ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,

மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

Advertisment

ஆரம்பம்- விருச்சிகம்.

17-9-2018- தனுசு.

19-9-2018- மகரம்.

Advertisment

22-9-2018- கும்பம்.

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரம்- 1, 2, 3.

செவ்வாய்: திருவோணம்- 2.

புதன்: உத்திரம்- 2, 3, 4, அஸ்தம்- 1, 2.

குரு: விசாகம்- 3.v சுக்கிரன்: சுவாதி- 2, 3, 4.v சனி: மூலம்- 1.v ராகு: பூசம்- 2.

கேது: உத்திராடம்- 4.

கிரக மாற்றம்:

17-9-2018- கன்னி சூரியன்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் தொடர்ந்து 10-ஆம் வீட்டில் உச்சமாக இருக்கிறார். 30-4-2018 (சித்திரை 17-ல்) மகர ராசிக்கு வந்த செவ்வாய் 27-10-2018 (ஐப்பசி 10) வரை உச்சபலத்தோடு 10-ல் இருக்கிறார். பொதுவாக செவ்வாய் 45 நாள் முதல் அதிகபட்சம் 60 நாள்தான் ஒரு ராசியில் தங்குவார். இப்போது வித்தியாசமாக ஆறு மாத காலம் மகரத்தில் சஞ்சரிக்கிறார். சிலசமயங்களில் இப்படி அதிகபட்சமாக தங்கிப் பலன் தருவார். உச்சகதியாக இருந்து உங்கள் ராசியை 4-ஆம் பார்வை பார்ப்பதால் கூடுதல் சிறப்பு ஏற்படுகிறது. அதிலும் அவர் 4-க்குடைய சந்திரன் சாரத்தில் திருவோணத்தில் இருப்பது இன்னும் விசேஷம். சுருக்கமாகச் சொல்லப்போனால் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். வேறு யாருமில்லை. தேர்தலில் உங்களை எதிர்த்துப் போட்டியிட யாருமில்லை என்ற நிலையில் ஏகமனதாகத் தேர்ந்தெடுத்ததற்குச் சமம். என்றாலும் செவ்வாய் கேதுவோடு சேர்ந்து ராகுவால் பார்க்கப்படுவதால் மனதில் ஒரு நிறைவோ திருப்தியோ ஏற்படாது. போட்டி போட்டு எதிரிகளை முறியடித்து வெற்றி மாலை சூடும் வீரனுக்கு எதிர்க்கவோ, போட்டி போடவோ யாருமில்லை என்னும்போது "சப்பென்று' ஆகிவிடுமல்லவா! அதில் ஒரு சுவாரசியம் இருக்காதல்லவா! மேட்சில் "டிரான்மேட்ச்' ஆவதுபோல! 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். அதனால் தொழில்வளமும் உடல்நலமும் மனபலமும் பெருகும் என்பதோடு, தெய்வ பலமும் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று எம்.எஸ். பாடியதுபோல எந்தக் குறையும் ஏற்படாது.

பரிகாரம்:

