ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் 4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம் - மிதுனம்.
20-1-2019- கடகம்.
22-1-2019- சிம்மம்.
24-1-2019- கன்னி.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திராடம்- 3, 4, திருவோணம்- 1.
செவ்வாய்: ரேவதி- 3, 4.
புதன்: உத்திராடம்- 4, திருவோணம்- 1, 2, 3, 4.
குரு: கேட்டை- 2, 3.
சுக்கிரன்: கேட்டை- 1, 2, 3.
சனி: மூலம்- 4, பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 4. கேது: உத்திராடம்- 2.
கிரக மாற்றம்:
புதன் அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு என்றாலும், செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை என்பதால், செவ்வாய் பன்னிரண்டிலும், குரு எட்டிலும் மறைந்த தோஷம் விலகிவிடுகிறது. பரிவர்த்தனை பெறும் கிரகங்கள், அவரவர் இடத்தில் ஆட்சியாக இருப்பதற்குச் சமம் அதுமட்டுமல்ல; 2, 7-க்குடைய சுக்கிரனும் 8-ல் மறைவுபெற்ற தோஷமும் விலகிவிடும். அத்துடன், 10#க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எனவே நீங்கள் நினைத்த காரியங்களும், திட்டங்களும் நிறைவேறும். வேலையில் இருப்போரின் விருப்பங்கள் பூர்த்தியடையும். சொந்தத் தொழில்துறையில் இருப்போருக்கும் எந்த சங்கடமும் அணுகாமல், முன் னேற்றப் பாதையில் வீரமுழக்கமிட்டுப் பயணிக்கலாம். வேலை பார்க்கும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில், வேண்டாத பிரச்சினைகள் உருவாகி- வேலையைவிட்டு விலகிவிடலாமா என்ற எண்ணம் உண்டாகலாம். இதெல்லாம் 10-ஆம் இடத்தில் உள்ள கேதுவும், 10-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகுவும் செய்யும் திருவிளையாடல். அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டா எந்த முடிவுக்கும் வரவேண்டாம். அடுத்த வாரம்.(ராகு- கேது பெயர்ச்சி மாறியதும்) உங்களுக்கு எதிர்மறையாகத் தெரிந்தவை எல்லாம் உடன்மறை யாகிவிடும். நீங்களும் அவற்றோடு ஒன்றிக் கலந்து உறவாடலாம். நாலில் உள்ள ராகு ஒருசிலருக்கு ஆரோக்கியக்குறைவையும், ஒருசிலருக்கு இடம், வாகனம், தாயார் சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினை களையும் தரலாம். குறிப்பாக- ராகு தசையோ, ராகு புக்தியோ நடப்பவர்களுக்குத்தான் மேற்கண்டே பிரச்சினைகள் இடம்பெறும். அப்படிப்பட்ட வர்கள் வசதியிருந்தால் சூலினிதுர்க்கா ஹோமம்,திருஷ்டிதுர்க்கா ஹோமம் உள்பட 19 வகையான ஹோமங்கள் செய்து, கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். வசதி குறைந்தவர்கள் 18 வெள்ளி அல்லது 18 ஞாயிற அன்று ராகு காலத்தில் வடக்குப் பார்த்த அம்மனுக்கு தொடர்ந்து நெய்விளக்கேற்றி வழிபடவும். 9 அல்லது 18 விளக்கு ஏற்றலாம். திண்டிவனம்- புதுச்சேரி பாதையில், மயிலம் வழி திருவக்கரை சென்று வக்கிர காளியம்மனை வழிபடலாம். அந்த எல்லையில் குண்டலினி முனிவர் ஜீவசமாதியையும், மூலவர் சந்திரமௌலீஸ்வரரையும் வழிபடலாம். 8-ல் குரு மறைந்தாலும், 2-ஆம் இடத்தையும், 4-ல் உள்ள ராகுவையும் பார்ப்பதால், பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலையில் பாதிப்புகளுக்கு இடமில்லை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 2020 வரை அ ட் ட ம ச் ச னி ந ட க் கி ற து . இருந்தாலும், சனி குரு வீட்டி-ருக்க, குரு 7-ல் இருந்து ராசியைப் பார்க் கவும், மேலும் குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை என்பதாலும், அட்டமச்சனி உங்களுக்குப் பொங்கு சனியாக மாறி, தங்கு- தடையில்லாத வெற்றிகளையும், யோகங்களையும் தரும். சனி எப்போதும், எல்லாருக்கும் கெட்டவர் என்று கூறமுடியாது. மங்கு சனி, பொங்கு சனி, மரணச்சனி என்று சனியில் மூன்றுவிதமான பலன்தரும் சனி உண்டு. ரிஷப ராசி- ரிஷப லக்னத்துக்கும், துலா ராசி- துலா லக்னத்துக்கும் சனி பகவான்தான் ராஜயோகாதிபதி! உதாரணமாக கலைஞர் ரிஷப ராசி. அதற்கு எட்டில் ச னி வ ந் த போதுதான்-எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகு இரண்டாண்டு முதல்வராக இருந்தார். அடுத்து, ஜெயலலிதா முதல்வர் ஆனதாக ஒரு நினைவு. இதை ஏன் இங்கு நினைவுபடுத்துகிறேன் என்றால், ரிஷபம்- துலாத்துக்கு சனிபகவான்தான் ராஜயோகாதிபதி! 7-ல் சுக்கிரன் 6-க்குடையவர் என்பதால், மனைவி அல்லது கணவர்வகையில் பிரச்சினை, விவகாரம் அல்லது வைத்தியச்செலவுகள் உருவானாலும், ராசிநாதனும் குருவும் சேர்க்கை என்பதால் பாதிப்புகள் விலகும். 3-ல் உள்ள ராகு- நண்பர்கள் வகையிலும், உடன்பிறந்தவர்கள் வகையிலும் நன்மைகளை எதிர்பார்க்கலாம். தர்மகர்மாதி பதியான சனி (9, 10-க்குடையவர்) 8-ல் இருப்பதாலும், 2-ஆம் இடம், 5-ஆம் இடங்களைப் பார்ப்பதாலும், எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் அடையலாம். அதேபோல் 7-க்கு உடையவரும், 11-க்குடையவரும் பரிவர்த்தனை என்பதால், கணவர் அல்லது மனைவி வகையில் எதிர்பாராத யோகங்கள் உண்டாகும். அல்லது அவர்கள்பேரில் தொழில்செய்து லாபமும் யோகமும் அடையலாம். வேலை பார்க்கும் கணவர் அல்லது மனைவியருக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யோகமும், திறமைக்கேற்ற பெருமையும் உருவாகும். 9-ல் சூரியன்- புதன் சேர்க்கை பலனாக பிதுரார்ஜித சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாகவும்,அனுகூலமாகவும், ஆதாயகரமாகவும் நிறைவேறும். திட்டங்கள் வெற்றிய டையும். எண்ணங்கள் ஈடேறும். அதற்கு நண்பர்களும் அந்நிய இனத்தாரும் குறிப்பாக முஸ்லிம் இனத்தாரால் உதவியும் ஒத்தாசையும் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 8-ல் மறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். எனவே மறைந்த புதன் நிறைந்த தனம் என்ற விதிப்படி. பொருளாதாரத்தில் எந்த பிரச்சினைகளுக்கும் இடமில்லை. 2-ல் ராகு நின்றால
ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் 4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம் - மிதுனம்.
