ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
16-3-2020- தனுசு.
18-3-2020- மகரம்.
21-3-2020- கும்பம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரட்டாதி- 4, உத்திரட்டாதி- 1, 2.
செவ்வாய்: பூராடம்- 4, உத்திராடம்- 1.
புதன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2.
குரு: உத்திராடம்- 1.
சுக்கிரன்: பரணி- 1, 2, 3.
சனி: உத்திராடம்- 1.
ராகு: திருவாதிரை- 1.
கேது: மூலம்- 3.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 10-க்குடைய சனி சேர்க்கை. அதனால் தர்மகர்மாதிபதி யோகம். 9-ல் கேதுவும், 3-ல் ராகுவும் இருப்பதும், 12-ல் பித்ரு காரகன் சூரியன் மறைவதும் ஒருவகையில் பாதிப்புதான். தகப்பனார் வகையில் சில சங்கடங்களும் சஞ்சலங்களும் உருவாகலாம். என்றாலும் அவையெல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல மாறிவிடும்; மறைந்துவிடும். 2, 7-க்குடைய சுக்கிரன் சுயசாரம் பெற்று (பரணி), ஜென்ம ராசியில் நின்று 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமணமாகாதவர் களுக்குத் திருமணம் கைகூடும். திருமணமானவர்களுக்கு குடும் பத்தில் குழப்பங்கள் நீங்கும். அன்பும் ஆதரவும் பெருகும். "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறளுக்குத் தக்கபடி உங்கள் வாழ்க்கை வளம்பெறும்; நலம்பெறும். ஒருசிலருக்கு மனைவி யால் யோகம் வரும். மனைவிவ கையில் சொத்துசுகம் சேர்க்கை உண்டாகும். சகோதரவகையில் பிரச்சினைகள் உருவாகி மறையும். அந்நிய இனத்து நண்பர்களின்- குறிப்பாக முஸ்லிலிம் நண்பர்களின் உதவியும் ஆதரவும் பெருகும். ஆரோக் கியத்தில் பிரச்சினையில்லை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 8-ல் மறைவு. ஏற்கெனவே ரிஷப ராசிக்காரர் களுக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. இதில் 8-ல் செவ்வாய், சனி, கேது சேர்க்கை என்பது உங்களுக்கு சோதனைக் கட்டம்தான். சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு செக் வைத்தமாதிரி, உங்களைச்சுற்றி சஞ்சலங்களும் சங்கடங்களும் வட்டமிட்டு சூழ்ந்துநிற்கும். 11-ல் இருக்கும் சூரியனும், 10-ல் நிற்கும் புதனும் அதை சமாளிக்கும் ஆற்றலைத் தருவார்கள். என்றாலும் 2-ல் உள்ள ராகு, அவரைப் பார்க்கும் செவ்வாய், சனி, கேது காரணமாக, நீங்கள் நல்லது சொன்னாலும் குடும்பத் தாருக்கு பொல்லாப்பாகத் தெரியும். சிலநேரம் உறவினர்கள்வகையிலும், குடும்பத்தினர் வகையிலும் சொல்லாததைச் சொன்னதாக பழிவரும். ஒரு அன்பர் ஒருவழிப்பாதையில் (நோ என்ட்ரியில்) சைக்கிளில் வந்தார். அவரிடம், "தெருமுனையில் போலீஸ்காரர் நோ என்ட்ரியில் வருபவர்களை நிறுத்தி அபராதம் வசூலிலிக்கிறார். இறங்கி
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
16-3-2020- தனுசு.
18-3-2020- மகரம்.
21-3-2020- கும்பம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூரட்டாதி- 4, உத்திரட்டாதி- 1, 2.
செவ்வாய்: பூராடம்- 4, உத்திராடம்- 1.
புதன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2.
குரு: உத்திராடம்- 1.
சுக்கிரன்: பரணி- 1, 2, 3.
சனி: உத்திராடம்- 1.
ராகு: திருவாதிரை- 1.
