமன தோஷமும் பாதிக்காது. எண்கணிதத்தில் ஒன்றுமுதல் ஒன்பதுவரை வரிசைப்படுத்தப் படுகிறது. அதில், புதன் ஐந்தாம் எண்ணின் அதிபதி. அவர் நடுநாயகமாகப் போற்றப் படுகிறார். சீட்டாட்டத்தில் "ஜோக்கர்' என்ற சீட்டை எல்லாவற்றிலும் சேர்த்துக்கொள்வது போல, புதனும் எல்லாச் சூழ்நிலையிலும் இணைத்துப் பலன் சொல்வதற்கு ஏற்றுக் கொள்ளப்படும். எனவே ராசிநாதன் மறைந்து விட்டார் என்று மயங்கவேண்டாம்; தயங்க வேண்டாம். முதலிலில் எழுதியபடி, மறைந்த புதன் நிறைந்த தனம். ஒருசில காரியங்களை மறைவாக- ரகசியமாகத்தான் செய்ய வேண்டும். மறைந்திருந்து தாக்குவது என்பது போர்த் தந்திரத்தில் ஒன்று! அதன்படிதான் ராமர் மறைந்திருந்து வாலிலியை வதம் செய்தார். அதை "கொரில்லா போர்' என்பார்கள்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு 6-ல் செவ்வாய், குரு, சனி, கேது நால்வரும் மறைகிறார்கள். 12-ல் ராகு மறைகிறார். 8-ல் சூரியன் மறைகிறார். இதனால் எந்தவொரு முயற்சியிலும், செயலிலிலும் நினைத்தோம் முடித்தோம் என்பது இருக்காது. "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா- தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்களெல்லாம் பருவத்தாலன்றி பழா' என்பது பாடல். அதன்படி, ஆகும் நாளன்றி உங்கள் முயற்சிகள் வெற்றிபெறாது. அதுதான் மறைந்த கிரகங்களின் விதி. எல்லா கிரகங்கள் மறைவு பெற்றாலும், கடக ராசிக்கு 11-க்குடைய சுக்கிரன் 9-ல் உச்சம் பெறுவதாலும், அவரை 10-க்குடைய செவ்வாய் பார்ப்பதாலும் "லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன்' என்று நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்தில் சொன்னமாதிரி' வரவேண்டிய நேரத்தில் வந்து, பெறவேண்டியதைப் பெற்று, தரவேண்டியதைத் தந்து சாதனை படைத்துவிடுவீர்கள். கடக ராசிக்கு 4-க்குடைய கேந்திராதிபதி திரிகோணம் பெறுவது ஒரு சிறப்பு. கேந்திரம்- முயற்சி ஸ்தானம். திரிகோணம்- அதிர்ஷ்ட ஸ்தானம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். அவருக்கு வீடுகொடுத்த சனி 5-ல் நின்று அவரைப் பார்க்கிறார். சூரியனுக்கு வீடுகொடுத்த சனி சூரியனைப் பார்க்கிறார். (5-ல் திரிகோணம் பெற்றுப் பார்க்கிறார்). சனி 7-க்குடையவர். கேந்திராதிபதி 5-ல் திரிகோணம் பெறுவது ஒரு சிறப்பு. கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம், முயறசி ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம், அதிர்ஷ்ட ஸ்தானம். தளர்ச்சியில்லாத முயற்சி வளர்ச்சி பெறும்; வெற்றிபெறும். அதைத்தான் வள்ளுவர், "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்றார். "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பதும் பழமொழி. இறையருள் இருவருக்கு மட்டும் கிடைக்காது. ஒருவர் சோம்பேறி. இன்னொருவர். துரோகி. இவ்விருவருக்கும் கடவுள் கருணை காட்டமாட்டார். துரோகிகள் முன்னேற்றமடைவதுபோலவும், உயர்ந்து நிற்பதுபோலவும் தோன்றலாம். ஆனால் அது நிலைபெறாது. துரோகத்துக்கு தண்டனை அனுபவித்தே தீரவேண்டும். சிறையில் வாடும் பலரே அதற்கு சாட்சி!