20-1-2019- கடகம்.
22-1-2019- சிம்மம்.
24-1-2019- கன்னி.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திராடம்- 3, 4, திருவோணம்- 1.
செவ்வாய்: ரேவதி- 3, 4.
புதன்: உத்திராடம்- 4, திருவோணம்- 1, 2, 3, 4.
குரு: கேட்டை- 2, 3.
சுக்கிரன்: கேட்டை- 1, 2, 3.
சனி: மூலம்- 4, பூராடம்- 1.
ராகு: புனர்பூசம்- 4. கேது: உத்திராடம்- 2.
கிரக மாற்றம்:
புதன் அஸ்தமனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு என்றாலும், செவ்வாயும் குருவும் பரிவர்த்தனை என்பதால், செவ்வாய் பன்னிரண்டிலும், குரு எட்டிலும் மறைந்த தோஷம் விலகிவிடுகிறது. பரிவர்த்தனை பெறும் கிரகங்கள், அவரவர் இடத்தில் ஆட்சியாக இருப்பதற்குச் சமம் அதுமட்டுமல்ல; 2, 7-க்குடைய சுக்கிரனும் 8-ல் மறைவுபெற்ற தோஷமும் விலகிவிடும். அத்துடன், 10#க்குடைய சனி 9-ல் இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. எனவே நீங்கள் நினைத்த காரியங்களும், திட்டங்களும் நிறைவேறும். வேலையில் இருப்போரின் விருப்பங்கள் பூர்த்தியடையும். சொந்தத் தொழில்துறையில் இருப்போருக்கும் எந்த சங்கடமும் அணுகாமல், முன் னேற்றப் பாதையில் வீரமுழக்கமிட்டுப் பயணிக்கலாம். வேலை பார்க்கும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில், வேண்டாத பிரச்சினைகள் உருவாகி- வேலையைவிட்டு விலகிவிடலாமா என்ற எண்ணம் உண்டாகலாம். இதெல்லாம் 10-ஆம் இடத்தில் உள்ள கேதுவும், 10-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகுவும் செய்யும் திருவிளையாடல். அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டா எந்த முடிவுக்கும் வரவேண்டாம். அடுத்த வாரம்.(ராகு- கேது பெயர்ச்சி மாறியதும்) உங்களுக்கு எதிர்மறையாகத் தெரிந்தவை எல்லாம் உடன்மறை யாகிவிடும். நீங்களும் அவற்றோடு ஒன்றிக் கலந்து உறவாடலாம். நாலில் உள்ள ராகு ஒருசிலருக்கு ஆரோக்கியக்குறைவையும், ஒருசிலருக்கு இடம், வாகனம், தாயார் சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினை களையும் தரலாம். குறிப்பாக- ராகு தசையோ, ராகு புக்தியோ நடப்பவர்களுக்குத்தான் மேற்கண்டே பிரச்சினைகள் இடம்பெறும். அப்படிப்பட்ட வர்கள் வசதியிருந்தால் சூலினிதுர்க்கா ஹோமம்,திருஷ்டிதுர்க்கா ஹோமம் உள்பட 19 வகையான ஹோமங்கள் செய்து, கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். வசதி குறைந்தவர்கள் 18 வெள்ளி அல்லது 18 ஞாயிற அன்று ராகு காலத்தில் வடக்குப் பார்த்த அம்மனுக்கு தொடர்ந்து நெய்விளக்கேற்றி வழிபடவும். 9 அல்லது 18 விளக்கு ஏற்றலாம். திண்டிவனம்- புதுச்சேரி பாதையில், மயிலம் வழி திருவக்கரை சென்று வக்கிர காளியம்மனை வழிபடலாம். அந்த எல்லையில் குண்டலினி முனிவர் ஜீவசமாதியையும், மூலவர் சந்திரமௌலீஸ்வரரையும் வழிபடலாம். 8-ல் குரு மறைந்தாலும், 2-ஆம் இடத்தையும், 4-ல் உள்ள ராகுவையும் பார்ப்பதால், பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலையில் பாதிப்புகளுக்கு இடமில்லை.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 2020 வரை அ ட் ட ம ச் ச னி ந ட க் கி ற து . இருந்தாலும், சனி குரு வீட்டி-ருக்க, குரு 7-ல் இருந்து ராசியைப் பார்க் கவும், மேலும் குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை என்பதாலும், அட்டமச்சனி உங்களுக்குப் பொங்கு சனியாக மாறி, தங்கு- தடையில்லாத வெற்றிகளையும், யோகங்களையும் தரும். சனி எப்போதும், எல்லாருக்கும் கெட்டவர் என்று கூறமுடியாது. மங்கு சனி, பொங்கு சனி, மரணச்சனி என்று சனியில் மூன்றுவிதமான பலன்தரும் சனி உண்டு. ரிஷப ராசி- ரிஷப லக்னத்துக்கும், துலா ராசி- துலா லக்னத்துக்கும் சனி பகவான்தான் ராஜயோகாதிபதி! உதாரணமாக கலைஞர் ரிஷப ராசி. அதற்கு எட்டில் ச னி வ ந் த போதுதான்-எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகு இரண்டாண்டு முதல்வராக இருந்தார். அடுத்து, ஜெயலலிதா முதல்வர் ஆனதாக ஒரு நினைவு. இதை ஏன் இங்கு நினைவுபடுத்துகிறேன் என்றால், ரிஷபம்- துலாத்துக்கு சனிபகவான்தான் ராஜயோகாதிபதி! 7-ல் சுக்கிரன் 6-க்குடையவர் என்பதால், மனைவி அல்லது கணவர்வகையில் பிரச்சினை, விவகாரம் அல்லது வைத்தியச்செலவுகள் உருவானாலும், ராசிநாதனும் குருவும் சேர்க்கை என்பதால் பாதிப்புகள் விலகும். 