கேது: மூலம்- 3.
கிரக மாற்றம்:
இல்லை.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 9-ல் திரிகோணம் பெறுகிறார். அவருக்கு வீடுகொடுத்த குரு 9-ல் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 10-க்குடைய சனி சேர்க்கை. அதனால் தர்மகர்மாதிபதி யோகம். 9-ல் கேதுவும், 3-ல் ராகுவும் இருப்பதும், 12-ல் பித்ரு காரகன் சூரியன் மறைவதும் ஒருவகையில் பாதிப்புதான். தகப்பனார் வகையில் சில சங்கடங்களும் சஞ்சலங்களும் உருவாகலாம். என்றாலும் அவையெல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல மாறிவிடும்; மறைந்துவிடும். 2, 7-க்குடைய சுக்கிரன் சுயசாரம் பெற்று (பரணி), ஜென்ம ராசியில் நின்று 7-ஆமிடத்தைப் பார்க்கிறார். திருமணமாகாதவர் களுக்குத் திருமணம் கைகூடும். திருமணமானவர்களுக்கு குடும் பத்தில் குழப்பங்கள் நீங்கும். அன்பும் ஆதரவும் பெருகும். "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்ற குறளுக்குத் தக்கபடி உங்கள் வாழ்க்கை வளம்பெறும்; நலம்பெறும். ஒருசிலருக்கு மனைவி யால் யோகம் வரும். மனைவிவ கையில் சொத்துசுகம் சேர்க்கை உண்டாகும். சகோதரவகையில் பிரச்சினைகள் உருவாகி மறையும். அந்நிய இனத்து நண்பர்களின்- குறிப்பாக முஸ்லிலிம் நண்பர்களின் உதவியும் ஆதரவும் பெருகும். ஆரோக் கியத்தில் பிரச்சினையில்லை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 8-ல் மறைவு. ஏற்கெனவே ரிஷப ராசிக்காரர் களுக்கு அட்டமத்துச்சனி நடக்கிறது. இதில் 8-ல் செவ்வாய், சனி, கேது சேர்க்கை என்பது உங்களுக்கு சோதனைக் கட்டம்தான். சதுரங்க ஆட்டத்தில் ராஜாவுக்கு செக் வைத்தமாதிரி, உங்களைச்சுற்றி சஞ்சலங்களும் சங்கடங்களும் வட்டமிட்டு சூழ்ந்துநிற்கும். 11-ல் இருக்கும் சூரியனும், 10-ல் நிற்கும் புதனும் அதை சமாளிக்கும் ஆற்றலைத் தருவார்கள். என்றாலும் 2-ல் உள்ள ராகு, அவரைப் பார்க்கும் செவ்வாய், சனி, கேது காரணமாக, நீங்கள் நல்லது சொன்னாலும் குடும்பத் தாருக்கு பொல்லாப்பாகத் தெரியும். சிலநேரம் உறவினர்கள்வகையிலும், குடும்பத்தினர் வகையிலும் சொல்லாததைச் சொன்னதாக பழிவரும். ஒரு அன்பர் ஒருவழிப்பாதையில் (நோ என்ட்ரியில்) சைக்கிளில் வந்தார். அவரிடம், "தெருமுனையில் போலீஸ்காரர் நோ என்ட்ரியில் வருபவர்களை நிறுத்தி அபராதம் வசூலிலிக்கிறார். இறங்கிப் போங்கள்' என்றார். வந்தவரே போலீஸ்காரர்தான். அவரை அழைத்துப்போய், "திருடனுக்கும் இப்படிதான் உளவு சொல்வாயா?' என்று அபராதம் போட்டார். இதுதான் "தவளை தன் வாயால் கெட்டது' என்பது. இது அட்ட மத்துச்சனியின் வேலை!
