ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

14-7-2019 முதல் 20-7-2019 வரை

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

14-7-2019- தனுசு.

Advertisment

17-7-2019- மகரம்.

19-7-2019- கும்பம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: புனர்பூசம்- 3, 4, பூசம்- 1.

செவ்வாய்: பூசம்- 3, 4, ஆயில்யம்- 1.

புதன்: திருவாதிரை- 3, 4.

குரு: கேட்டை- 2.

சுக்கிரன்: திருவாதிரை- 4, புனர்பூசம்- 1, 2.

சனி: பூராடம்- 1.

ராகு: புனர்பூசம்- 1.

கேது: பூராடம்- 3.

கிரக மாற்றம்:

புதன், குரு, சனி வக்ரம்.

14-7-2019- புதன் வக்ரநிவர்த்தி.

17-7-2019- கடக சூரியன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் கடகத்தில் நீசமாக இருந்தாலும் நீசபங்கம் அடைகிறார். செவ்வாய் சனியின் சாரம் (பூசம்) பெறுகிறார். சனி- செவ்வாய்க்கு உச்ச ராசிநாதன். (மகரம் செவ்வாய்க்கு உச்ச ராசி; சனி மகரத்துக்கு அதிபதி). மேலும் 9-க்குடைய குரு செவ்வாயின் வீட்டிலிருந்து செவ்வாயைப் பார்க்கிறார். அதனால் செவ்வாய்க்கு நீசப்பலன் மாறிவிடும். அரை மணி நேரத்தில் எழுதி முடிக்கவேண்டிய ஒரு காரி யத்தை ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கலாமே தவிர, எழுதாமல் அரைகுறையாக விடப்படாது. உத்தியோகத்தில், வேலையில் ஆர்வக்குறைச்சல் ஏற்படலாம். அல்லது சோர்வு ஏற்படலாம். பரீட்சைக்கு இரவில் கண் விழித்துப் படிக்கும் மாணவனுக்கு தன்னை மீறிய தூக்கம் வரலாம். முகத்தைக் கழுவிக் கொண்டு அல்லது சூடாக காபி, டீ குடித்துவிட்டு படிப் பைத் தொடருவதுபோல நீங்களும் உங்களுக்குத் தடை யாக இருக்கும் சமாச்சாரங் களுக்குப் பரிகார முறைகளை மேற்கொண்டு செயல் படவேண்டும். செவ்வாய் 7-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ராசிநாதன் பார்க்கும் இடங்களுக்கு பலம் உண்டாகும். எனவே கணவன்- மனைவிக்குள் தாம்பத்திய ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர் களுக்குத் திருமணம் கூடும். தொழில் மேன்மை யடையும். படித்த படிப்பிற்கேற்ற வேலையில்லா தோருக்கு, திருப்திகரமான வேலையும் திருப்தியான வருமானமும் அமையும். தொழில்துறையில் இருப்போருக்கு லாபமும் வெற்றியும் உண்டாகும். போட்டிகளும் பொறாமைகளும் விலகும். வரவேண்டிய பாக்கிசாக்கிகள் வசூலாகும். பங்காளிகள், உடன்பிறப்புகள் வகையில் ஒற்றுமையும் நட்பும் மலரும். உதவி ஒத்தாசை அமையும்.