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள்: திருத்துறைப்பூண்டியில் ஸ்ரீபவஔஷதீஸ்வரரை வழிபடவேண்டும். தொடர்புக்கு: செல்: 94438 85316.பரணி நட்சத்திரக்காரர்கள்: பொறையாரிலிருந்து மூன்று கிலோமீட்டர் நல்லாடை சென்று ஸ்ரீ அக்னீஸ்வரரை வழிபடவேண்டும். தொடர்புக்கு: செல்: 97159 60413. கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்: மயிலாடுதுறையிலிருந்து கஞ்சனாகரம் சென்று ஸ்ரீகாத்ரசுந்தரேஸ்வரரை வழிபட வேண்டும். (பஸ் எண் 21, 21ஏ), தொடர்புக்கு: செல்: 94874 43351.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 6-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருப்பதால் மறைவு தோஷம் நீங்கும். அப்படியே ஆனாலும் 6-ஆம் இடம் என்பது தொழில் ஸ்தானமாகிய 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம் ஆகும். அதனால் தொழில், வாழ்க்கை, உத்தியோகத்தில் யோகப் பலன்களைச் சந்திக்கலாம். எந்தத் தொழிலைத் தொட்டாலும் சரி; வாழ்க்கையிலும் சரி; வேலையிலும் சரி- போராடினால்தான் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடந்தாலும் மற்ற கிரகங்களின் அமைப்பால் அது பொங்கு சனியாக மாறி பொலிவைத் தரும். அதுமட்டுமல்ல; 8-க்குடைய குரு 6-ல் மறைவதும் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. டபுள் நெகட்டிவ் ஒரு பாசிட்டிவ் என்ற தியரிதான்! மைனஸ் ஷ் மைனஸ் = பிளஸ் என்றும் கூறலாம். 8-க்குடைய குரு சுயசாரம் பெற்று சுக்கிரனோடு சம்பந்தம். சுக்கிரன் குரு வீட்டில்தான் உச்சம்! இத்தகைய காரணங்களால் செல்வாக்கு உயரும். மதிப்பு, மரியாதை, கௌரவம் உண்டாகும். விலகி நின்ற சொந்தங்கள் விரும்பி வந்து உறவாடும். மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பலாம். 4-ல் சூரியன் ஆட்சி! ஆரோக்கியத்துக்குக் குறைவில்லை. தாயாதி- பங்காளி வகையில் அன்பும் பாசமும் பெருகும். நேசமும் நெருக்கமும் பலப்படும். 3-ல் ராகு; அந்நிய இனத்து நண்பர்களின்- குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களின் அன்பும் ஆதரவும் அனுகூலமாக அமையும். 7-க்குடைய செவ்வாய் 9-ல் உச்சம். அதேசமயம் ராகு- கேது சம்பந்தம். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் நன்மைகள் விளையும். பண உதவியும், வீடு வாசல் அமைப்புக்கான உதவியும் எதிர்பார்க்கலாம். தொழில்துறையில் ஏற்பட்ட தொய்வுகளை நீக்கி உய்வடைய உதவி ஒத்தாசைகள் எதிர்பார்க்கலாம். ஒரு அன்பர் சூதாடி சூதாடி நிறைய கடனாளியாகிவிட்டார். கடன்காரர்களின் தொல்லையைத் தாங்கமுடியாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்க- பெண் கொடுத்தவர்கள் வந்து அவர் கடனை எல்லாம் அடைத்து புத்திசொன்னதுடன், சூது பக்கம் போகாமல் இருக்க சத்தியம் வாங்கிக்கொண்டனர்.

பரிகாரம்:

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள்: மயிலாடுதுறையிலிருந்து கஞ்சனாகரம் சென்று ஸ்ரீகாத்ரசுந்தரேஸ்வரரை வழிபடலாம். செல்: 94874 43351.v ரோகிணி நட்சத்திரக்காரர்கள்: காஞ்சிபுரம் காமாட்சி கோவில் அருகில் ஸ்ரீபாண்டவதூத கிருஷ்ணப் பெருமாளை தரிசிக்கலாம். தொடர்புக்கு: தொலைபேசி: (04427) 231899.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள்: கொரடாச்சேரி வழி எண்கண் ஆதிநாராயணப் பெருமாளை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 94433 51528.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் 4-ல் கன்னியில் ஆட்சியாக இருக்கிறார். தொடக்கத்தில் சூரியன் சாரத்திலும் (உத்திரம்), பிறகு சந்திரன் சாரத்திலும் (அஸ்தம்) சஞ்சாரம். சூரியன் சிம்மத்தில்- 3-க்குடையவர். ஆட்சி. சந்திரன் 2-க்குடையவர். 2-ல் ராகு. எனவே பொருளாதாரத்தில் பெரும்பாலும் குறையில்லை என்றாலும், வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். சமயத்தில் சிறுசேமிப்புகளையும் எடுத்து செலவிடும் நிலையும் ஏற்படலாம். பெண்கள் பாணியில் சொன்னால் அஞ்சறைப்பெட்டி டப்பாக்களில் சிறுபாடு சேர்த்து வைத்ததையும் சமயத்தில் எடுத்துச் செலவு செய்யும்படி ஆகும். அதற்காகக் கவலைப்படக்கூடாது. அந்தந்த நேரத்தில் அந்தந்த காரியங்களை நிறைவேற்றினால் சரிதான். அடுத்தவரிடம்போய் கையேந்தாமல், கடன் வாங்காமல் காரியங்கள் கைகூடினால் போதுமே! 6-க்குடைய செவ்வாய் 8-ல் மறைவதால் நோய் நொடி, பிணி பீடைகள் எல்லாம் மறைந்துவிடும். அதேபோல கடன்களும் அடைபட்டுவிடும். அடுத்து 8-ல் செவ்வாய் உச்சம். அதனால் சத்ரு ஜெயம், போட்டி, பொறாமைகள், எதிர்ப்பு, இடையூறுகள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும். அதேசமயம் 10-ஆம் இடம் தொழில் ஸ்தானம். (மீனம்). அதற்கு 9-க்குடைய செவ்வாய் தொழில் ஸ்தானத்துக்கு 11-ல் லாபஸ்தானத்தில் இருப்பதால் தொழில் முன்னேற்றம், லாபம் உண்டாகும். அரசு அல்லது தனியார் பணிகளில் இருப்போருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும்.

