இந்த வார ராசிபலன் : 2-9-2018 முதல் 8-9-2018 வரை

/idhalgal/balajothidam/week-rasi-2-9-2018-8-9-2018

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,

(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

4-9-2018- மிதுனம்.

6-9-2018- கடகம்.

8-9-2018- சிம்மம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரம்- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 2.

புதன்: மகம்- 3, 4, பூரம்- 1, 2.

குரு: விசாகம்- 2.

சுக்கிரன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1.

சனி: மூலம்- 1.

ராகு: பூசம்- 2.

கேது: உத்திராடம்- 4.

கிரக மாற்றம்:

2-9-2018- புதன் அஸ்தமனம்.

செவ்வாய் வக்ரம்.

6-9-2018- செவ்வாய் வக்ரநிவர்த்தி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமான பலன்தான். அதுமட்டுமல்ல; 10-க்குடைய சனி 9-ல் அமர்ந்து தர்மகர்மாதிபதி யோகத்தைத் தருகிறார். அந்த 9-க்குடைய குரு 7-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் அங்கு ஆட்சி! ஆகவே பழம் நழுவிப் பாலில் விழ- அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி நீங்கள் எண்ணியதெல்லாம் எளிதாக ஈடேறும்; விரும்பியதெல்லாம் உங்களைத் தேடி வந்தடையும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடிவரும். வாரிசு வேண்டுவோர்க்கு வாரிசு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கும், தொழில் தொடங்கத் துடிப்போருக்கும் இக்காலம் வசந்த காலம்! வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதித்து பிறந்த வீட்டுக்கு அனுப்பலாம். என்.ஆர்.ஐ. திட்டத்தில் கடன் வாங்கி சொந்த வீடு கட்டலாம். செவ்வாயுடன் கேது சம்பந்தப்பட்டு ராகு பார்ப்பதால், நெருங்கி பழகிய நண்பர்களும் அல்லது உறவினர்களும் கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னாலும், மனதுக்குள் பொறாமை உணர்வுகொண்டு கண்திருஷ்டியாகப் பொருமலாம். கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பமுடியாது என்பதால், உங்கள் செயல் திட்டங்களையும் பொருளாதார வசதிகளையும் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டாம்; பேச வேண்டாம். பணக்கஷ்டம் இருப்பதாக நடியுங்கள். அப்போது எங்கே நம்மிடம் கடன் கேட்பாரோ என்று மற்றவர்கள் ஒதுங்கி ஓரமாகப் போய்விடுவார்கள். உங்கள் காரியங்களை ரகசியமாகச் செய்து முடிக்கலாம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும்.

பரிகாரம்: செவலூர் பூமிநாதசுவாமி கோவிலில் ருத்ரஹோமம் செய்யலாம். காரைக்குடி சுந்தரம் குருக்களிடமும் எளிமையாக ருத்ரஹோமம் செய்யலாம். மற்ற ஹோமங்களும் செய்வார். தொடர்புக்கு: செல்: 99942 74067.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசி அன்பர்களே! உங்களுக்கு 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. இது மங்குசனியா அல்லது பொங்கு சனியா அல்லது மரணச் சனியா என்றெல்லாம் சந்தேகமும் வேண்டாம்; ஆராய்ச்சியும் வேண்டாம். ரிஷப ராசி- ரிஷப லக்னத்துக்கும், துலா ராசி- துலா லக்னத்துக்கும் சனி ராஜயோகாதிபதி ஆவார். அதனால் அவர் கெடுக்கமாட்டார். சுமார் 60 வருடங்களுக்கு முன்பு ரிஷப ராசிக்கு 8-ல் சனி அட்டமச்சனியாக வந்தபோதுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் தமிழக முதல்வர் ஆனார். அவர் ரிஷப ராசி. அந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அப்போது ஆந்திராவில் முதல்வராக இருந்த என்.டி.ஆர்., பரிகாரத் திருமணம் செய்துகொள்ளும்படி அவரிடம் சொன்னதாகவும், அதன்படி கலைஞரும் ரகசியமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பத்து லட்சம் ரூபாயில் வீடு வாங்கித் தந்ததாகவும் பேசிக்கொண்டார்கள். அது உண்மையோ பொய்யோ தெரியாது. அதை வைத்தே மணிவண்ணன் ஒரு திரைப்படத்தில் சத்யராஜ் பரிகாரத் திருமணம் செய்துகொண்ட மாதிரி ஒரு காட்சி அமைத்திருந்தார். இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், அட்டமச்சனி மற்றவர்களை பாதிப்பது போல ரிஷப ராசிக்காரர்களை பாதிக்காது. அதேசமயம் இந்த அட்டமத்துச்சனி நேரத்தில் யாருக்காவது ஜாதகரீதியாக சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்படும். "விடியல்' பத்திரிகை உரிமையாளர் பி.எஸ்.பி. எனப் போற்றப்படும். பி.எஸ். பரமசிவம் கடக ராசி. அவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது சந்திர தசை நடந்தது. நாள் கணக்கில் தொடர்ந்து பேசி கின்னஸ் சாதனை படைத்த அவருக்கு தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் காலமானார். எனக்கு ஒருவகையில் உறவினர். அவர் மகன் விஜய்பாலா, "நீங்கள் எழுதிய மாதிரி ஏழரைச்சனியில் சந்திர தசை சந்திப்பால் நான் பிழைக்க மாட்டேன் என அப்பா கூறினார்' என்று தகவல் சொன்னார். அப்போது "அதிர்ஷ்டம்' பத்திரிகையிலும், "ஜோதிடபூமி'யிலும் ராசிபலன் எழுதிவந்தேன். பி.எஸ்.பி. விட்டுச்சென்ற ஜோதிடப் பணியை அவர் மகன் விஜய்பாலா தொடர்ந்து செய்து வருகிறார். பல ஜோதிட மாணவர்களை உருவாக்கி வருகிறார்.