பரிகாரம்: பழநிமலையில் உள்ள போகர் ஜீவசமாதியையும் முருகப்பெருமானையும் வழிபடவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 2-ல் ராகு சாரத்தில் ராகுவோடு சேர்ந்துள்ளார். அவருக்கு வீடுகொடுத்த புதனும் அவருடன் சேர்க்கை! உங்கள் செயல்களிலும் நடவடிக்கை களிலும் காரியங்களிலும் தடையேதுமில்லா மல் முன்னேற்றமடையும்; வெற்றிய டையும். ராகு- கேது சம்பந்தம் இருப்ப தோடு 6-ல் சனி நின்று புதன், சுக்கிரன், சூரிய னைப் பார்க்கிறார். அதனால் சிறுசிறு தடைகளும் குறுக்கீடுகளும் ஏற்பட்டாலும், குரு ராசியைப் பார்ப்பதால் பாதிப் பிருக்காது. 7-க்குடைய செவ்வாய் நீச ராசியில் நின்றாலும் நீசபங்கமாகி 7-ஆம் இடத்து குருவால் பார்க்கப்படுவதால், ஆணுக்குப் பெண்ணாலும், பெண்ணுக்கு ஆணாலும் ஆதரவும் அனுசரணையும் எதிர்பாôக்கலாம். அதாவது கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் ஆதரவை எதிர்பார்க்கலாம். குடும்பத்தாரின் தேவைகளையும் எண்ணங்களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்யலாம். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் உதவியும் ஆதரவும் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக அமையும். நெருங்கியவர்களையும் நீண்டகாலமாகப் பாராதிருந்த நண்பர்களையும் சந்தித்து எதிர்காலம் குறித்து திட்டமிடுவதோடு, கடந்தகால மலரும் நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியடையலாம். 10-ஆம் இடத்தை 10-க்குடைய சனியே பார்ப்பதால், நடந்து வரும் தொழில்துறையில் சில சீர்திருத்தங் களைச் செய்து லாபம் பெருக்கும் யுக்திகளைக் கையாளலாம். சிலர் புதிய திட்டங்களோடு புதிய தொழில் அமைப்பு களை செயல்படுத்தலாம். வேலையில் இருப் போருக்கு அவர்களுடைய உண்மைக்கும் விசுவாசத்துக்கும் பரிசாக பதவி உயர்வும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். படித்துப் பட்டம் பெற்றும் படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமலும் திருப்தியான ஊதியம் கிடைக்காமலும் அவதிப்பட்டோருக்கு இனி எல்லா வகையிலும் முன்னேற்றமும் திருப்தியான பலனும் எதிர்பார்க்கலாம். அட்டமச்சனி நடப்பதால் சிலர் வெளியூரில் அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர் புடன் தொழிலை விரிவுபடுத்தலாம்.

பரிகாரம்: சிங்கம்புணரியில் வாத்தியார் கோவில் எனப்படும் முத்துவடுகநாதர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

hhமிதுன ராசிநாதன் புதன் ஆட்சி பலமாக இருக்கிறார். இத்துடன் கடந்த சில நாட்களாக வக்ரமாக இருக்கும் புதன் இந்த வாரம் (14-ஆம் தேதி) வக்ர நிவர்த்தியடைவார். புதனோடு ராகு சேர்ந்திருப்பதும், ராகு சாரத்தில் (திருவாதிரையில்) புதன் இருப்பதும் உங்களுக்கு பிளஸ் பாயின்டு தான். 7-ல் 8-க்குடைய சனி நிற்க, அவருடன் கேது சேர்வது மைனஸ் பாயின்டுதான். அத்துடன் 7-க்குடைய குரு 6-ல் மறைவதும் களத்திரகாரகன் சுக்கிரன் ராகு சாரம் பெற்று (திருவாதிரை) ராகுவுடன் சேர்வதும் டபுள் மைனஸ். எனவே திருமண வயதுடைய ஆண்- பெண் களுக்குத் திருமணம் தடைப்படும் அல்லது தாமதப்படும். 25 வயதுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற பெண்களுக்கும், 27 வயதுக்கு முன்பு திருமணம் நடந்த ஆண்களுக்கும் குடும்பத்தில் பிரிவு, பிளவு, விவாகரத்து ஏற்பட இடமுண்டு. சிலருக்கு மறுமணம் புரிய வாய்ப்பு உருவாகும். அப்படிப் பட்டவர்கள் தசாபுக்தியை அனுசரித்து ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்வது அவசியம். காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டால் யார் யாருக்கு என்ன ஹோமம் செய்யலாம் என்று ஆலோசனை கூறி ஹோமம் செய்வார். (செல்: 99942 74067). ஹோமம் செய்ய வசதியில்லாதவர்கள் தஞ்சை- திருவையாறு பாதையில் பெரும்புலியூர் சென்று பூஜை செய்யலாம். (வியாக்ரபுரீஸ்வரர்). லிங்கோத் பவர் அருகில் அர்த்தநாரீஸ்வார் விக்ரகம் உண்டு. விவாகரத்தை விலக்கும் தலம். பிரிந்து வாழும் தம்பதிகளை சேர்த்து வைக்கும் தலம். அருகில் திருநெய்த்தானம்- தில்லை ஸ்தானம்- நெய்யாடியப்பர் திருக்கோவிலையும் தரிசிக்க லாம். சப்தஸ்தானங்களில் ஒன்று. சரஸ்வதி, காமதேனு, கௌதமர் வழிபட்ட தலம். பசுநெய் அபிஷேகம் செய்யலாம்.