3-ல் உள்ள ராகு- நண்பர்கள் வகையிலும், உடன்பிறந்தவர்கள் வகையிலும் நன்மைகளை எதிர்பார்க்கலாம். தர்மகர்மாதி பதியான சனி (9, 10-க்குடையவர்) 8-ல் இருப்பதாலும், 2-ஆம் இடம், 5-ஆம் இடங்களைப் பார்ப்பதாலும், எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் அடையலாம். அதேபோல் 7-க்கு உடையவரும், 11-க்குடையவரும் பரிவர்த்தனை என்பதால், கணவர் அல்லது மனைவி வகையில் எதிர்பாராத யோகங்கள் உண்டாகும். அல்லது அவர்கள்பேரில் தொழில்செய்து லாபமும் யோகமும் அடையலாம். வேலை பார்க்கும் கணவர் அல்லது மனைவியருக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யோகமும், திறமைக்கேற்ற பெருமையும் உருவாகும். 9-ல் சூரியன்- புதன் சேர்க்கை பலனாக பிதுரார்ஜித சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாகவும்,அனுகூலமாகவும், ஆதாயகரமாகவும் நிறைவேறும். திட்டங்கள் வெற்றிய டையும். எண்ணங்கள் ஈடேறும். அதற்கு நண்பர்களும் அந்நிய இனத்தாரும் குறிப்பாக முஸ்லிம் இனத்தாரால் உதவியும் ஒத்தாசையும் உண்டாகும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 8-ல் மறைவு என்றாலும், அவருக்கு வீடு கொடுத்த சனி 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். எனவே மறைந்த புதன் நிறைந்த தனம் என்ற விதிப்படி. பொருளாதாரத்தில் எந்த பிரச்சினைகளுக்கும் இடமில்லை. 2-ல் ராகு நின்றாலும், ராசிநாதனும் குருவும் பார்ப்பதால், குடும்பச் சூழ்நிலையிலும் எவ்விதமான சங்கடங்களுக்கும் இடமில்லை. 7, 10-க்குடைய குரு 6-ல் மறைந்து, விரயாதிபதி சுக்கிரனோடு இணைவதால், சிலருக்கு மனைவி அல்லது கணவர்வகையில் எதிர்பாராத செலவுகளும், சுபவிரயங்களும் வரலாம். திருமணப் பருவத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் போன்ற வைபவங்கள் வரலாம். அதற்காகக் கடன் வாங்கும் கட்டாயமும் உண்டாகலாம். சில வாலிப வயதினர் (ஆண் அல்லது பெண்) காதல் அல்லது கலப்புத் திருமண முயற்சிகளில் ஈடுபடலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால், சமரசமாக இருவீட்டாரும் அதை ஏற்றுக்கொள்ளலாம். தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கலாட்டா கல்யாணமாக முடியும். சில திருமணங்கள் காவல் நிலையங்களில் நடைபெறலாம். 10-க்குடைய குருவும், 6-க்குடைய செவ்வாயும் பரிவர்த்தனையாகி, 10-க்குடைய குரு 10-ஆம் இடத்தையே பார்ப்பதால், திருமணத்துக்குப் பிறகு சர்ச்சைகள் நீங்கி, இருவீட்டாரும் சமரசமாகி விருந்து, வரவேற்பு என்று விழா கொண்டாடலாம். ஒருசிலரின் அனுபவத்தில் திருமணத்துக்கு முன்பே கருத்தரித்து, பெண்- பெற்றவர்களிடம் ஆசிபெறும் சூழ்நிலையும் அமையலாம். இதுதான் 7-ல் உள்ள சனியின் பலன். ஒருசிலரின் அனுபவத்தில் மறுமணம் செயல்பட வாய்ப்புண்டு. இப்படி காதல் திருமணமுயற்சி, கலப்புத் திருமண முயற்சி, மறுமண முயற்சிகளில் ஈடுபாடு உடையவர்கள் காமோகர்ஷண யோகமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும் செய்துகொள்ள வேண்டும். எந்த ஒரு சிக்கலுக்கும், பிரச்சினைக்கும் அக்னி காரியம்தான் (ஹோமம் செய்வது) சிறந்த தீர்வு. 7-க்குடைய குருவும், 12-க்குடைய சுக்கிரனும் ராசிக்கு 6-ல் மறைய, 7-ல் 8-க்குடைய சனி இருப்பதன் பலன்தான் மேற்கண்ட சிக்கலுக்கு காரணம்! குரு மாங்கல்ய காரகன். (கணவன் காரகன்). சுக்கிரன் களஸ்திர காரகன் (மனைவி காரகன்). 6-ஆம் இடம் என்பது வாழ்க்கை, தொழில், பதவி போன்ற 10-ஆம் இடத்துக்கு பாக்கிய ஸ்தானம் (9-ஆம் இடம்) என்பதால் நல்லதே நடக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசியில் ராகு நிற்பது ஒருவகையில் மைனஸ் பாயின்டுதான் என்றாலும், கடக ராசிக்கு 9-க்குடைய குரு, அதற்கு 5-ல் திரிகோணம் பெற்று ராசியையும் பார்க்கிறார்; ராகுவையும் பார்க்கிறார். அதனால் பிளஸ் பாயின்டாகிவிடும். குரு 6-க்குடையவர் என்றாலும், 6-க்கு 12-ல் மறைவதால், 6-ஆம் இடத்துக் கெடுதல்கள் வேறாகிவிடும். மேலும், 5-க்குடையவரும் (செவ்வாயும்), 9-க்குடையவரும் (குருவும்) பரிவர்த்தனை என்பதால், திரிகோணாதிபதிகளின் பரிவர்த்தனை