பரிகாரம்: அட்டமத்துச்சனி பாதிப்பு விலக அறந்தாங்கி அருகில் எட்டியத்தளி சென்று வழிபடலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் புதன் 3-ல் சிம்மத்தில் சூரியனோடு சேர்ந்திருக்கிறார். 2-ஆம் தேதிமுதல் அஸ்தமனம் அடைகிறார். 3-ல் மறையும் கிரகம் அஸ்தமனம் அடைவது நல்லதுதான். ஆனால் ராசிநாதனும், 4-க்குடையவரும் அஸ்தமனம் அடைவது நல்லதல்ல! அதனால் படிக்கும் மாணவ- மாணவியருக்கு படிப்பது மனதில் தங்காது. ஞாபகத்தில் இருக்காது. தேர்வில் மெதுவாக எழுதுவதால் போதிய மார்க் கிடைக்க

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு,

(பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- ரிஷபம்.

4-9-2018- மிதுனம்.

6-9-2018- கடகம்.

8-9-2018- சிம்மம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: பூரம்- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 2.

புதன்: மகம்- 3, 4, பூரம்- 1, 2.

குரு: விசாகம்- 2.

சுக்கிரன்: சித்திரை- 3, 4, சுவாதி- 1.

சனி: மூலம்- 1.

ராகு: பூசம்- 2.

கேது: உத்திராடம்- 4.

கிரக மாற்றம்:

2-9-2018- புதன் அஸ்தமனம்.

செவ்வாய் வக்ரம்.

6-9-2018- செவ்வாய் வக்ரநிவர்த்தி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமான பலன்தான். அதுமட்டுமல்ல; 10-க்குடைய சனி 9-ல் அமர்ந்து தர்மகர்மாதிபதி யோகத்தைத் தருகிறார். அந்த 9-க்குடைய குரு 7-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரனும் அங்கு ஆட்சி! ஆகவே பழம் நழுவிப் பாலில் விழ- அதுவும் நழுவி வாயில் விழுந்த மாதிரி நீங்கள் எண்ணியதெல்லாம் எளிதாக ஈடேறும்; விரும்பியதெல்லாம் உங்களைத் தேடி வந்தடையும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடிவரும். வாரிசு வேண்டுவோர்க்கு வாரிசு கிடைக்கும். வேலை தேடுவோர்க்கும், தொழில் தொடங்கத் துடிப்போருக்கும் இக்காலம் வசந்த காலம்! வெளிநாடு சென்று கைநிறைய சம்பாதித்து பிறந்த வீட்டுக்கு அனுப்பலாம். என்.ஆர்.ஐ. திட்டத்தில் கடன் வாங்கி சொந்த வீடு கட்டலாம். செவ்வாயுடன் கேது சம்பந்தப்பட்டு ராகு பார்ப்பதால், நெருங்கி பழகிய நண்பர்களும் அல்லது உறவினர்களும் கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னாலும், மனதுக்குள் பொறாமை உணர்வுகொண்டு கண்திருஷ்டியாகப் பொருமலாம். கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பமுடியாது என்பதால், உங்கள் செயல் திட்டங்களையும் பொருளாதார வசதிகளையும் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டாம்; பேச வேண்டாம். பணக்கஷ்டம் இருப்பதாக நடியுங்கள். அப்போது எங்கே நம்மிடம் கடன் கேட்பாரோ என்று மற்றவர்கள் ஒதுங்கி ஓரமாகப் போய்விடுவார்கள். உங்கள் காரியங்களை ரகசியமாகச் செய்து முடிக்கலாம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவைப்படும்.