பரிகாரம்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஓத சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். திருவாதிரையன்று ஜீவசமாதி யானார். பிரதி திருவாதிரையில் சிறப்புப் பூஜை நடைபெறும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் 5, 10-க்குடைய செவ்வாய் நீசமாக இருந்தாலும் நீசபங்க ராஜயோகம் அடைகிறார். சந்திரகேந்திரம் பெறுவதாலும், செவ்வாயின் உச்ச ராசிநாத னான சனியின் சாரம் பெறுவதாலும் (பூசம்), குரு பார்வையாலும் நீசபங்க ராஜயோகம். குரு 9-க்குடையவர்; செவ்வாய் 10-க்குடையவர். குரு பார்வையால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. திட்டமிட்ட காரியங்களை செயல்படுத்துவதில் தடைகளும் குறுக் கீடுகளும் இருந்தாலும் திட்டமிட்டபடி நிறைவேற்றிவிடலாம். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக் காக செலவுகள் செய்வது தவிர்க்க முடியாத தாக அமையும். அது தக்கசமயத்தில் உதவிகர மாகவும் அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பும், முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும் உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையும். வேலையில் இருப்போர் திறமை யாகச் செயல்பட்டு மேலிடத்தாரின் பாராட்டுக்கு ஆளாகலாம். சொந்தத் தொழில் செய்கிறவர்கள் திறமையால் பெருமை யடையலாம். செலவுகள் ஒருபுறமிருந்தாலும் அதை சமாளிக்க வரவுகளும் வந்துசேரும்; கைகொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். மனநிறைவை ஏற்படுத்தும்.

பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சோமப்பா சுவாமிகள் மற்றும் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் ஆரம்பத்தில் 11-ல் இருக்கிறார். 17-ஆம் தேதி கடகத்தில் (12-ல்) மறைகிறார். 12- விரயஸ்தானம் என்றாலும் கடக ராசி என்பதால் (அது சந்திரன் வீடு) சுபவிரயமாகும். நவகிரகங் களில் ராகு- கேது தவிர மற்ற ஏழு கிரகங் களுக்குத்தான் ஆட்சி வீடு, உச்ச வீடு இருக் கிறது. அதிலும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒவ்வொரு ஆட்சி வீடுதான். மற்ற ஐந்து கிரகங்களுக்கும் இரண்டு ஆட்சி வீடுகள். சூரியனும் சந்திரனும்தான் நன்றாக கண்ணுக்குத் தெரியும் கிரகங்கள். எனவே கடக ராசிக்கும் சிம்ம ராசிக்கும் எந்த பேதமும் வராது; விதிவிலக்கு. ஆகவே சூரியன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார் என்று வேதனைப் பட வேண்டாம். ராசிநாதன் மறைவு தோஷம் என்பதில்லை. சுபவிரயம் என்று எடுத்துக் கொள்ளலாம். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். நெருங்கிய வர்களையும் நீண்டகாலம் தொடர்பில்லாமல் இருந்தவர்களையும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். அவர்களுடன் அளவளாவி ஆனந்த மடையலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் உதவியாக அமையும்.