உங்களுக்கு குருவருளையும், திருவருளையும் தரக்கூடும். இதே செவ்வாய் தனுசுவில் இருந்தால், 6, 5-க்குடையவர் பரிவர்த்தனை என்பது சிறப்பல்ல. எனவே ஜென்ம ராகு, சப்தம கேதுவால் எந்த பாதிப்பும் வராது; பங்கமும் ஏற்படாது. ராகுவும் கேதுவும் சிலசமயம் உங்களுக்கு "ஈகோ' உணர்வையும், டென்ஷனையும் ஏற்படுத்தலாம். அதற்கு இடம்கொடுக்காமல், அதை வழியனுப்பி விட்டால் அல்லது விரட்டியடித்தால் உங்கள் வாழ்க்கையில் "எல்லாம் இன்பமயம்' என்று பாடலாம், ஆடலாம். அதிர்ஷ்டத்தைத் தேடலாம். செவ்வாய் சகோதரகாரகன் என்பதால், சகோதர வகையில் ஒற்றுமைக்கும், நல்லுறவுக்கும் வழிவகை உண்டாகும். ஏற்கெனவே நிலவிய கருத்து வேறுபாடுகளும், பனிப்போரும் அமைதியடையும்- அதாவது "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை'. அண்ணன் வழிகாட்டி- தம்பி பலசாலி. அதனால்தான் "தம்பியுடையான் படைக்கஞ்சான்' என்றார்கள். "கஞ்சி ஊற்ற ஆளில்லை என்றாலும், கச்சைகட்ட ஆள் உண்டு' என்று கிராமத்தில் கூறுவார்கள்.அதை வைத்துத்தான் அரசியல்வாதிகளும், கட்சித் தொண்டர்களும் "இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?' என்று கோஷம் எழுப்புவார்கள். ஒன்று படைபலம் வேண்டும் அல்லது பணபலம் வேண்டும். பணபலம் இருந்ததால்தான் உபதேர்தல் சுயேச்சையாக நின்று மன்னார்குடிக்காரர் எம்.எம்.ஏவானார். ஒரு மலையை அண்டி வாழவேண்டும் அல்லது ஒரு மனுஷனை அண்டி வாழவேண்டும் என்பது இதன் தத்துவம்தான். உங்களுக்கு அந்த வாய்ப்பும், யோகமும் இருப்பதற்குக் காரணம்# 5-ல் உள்ள குரு 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார்; உங்கள் ராசியையும் பார்க்கிறார். ஆகவே உங்களுக்கு படைபலம் இருக்கிறதோ இல்லையோ- பணபலம் இருக்கிறதோ இல்லையோ தெய்வபலம் முழுமையாக இருக்கிறது. அதனால் குருவருளும் திருவருளும் பெருகும். வெற்றிமேல் வெற்றி பெறலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 6-ல் மறைவு. அவருடன் 2, 11-க்குடைய புதனும் மறைவு. அவர்களுடன் கேதுவும் மறைவு. கேது ஆறிலும், ராகு பன்னிரண்டிலும் மறைவதால் கெடுதல் இல்லை. கெட்ட கிரகங்கள் கெட்ட இடங்களில் இருப்பது (மறைவது) டபுள் மைனஸ்= பிளஸ் என்றாகி விடும். ஆனால் 2, 11-க்குடையவரும், ராசிநாதனும் மறைவது நல்லதல்ல. எனவே உங்கள் முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகும். அல்லது பள்ளத்தில் நின்று மேட்டுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போலாகும். 5-க்குடைய குரு தன் ஸ்தானத்துக்கு 12-ல் மறைவதும், 5-ல் 6-க்குடைய சனி இருப்பதும், உங்களுக்கு கௌரவப் பிரச்சினையை உருவாக்கும். உங்களைச் சுற்றியுள்ளோர் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்று எடைபோடமுடியாது. ஒருசிலர் பசுத்தோல் போர்த்திய புலியாக, கூடவே இருந்து குழிபறிக்கலாம் அவர்களை அடையாளம்கண்டு விலக்க வேண்டும். அல்லது அவர்களிடமிருந்து நீங்கள் விலக வேண்டும். "துஷ்டரைக் கண்டால் தூர விலகு' என்பது பழமொழி. 9-க்குடைய செவ்வாய் 8-ல் மறைந்து, 8-க்குடைய குரு 4-ல் பரிவர்த்தனை என்பதால், வேலியே பயிரை மேய்வதுபோல, யாரை நம்புகிறீர்களோ அவர்களே உங்களுடைய தோல்விக்கும், நஷ்டத்துக்கும், ஏமாற்றத்துக்கும், இழப்புக்கும் காரணமாவார்கள். கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்ப நாயக் கரைப்போல, உங்களைச் சுற்றியிருக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். என்றாலும், குருவும் சுக்கிரனும் 4-ல் அமர்ந்து 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வாழ்க்கை, தொழில், பதவி, உத்தியோகம் இவற்றில் பாதிப்பும், வீழ்ச்சியும் வராமல் பாதுகாக்க- பிரச்சினைகள் ஏற்படுத்துகிறவர்களைக் கூட்டு சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். முதல்வர்- துணை முதல்வர் என்று ஒரு பதவியை உருவாக்கி இணைத்துக்கொண்டதுபோல! மைனாரிட்டி அரசு- குதிரை பேரம் நடத்தி, எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி கவிழாமல் காப்பாற்றிக் கொள்வதுபோல்! இவை எல்லாவற்றுக்கும் காரணம், ராசிநாதன் சூரியன் பலம் குறைந்ததுதான்! சத்ரு ஹோமம் செய்வதுதான் பரிகாரம்!