பரிகாரம்:

மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள்: கொரடாச்சேரி வழி எண்கண் ஆதிநாராயணப்பெருமாளை வழிபடவேண்டும். தொடர்புக்கு: செல்: 94433 51528.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்: அதிராமபட்டினம் ஸ்ரீஅபயவரதீஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 99440 82313.

புனர்பூச நட்சத்திரக்காரர்கள்: வாணியம்பாடி ஸ்ரீஅதிதீஸ்வரரை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 99941 07395.

rasipalan

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசி அன்பர்களே! உங்கள் ராசியில் ராகு நிற்க, அவருக்கு ஏழில் கேதுவும் செவ்வாயும் சேர்ந்து நின்று ராசியைப் பார்க்கிறார்கள். 9-க்குடைய குரு 10-ஆம் இடத்தைப் பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகம். 10-க்குடைய செவ்வாயும் 10-ஆம் இடத்தைப் பார்ப்பது யோகம். தொழில், வேலை, வாழ்க்கை எல்லாம் பிரச்சினையில்லாமல் தெளிந்த நீரோடைபோல இயங்கினாலும், ராகு- கேது ஜென்ம ராசிக்குத் தொடர்பு இருப்பதால் மனதில் ஒரு நிறைவும் நிம்மதியும் இருக்காது. காரணமில்லாத ஒரு கவலை- அதாவது வெறுமை இருப்பதாகத் தோன்றும். தெளிவாகச் சொன்னால் தமிழ் சினிமா பார்த்தால் ரசிப்பு சிறப்பாக இருக்கும். பாஷை புரியாத மலையாளப்படம், தெலுங்குப்படம், இந்திப்படம் பார்த்தால் 100 சதவிகிதம் ரசிக்க முடியுமா? அப்படித்தான் இந்த ராகுவும் கேதுவும் ரசனையில்லாமல் நாளையும் பொழுதையும் ஓட்டச்செய்வார்கள். அதேசமயம் 2-ல் சூரியன் ஆட்சி, 3-ல் புதன் ஆட்சி, 4-ல் சுக்கிரன் ஆட்சி. (17-ஆம் தேதி சூரியன் 3-ல்). எனவே தைரியம் புருஷ லட்சணம் என்பதுபோல தளர்ச்சியடையாமல் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் செயல்படுவீர்கள். 5-க்குடைய குரு சுயசாரம் பெற்று சுக்கிரனோடு சேர்ந்ததன் பலன் அதுதான்! வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும்- சம்பாதிக்க வேண்டும்- குடும்பத்தினரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற வெறி மனதில் ஓடும். அது நிறைவேறுமா? எப்போது நிறைவேறும் என்ற தயக்கமும் குழப்பமும் இருக்கும். "ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு வாடியிருக்குமாம் கொக்கு' என்பதுபோல வாய்ப்பை நோக்கிக் காத்திருப்பீர்கள்.

பரிகாரம்:

புனர்பூச நட்சத்திரக்காரர்கள்: வாணியம்பாடி ஸ்ரீஅதிதீஸ்வரரை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 99941 07395.

பூச நட்சத்திரக்காரர்கள்: பேராவூரணி அருகில் விளாங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 97507 84944.