பரிகாரம்: திருவாரூர் அருகில் மடப்புரம் பகுதியிலிருக்கும் தட்சிணாமூர்த்தி சுவாமி களின் ஜீவசமாதியை வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 10-ல் திக்பலம் பெறுகிறார். அவருடன் 9-க்குடைய சுக்கிரன் சம்பந்தம். அதனால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. ஒரு ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகமும், தர்மகர்மாதிபதி யோகமும் அமைந் தால் அந்த ஜாதகர் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து முன்னேறும் வாய்ப்புப் பெறுவார். "கழுவின மீனில் நழுவின மீன்' என்று சொல்வார்களே... அதுபோல சிக்கலிலிருந்து தப்பிக்கலாம். 3, 8-க்குடையவர் செவ்வாய் 11-ல் நீசம் பெறுகிறார். குரு பார்வை யால் நீசபங்கம் ஏற்படுகிறது. உடன்பிறந்த வர்கள் வகையிலும், நண்பர்கள் வகையிலும், ரத்தபந்த சொந்தங்கள் வகையிலும் சிறுசிறு பிரச்சினைகள் உருவாகி மனதை வருத்தலாம். வேண்டாத விமர்சனங்களையும், தேவை யற்ற எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற வேண்டும். ஒருசிலருக்கு தாய்வழி உறவிலோ, தன் சுகத்திலோ சங்கடங்களும் வைத்தியச் செலவுகளும் வரலாம். தொழில்துறையிலும் போட்டி பொறாமைகளும் தொய்வுகளும் ஏற்படலாம். புதன், சுக்கிரன் இணைவால் ஏற்படும் தர்மகர்மாதிபதி யோகத்தால் அவற்றை சமாளித்து சாதிக்கலாம்.

பரிகாரம்: மானாமதுரை வழி இடைக் காட்டூரிலுள்ள இடைக்காடர் சந்நிதி சென்று வழிபடவும். நவகிரகங்களை திசை மாற்றியவர்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 9-ல் திரிகோணம். அவருடன் 9-க்குடைய புதன் சேர்க்கை. புதன் ஆட்சி. அங்கு சூரியனும் ராகுவும் நிற்பதாலும், அவர்களை சனி, கேது பார்ப்பதாலும் தகப்பனார் வகையில் சலனம், சங்கடம், சச்சரவுகளைச் சந்திக்கும் காலம். சிலர் பங்காளிப் பகையால் வழக்கு விவகாரங்கள், வியாஜ்ஜியங்களை சந்தித்து நீதிமன்றம் போக நேரும். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றபடி, நியாயமும் நீதியும் உங்கள் பக்கம் இருந்தாலும், அதிகார பலமும் பொருளாதார பலமும் நிறைந்த எதிரிகளை சமாளிப்பது கஷ்டமாக இருக்கும். ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்களே! அப்படிப்பட்டவர்கள் காஞ்சிபுரத்தில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் சென்று வழிபடவும், ஒரு காலத்தில் அந்தக் கோவிலில் சிறப்புப் பூஜை செய்துதான் மறைந்த ஜெயலலிலிதா வழக்குகளில் வெற்றி பெற்றார். 3, 6-க்குடைய குரு 2-ல் இருப்பதால் பொருளா தாரத்தில் நெருக்கடி நிலைக்கு இடமில்லை என்றாலும், அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கும் கட்டாயம் உண்டாகும். 2-க்குடையவர் 6-ல் இருந்தால் நமது பணம் அந்நியர் வசம்போகும். 6-க்குடையவர் 2-ல் இருந்தால் அந்நியர் தனம் நம் கையில் புரளும்.

பரிகாரம்: பழநி போகும் வழியில் கணக் கன்பட்டியில் உள்ள மூட்டை சுவாமிகள் என்னும் பழநி சுவாமி ஜீவசமாதி சென்று வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிக்கு ஏழரைச்சனி நடக் கிறது. அத்துடன் ஜென்ம குருவும் இருக் கிறது. ராசிநாதன் செவ்வாயும் 9-ல் நீசம். இரண்டாவது சுற்று ஏழரைச் சனி நடப் பவர்களுக்கு பொங்கு சனி. 2, 5-க்குடைய குரு ஜென்மத்தில் இருப்பது சிறப்பு. நீசம்பெற்ற ராசிநாதனை குரு பார்ப்பது விசேஷம். ஆக மூன்றுக்கும் நிவர்த்தியும் விதிவிலக்கும் இருக்கிறது! ஆகவே சில காரியங்கள் தடைப்பட்டாலும் தாமதப்பட்டாலும் திட்ட மிட்டபடி எல்லாம் தெளிவாக நிறைவேறும். தண்டவாளங்களில் வேலை நடக்கும்போது மெதுவாகச் செல்லும் ரயில், பழுதுபார்க்கும் பகுதியைக் கடந்தபிறகு அதிவேகமாகச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியை அடைந்துவிடுவது போல, ஜென்மத் தில் குரு நிற்பதாலும், ராசிநாதன் செவ்வாயை குரு பார்ப்பதாலும் எல்லாத் தடைகளையும் தாமதங்களையும் விலக்கி முன்னேறலாம். 2-ல் சனி, கேது இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்வது உங்கள் கடமையாகும். நிதானமும் பொறுமையும் அவசியம். அதேபோல வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று அதிக வட்டிக்கு வாங்கிக் கொடுத்து பாதிப்புக்கு ஆளாகாமல் நடந்து கொள்வதும் அவசியம். அதாவது சாட்சிக்காரன் காலிலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலிலில் விழலாம்.

பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்தமங் கலத்தில் உள்ள ஸ்வயம்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். (சாமியார்கரடு பஸ் ஸ்டாப்).

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிநாதன் குரு 12-ல் மறைவு. அத்துடன் அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 8-ல் மறைவு- நீசம்! ஜென்மத்தில் சனியும் கேதுவும் சேர்க்கை! "கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப்போனால் அங்கு ரெண்டு கொடுமை ஆடியதாம்' என்று பழமொழி சொல்வார்கள். அதுமாதிரி ஒவ்வொரு நிகழ்ச்சியும், "நினைச்சது ஒண்ணு- நடந்தது ஒண்ணு- அதனால் முழிக்குதாம் அம்மாக்கண்ணு' என்று ஒரு திரைப்படத்தில் பாடியமாதிரி ஒவ்வொரு விதமாக நடக்கும். சில காரியங்கள் நினைத்தமாதிரியே நடக்கும். சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். சில காரியங்கள் மதில்மேல் பூனையாக- வெற்றி, தோல்வி நிர்ணயிக்க முடியாதபடி இருக்கும்! பொதுவாக நவகிரகங்களில் சனியும் ராகுவும் கேதுவும் இணைந்தால் அதன் பலனை வரையறுக்க முடியாது. எப்படியும் நடக்கலாம்- எதுவும் நடக்காமலும் போகலாம்! அதனால்தான் எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் "நடக்கும் என்பார் நடக்காது. நடக்காது என்பார் நடந்துவிடும்' என்று பாடினார். அதேசமயம் வசதி வாய்ப்புகளுக்கும், வாழ்க்கை அமைப்புக்கும், தொழில்துறை வருமா னத்துக்கும் எந்தக் குறையும் ஏற்படாது. "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!' ஆனால் மனதில் நிறைவிருக்குமா என்றால் அதுவும் இருக்காது. "கல்லைக் கண்டால் நாயைக் காணோம். நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' என்று பழமொழி சொல்வார்கள். அதுமாதிரிதான்! அதற் காக மனம் தளர்ந்து- சோர்ந்து விடா தீர்கள். "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்று பகவத் கீதையில் கண்ணன் சொன்னதைக் கருத்தில்கொண்டு செயல்படுங்கள்.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கச வனம்பட்டி சென்று ஜோதி மௌனகுரு நிர்வாண சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு என்பதோடு கேது சம்பந்தம். முக்கியமாக சூரியன், புதன், சுக்கிரன், ராகு 6-ல் மறைவு. 7-ல் செவ்வாய் நீசம்! ஆகவே போகாத ஊருக்கு தெரியாத ஆட்களிடம் வழிகேட்டமாதிரி அமையும். வீண் அலைச்சல், வெட்டிச் செலவு, தேவையற்ற டென்ஷன். விரும்பியது விலகிப்போகும்; வேண்டாதது விரும்பித் தேடிவரும். யாருக்கு உதவி செய்தீர்களோ அவர்களே பின்னால் வந்து முதுகில் குத்துவார்கள். நல்லவர்கள் வேடத்தில் பொல்லாதவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிலியாக வந்து தொல்லை கொடுப்பார்கள். நல்லவர் யார், கெட்டவர் யார் என்று தெளிவுபெறாத வகையில் தடுமாற்றம் உண்டாகும். சொந்தக் குடும்பத்திலும் சரி; உறவினர்கள் வகையிலும் சரி- ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் குறை கூறுவதால் யார் சொல்வதை நம்புவது என்று புரியாத குழப்பம் உண்டாகும். உங்கள் அறிவைப் பயன்படுத்தி தெளிவு பெறவேண்டும். அதைத்தான் வள்ளுவர், "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்று கூறினார். குற்றம் புரியாதவர்களும் தவறு, செய்யாதவர்களும் யாருமே இல்லை. அதேசமயம் கெட்டதை மறந்து நல்லதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அடைய வேண்டும். மறப்பவன் மனிதனாகலாம். மன்னிப்பவன் தெய்வமாகலாம்.