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம்! அவருடன் 12-க்குடைய சூரியன் சம்பந்தம்! பத்து ரூபாயில் சாதிக்கவேண்டிய காரியத்தை நூறு ரூபாய் செலவழித்து சாதிக்கும் காலம். (அதாவது ஒன்றுக்கு பத்து). செலவானாலும், நினைத்ததை நிறைவேற்றிவிட்டோம் என்ற திருப்தி உண்டாகும். 4, 7-க்குடைய குரு 9-க்குடைய சுக்கிரனோடு சேர்ந்து, 9-ஆம் இடத்தைப் பார்ப்பதன் பலன் அதுதான். கேந்திராதிபதி திரிகோணத்தைப் பார்க்கும் பலமும் அதுதான். திரிகோணாதிபதியுடன் சேர்ந்த பலமும் அதுதான்! அதேபோல 10-க்குடைய கேந்திராதிபதியான புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். கேந்திரம்- திரிகோணம் இணைவது ராஜயோகம்! கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம். முயற்சியைக் குறிக்கும். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம். தெய்வானுகூலத்தைக் குறிக்கும். எந்த ஒரு காரியத்துக்கும், முயற்சிக்கும் தெய்வானுகூலம் தேவை! அதாவது குருவருளும் திருவருளும் நிறை வாக இருந்தால், எல்லாம் குறைவற நிறை வேறும்! உங்களுக்கு கோட்சாரரீதியாக அந்த பாக்கியம் கிடைப்பதால் "குறை யொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியபடி யோகம்தான்! 9-க்குடைய சுக்கிரன் 9-ஆம் இடத்தைப் பார்க்க, 7-க்குடைய குரு 7-ஆம் இடத்தைப் பார்க்க, 6-க்குடைய சனி 6-ஆம் இடத்தைப் பார்ப்பதும், 11-ஆம் இடத்தை 10-க்குடையவரும், ராசிக்குடையவருமான புதன் பார்ப்பதும் யோகம். சனி பார்ப்பது சில தடைகள், குறுக்கீடுகளை உருவாக் கினாலும், 4, 7-க்குடைய குரு 9-ஆம் இடத்தைப் பார்ப்பதும் யோகம் தான்! மனதில் உறுதி, செயலில் வேகம், நெஞ்சில் துணிவு, காரியத்தில் வைராக்கியம் இவையெல்லாம் உங்களை வெற்றிக் கோட்டையை எட்டிப்பிடிக்க அழைத்துச்செல்லும்! கருதியது கைகூடும், நினைத்தவை நிறைவேறும், எண்ணியவை ஈடேறும். அதுமட்டுமல்ல; "வாழு- வாழவிடு' என்பதற்கு அடையாளமாகத் திகழ்ந்து, மற்ற வரை வாழவைத்து, நீங்களும் வாழ்வாங்கு வாழலாம்!
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ஸ்தானத் துக்கு 2-ல், 3, 6-க்குடைய குருவோடு சேர்க்கை. குருவுக்கும் சுக்கிரனுக்கும் வீடு கொடுத்த செவ்வாய் 6-ல் குருவின் வீட்டில் பரிவர்த்தனை. செவ்வாய், குரு, சுக்கிரன் மூவரும் புதன் சாரம். 9, 12-க்குடைய புதன் 4-ல்! எனவே தெய்வீகக் காரியங்களில் உங்களுக்கு ஈடுபாடும், சுபச்செலவும் உண்டாகும். சிலர் கோவில் குளம் என்று ஆன்மிகச் சுற்றுலா போகலாம். சிலர் குலதெய்வம், இஷ்ட தெய்வக் கோவில் சென்று வழிபடலாம். சிலர் குடும்ப தெய்வம், குலதெய்வக் கோவில் திருப்பணிகளில் ஈடுபட்டு சுபச்செலவு செய்யலாம். சிலர் அவரவர் மத கலாச்சாரப்படி "டிரஸ்டி' யாகலாம். இந்துக்கள் இந்து அறநிலை யத்துறையிலும், இஸ்லாமியர்கள் வக்ஃப் போர்டிலும், கிறிஸ்துவர்கள் சர்ச்மிஷன் களிலும் பொறுப்புகள் வகிக்கலாம். கேதார்நாத், பத்ரிநாத், காசி, ராமேஸ்வரம், ரிஷிகேஷ் போன்ற புண்ணிய தலங் களுக்கும், மக்கா- மதீனா, ஜெருசலம், ரோம் (போப்பாண்டவர்) போன்ற புண்ணிய தலங்களுக்கும் போய்வரலாம். தெய்வ நம்பிக்கை குறைந்தவர்கள் அறக்கட்டளை நிறுவனங்களுக்கு பதிலாக முதியோர் இல்லம், ஊனமுற்றோர் மறுவாழ்வுநல மையம், அனாதைச் சிறுவர் காப்பகம் போன்ற பொதுநல, பொது வாழ்வு மையங்களில் ஈடுபடலாம். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்' என்று அனாதை இல்லம் நிறுவி பராமரிக்கலாம். அதற்கான வசதி வாய்ப்பு, பொருளாதார சௌகர்ய வழிவகைகளைத் திட்டமிட்டு செயலாற்றலாம். டிரஸ்ட் அமைத்து அரசு மானியம் பெறலாம். சிலர் "அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி' என்று வடலூர் சத்தியஞான சபைபோல, வள்ளலார் பேரில் அன்னதான மையங்கள், வழிபாட்டுத் தலங்களும் நிறுவலாம். வடலூர்போல பாளையங்கோட்டை அருகில் வல்லநாடு என்ற ஊரில், சாது சிதம்பர சுவாமிகள் பேரில் அன்னதானக் கூடம் உண்டு. எப்போதும், அங்கு எல்லாருக்கும் அன்னம் பரிபாலிப்பு விருந்து நடந்துகொண்டே இருக்கும். 