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
ஜென்ம ராசியில் ராகுவும், 7-ல் செவ்வாய், குரு, சனி, கேதுவும் இருக்கிறார்கள். பருவ வயதில் உள்ளவர்களுக்குத் திருமணத் தடையும் தாமதமும் ஏற்படும். ஒருசிலருக்கு ஜாதக கிரக அமைப்பின்படி கலப்புத் திருமணம், காதல் திருமணம் ஏற்பட இடமுண்டு. குரு சம்பந்தம் இருப்பதால் பெரியவர்களின் சம்மதத்தோடு நடைபெறலாம். அப்படியிருந் தால் சூலிலினிதுர்க்கா ஹோமமும், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கொள்ளவேண்டும். திருமணமானவர்களுக்கு சம தசை ராகு தசையோ, ராகு புக்தியோ நடந்தால் சூலிலினிதுர்க்கா ஹோமம் செய்வது நல்லது. அல்லது திருப்பதி போகும்வழியில் காளஹஸ்தி சென்று வழிபடலாம். அல்லது தேனி அருகே உத்தமபாளையம் சென்று தென் காளஹஸ்தி எனப்படும் சிவன் கோவிலில் வழிபடலாம். திருநாகேஸ்வரம் சென்று ராகு- கேதுக்களுக்கு பூஜை செய்யலாம். இந்த எல்லை யிலுள்ள சிறப்பு என்னவென்றால், ராகுவுக்குப் பாலாபிஷேகம் செய்யும்போது நீலநிறமாகத் தோன்றும். கணவன்- மனைவிக்குள் ஒற்று மைக் குறைவும், கருத்து வேறுபாடுகளும் உருவாகலாம். இது நீங்குவதற்கு நாமக்கல் அருகில் மோகனூர் சென்று சம்மோகன கிருஷ்ணரை வழிபடலாம்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிநாதன் சந்திரன் ஆரோகணகதியாக சஞ்சரிக்கிறார். விருச்சிகத் திலிருந்து ரிஷபம்வரை சந்திரன் "ஆரோ கணகதி' எனப்படும். ரிஷபத்திலிருந்து விருச் சிகம்வரை "அவரோகணகதி' எனப்படும். சந்திரனுடைய உச்ச ராசி ரிஷபமாகும். உச்ச ராசியை நோக்கிப் பயணிக்கும் சந்திரனுக்கு ஆரோகணகதி எனப்பெயர். ரிஷபத் திலிருந்து விருச்சிகத்தை நோக்கிப் பயணிக்கும் சந்திரனுக்கு அவரோகணகதி எனப்பெயர். இந்த விதி ராகு- கேது தவிர, மற்ற ஏழு கிரகங் களுக்கும் பொதுவான விதி. குறிப்பாக சந்திரனுக்கு மட்டும் சிறப்பு விதியாக அமையும். வளர்பிறை, தேய்பிறைப் பலனுக்குச் சமம். என்றாலும் கடக ராசிக்கு 9-க்குடைய குருவும், 10-க்குடைய செவ் வாயும் சேர்ந்திருப்பதால் தர்மகர்மாதிபதி யோகமாகும். 6-ல் சேர்ந்திருப்பது அது தாமதமாக வேலைசெய்யும். நீங்கள் எடுக்கும்முயற்சிகள் கைகூடும் என்றாலும், தடைகளும், தாமதங்களும், குறுக்கீடு களும் உருவாகும். அவற்றை சமாளிக்க வேண்டும். ஒருசிலருக்கு எவ்வளவு வருமானம் வந்தாலும் கடன் வாங்கும் கட்டாயம் ஏற்படும். கௌரவம் பாதிக் காது. வாக்கு நாணயம் காப்பாற்றப்படும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைகிறார். எனினும் சூரியனுக்கு வீடுகொடுத்த குரு திரிகோணம் பெற்று ஆட்சிபலத் தோடு ராசியைப் பார்க்கிறார். ராசிக்கு 11-ல் ராகு நிற்க, அவரை செவ்வாய், குரு, சனி, கேது பார்க்கிறார்கள். 