பரிகாரம்: செவலூர் பூமிநாதசுவாமி கோவிலில் ருத்ரஹோமம் செய்யலாம். காரைக்குடி சுந்தரம் குருக்களிடமும் எளிமையாக ருத்ரஹோமம் செய்யலாம். மற்ற ஹோமங்களும் செய்வார். தொடர்புக்கு: செல்: 99942 74067.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசி அன்பர்களே! உங்களுக்கு 2020 வரை அட்டமச்சனி நடக்கிறது. இது மங்குசனியா அல்லது பொங்கு சனியா அல்லது மரணச் சனியா என்றெல்லாம் சந்தேகமும் வேண்டாம்; ஆராய்ச்சியும் வேண்டாம். ரிஷப ராசி- ரிஷப லக்னத்துக்கும், துலா ராசி- துலா லக்னத்துக்கும் சனி ராஜயோகாதிபதி ஆவார். அதனால் அவர் கெடுக்கமாட்டார். சுமார் 60 வருடங்களுக்கு முன்பு ரிஷப ராசிக்கு 8-ல் சனி அட்டமச்சனியாக வந்தபோதுதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் தமிழக முதல்வர் ஆனார். அவர் ரிஷப ராசி. அந்தப் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அப்போது ஆந்திராவில் முதல்வராக இருந்த என்.டி.ஆர்., பரிகாரத் திருமணம் செய்துகொள்ளும்படி அவரிடம் சொன்னதாகவும், அதன்படி கலைஞரும் ரகசியமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு பத்து லட்சம் ரூபாயில் வீடு வாங்கித் தந்ததாகவும் பேசிக்கொண்டார்கள். அது உண்மையோ பொய்யோ தெரியாது. அதை வைத்தே மணிவண்ணன் ஒரு திரைப்படத்தில் சத்யராஜ் பரிகாரத் திருமணம் செய்துகொண்ட மாதிரி ஒரு காட்சி அமைத்திருந்தார். இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், அட்டமச்சனி மற்றவர்களை பாதிப்பது போல ரிஷப ராசிக்காரர்களை பாதிக்காது. அதேசமயம் இந்த அட்டமத்துச்சனி நேரத்தில் யாருக்காவது ஜாதகரீதியாக சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் ஏற்படும். "விடியல்' பத்திரிகை உரிமையாளர் பி.எஸ்.பி. எனப் போற்றப்படும். பி.எஸ். பரமசிவம் கடக ராசி. அவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது சந்திர தசை நடந்தது. நாள் கணக்கில் தொடர்ந்து பேசி கின்னஸ் சாதனை படைத்த அவருக்கு தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் காலமானார். எனக்கு ஒருவகையில் உறவினர். அவர் மகன் விஜய்பாலா, "நீங்கள் எழுதிய மாதிரி ஏழரைச்சனியில் சந்திர தசை சந்திப்பால் நான் பிழைக்க மாட்டேன் என அப்பா கூறினார்' என்று தகவல் சொன்னார். அப்போது "அதிர்ஷ்டம்' பத்திரிகையிலும், "ஜோதிடபூமி'யிலும் ராசிபலன் எழுதிவந்தேன். பி.எஸ்.பி. விட்டுச்சென்ற ஜோதிடப் பணியை அவர் மகன் விஜய்பாலா தொடர்ந்து செய்து வருகிறார். பல ஜோதிட மாணவர்களை உருவாக்கி வருகிறார்.

பரிகாரம்: அட்டமத்துச்சனி பாதிப்பு விலக அறந்தாங்கி அருகில் எட்டியத்தளி சென்று வழிபடலாம்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் புதன் 3-ல் சிம்மத்தில் சூரியனோடு சேர்ந்திருக்கிறார். 2-ஆம் தேதிமுதல் அஸ்தமனம் அடைகிறார். 3-ல் மறையும் கிரகம் அஸ்தமனம் அடைவது நல்லதுதான். ஆனால் ராசிநாதனும், 4-க்குடையவரும் அஸ்தமனம் அடைவது நல்லதல்ல! அதனால் படிக்கும் மாணவ- மாணவியருக்கு படிப்பது மனதில் தங்காது. ஞாபகத்தில் இருக்காது. தேர்வில் மெதுவாக எழுதுவதால் போதிய மார்க் கிடைக்காது. ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால் அதற்கேற்ற பரிகாரம் செய்துகொள்வது நல்லது. அடுத்து 4-ஆம் இடம் பூமி, வீடு, வாகனம், தாய் ஆரோக்கியத்தைக் குறிக்கும் இடம். இது சம்பந்தமான பிரச்சினைகளும் உருவாகலாம். ஆரோக்கியக்குறைவு, வைத்தியச்செலவு, தாய்க்கு உடல்நலக்குறைவு, தாய்- சேய் உறவில் சிக்கல், வாகனப் பழுது செலவு, வாகன மாற்றம், வாகன விபத்து, வாங்கிப் போட்ட இடத்தில் பிரச்சினை அல்லது வீடு கட்டுவதில் சிக்கல் போன்ற பலன்களைச் சந்திக்க நேரும். அவரவர் ஜாதக தசாபுக்திக்கேற்ற பரிகாரம் செய்துகொண்டால் வேகமும் சோகமும் மாறும். புதன் ராசிநாதன் என்பதால் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் நல்லதே செய்வீர்கள். ஆனால் அவர்கள் அதற்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்களைக் குறைகூறி, எல்லா நன்மையும் உங்களால் கெட்டுப்போய்விட்டதாகக் குற்றம் சுமத்துவார்கள். அதிலும் குறிப்பாக உங்கள் நண்பர்களும் அந்நியர்களும் உங்களைப் புரிந்துகொண்டாலும், உடன்பிறப்புகளும் உறவினர்களும் உங்களைப் புரிந்துகொள்ளாமல் பழிசுமத்துவார்கள். இதுதான் அஸ்தமன தோஷப் பலனாகும். அதேசமயம் 7, 10-க்குடைய குரு 5-ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், "யாரை நம்பி நான் பிறந்தேன். போங்கடா போங்க- என் காலம் வெல்லும். வென்ற பின்னே வாங்கடா வாங்க' என்று சிவாஜி படத்தில் பாடிய மாதிரி யாரையும் எதிர்பார்க்காமல் செயல்படுவீர்கள்.