10-ல் உள்ள ராகு- தொழிலதிபர்களும், தனவந்தர்களும், லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் மேற்கண்ட திருப்பணிகளில் பங்கேற்று புண்ணியம் தேடுவார்கள். அதேபோல சுயதொழில் புரிபவர்களும், நல்ல வேலையில் சம்பாதிப்பவர்களும் மேற்கண்ட புண்ணிய காரியங்களுக்காக ஒரு பங்கு எடுத்துவைத்து சேமிப்பார்கள்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 5-ல் குரு வீட்டிலும், குரு ஜென்ம ராசியில் செவ்வாயின் வீட்டிலும் பரிவர்த்தனையாக இருக் கிறார்கள். பரிவர்த்தனை யோகம் அவரவர் சொந்த வீட்டில் ஆட்சியாக இருப்பதற்குச் சமம்! எனவே செவ்வாய் விருச்சிகத்திலும், குருமீனத்திலும் ஆட்சியாக இருப்பதற்குச் சமம். ஆகவே உங்களுடைய செல்வாக்கும், செயல் பாடுகளும் சிறப்பாக விளங்கும். திறமைக் கேற்ற பெருமை சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும் உண்டாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். "தொன்னைக்கு நெய் ஆதாரமா- நெய்க்கு தொன்னை ஆதாரமா' என்று முடிவெடுக்க முடியாதபடி, வாழ்க்கை எனும் வண்டி ஓட இரண்டு சக்கரம் அவசியம் என்பதுபோல, கணவரும் மனைவியும் இணைவாக செயல்படலாம். கணவர்வழி அல்லது மனைவிவழி உறவினர்கள் வகையில், பழைய பிரச்சினைகளை விலக்கிவிட்டு புதிய அணுகுமுறையால் தீர்வு உண்டாகும். அனுசரித்துப்போகும் நிலையும் உண்டாகும். அதேபோல விட்டுக்கொடுத்துப்போகும் நிலையும் உருவாகும். விட்டுக்கொடுப்பவர் எப்போதும் கெட்டுப் போவதில்லை. பழகியவர்கள், உறவினர்கள், ரத்தபந்த சொந்தங்கள், நண்பர்கள் வகையில் உதவிகள் கேட்டு வரலாம். அல்லது அன்புத் தொல்லை கொடுக்கலாம். உங்களால் முடிந்தால் முடிந்தவரை செய்யுங்கள். முடியாவிட்டால் பாலிஸக, இதமாக, பதமாக, அன்பாகச் சொல்லிக் கடத்திவிடுங்கள். ஆத்திரமும் வேண்டாம், கோபமும் வேண்டாம், ஆவேசமும் வேண்டாம். எனக்குத் தெரிந்த ஒருவர்- எப்போதும், யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவர். அவரிடம் முக்கியமான ஒருவர் அவசரத் தேவையாகக் கொஞ்சம் பணம் கேட்டு வந்தார். பிரச்சினைகளையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, "அடடா நேற்று வந்திருந்தால் கையில் வைத்திருந்தேன். கொடுத்திருப்பேனே... அதை இன்னொரு வருக்குக் கொடுத்துவிட்டேனே. அடுத்தமுறை முன்கூட்டியே தகவல் சொல்லுங்கள். கட்டாயம் உதவுகிறேன்' என்று "கூலாக'க்கூறி அனுப்பிவிட்டார். உதவி கேட்டு வந்தவருக்கும் இது தெரியும். கிடைக்காது- தரமாட்டார் என்பது தெரியும். இருந்தாலும் "கல்லை விட்டெறிவோம். விழுந்தால் காய் அல்லது கல்' என்று நினைத்துக் கேட்டாராம். நாட்டில்இப்படி சில விடாக்கண்டனும் உண்டு, கொடாக்கண்டனும் உண்டு. இவர்களைப் பார்த்து நாமும் பழகிக்கொள்ள வேண்டும் - பாடம் படித்துக்கொள்ள வேண்டும்.ஏழரைச்சனியின் கடைசிக்கட்டம். பொருளா தாரத்திலும், குடும்பச்சூழ்நிலையிலும் பாதிப்புகள் வராமல் தடுக்க, அவரவர் வயதுடன் ஒன்றுசேர்த்து அத்தனை மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி நெய்யில் நனைத்து சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் தீபமேற்றவும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு 12-ல் 6, 11-க்குடைய சுக்கிரனோடு சேர்க்கை. அவர்களுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 4-ல், குரு வீட்டில் பரிவர்த்தனை. ஜென்மச்சனி 3-ஆம் இடம், 7-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். சகோதர சகாயம், நண்பர்கள் உதவி, கணவர் அல்லது மனைவி வகை ஒற்றுமை, மகிழ்ச்சி, தவிர்க்க முடியாத பயணங்கள், தொழில் மேன்மை, பதவியில் திருப்தி, வேலை செய்யும் இடத்தில் பாராட்டு போன்ற நற்பலன்களை அனுபவிக்கலாம். சிலசமயம் ஓய்வில்லாத உழைப்பு அல்லது ரெஸ்ட் எடுக்க முடியாத பயணம்- சஞ்சாரம் உண்டாகும். சிலருக்கு தொழில்துறையில் அல்லது உத்தியோகத்தில் "டென்ஷன்'. வீட்டில் இருப்போருக்கு (ஹவுஸ் வைப் அல்லது ரிட்டையர்டு பென்ஷன்) கற்பனைக்கவலை அல்லது ஆரோக்கியத்தில் பிரச்சினைகளை சந்திக்கும் நிலை! வீட்டில் சும்மா இருக்க விருப்பமில்லாமல், எதையாவது தோண்டித் துருவி வேலை செய்துகொண்டே இருக்கும் மனப்போக்கு காணப்படும். விருந்தினராக வந்தவர்கள்கூட, உரிமையோடு தங்கியிருக்கும் வீட்டில் அங்குள்ள பொருட்களை ஒழுங்கு படுத்தி வைப்பது, சுத்தம் செய்வது போன்று ஏதாவது சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருப்பார்கள். தான் சாப்பிட்ட தட்டைக்கூட வீட்டு சொந்தக்காரர்களை எடுக்கவிடாமல், தானே எடுத்துப்போய் விலக்கி துலக்கி அடுக்கிவைப்பார்கள். இது பெருந் தன்மை மட்டுமல்ல! ஜென்மச்சனி செய்யும் திருவிளையாடலாகும். 