ஆயில்ய நட்சத்திரக்காரர்கள்: கும்பகோணம் அருகில் திருவிசைநல்லூர் ஸ்ரீகற்கடேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 99940 15871.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் சூரியன் ஆட்சியாக இருக்கிறார். 17-ஆம் தேதி 2-ஆம் இடத்திற்கு மாறுகிறார். அவருக்கு வீடு கொடுத்த புதன் அங்கு ஆட்சியாக இருப்பதோடு, சூரியன் நட்சத்திரத்திலும் (உத்திரம்) சஞ்சரிக்கிறார். எனவே ராசிநாதன் ராசியில் இருப்பதற்குச் சமம். மதிப்பு, மரியாதை, கௌரவம், செல்வாக்கு எதற்கும் குறைவில்லை. எதிலும் அக்கறையோடும் ஆர்வத்தோடும் ஈடுபடுவீர்கள். உறுதியாகவும் உற்சாகமாகவும் செயல்படுவீர்கள். அதனால் வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைத் தழுவும். பொன், பொருள் சேர்க்கையும், தாராளமான தனவரவும் நிலவும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். சொல்வதைச் செய்வீர்கள். செய்வதைத்தான் சொல்வீர்கள். 5-ல் சனி நிற்பதால் சிலருக்குப் புத்திரதோஷம் எனலாம். அப்படிப்பட்டவர்கள் சுந்தரம் குருக்களிடம் சந்தான பரமேஸ்வர ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும், புத்திரப்ராப்தி, வாஞ்சா கல்பகணபதி ஹோமமும் செய்துகொள்ளவும். (செல்: 99942 74067.) புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். வேலையில் இருப்போருக்கும் விருப்பங்கள் நிறைவேறும்.

பரிகாரம்:

மக நட்சத்திரக்காரர்கள்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் தவசிமேடை சென்று ஸ்ரீமகாலிங்கேஸ்வரை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 95782 11659.

பூர நட்சத்திரக்காரர்கள்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை வழி திருவரங்குரளம் சென்று ஸ்ரீஹரிதீர்த்தேஸ்வரûரை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 94438 49128.

உத்திர நட்சத்திரக்காரர்கள்: இடையாற்றுமங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வரரை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 98439 51363.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசி அன்பர்களே! கன்னி ராசிநாதன் புதன், கன்னியில் ஆட்சியாக இருக்கிறார். 12-க்குடைய சூரியன் நட்சத்திரத்தில் (உத்திரம்) சஞ்சாரம். வாரக்கடைசியில் சந்திரன் சாரம் (அஸ்தம்) பெறுகிறார். சூரியன் விரயாதிபதியாக இருந்தாலும், புதனோடு சேருகிறபோது சுபவிரயமாக மாறும்; பயனுள்ள விரயமாக மாறும். 2-ல் குரு, சுக்கிரன் சேர்க்கை என்பதால் குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறும், அமைதியும் ஆனந்தமும் உருவாகும். குரு 4, 7-க்குடையவர் என்பதால் திருமணம், பூமி, வீடு, வாகனம் போன்ற சுபமங்கள காரியங்களும் கைகூடும். 6-க்குடைய சனி 4-ல் இருப்பதால் ஒருசிலருக்கு ஆரோக்கியக்குறைவு ஏற்படும். நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட பிணி பீடைகள், வைத்தியச்செலவுகள் வரலாம். சனி, கேது சாரம் பெறுவதால் (3-ல்) டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத அல்லது குணப்படுத்தமுடியாத மர்மநோயாகவும் இருக்கலாம். "நோய்க்கும் பார் பேய்க்கும் பார்' என்பதுபோல ஜாதகரீதியான பரிகாரங்களும் தேவை. அலோபதியைத் தவிர்த்து ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

பரிகாரம்:

உத்திர நட்சத்திரக்காரர்கள்: இடையாற்றுமங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 98439 51363.