பரிகாரம்: திருவண்ணாமலை அருகில் ஆதிதிருவரங்கம் என்ற ஊரில் பள்ளிகொண்ட ரங்கநாதர் சந்நிதி உண்டு. மிகப்பழமையான கோவில். அங்கு சென்று வழிபடவும். தொடர்புக்கு: ரங்கநாதப் பட்டர். (செல்: 94446 91885). "பாலஜோதிட' அபிமானி.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசி அன்பர்களே! உங்கள் ராசியில் (ஜென்மத்தில்) ராகுவும், ஏழில் செவ்வாயும் கேதுவும் இருக்கிறார்கள். 7-க்குடைய சனி 6-ல் மறைந்தாலும் 7-ல் உள்ள கேது சாரம். அதனால் குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் சிலசமயம் "ஈகோ' பிரச்சினை உருவானாலும், நீரடித்து நீர் விலகாது என்ற அடிப்படையில் சமாதானம் ஆகிவிடலாம். வள்ளுவர் "ஊடுதல் காமத்துக்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின்' என்று சொல்லுவார். கணவன்- மனைவிக்குள் அன்பும் பாசமும் நெருக்கமும் உருவாக "ஊடல்' தேவை என்பார். ஊடல் இருந்தால் தேடல் உண்டாகும். அதனால் "வாடல்' நீங்கிவிடும். ஒருசிலர் ஜாதக அமைப்பின்படி கணவன் அல்லது மனைவிக்கு திடீர் என்று ஆரோக்கியக்குறைவும் வைத்தியச்செலவும் ஏற்படலாம். பயப்படும்படி பெரும் பாதிப்புக்கு இடமில்லை. சிறுசிறு நச்சுப்பிணிகள் வந்து விலகிவிடும். வாக்கு ஸ்தானத்தில் சூரியனும் புதனும் இருப்பதால் வாக்கு வண்மையும் சொல்வண்மையும் பிரகாசிக்கும். "சொல்லின் செல்வன்' என்று பாராட்டப்படலாம். அறிஞர் அண்ணா கடக லக்னம். 2-ல் சூரியன், புதன். அவருடைய நாவண்மை நாடறிந்ததே! எனவே பேச்சாளராகலாம் அல்லது ஜோதிடர் ஆகலாம் அல்லது அருள்வாக்கு சொல்லலாம். 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால் உங்கள் தேவைகள் எல்லாம் எப்படியோ பூர்த்தியடையும். தெய்வ கிருபையாலும் நடக்கும். பெற்றோராலும் நடக்கும். ஒருசிலருக்கு நண்பர்கள் வகையிலும் உதவியும் ஒத்தாசையும் எதிர்பார்க்கலாம். ஆக, "கொடுப்பினை இருந்தால் கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொட்டும்' என்ற பழமொழி உங்கள் வகையில் உண்மையாகும். இதுதான் தர்மகர்மாதிபதி யோகப் பலன்.

பரிகாரம்: ஜென்ம ராகுவின் பலன் சாதகமாக தேனி வழி உத்தமபாளையம் சென்று தென்காளஹஸ்தி சென்று வழிபடலாம். தொடர்புக்கு: நீலகண்ட சிவாச்சாரியார், செல்: 93629 93967. ஞாயிறு மாலை ராகு கால பூஜை நடக்கும். ராகுவுக்கும் கேதுவுக்கும் அபிஷேகம் நடைபெறும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

hanumanசிம்ம ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் சூரியன் சிம்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 2, 11-க்குடைய புதன் சேர்க்கை. புதன் அஸ்தமனம் என்றாலும் ஆட்சி பெற்ற சூரியனுடன் சம்பந்தம் என்பதால், புதனுக்கு அஸ்தமன தோஷம் நிவர்த்தியாகிறது. தவிரவும் சூரியனுடன் எப்போதும் கூடவே சஞ்சாரம் செய்யும் கிரகம் புதன்தான். அடுத்து சில "டிகிரி' வித்தியாசத்தில் சுக்கிரனும் சஞ்சரிப்பார். என்றாலும் சுக்கிரனைவிட புதனுக்கு அஸ்தமன தோஷமில்லை. தினசரி நம் வீட்டுக்கு பேப்பர் படிக்கவும், ஓசி காப்பி குடிக்கவும் வரும் பக்கத்து வீட்டு நண்பருக்கு முக்கியத்துவம் தரமாட்டோம். எப்போதும் வராத ஒரு விருந்தாளி வந்துவிட்டால் அவருக்கு ராஜ உபசாரம் நடக்குமல்லவா? அதுபோல சூரியனோடு சேர்ந்து சஞ்சாரம் செய்யும் புதனுக்கு முக்கியத்துவமில்லை. அவர் வக்ரம் ஆனாலும் சரி; அஸ்தமனம் ஆனாலும் சரி- அதனால் பக்கவிளைவுகள் ஏற்படாது. 3-ல் சுக்கிரனும் குருவும் சேர்ந்திருப்பது ஒருவகையில் நல்லது. இன்னொரு வகையில் கெடுதல். அசுர குருவும் தேவகுருவும் சகோதர ஸ்தானத்தில் சேர்ந்திருக்க- சகோதர ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி. 5, 8-க்குடைய குரு 5-க்கு 11-ல், 8-க்கு 8-ல் மறைவு. சகோதரகாரர்கன் செவ்வாய் 6-ல் உச்சம். கேது- ராகு சம்பந்தம். எனவே நெருங்கிப் பழகிய நண்பர்கள் காரண காரியம் இல்லாமல் பகையாகலாம். ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளும் விரோதமாகலாம். அதேசமயம் எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற அளவில் பகையாக விலகியிருந்தவர்கள் எல்லாம் புதிய உறவு கொண்டு நேசக்கரம் நீட்டி நெருங்கி வந்து கைகுலுக்குவார்கள். "இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.' கிராமப்புறங்களில் தேர்தல் சமயத்தில் சர்வசாதாரணமாக நடக்கும் சம்பவங்கள்! 9-க்குடைய செவ்வாய் 6-ல் உச்சம் பெற்று 9-ஆம் இடம், 12-ஆம் இடம், ஜென்ம ராசியைப் பார்ப்பதால் பூர்வீகச் சொத்துகளை லாப விற்பனை செய்து மாற்றம் செய்யலாம்.