2-ல் கேது, 8-ல் ராகு. கூடியவரை சொந்தம், சுற்றம் வகையில் நிலவும் குற்றம், குறைகளை வந்த இடத்திலும், போன இடத்திலும், மற்வர்களிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்து, ஆறதல் அடையச் செய்யும்! அது சரியா, தப்பா என்ற ஆராய்ச்சிக்குப் போக வேண்டாம். மனச்சுமையை- பாரத்தை இறக்கிவைப்பதுபோல! அதேசமயம் "தோழ ரோடும் ஏழமை பேச வேண்டாம்' என்று ஒரு பழமொழி உண்டு. சொக்கநாத வெண்பா என்னும் நூலில் ஒரு பாடல்- "அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்; அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்; எவரெவர்க்குதவினர் எவரெவர்க்குதவிலர் தவரெவர் நினைவது தம்மை உணர்வதுவே! இதன் அர்த்தம் மிகப்பெரிய தத்துவமாகும். ஜென்மச்சனி, இரண்டாமிடத்துக் கேது, எட்டாமிடத்து ராகு- இவர்களின் பாதிப்புகளில் சிக்காமல் தப்பிக்க இதே தத்துவம் உங்களைப் பாதுகாக்கும், பயன்படும்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி 12-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த குரு அதற்கு 12-ல் மறைகிறார். வெய்யிலுக்கும், மழைக்கும் அஞ்சியவன் மரத்தின் நிழலில் ஒதுங்கினால், கொப்பு ஒடிந்து கீழே விழ வெய்யிலிலும் மழையிலும் நனைவதற்குச் சமம்! இதை ஒரு பாடல் விளக்கும்! "ஒன்று நினைக்கில் அது ஒழிந்து மற்றொன்றாகும். அன்றி அதுவரினும் வந்தெய்தும்- ஒன்று நினையாமல் முன்வந்து நிற்கும் எனையாளும் ஈசன் செயல்' என்பது பாடல்! அதுதான் இறைவன் வகுத்த விதி! கவியரசர், "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை- நடப்பதையே நினைத்துவிட்டால் மனிதன் தெய்வமாகலாம்' என்று எழுதினார். நடப்பதை நினைக்கும்ஆற்றல் சித்தர்களுக்கே உண்டாகும். கோழி, மீன், ஆமை என்று மூன்றிலும் ஒரு தத்துவம் உண்டு. கோழி முட்டையிட்டு, அதன்மேல் அமர்ந்து அடைகாத்து குஞ்சு பொரிக்கும்! இது நம் போன்ற சாதாரண மனித நிலை- அதாவது கடமையைத் தவறாது செய்ய வேண்டும். அடுத்து மீன், குளத்தில் முட்டை களைவிட்டு திரும்பிப் பார்க்குமாம். அதன் பார்வையில்பட்ட முட்டைகள் மட்டும் குஞ்சுகளாகப் பொரிக்குமாம். மற்றவை "கூ'முட்டையாகிவிடுமாம். இது சாது சந்நியாசிகளின் நிலை. சாது தரிசனம் பாவவிமோசனம். சாதுக்களின் பார்வை நமது பாவங்களைப் போக்கி வாழவைக்கும். மூன்றாவது ஆமை! ஆமை ஒரு பருவகாலம் வரும்போது முட்டையிட்டுப் போய்விடும். வேறொரு பருவகாலம் வரும்போது இந்த இடத்தில், இன்ன காலத்தில் முட்டையிட்டோம் என்று நினைத்த மாத்திரத்தில், அந்த முட்டை குஞ்சாகப் பொரித்து வெளிவருமாம். இது ஞானிகள், சித்தர்கள் நிலை. அவர்கள் தவத்திலேயே இருப்பார்கள். தெய்வ சிந்தனை யைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்காது. எப்போதாவது இந்த உலகத்தையும், மாந்தர்களையும் நினைத்தால் விமோசனம் பிறக்கும். ஆக, ஜென்ம ராசியில் இருக்கும் கேதுவும், அவரைப் பார்க்கும் ராகுவும் உங்களில் ஆமை போலவும், ஜென்ம ராசியில் நிற்கும் அட்டமாதிபதி சூரியன் உங்களில் மீன் போலவும், ராசியில் நிற்கும் புதன் உங்களில் கோழியாகவும் செயல்பட்டு, கடமைகளைச் செய்யும் நிலை உருவாகிறது. ஏழரைச்சனியில் விரயச்சனியும், உங்களுக்கு தவிர்க்கமுடியாத செலவுகளை ஏற்படுத்தினாலும், அவை பயனுள்ள செலவாக அமையும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 11-ல் குரு வீட்டிலிருந்து, உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராசிநாதன் சனிக்கு வீடு கொடுத்த குரு அவருக்கு 12-ல், ராசிக்கு 11-ல் சுக்கிரனுடன் சேர்க்கை. பொதுவாக, கும்ப ராசிக்காரர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் என்பது என் கணக்கு. அதற்குக் காரணம் ராசிநாதன் சனியே விரயாதிபதியாகவும் வருவதுதான்- அதாவது எழுதியெழுதி அழிப்பதுபோல. பஸ்மாசுரன் என்று ஒருவன் தவம்செய்து, தான் யார் தலையில் கை வைத்தாலும், அவர்கள் எரிந்து பஸ்பமாகிவிட வேண்டும் என்று