11-ஆமிடம் வெற்றி ஸ்தானம், ஜெய ஸ்தானம். அதில் ராகு இருப்பதும், செவ்வாய், சனி, கேது, குரு பார்ப்பதும் வெற்றிக்கு அறிகுறி. எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும், அத்தனை சங்கடங்களையும் சமாளித்து வெற்றிபெறலாம்; முன்னேறலாம். நீண்ட காலமாக வாரிசு இல்லாத தம்பதிகளுக்கு இப்போது வாரிசு உண்டாகும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால், ஆயுதப் பிரயோகம் செய்து பிரசவம் ஏற்படும். ஏற்கெனவே வாரிசு உள்ளவர் களுக்கு பிள்ளைகளால் பெருமையும் பேரும் உண்டாகும். புராணத்தில் பெற் றோரைவிட பெருமைப்பட்ட தெய்வம் முருகன். இதிகாசத்தில் பெற்றோ ருக்கு மிஞ்சிய புகழடைந்தவர்கள் லவன்- குசன். சரித்திர வரலாற்றில் பெற்றோருக்கு மிஞ்சிய புகழைப் பெற்றவர்கள் நேருவும், அவர் மகள் இந்திரா காந்தியும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 6-ல் மறைவு. அவருக்கு வீடுகொடுத்த சனி 4-ல் கேந்திரம் பெற்று புதனைப் பார்க்கிறார். ஒரு கிரகம் 6, 8, 12-ல் மறைந்தாலும், அவருக்கு சாரம்கொடுத்த கிரகமும். வீடுகொடுத்த கிரகமும் அவருக்கு சம்பந்தமாக இருந்தாலும் மறைவுதோஷக் குறைநீங்கி நிறைவாகிவிடும். மேலும் "மறைந்த புதன் நிறைந்த தனம்' என்பார் கள். சூரியனுக்கு அருகில் குறிப்பிட்ட பாகை. கலையில் சஞ்சரிக்கும் கிரகங்களுக்கு வக்ரம், அஸ்த மனம் போன்ற தோஷங்கள் ஏற்படும். அதேசமயம் சூரியனுடன் புதன் எப்போதும் இணைந்து சஞ்சரிப்பதால், அவருக்கு அந்த தோஷம் கணக் கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. எப்போ தாவது நமது வீட்டுக்கு வருகை தரும் விருந்தாளி களுக்கு வரவேற்பும் உபசரிப்பும் பலமாக இருக்கும். தினசரி ஓசிப்பேப்பர் படிக்கவரும் விருந்தாளி களுக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. அதுபோலவே புதனுக்கு வக்ரம், அஸ்தமனம் போன்ற தோஷங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். ராசிக்கு 6-ஆமிடம் மறைவு என்றாலும், 10-க்கும் அவரே அதிபதி. அதற்கு திரிகோணமாக இருப்பதால் வாழ்க்கை, தொழில் ஆகியவற்றில் பாதிப்புக்கு இடமில்லை.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் கேந்திரபலம் பெற்று ராசியைப் பார்க் கிறார். அத்துடன் 3, 6-க்குடைய குரு பார்வையும் சுக்கிரனுக்குக் கிடைக்கிறது. பொதுவாக குருவும் சுக்கிரனும் பகை என்பார்கள். அந்த வாதம் ஏற்புடையதல்ல. சுக்கிரன் அசுரர்களின் குரு. குரு (வியாழன்) தேவர்களின் குரு. அசுரர்களுக்கும் தேவர் களுக்கும்தான் பகையே தவிர, குருவுக்கும் சுக்கிரனுக்கும் பகையில்லை. வாதியின் வக்கீலும் பிரதிவாதியின் வக்கீலும் தமது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தில் காரசார மாக வாதிட்டாலும் அவர்களுக்குள் பகை யுணர்வு ஏற்படுவதில்லை. குருவின் வீடான மீனத்தில்தான் சுக்கிரனுக்கு உச்சபலம் கிடைக் கிறது. ஆக, குருவையும் சுக்கிரனையும் பகை யென்று ஒதுக்கத் தேவையில்லை. அதேபோல அனுபவரீதியாக வியாழக்கிழமையில் சுக்கிர ஓரையும், வெள்ளிக்கிழமையில் குரு ஓரையும் நன்மைகளே செய்திருக்கின்றன. ராசிநாதன் 7-ல் இருப்பதும், அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் சுக்கிரனுக்கு