dd

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம். வக்ரமாகவும் இருக்கிறார்; அஸ்தமனமாகவும் இருக்கிறார். "ஐந்து ஒன்பதுக்கதிபர் பாவர் சுபரானாலும் பொன் போன்ற சுபமே தருவார்' என்பது "சந்திரகாவிய' விதி. அந்த விதி 5, 9-ல் இருக்கும் கிரகங்களுக்கும் பொருந்தும். புதனுக்கு வீடுகொடுத்த சனி, புதன் வீட்டைப் (கன்னி) பார்க்கிறார். சனியின் வீட்டில் புதன் இருக்கிறார். எனவே, புதனுக்கும் சனிக்கும் இணைப்பு பலம் கிடைக்கிறது. அதனால் உங்கள் எண்ணங் களும் திட்டங்களும் எளியமுறையில் வெற்றியாகும். செய்வதையே சொல் வீர்கள்; சொல்வதையே செய்வீர்கள். சனி 6-க்குடையவர்; செவ்வாய் 8-க்குடையவர் என்பதால், 4-ல் செவ்வாய், சனியின் பலனாகத் தடைகளும் குறுக் கீடுகளும் காணப்பட்டாலும், குரு ஆட்சிபெறுவதால் பாதிக்காது. தொய் வுகள் காணப்பட்டாலும் தோல்விக்கு இடமில்லை. 7-ல் சுக்கிரன் உச்சம் பெறுவதால், திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடிவரும். திருமணமானவர்களுக்கு மனை வியால் நன்மையுண்டாகும். பெண்களுக்கு கணவரால் நன்மை உண்டாகும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் 6-ல் மறைவு. என்றாலும் உச்சம் பெறுகிறார். ஆட்சி அல்லது உச்சம்பெறும் கிரகங்களை மறைவு தோஷம் பாதிக்காது. 6-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10-ஆமிடத்துக்கு பாக்கிய ஸ்தானமாகும். எனவே வாழ்க்கை, தொழில்வகையில் உங்கள் கனவுகள் நனவாகும். திட்டங்கள் வெற்றியடையும். தளர்ச்சி விலகும். வளர்ச்சி பெருகும். முயற்சி கைகூடும். 9, 12-க்குடைய புதன் 4-ல் கேந்திரம் பெறுவதால், தகப்பனார் அல்லது பூர்வீக சொத்துவகையில் நிலவும் சிக்கல்களும் பிரச்சினைகளும் விலகும். புதன் விரயாதிபதி என்பதால்- ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால், சொத்துப் பரிவர்த்தனை அல்லது வாகனப் பரிவர்த்தனை அல்லது புதிய வாகனயோகம், பூமி, வீடு, மனை யோகம் அமையும். ராசிநாதன் 6-ல் உச்சம் என்பதால், இதுசம்பந்தமான அரசுக்கடன் அல்லது வங்கிக்கடன், தனியார் கடன் அமைவதற்கும் இடமுண்டாகும். கடன் வந்தாலும் எளிதாக அவை ஓடியடையும். 3-ஆமிடத்துச் செவ்வாய் அந்த தைரியத்தை உங்களுக்குத் தருவார். சிலருக்கு சகோதரர்கள் அல்லது நண்பர்கள்வகையில் உதவியும் கிடைக்கும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல் இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த குருவும், செவ்வாயின் உச்ச ராசிநாதன் சனியும் அவருடன் சம்பந்தம். அதனால் உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறும். செய்யும் தொழில் முன்னேற்றமடையும். வேலை அல்லது உத்தியோகத்தில் நிறைவும் திருப்தியும் ஏற்படும். சிலருக்குப் பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி, தொழில் முன்னேற்றம் ஆகிய நன்மைகள் உண்டாகும். பூமி, வீடு, சொத்துகளில் இருக்கும் சிக்கல்கள் விலகும். அரசு சம்பந்தப்பட்ட அனைத்து முயற்சிகளும் அனுகூலமாக அமையும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர் களுக்குப் பதவி உயர்வும், விரும்பிய இடப்பெயர்ச்சியும், முன்னேற்றமும் உண்டாகும். சொத்து வாங்குதல், சொத்து விற்பனை செய்தல், வீடுகட்டுதல் போன்ற பூமி, மனை, கட்டடம் சம்பந்தப்பட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். ரியல்எஸ்டேட் தொழில் செய்கிறவர்களுக்கு தற்காலம் ஆதாயமும் அனுகூலமும் அமையும். கொடுக்கல்- வாங்கல், வட்டித்தொழில் புரிகிறவர்கள் மட்டும் கவனமாகவும், முன்னெச்சரிக் கையாகவும் செயல்படவேண்டும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடை பெற்றாலும், சனிக்கு வீடுகொடுத்த குரு ஆட்சிபெறுவதால், ஜென்மச்சனி யோகச் சனியாகவும், பொங்குசனியாகவும் பலன் தரும். சனிக்கு சாரம்கொடுத்த சுக்கிரன் 4-ல் உச்சம் பெறுவதால், தேக ஆரோக்கியத்தில் தெளிவு கிடைக்கும். செய்யும் தொழில் உய்வடையும். பார்க்கும் வேலையில் ஈர்ப்பும் கவனமும் உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கு இடமுண்டாகும். கடமையைச் செய்து உரிமையைப் பெறலாம். 