பரிகாரம்: புதுக்கோட்டை அருகில் குமரமலை என்று ஒரு அற்புதத் திருத்தலம். பழனியாண்டவர் கோலத்தில் தண்டாயுதபாணி உள்ளார். தொடர்புக்கு: அர்ச்சகர் ராமு குருக்கள், செல்: 98424 83217.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் புதன் 12-ல் மறைவு, அஸ்தமனம்! அவருக்கு வீடு கொடுத்த சூரியன் அங்கு ஆட்சி! அதனால் புதனுக்கு அஸ்தமன தோஷம் விலகிவிடும். ஆனால் 12-ல் மறைவு தோஷம் உண்டு. என்றாலும் அது விரயஸ்தானம் என்பதால், தொழில்காரகன் சனி 10-ஆம் இடத்தையும், ஜென்ம ராசியையும் பார்ப்பதால் சுபவிரயச் செலவுகள் ஏற்படும். அதேபோல தொழில்துறையிலும் சுபமுதலீடுகள் செய்யலாம். சிலர் அரசு வேலைக்காக அரசியல்வாதிகளிடம் பணம் கொடுக்கலாம். அரசியல்வாதிகள் பணம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கித்தருவதும் தராததும் அவரவர் ஜாதகப் பலனைப் பொருத்த சமாச்சாரம். சிலர் அரசு அதிகாரிகளிடம் பணம் கொடுப்பார்கள். அல்லது யூனியன்மூலம் செலவு செய்வார்கள். 10-க்குடைய புதன் சூரியன் வீட்டில் சூரியனோடு சம்பந்தம் என்பதால் அரசு வேலைக்கு வாய்ப்புண்டு. படிக்கும் மாணவர்கள் ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதலாம். அல்லது குரூப்-1 சர்வீஸ் பரீட்சை எழுதலாம். ஜாதக ரீதியாக சூரியன் சம்பந்தப்பட்ட தசாபுக்திகள் நடந்தால் அரசு வேலைக்கு யோகம் உண்டு. அதாவது 2, 10, 5, 9 சூரியன் நட்சத்திரம்- சூரியனின் சேர்க்கை, பார்வை- சூரியன் ராசி- சூரியன் அம்சங்களில் இருந்தால் சம்பந்தம் என்பது அர்த்தம்! 2-ல் குருவும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் திருமணம் ஆகவேண்டியவர்களுக்குத் திருமணம் கைகூடும். அதேபோல பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்றுசேர்வார்கள். பிரிந்திருந்த குடும்பமும் ஒன்றுசேரும். 4-ல் உள்ள சனி 6, 8-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் சிலருக்கு ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். நரம்புத்தளர்ச்சிக்கான சிகிச்சையும் செய்ய நேரும். 4-ஆம் இடம் தாயார் ஸ்தானமும் சுகஸ்தானமும் ஆகும். அதில் சனி இருப்பதால் தாயாரின் சுகம் பாதிக்கலாம். அல்லது தன் சுகம் பாதிக்கலாம்.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு என்ற ஊரில் சௌந்தர ராஜப்பெருமாள் கோவிலில் தன்வந்திரிக்கு தனிச்சந்நிதி உண்டு. அங்கு சென்று அபிஷேக பூஜை, அர்ச்சனை செய்தால் ஆரோக்கியம் உண்டாகும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசி அன்பர்களே! உங்கள் ராசியில் குருவும் சுக்கிரனும் சேர்க்கை. சுக்கிரன் ஆட்சி! குரு 3, 6-க்குடையவர் 5-ஆம் இடம், 7-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். ஆக இந்த மூன்று பாவங்களைப் பொருத்த அளவில் உங்களுக்கு கடன் வாங்கும் கட்டாயம் ஏற்படும். அதாவது பிள்ளைகளுக்காக, மனைவிக்காக, கணவருக்காக அல்லது தகப்பனாருக்காக அல்லது பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்காக நீங்கள் செலவு செய்யும் சூழ்நிலை உருவாகும். அதன் பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கும் அவசியமும் உண்டாகும். அப்படி வரும் செலவு சுபச்செலவாகவும் அமையலாம். அல்லது தவிர்க்கமுடியாத வேறு செலவாகவும் அமையலாம். கடன் வாங்குவது தவறல்ல; அப்படி வாங்கும் கடன் யாரிடம், எப்படி வாங்குவது என்பதற்கு சில விதிமுறைகள் உண்டு. அநியாய வட்டிக்கும், கந்து வட்டிக்கும், மனசாட்சியில்லாதவர்களிடமும் கடன் வாங்கக்கூடாது. அப்படி வாங்கித்தான் ஒரு காரியம் நிறைவேறும் என்ற அமைப்பு இருந்தால் அந்தக் காரியம் நிறைவேறாமலேயே போகட்டும். ஆண்டவன் என்ன எழுதியிருக்கிறானோ அப்படியே ஆகட்டும் என்று விட்டுவிடுங்கள். "எது நடக்க வேண்டும் என்று இருக்கிறோ அது நடக்கும்' என்பதுதானே கண்ணன் சொன்ன கீதை! இந்த உலகம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நல்லது நடந்தாலும் சரி- கெட்டது நடந்தாலும் சரி- யார் பிறந்தாலும் சரி; இறந்தாலும் சரி. சூரியன் உதிக்காமல் இருக்கிறதா? மறையாமல் இருக்கிறதா? சந்திரன் உதிக்காமல் இருக்கிறதா? மறையாமல் இருக்கிறதா? இயற்கை தன் கடமையைச் செய்யத் தவறுவதில்லை. ஞானிகளும் சித்தர்களும் இன்பத்துக்காக மகிழ்வதில்லை- துன்பத்துக்காக வருந்துவதுமில்லை. அந்த மனப்பக்குவம் பெற்றுவிட்டால் போதும்! நடக்க வேண்டியது நடக்கும். அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்ற நிலையும் உண்டாகும். ஒரு திரைப்படத்தில் நடிகவேள் எம்.ஆர். ராதா "இப்படித்தான் வாழ வேண்டு என்று ஒரு விதி. எப்படியும் வாழலாம் என்று இன்னொரு விதி' என்பார்.