திரிகோணத்தில் இருப்பதும், செவ்வாய்க்கு வீடுகொடுத்த குரு சுக்கிரனைப் பார்ப்பதும் விசேஷ யோகம். எதிர்பாராத நன்மைகளும் யோகங்களும் ஏற்படும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல் பலம் பெறுகிறார். அவருடன் குரு, சனி, கேது சேர்க்கை; ராகு பார்வை. ராகுவும் கேதுவும் சுயசாரத்தில் இருக்கிறார்கள். ராசிநாதன் செவ்வாய் வாரத் தொடக்கத்தில் சுக்கிரன் சாரத்திலும் (பூராடம்), பிறகு சூரியன் சாரத் திலும்(உத்திராடம்) சஞ்சாரம். விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி 2020 டிசம்பர்வரை இருக்கிறது. முற்பகுதியில் கஷ்டப்பட்ட வர்களுக்கு, இப்போது நடக்கும் சனி பொங் குசனியாக செயல்படும். ஏழரைச்சனியின் முற்பகுதியில் சுகத்தை அனுபவித்தவர் களுக்கு, பிற்பகுதிக்காலம் சிரமங்களை சந்திக் கும்படி அமையும். குறிப்பாக இந்த ஏழரைச் சனியில் சந்திர தசை, சந்திர புக்தி நடப்பவர் களுக்கு மட்டும் சங்கடம் நேரலாம். அப்படிப் பட்டவர்கள் திங்கட்கிழமைதோறும் சிவலிங் கத்திற்கு பாலாபிஷேகம் செய்யவேண்டும். வசதியுள்ளவர்கள் ஒருமுறை ருத்ரஹோமம் செய்து, சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் பொருட் சேதம், உயிர்ச்சேதம் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. அவருடன் செவ்வாயும் சேர்க்கை. இந்த இருவருக்கும் வீடுகொடுத்த குரு ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். பொதுவாக, சனி- செவ்வாய் சேர்க்கை கேடு தரும் என்றாலும், இங்கு குரு வீட்டில் சேர்ந்திருப்பதால் எந்த பாதிப்பும் நேராது. ஒரு கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் முதலாளி இருக்கும் போது அமைதியாக- பொறுப்பாக வேலை செய்வார்கள். முதலாளி இல்லாதபோது சுதந்திரமாக- தன்னிச்சையாக செயல்படு வார்கள் அல்லவா! ஒரு வீட்டு மாடியில் வாடகைக்குக் குடியிருப்போர், கீழே வீட்டுக்காரர் குடியிருந்தால் ஆணி அடிப்பது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்தி நடப்பார்கள் அல்லவா! அதுமாதிரி, இங்கு குரு வீட்டில் குரு ஆட்சியாக இருப்பதால், செவ்வாய், சனி, கேது போன்றவர்கள் அடக்கி வாசிப்பார்கள். தங்கள் கடுமையான பலனைக் காட்டமாட்டார்கள். ஆகவே, செவ்வாய், சனி, கேது சேர்க்கையால் உங்களுக்கு கேடு, கெடுதி ஏற்படாது; செல்வாக்கு குறையாது.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார்; செவ்வாய், குரு, கேதுவோடு சம்பந்தம்; ராகு பார்வை. பொதுவாக செவ்வாய்- சனி சேர்வது தீங்கு விளைவிக்கும். "மந்தன் சேய் இருவரும் சேர்ந்திடவும் தீது பார்த் திடவும் தீது' என்பது ஜோதிடப் பாடல். இந்த பொதுவிதி நான்கு ராசிக்காரர்களுக்குப் பொருந்தாது. மேஷம், விருச்சிகம், செவ்வாயின் ராசிகள். மகரம், கும்பம்- சனியின் ராசிகள். இவர்களுக்கு செவ்வாயும் சனியும் ராசிநாதனாக அமைவதால், அந்த விதி செல்லாது. எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கென்று