அஸ்த நட்சத்திரக்காரர்கள்: கும்பகோணம்- மாயவரம் சாலையில் கோமல் ஸ்ரீகிருபாகூபாரேச்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 95002 84866.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு: மதுரை- சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரதவல்லபப் பெருமாளை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 97902 95795.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசி அன்பர்களே! துலா ராசிநாதன் சுக்கிரன் ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் 3, 6-க்குடைய குரு சம்பந்தம். குரு சுயசாரம். (விசாகம்- 3). சுக்கிரன் ராகு சாரம். (சுவாதி). ராகு 10-ல் இருக்கிறார். தொழில், வாழ்க்கை, உத்தியோகம், வேலை இவற்றில் முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நற்பலன்கள் எதிர்பார்க்கலாம். வேலை பார்ப்பவர்களின் கோரிக்கைகளை நிர்வாகமும், மேலிலிடத்தாரும் ஏற்றுக்கொள்வார்கள். பத்தோடு ஒன்று பதினொன்றாக, கூட்டத்தோடு கோவிந்தா போட்டவர்களுக்கு இனி எல்லாவற்றிலும் தொழில், வாழ்க்கை, பதவி, அரசியல் ஆகிய எல்லாவற்றிலும் முதலிலிடமும் முக்கியத்துவமும் கிடைக்கும். குறிப்பாக, ஜாதிச் சங்கங்களிலும் குலதெய்வ வழிபாட்டுக் கமிட்டிகளிலும் உங்கள் ஆதிக்கம் மேலோங்கும். உங்களை எதிர்த்து டார்ச்சர் செய்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள். மெஜாரிட்டி பலம் உங்களை வந்தடையும். 3-ல் உள்ள சனி உங்களுக்கு அந்த தைரியத்தைக் கொடுப்பதோடு, ஜென்மத்தில் உள்ள குரு அதை சாதிக்கவும் வைப்பார்.

பரிகாரம்

சித்திரை நட்சத்திரக்காரர்கள்: மதுரை- சோழவந்தான் அருகில் குருவித்துறை சித்திர ரதவல்லபப் பெருமாளை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 97902 95795.

சுவாதி நட்சத்திரக்காரர்கள்: பூந்தமல்லிலி அருகில் சித்துக்காடு ஸ்ரீ தாந்தீஸ்வரர்- ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 93643 48700.

விசாக நட்சத்திரக்காரர்கள்: செங்கோட்டை அருகில் பண்பொழி திருமலை ஸ்ரீமுருகன் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: தொலைபேசி: 04633237131.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசி அன்பர்களே! விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 3-ல் உச்சம். கேது சம்பந்தம், ராகு பார்வை. பொதுவாக செவ்வாய்க்கு 3, 6, 11-ஆம் இடங்களில் பலம் அதிகம். எனவே தைரிய, வீரிய, பராக்கிராமத்தோடு செயல்படுவீர்கள். "உன்னால் முடியும் தம்பி' என்று கமலஹாசன் பாடி நடித்ததுபோல உங்களால் முடியாதது எதுவுமில்லை. சில பொதுக்காரியங்களில் "பூனைக்கு யார் மணிகட்டுவது?' என்ற நிலை ஏற்பட்டாலும் அதையும் உங்கள் ராஜதந்திரத்தாலும், சாமர்த்தியத்தாலும், புத்திசாலிலித்தனத்தாலும் சாதிக்கலாம். முக்கியமாக 2-ல் குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் கோட்டைக்குள்ளேயே குத்துவெட்டு என்பது மாதிரி, சொந்தக் குடும்பத்தில் நிந்தனைகளும், பிரச்சினைகளும் எழுந்தாலும், அதை "ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கவேண்டும்; பாடிக்கறக்கிற மாட்டை பாடிக்கறக்கவேண்டும்' என்ற பாலிலிஸியைக் கையாண்டு- "கம்பும் ஒடியக்கூடாது; பாம்பும் சாகவேண்டும்' என்று செயல்படுவீர்கள். 10-ல் உள்ள சூரியன் உங்களுக்கு அந்த பக்குவத்தை ஏற்படுத்துவார். 11-ல் மாறும் சூரியனும், 11-ல் இருக்கும் புதனும் உங்கள் நடவடிக்கைகளில் வெற்றியைத் தேடித் தருவார்கள். சரித்திரத்தில், சாலமன் என்ற மன்னனிடம் வந்த குழந்தையின் உண்மையான தாய் யார் என்ற வழக்கில் அற்புதத் தீர்ப்புக் கூறியதுபோல உங்களுக்குப் பெருமை சேரும்.

பரிகாரம்

விசாக நட்சத்திரக்காரர்கள்: செங்கோட்டை அருகில் பண்பொழி திருமலை ஸ்ரீமுருகன் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: தொலைபேசி: 04633 237131.

அனுஷ நட்சத்திரக்காரர்கள்: மயிலாடுதுறை அருகில் திருநின்றியூர் ஸ்ரீலட்சுமிபுரீஸ்வர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: தொலைபேசி: 04364 320520.