பரிகாரம்: வரவு- செலவு, லாப- நஷ்டம், இன்பம்- துன்பம், உறவு, பகை என்ற ஏற்றத்தாழ்வுகளை சமமாக பாவிக்கும் பக்குவம் பெற சித்தர்களின் ஜீவசமாதியைச் சரணடைய வேண்டும். அங்கு சென்று ஞானம் வேண்டுமென்று பிரார்த்தியுங்கள். கடன் தீர வேண்டும், பிள்ளைக்குக் கல்யாணம் ஆக வேண்டும், வீடு கட்ட வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், தொழில் சிறக்க வேண்டும் என்றெல்லாம் கேட்காதீர்கள்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றில் உச்சம். வக்ரம்! 9-க்குடைய பாக்கியாதிபதியின் சாரம். (திருவோணம்). 9-ல் ராகு! ராகுவும் கேதுவும் ஆன்மிக கிரகங்கள்! ஞானகாரகன்- மோட்சகாரகன்! எனவே உங்களுக்கு பக்திச் சிந்தனையும், ஆன்மிக உயர்வும் ஏற்படும் காலம்! ராசிக்கு 10-ல் சூரியன், புதன். சூரியன் ஆட்சி. அவருடன் 11-க்குடைய புதன் சேர்க்கை. தொழில் யோகமும், உத்தியோக உயர்வும், வேலையில் பாராட்டும் கிடைக்கும். 10-ல் சூரியன் இருந்தால் அரசு வேலைக்கு இடமுண்டு. 2-ல் சனி இருப்பதால் வக்கீல் அல்லது நீதித்துறையில் பதவி வகிக்கலாம். சிலர் அரசியல்துறையிலும் பிரகாசிக்கலாம். அரசியலில் ஊழல்செய்தும் சம்பாதிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் திடீர் செல்வந்தராக சினிமாத்துறையும், அரசியல்துறையும்தான் சரியான வழிகளாக அமைகின்றன. என்றாலும், இந்த இரு துறையிலும் புகழ்பெறவும், பொருள் சம்பாதிக்கவும் அதிர்ஷ்டமும் யோகமும் இருக்க வேண்டும். அப்படி யோகமான அமைப்பு இருந்து, ஒரு உன்னத நிலைக்கு உயர்ந்தாலும் ஒழுக்கம்தான் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும். ஆன்மிகத்தில் வாய்மைக்கு காஞ்சிப் பெரியவரும், அரசியலில் தூய்மைக்கு காமராஜரும்தான் வரலாற்றில் இடம்பெற்றவர்கள். மற்றவர்களெல்லாம் தேதிக்காலண்டரில் கிழிக்கும் பேப்பர் மாதிரி செயலற்றவர்கள்! நினைவுச் சின்னமும் சிலை வைக்கப்பட்டவர்களும் சிறந்தவர்கள் என்று அர்த்தமல்ல! இராமன் பேர் விளங்கும்போது இராவணன் பேரும் இருக்கும். தர்மர் பேர் விளங்கும்போது துரியோதனன் பேரும் இருக்கும். மகான் காந்தி பேரைப் போற்றும்போது கோட்சேயின் பேரையும் கூறத்தான் வேண்டும். அதற்காக நல்லதுக்கு கெட்டது சமமாகிவிடாது. பிறந்தான்- இறந்தான் என்பதைவிட சாதித்தான் என்பதுதான் பெருமை!