பரிகாரம்: திருச்சி அருகில் திருவெள்ளறை யில் உள்ள சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருப்பது பலம். "ஆறு பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்குமாகில் கூறுபொன் பொருளுமுண்டாம்; குறைவிலாச் செல்வம் உண்டாம்; ஏறு பல்லக்குண்டாம்; இடம் பொருள் ஏவலுண்டாம்' என்பது சந்திரகாவியப் பாடல். அதேபோல ராகு- கேதுவுக்கும் 3, 6, 11 யோகமான இடங்கள். கும்ப ராசிக்கு 2, 11-க்குடைய குரு 10-ல் இருக்கிறார். 2-ஆமிடத்தையும் பார்க் கிறார். தொழில், வாழ்க்கை, பொருளா தாரம் எல்லாம் மிகச்சிறப்பாக அமையும். இங்கிதமாகப் பேசி கடினமான காரியங் களை சாதிக்கலாம். விரும்பிய பொருட் களை கூடுதல் விலைகொடுத்துக்கூட வாங்கி மகிழலாம்; மன நிறைவடையலாம். தொழில்துறையில் தொய்வில்லாமல் முன்னேறலாம். வெற்றிபெறலாம். வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கி கூடுதல் லாபம் பெறலாம். "ஆடுகிற மாட்டை ஆடிக்கறக் கணும். பாடுகிற மாட்டை பாடிக் கறக் கணும்' என்ற பாலிலிசியைக் கையாண்டு ஒவ்வொரு காரியத்தையும் சமாளிப்பீர்கள். குடும்பத்திலும் பொருளாதாரத்திலும் கொடுக்கல்- வாங்கலிலும் குறையொன்று மில்லை. எல்லாம் நிறைவாக நிறை வேறும்.

பரிகாரம்: மதுரை- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலில் சுவாமி சந்நிதி பின்புறமுள்ள வல்லப சித்தரை வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். 10-க்குடைய குரு 9-ல் நிற்பது தர்மகர்மாதிபதி யோகம். அத்துடன் 9-க்குடைய செவ்வாயையும் குரு பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உருவாகும். உடன்பிறந்தவர்களும் உறவினர் களும் நண்பர்களும் அன்பர்களும் எல்லாரும் உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவார்கள். புகழுக்காக செலவு செய்யத் தயங்கமாட்டீர்கள். அதேசமயம் ஒருவருக்கு பத்து ரூபாய் செலவு செய்தால், அவரால் இருபது ரூபாய் பயனடையும் வகையில் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உயர்வைத் தரும். யாரைக் கொண்டு எதனைச் செய்தால் லாபமும் வெற்றியும் அடைய முடியும் என்பதை நுட்பமாக அறிந்து அதைச் சாதிப்பீர்கள். "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் "கண் விடல்' என்று வள்ளுவர் சொன்னபடி, யாரால் எதை நிறைவேற்ற வேண்டுமென்று தெரிந்து நடந்துகொள் வீர்கள். சமயத்தில் மற்றவர்களை சாமர்த்திய மாகக் கழற்றி விடவும் செய்வீர்கள்.

பரிகாரம்: திருவள்ளூர்- திருத்தணி பாதையில் இருக்கும் அனுமந்த ராயர் ஜீவசமாதி சென்று வழிபடவும்.