கேட்டை நட்சத்திரக்காரர்கள்: தஞ்சாவூர்- கும்பகோணம்- பசுபதி கோவிலில் ஸ்ரீவரதராஜப்பெருமாளை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 97903 42581.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசி அன்பர்களே! தனுசு ராசிநாதன் குரு 11-ல் லாப ஸ்தானத்தில், ஜெயஸ்தானத்தில், தன் சொந்த நட்சத்திரத்தில் இருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சுக்கிரன் அங்கு அவருடன் ஆட்சியாக சேர்ந்திருக்கிறார். ஜென்மச்சனி விளைவாக சில காரியங்கள் தேக்கமாக- தாமதமாக இருந்தாலும் தோல்வியாகாது; ஏமாற்றமாகாது! முழு அளவில் வெற்றியாகும்! சூரியன் 9-ல் ஆரம்பத்தில் ஆட்சி பெற்றாலும், 17-ஆம் தேதி 10-ல் புதனோடு சேர்வதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எந்த கிரகம் எப்படியிருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகம் மட்டும் ஒரு ஜாதகத்தில் இருந்துவிட்டால் போதும்; யானை பலத்தோடு எதையும் சாதிக்கலாம். சிங்கத்துக்கு வனராஜா- காட்டு அரசன் என்ற பெருமை இருந்தாலும், யானைக்கு மிஞ்சிய பலம் வேறு எந்த மிருகத்துக்கும் இருக்காது. குடும்பம், வாழ்க்கை, பதவி, உத்தியோகம், தொழில் எல்லாவற்றிலும் உங்கள் முயற்சிகளும் திட்டங்களும் தடையின்றி நூற்றுக்கு நூறு நிறைவேறும். உங்கள் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் (அட்வைஸ்) எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள்.

பரிகாரம்

மூல நட்சத்திரக்காரர்கள்: சென்னை- தக்கோலம்வழி மப்பேடு சென்று ஸ்ரீசிங்கீஸ்வரரை வழிபடவும். தொடர்புக்கு: செல்: 94447 70579.

பூராட நட்சத்திரக்காரர்கள்: திருவையாறு அருகே கடுவெளியில் ஸ்ரீ ஆகாயபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 94434 47826.

உத்திராட நட்சத்திரக்காரர்கள்: மதுரை- மேலூர் அருகில் கீழப்பூங்கொடியில் ஸ்ரீ சுந்தரேஸ்வரரை வழிபடவும். (மேலூர்- சிவகங்கை வழி)- தொடர்புக்கு: செல்: 99436 59071.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசி அன்பர்களே! மகர ராசிநாதன் சனி 12-ல் இருக்கிறார். ஜென்மத்தில் உள்ள கேதுவின் சாரம் பெறுகிறார். ஜென்ம ராசியில் 4, 11-க்குடைய செவ்வாய் உச்சம். 9-ல் புதன் ஆட்சி. 10-ல் சுக்கிரன் ஆட்சி. உடல்நலம், மன நலம், தொழில் வளம் எல்லாம் பலம்பெறும். கையில் காசு பணம் புரளும். பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள், ஆபரணங்கள் சேரும். பாதியில் நின்ற கட்டடப் பணிகளைத் தொடர்ந்து முடிக்கலாம். தொழில்துறையில் நிலவிய தொய்வுகளை விலக்கி விரிவடையச் செய்யலாம். வேலையில் சக ஊழியரோடு சந்தோஷமாகவும், ஆதரவாகவும் செயல்படலாம். பிள்ளைகள் வகையில் நல்ல காரியங்கள் நடக்கும். படிப்பு, கல்வி, வேலை, உத்தியோகம், பிரசவம், சடங்கு போன்ற காரியங்களில் சுபவிரயங்கள் நடக்கும். விரயச்சனி சுபவிரயமாகச் செயல்படுத்துவார். 4-க்குடைய செவ்வாய் உச்சம் என்பதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவான நிலை ஏற்படும். செவ்வாய் பூமிகாரகன் என்பதால் மண், மனை, பூமி சம்பந்தப்பட்ட காரியங்கள் மனதுக்கு நிறைவைத்தரும்.