பரிகாரம்: திருவாரூரில் மடப்புரம் என்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி மடம் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி என்ற மகானின் ஜீவசமாதி. அங்கு சென்று தியானம் செய்யுங்கள். உங்களுக்கு ஞானமும் பக்குவமும் உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு ஜென்மச்சனி நடக்கிறது. 2014 முதல் ஏழரைச்சனி ஆரம்பம். முதல் பகுதி விரயச்சனி முடிந்து, இரண்டாவது பகுதி ஜென்மச்சனி நடக்கிறது. இதுவும் 2020 வரை. அதன்பிறகு பாதச்சனி, குடும்பச்சனி, 2-ஆம் இடத்துச் சனி 2023-ல் முடியும். அத்துடன் ஏழரைச்சனி விலகும். இதில் முதல் சுற்று என்றால் மங்குசனி, இரண்டாம் சுற்று என்றால் பொங்குசனி, மூன்றாம் சுற்று என்றால் மரணச்சனி. இந்த மூன்றுசுற்றும் வந்துமுடிய சுமார் 60 வருடமாகும். அதற்குமேல் உயிர் வாழ்கிறவர்களும் உண்டு. அவர்களை மரணச்சனி ஒன்றும் செய்யாது. கலைஞர் அவர்கள் 94 வயது வரை வாழ்ந்தார். நான்கு சனியையும் பார்த்தவர். ஆகவே தனுசு ராசிக்காரர்கள் ஜென்மச்சனி என்றதும் பயப்பட வேண்டாம். அதேசமயம் உங்களுக்கோ, குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ ராகு தசையோ கேது தசையோ நடந்தால் கடன், வைத்தியச்செலவு ஏற்படலாம். சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருள் சேதம் உண்டாகலாம். 8-ல் ராகு இருப்பதால் ஒருசிலருக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாமல் வேதனையும் சோதனையும் ஏற்படலாம். நோய்க்குப் பார், பேய்க்கும் பார் என்பதுபோல அப்படிப்பட்டவர்கள் மந்திரிப்பார்ககள்; அருள்வாக்கு கேட்பார்கள். ஸ்கேன், எக்ஸ்ரே என்று செலவு செய்வார்கள். ஆனால் எதிலும் குணம் தெரியாது. கடைசியில் யாராவது செய்வினை செய்திருப்பார்களோ என்று சிந்திக்கக்கூடும். ஆனால் அப்படி எதுவுமில்லை. மனதைப்போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். எல்லாம் 8-ஆம் இடத்து ராகுவின் வேலைதான்! அத்துடன் ஜென்மச்சனியின் கூட்டணி வேறு! குரு நல்ல இடத்தில் 11-ல் இருந்தாலும், சுகஸ்தானத்துக்கு 8-ல் மறைவதும் ஒரு காரணம்! அக்டோபர் 4-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு 50 சதவிகிதம் குணம் ஏற்படும். அடுத்து மாசி 1-ல் (13-2-2019-ல்) நூற்றுக்கு நூறு முழுமையான சுகம் ஏற்பட்டுவிடும். ஒருசிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் ஊதிய உயர்வு இருக்காது. அப்படிப்பட்டவர்களுக்கும் அக்டோபருக்குப் பிறகு அந்தக் குறையும் விலகிவிடும்.

பரிகாரம்: ஜென்மச்சனியின் தாக்கம் குறைய அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து அந்த எண்ணிக்கை மிளகை சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் மிளகுப்பொட்டலத்தை நெய்யில் நனைத்து தீபமேற்றவும். அமாவாசைதோறும் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் ராசிக்கு 12-ல் மறைவு. ஜென்மத்தில் உள்ள கேதுவின் சாரம். (மூலம்). அவருடன் லாபாதிபதியான செவ்வாய் உச்சம், சேர்க்கை! எனவே தவிர்க்கமுடியாத செலவுகளும் விரயங்களும் உண்டானாலும், அவை பெரும்பாலும் சுபச்செலவாகவும், நல்விரயங்களுமாகவும் அமையும். சிலருக்குத் திருமண நிச்சயம், காதணி விழா என்று மங்கள செலவுகளாக அமையும். சிலருக்கு வாகன யோகம் வகையில் சுபமுதலீடு, வீடு, மனை, பிளாட் வகையில் முதலீடு என்று அமையும். சிலர் டெபாசிட் செய்யலாம். சிலர் கிரகப் பிரவேசம் அல்லது புதிய வீடு மாற்றம் என்று செலவு செய்யலாம். சிலர் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது ஏற்கெனவே நடந்துவரும் தொழிலை விரிவுபடுத்தலாம். அல்லது கிளைகள் ஆரம்பிக்கலாம். 10-ல் குரு, சனி சேர்க்கை என்பதால் கூட்டுத்தொழில் வகையில் பங்கு முதலீடு செய்யலாம். ஜென்ம கேதுவும், செவ்வாயும் உங்களுக்கு கௌரவப் பிரச்சினையை ஏற்படுத்தலாம். 5-ஆம் இடத்துக்கு ராசிநாதன் சனி 8-ல் மறைவதோடு, உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால் பிள்ளைகள் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பிள்ளைகள் வாங்கிய கடன் உங்களின் கவனத்துக்கு வர, அந்தக் கடனை வட்டியும் முதலும் சேர்த்து அடைப்பீர்கள். 5-க்குடைய சுக்கிரனும், புத்திரகாரகன் குருவும் 5-ஆம் இடத்துக்கு 6-ல் மறைவதன் பலன் இதுவே! தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் பிள்ளைகள் வகையில் வைத்தியச்செலவு வரலாம். அல்லது போலீஸ் விவகாரம், வெட்டிச்செலவு, தண்டச்செலவு என்று ஏற்படலாம். அதுவும் இல்லையென்றால், பிள்ளைகள் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆக, ஏதோ ஒருவகையில் பிள்ளைகளால் வேதனை, சோதனை, ரோதனை ஏற்படும் காலம்.

பரிகாரம்: ஒவ்வொரு ஞாயிறும் (21 கிழமை) தொடர்ந்து காலையில் 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் சிவன் கோவிலில் நந்தி சந்நிதியில் நெய்விளக்கேற்றி வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய

கும்ப ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் சனி 11-ல் குரு வீட்டில் இருக்க, அவருக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 11-ல் இருப்பதோடு, சனியும் குருவும் உங்கள் ராசியைப் பார்க்கிறார்கள். குடும்பத்தில் உங்களின் சொல்லுக்கு மதிப்பளித்து, கட்டுப்பட்டு நடப்பார்கள். அதனால் உங்கள் மனம் நிறைவடையும். உங்களால் மற்றவர்கள் பயன் அடைவார்கள். நீங்களும் காக்கும் கரங்களாகவும், உதவும் கரங்களாகவும் செயல்படுவீர்கள். 9-ல் குரு, சுக்கிரன் சேர்க்கை என்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். சிலர் ஆகாத பயனில்லாத சொத்துகளை, இடங்களை நல்ல விலைக்கு விற்று அதற்குச் சமமாக வேறு நல்ல இடத்தில் பரிவர்த்தனை செய்யலாம். சிலர் கடன்பட்டு காம்ப்ளக்ஸ் கட்டி, வாடகை வசூல் செய்து, கடன் தவணைகளை அடைக்கலாம். 10-க்குடைய செவ்வாய் 12-ல் உச்சம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு செயல்படலாம். சிலர் சுயதொழிலை விருத்தி செய்ய முதலீடு செய்யலாம். கிளைகளை ஆரம்பிக்கலாம். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வியாபாரத்தை விருத்தி செய்யலாம். லாபத்தைப் பெருக்கலாம். குடும்பாதிபதி குடும்ப ஸ்தானத்துக்கு 8-ல் மறைந்தாலும், சுக்கிரனோடு சேர்க்கை என்பதாலும் சிலருக்கு குடும்பக் குழப்பம் ஏற்படலாம். அதைச் சமாளிக்க அடுத்தவர்களின் உதவியை நாடலாம். அது கௌரவப் பிரச்சினையை உருவாக்கலாம். 3, 10-க்குடைய செவ்வாய் 12-ல் உச்சம். கேது சேர்க்கை என்பதால் சிலருக்கு உடன்பிறப்புகள் வகையில் விரயங்களும் செலவுகளும் ஏற்படலாம். அல்லது விவகாரம் முற்றி பஞ்சாயத்துவரை போகலாம்.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி சென்று ஜோதி நிர்வாண சுவாமி ஜீவசமாதியை வழிபடலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு எட்டில் மறைவு. அத்துடன் குரு 10-க்குமுடையவர். அவர் 10-க்கு 11-ல் இருந்தாலும் ராசிக்கு 8-ல் மறைவு. அதனால் தொழில், வாழ்க்கையில் பாதிப்புக்கு இடமில்லை. என்றாலும், அனுபவரீதியாக உங்கள் மனதில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்படாது. அதாவது பாவம், பாவாதிபதி, பாவகாரகன் என்று ஒவ்வொரு பாவத்துக்கும் மூன்று நிலை உண்டு. உதாரணமாக, 10-ஆம் பாவம் தொழில் பாவம்- அதன் அதிபதி குரு- பாவகாதிபதி. சனி தொழில் காரகன். அவர் பத்தாம் பாவகாரகன். இந்த மூன்றும் லக்னம், லக்னாதிபதிக்கு சம்பந்தமாக இருந்தால் தொழில், வாழ்க்கை எல்லாம் நிறைவும் நிம்மதியுமாக இருக்கும். எந்த ஒரு செயலிலும் நிறைவு என்பது வேண்டும். அந்த நிறைவில்லையென்றால் நிம்மதியும் இருக்காது; திருப்தியும் இருக்காது. ஹோட்டலில் சாப்பிடப் போகிறோம். விரும்பி சாப்பிடுவது பூரி என்று கேட்டால், "பூரி இல்லை; சப்பாத்தி இருக்கிறது' என்பார்கள். இரண்டும் கோதுமை மாவுதான். திருப்தியில்லாமல் சாப்பிட்டு வருவோம். இப்படி ஒவ்வொரு தேவையிலும் அதை அனுபவிக்கும்போது திருப்தி இருக்கவேண்டும். ராசிநாதன் ராசிக்கு 8-ல் இருப்பதால் அந்த திருப்தியும் மனநிறைவும் உங்களுக்குக் கிடைக்காது. விரும்பியது கிடைக்காதபோது கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி உண்டாகிறதோ இல்லையோ- துன்பமும் துயரமும் இருக்காது. எல்லாருக்கும் விரும்பியது கிடைக்கவில்லையென்றுதான் விரக்தியும் வேதனையும் அடைகிறார்கள். தாடி வளர்க்கிறார்கள். குடிக்கிறார்கள். தேவதாஸாக மாறுகிறார்கள். தொழில்துறையில் நஷ்டம், பணத்தேவைப் பற்றாக்குறையால் வாழ்க்கையில் கஷ்டம், கடன்பிரச்சினைகளால் கவலை! இதெல்லாம் 8-ஆம் இடத்து குருவின் திருவிளையாடல். எதையாவது சாதித்து எப்படியாவது முன்னேறவேண்டும்; சம்பாதிக்கவேண்டும் என்றுதான் எல்லாரும் விரும்புகிறார்கள். அது நிறைவேறுகிறதா? கிரகநிலைகள் அனுக்கிரகமாக இருந்தால் கண்டிப்பாக நிறைவேறும். அதற்கு குலதெய்வக் கிருபையும், பெரியோர்களின் ஆசியும் இருக்கவேண்டும். குருவருளும் திருவருளும் தேவை. அதற்கு தவம் செய்யவேண்டும். தவம் என்பது காட்டில் போய் துறவியாவதல்ல. முயற்சி என்பதுதான் தவம்! அதைத்தான் திருவள்ளுவர், "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்மெய்வருத்தக் கூலி தரும்' என்றார். அதற்கு உதாரணம் ராஜரிஷி விசுவாமித்திரர்தான். கௌசிகராக இருந்து சாதிக்க முடியாததை விசுவாமித்திரராகி சாதித்தார். சித்தார்த்தனாக இருந்து சாதிக்காததை கௌதம புத்தராக சாதித்தார்.

பரிகாரம்: குருவின் மறைவு தோஷம் விலக உங்கள் மனம்விரும்பும் சித்தர் ஜீவசமாதியை வழிபடவும்.

bala070918
இதையும் படியுங்கள்
Subscribe