9-க்குடைய சூரியன், ராகு சாரம் பெறுவதால், பக்தி, தெய்வ வழிபாடு, தியானம், ஜபம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். அதனால் மனநிறைவும் திருப்தியும் உண்டாகும். எந்தவொரு முயற்சியும் ஈடேற வேண்டுமானாலும், வெற்றிபெற வேண்டுமானாலும் இறைவன் கருணை வேண்டும். நினைப்பது மனிதனின் கடமை. நிறைவேற்றுவது தெய்வத்தின் கருணை. உங்களுக்கு அந்த பாக்கியம் உண்டாகும். ஆலய தெய்வ வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் முழுமையாக நிறைவேறும். அதுவே உங்களுக்கு ஆன்மபலமும் மனபலமும் ஏற்படக் காரணமாக அமையும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். இதை விரயச்சனி என்பார்கள். இரண்டாம் சுற்று ஏழரைச்சனி நடப்பவர்களுக்கு இது பொங்குசனியாகும். எனவே, விரயச்சனி என்பதை சுபவிரயச்சனியாக ஏற்றுக்கொள்ளலாம். பூமி, வீடு, மனை வாங்குவது, வாகனம் வாங்குவது, குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவையெல்லாம் சுபவிரயமாகும். ஜாதகரீதியாக 6, 8, 12-க்குடைய தசாபுக் திகள் நடைபெற்றால், அவர்களுக்கு மங்கு சனியாகவும், வீண்விரயமாகவும், இழப்பு, ஏமாற்றமாகவும் அமையும். சனி தொடக்கத்தில் பூராட நட்சத்திரத்திலும், பிறகு உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சாரம். பூராடம் சுக்கிரனின் நட்சத்திரம்; உச்சமாக இருக்கிறார். சூரியன் சனியின் ராசியிலேயே நின்று (கும்பத்தில்) சனியின் பார்வையைப் பெறுகிறார். எனவே, இக்காலம் விரயச்சனி நடைபெற்றாலும், சுபவிரயச்சனியாகவும், பொங்குசனியாகவும் மாறி இனிய பலனாக நடத்துவார். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் பலம்பெற்று ராசியைப் பார்க்கிறார். பொதுவாக சனிக்கு 3, 6, 11-ஆமிடங்கள்தான் நற்பலன் தரும் இடங்கள்; யோகமான இடங்களாகும். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்குமாகில் கூறு பொன் பொருளுமும் உண்டாம்; குறைவிலாச் செல்வ முண்டாம்; ஏறுபல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏகூலுண்டாம் காறுபால் அஷ்ட லட்சுமி கடாட்சமும் உண்டாகும்தானே' என்பது "சந்திரகாவிய'ப் பாடல். அதேபோல கும்ப ராசிக்கு 12-ல் புதனும், 2-ல் சுக்கிரனும் இருப்பது "அனபா யோகம்', "சுனபா யோகம்' எனப்படும். 5-ல் ராகு; நல்லபல திட்டங்களை உருவாக்குவார். 11-ல் உள்ள குரு, செவ்வாய், சனி, கேது அவற்றை எளிதாக ஈடேற்றுவார்கள். 2-லுள்ள உச்சம் பெற்ற சுக்கிரன், குடும்பத்திலுள்ள குழப்பங்களை நீக்கி, கணவன்- மனைவிக்குள் அன்பும் அன்யோன்யமும் ஏற்படச்செய்வார். தெளிவாகச் சொன்னால் நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமையும். 5-ஆமிடத்து ராகு புத்திர தோஷம் என்பார்கள். புத்திரகாரகன் குருவும், ராசிநாதன் சனியும் பார்ப்பதால் தோஷம் மறையும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சி. மீன ராசியில் சுக்கிரன் உச்சம். 9-க்குடைய செவ்வாயும், 10-க்குடைய குருவும் 10-ல் சேர்க்கை. இது தர்மகர்மாதிபதி யோகம். 10-ல் செவ்வாய், சனி சேர்க்கையும், ராகு- கேது சம்பந்தமும் நினைப்பதற்கும் நடப்பதற்கும் தொடர்பில்லாமல் தோன்றும். என்றாலும் சுக்கிரன் ராசியில் உச்சம் பெறுவதால், அதுவும் ஒரு நன்மைக்காகவே என்று ஆறுதலடைய வேண்டும். ஒரு திரைப்படப் பாடல் உண்டு. "அவன் போட்ட கணக்கொன்று. அவள் போட்ட கணக்கொன்று. இரண்டுமே தவறானது. இறைவன் போடும் கணக்கு வேறொன்று. அதுவே சரியானது' என்பது அந்தப் பாடல். அதன்படி, நீங்கள் நினைப்பது ஒன்று; நடப்பது வேறொன்று. அதனால் மனம் வாடுது இன்று. அதற்காக மயங்கவேண்டாம்; தயங்கவேண்டாம். "மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா- வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதியமாதிரி, நடந்ததைப் பற்றியும், நடந்து கொண்டிருப்பதைப் பற்றியும் சிந்திக்காமல், கவலைப்படாமல், நடக்க வேண்டியதைப் பற்றி இறைவன்மேல் பாரத்தைப்போட்டு, தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். உங்கள் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உங்களை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும்.

bala280220
இதையும் படியுங்கள்
Subscribe