பரிகாரம்

உத்திராட நட்சத்திரக்காரர்கள்: மதுரை- மேலூர் அருகில் கீழப்பூங்கொடியில் ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 99436 59071.

திருவோண நட்சத்திரக்காரர்கள்: காவேரிப்பாக்கம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 94868 77896.

அவிட்ட நட்சத்திரக்காரர்கள்: பட்டீஸ்வரம்- கொறுக்கையில் ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 98658 04862.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசி அன்பர்களே! கும்ப ராசிநாதன் சனி 11-ல் இருக்கிறார். 3, 6, 11 சனிக்கு நல்ல இடங்கள்; நற்பலன் தரும் இடங்களாகும். அவர் விரயத்தில் உள்ள கேது சாரம் பெறுவதால் உடன்பிறந்தவர்கள்வகையிலும் தொழில்துறையிலும் (செவ்வாய் 3, 10-க்குடையவர்) தவிர்க்கமுடியாத விரயங்கள் ஏற்படும். 9-ல் குரு, சுக்கிரன் சேர்க்கையால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். அதனால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்; கருதியது கைகூடும்; விரும்பியது ஈடேறும்; வேண்டியதும் வந்துசேரும். 8-ல் சூரியன், புதன் சேர்க்கை. (17-ஆம் தேதி சூரியன் மாறுகிறார்). எதிர்பார்த்த நன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் யோகத்தையும் தரலாம். மனைவிவகையில் தவிர்க்கமுடியாத செலவுகளும் ஏற்படலாம். 12-ஆம் இடத்துக் கேதுவும், 6-ஆமிடத்து ராகுவும் சத்ரு ஜெயம், நோய் நிவாரணம், போட்டி பொறாமைகள் நீக்கம் போன்ற பலன்களைத் தரும். அரசியலில் உள்ளோருக்கு இக்காலம் அற்புதமான காலம்.

பரிகாரம்

அவிட்ட நட்சத்திரக்காரர்கள்: பட்டீஸ்வரம்- கொறுக்கையில் ஸ்ரீபிரம்ம ஞானபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 98658 04862.

சதய நட்சத்திரக்காரர்கள்: நன்னிலம், திருப்புகலூரில் ஸ்ரீஅக்னீஸ்வரர் கோவில் சென்று வழிபடவும் தொடர்புக்கு: தொலைபேசி: 04366- 236970.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்: தஞ்சாவூர் அருகில் திருக்காட்டுப் பள்ளியில் உள்ள திருஆனேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 94439 70397.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசி அன்பர்களே! மீன ராசிநாதன் குரு 8-ல் மறைவது குற்றம்தான். என்றாலும், அவர் சுக்கிரனோடு கூடியிருப்பதால், மறைவு தோஷம் நிவர்த்தியாகிறது. மேலும், ராசிநாதன் குரு தன்னுடைய சொந்த நட்சத்திரத்தில் (விசாகம்) சஞ்சாரம். 2-ஆமிடம், 4-ஆமிடங்களைப் பார்க்கும் குரு 12-ஆம் இடத்தையும் பார்ப்பதால் வரவும் வரும்; செலவும் வரும். ஒருசிலருக்கு வரவுக்குமேல் செலவும் வரும். கையளவு இதயத்தில் கடலளவு ஆசை என்பதுபோல எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் திட்டங்களும் சம்பாதிக்கும் வெறியும் இருந்தாலும், எல்லா முயற்சிகளும் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகும். சில விஷயங்களில் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாத குழப்பங்கள் காணப்படும். 12-க்குடைய சனி 10-ல் நிற்கும் பலன் அதுதான். என்றாலும், தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதுபோலவும், இப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற மாதிரியும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருந்து செயல்படுத்துவார்கள்.

பரிகாரம்

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்: தஞ்சாவூர் அருகில் திருக்காட்டுப் பள்ளியில் உள்ள திருஆனேஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 94439 70397.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள்: திருப்புனவாசல் அருகில் தீயத்தூரில் ஸ்ரீசகஸ்ர லட்சுமீஸ்வரர் கோவில் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 99652 11768.

ரேவதி நட்சத்திரக்காரர்கள்: முசிறி அருகில் காரைக்குடி ஸ்ரீகைலாச நாதர் ஆலயம் சென்று வழிபடவும். தொடர்புக்கு: செல்: 94423 58146.