ஒன்றுண்டு. "நோ என்ட்ரி' பாதையில் இரவு பத்து மணிக்குமேல் விதிவிலக்கு உண்டு. தீயணைப்பு வாகனங் களுக்கும், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் விதிவிலக்கு உண்டு. அதுபோல ராசி நாதனுக்கும் லக்னநாதனுக்கும் விதிவிலக்கு உண்டு. மறைவு ஸ்தானத்தில் நான்கு கிரகங்கள் மறைந்தாலும் அவை சுபவிரயங்களை- சுபப்பலன்களையே நடத்தும். ஸ்ரீராம பிரான் வாலியை மறைந்திருந்துதான் வெற்றி கொண்டார். மறைந்திருந்து தாக்குவது யுத்த தர்மத்தில் ஒன்றாகும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று தன் ராசியைத் தானே பார்க்கிறார். அவருடன் 3, 10-க்குடைய செவ்வாயும், 11-க்குடைய குருவும் மற்றும் கேதுவும் சம்பந்தம். ராகு- கேது, சனி ஆகியோருக்கு 3, 6, 11-மிகமிக யோகமான இடங்களாகும். அத்துடன் ராசிநாதனே ராசியைப் பார்ப்பது ஒரு பலமாகும். செய்யும் முயற்சிகள் சீரும்சிறப்புமான வெற்றியைத் தரும். வழக்குகள் ஜெயமாகும். தொழில் வளம்பெறும். தேகம் நலம்பெறும். நண்பர்கள் ஆதரவும், நல்லோர்களின் ஒத்துழைப்பும் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக அமையும். பொதுவாக "கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்திற்குரியவர்கள்' என்று சொல்லப்பட்டாலும், இக்காலகட்ட கோட்சாரம் அனுதாப அலையே அதிர்ஷ்ட அலையாக மாறி உங்களுக்கு யோகத்தைச் செய்யும். இந்திராகாந்தியின் மறைவு, தேர்தலில் காங்கிரஸ்காரர்களுக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுத்ததுமாதிரியும், எம்.ஜி.ஆரின் மறைவு அ.தி.மு.க.வுக்கும் ஜெயலலிதாவுக்கும் யோகத்தை ஏற்படுத்திய மாதிரியும்- உங்களுக்கும் ஏதோ ஒருவகையில் அதிர்ஷ்டம் உண்டாகும். அதுதான் அனுதாப அதிர்ஷ்டம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 10-ல் ஆட்சிபெறுகிறார். அவருடன் செவ்வாய், சனி, கேது சேர்க்கை; ராகு சம்பந்தம். "10-ஆமிடத்து குரு பதி மாறும்' என்பது ஜோதிடப் பழமொழி. இருந்தாலும் குரு ஆட்சி என்பதால் ஓரளவு சமாளிக்கலாம். உத்தியோகம் மற்றும் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு காரணம்புரியாத குழப்பமும் கவலையும் மனதை வாட்டும். அர்த்தமற்ற சிந்தனைகளை மனதில் சுமப்பதை விட்டுவிட்டு, நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்பட்டால் குழப்பத்திற்குத் தீர்வுண்டாகும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பிவரலாம். பணவிஷயத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். கொடுக்கல்- வாங்கலில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். உடன்பிறப்பு களால் சங்கடமும் சஞ்சலமும் உண்டாகும். 4-ல் ராகு- தாய் சுகம் அல்லது தன் சுகம் பாதிக்கப்படலாம். வைத்தியச்செலவுகளும் வந்து விலகும். அரசு உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாகாமல் நிதானமாகச் செயல்படவேண்டும். சிலருக்கு உத்தியோக இடமாற்றம் ஏற்படலாம்.