வரம் கேட்டான். ஈஸ்வரனும் அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து விட்டார். உடனே அவன், இது பலிதமாகுமா என்பதை சோதனை செய்யவேண்டும் என்று ஈசுவரன் தலையில் கை வைக்கப்போனான். அவர் பயந்துஓட, விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்துவந்து அசுரன் முன்னால் ஆடிப்பாட, அவர் செய்ததுபோலவே அசுரனும் சைகை காட்ட, மோகினி தன் தலையில் கைவைத்ததுபோல, அசுரனும் தன் தலையில் கைவைத்ததும், அப்போதே அவன் எரிந்து பஸ்மம் (சாம்பல்) ஆகிவிட்டான். இதுதான் கும்ப ராசிநாதனே, விரயாதிபதியம் பெறும் உதாரணம்! அதையே கிராமத்தில் "தவளை தன் வாயால் கெட்டதுபோல' என்பார்கள். இதனல்தான் கும்ப ராசிக் காரர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் என்று குறிப்பிடுகிறேன். என்றாலும், சிலசமயம் கோட்சார நிலை கும்ப ராசிக்கு அனுகூல மாகவும், ஆதரவாகவும் மாறி யோகத்தையும் செய்யும். இப்போது உங்களுக்கு கோட்சார கிரகம் அனுகூலமாக இருப்பதால், இந்திராகாந்தி இறந்த சமயம் அனுதாப அலை காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியைத் தேடித்தந்ததுபோலவும், எம்ஜிஆர் இறந்த சமயம், அந்த அனுதாப அலை அதிமுகவுக்கு ஆட்சி அமைக்க உதவியதுபோலவும், உங்களுக்கு அனுதாப அலை வெற்றி அலையாகவும், யோக அலையாகவும் மாறும். 6-ல் உள்ள ராகு சத்ருஜெயம், கடன்நிவர்த்தி, நோய் நிவாரணம். 9-க்குடைய சுக்கிரன் 10-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம். 2, 11-க்குடைய குருவின் சேர்க்கை வெற்றி, தனலாபம், வரவேண்டிய பணம் வசூல், வாக்கு நாணயம் காப்பாற்றப்படுதல். 11-ல் உள்ள சனி முயற்சிகளில் வெற்றி, வழக்குகளில் ஜெயம், வாக்குவாதங்களில் சாதகநிலை ஆகிய பலனைத்தரும். சிலருக்கு ஜாதகப் பலன் சாதகமாக அமைந்தால், புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும், புதிய வேலைவாய்ப்பு யோகம் தேடிவரும். சிலர் வாகன மாற்றம் செய்வார்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். ஆரோக்கியத்தில் பாதிப்பு இல்லை. தெளிவான முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். குரு 10-க்குடையவர். அவர் 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம்! எனவே குருவருளும் திருவருளும் பரிபூரணமாக விளங்கும். ஒன்று படைபலம் வேண்டும் அல்லது பணபலம் வேண்டும். இரண்டும் இல்லாதவர்களுக்கு தெய்வபலம் இருந்தால் போதும். தெய்வபலம் பெற குருபலம் வேண்டும். அதைத்தான் குருவருள் என்பது! குருவருள் இருந்தால் திருவருள் பெறலாம்! தாய், தந்தையைக் காட்டுகிறாள். தந்தை, குருவைக் காட்டுகிறார். குரு, தெய்வத்தைக் காட்டுகிறார். தெய்வ அனுக்கிரகம் இருந்தால் எல்லாம் பெறலாம், எதையும் அடையலாம். அதிலும் 9-க்குடையவரும், ராசிநாதனும் பரிவர்த்தனை யோகம் என்பது, 12 ராசிக்காரர்களில் உங்களுக்கே பரிபூரண அதிர்ஷ்ட யோகம் என்பதை அடையாளம் காட்டும். அதேசமயம், 3-க்குடைய சுக்கிரன் 8-க்குடையவராகி குருவோடு சேர்வதால், நண்பர்களின் உதவி உங்களுக்கு சிறப்பாக அமையும். அதுவே சகோதர ஸ்தானம் என்பதால், சகோதர வகையில் அல்லது உடன்பிறந்தவர்கள் வகையில் சிலருக்கு பிரச்சினைகளும், கவலைகளும் ஏற்படலாம். உடன்பிறந்தவர் வகையில் பிரச்சினை இல்லாமல் அனுகூலப் பலன் என்றால், நண்பர்கள் வகையில் பிரச்சினைகள் உருவாகலாம். அதாவது நெருங்கிப் பழகியவர் களே வேலியே பயிரை மேய்வதுபோல, கூட இருந்தே குழிபறிக்கலாம். இந்த நிலைஅரசியல்வாதிகளுக்குத்தான் சர்வசா தாரணமாக இருக்கும். குறிப்பாக குதிரை பேரம் நடத்தும் அரசியல்வாதிகளுக்கு சகஜம். ஒரு அனுபவம்- நீண்டகாலமாகக் கூட்டுத்தொழில் செய்த நண்பர்கள். ஒருவர் வீட்டுப் பெண்ணைப் பார்க்க, மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். பெண் பிடிக்கவில்லை. தண்ணீர்கூட குடிக்காமல், கை நனைக்காமல் கிளம்ப, கூட்டாளி தன்வீட்டில் வந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டுப் போகும்படி சொல்ல- வந்தவர்கள் கூட்டாளி வீடு போக- அவர் பெண் அவர்களுக்குப் பிடித்துப்போக அதற்கே பூ வைத்து விட்டார்கள். இது இன்னொரு கூட்டாளிக்குப் பிடிக்கவில்லை. உடனே கூட்டைப் பிரித்துவிட்டார். இது பெருந்தன்மையற்ற செயலா? அல்லது விதியின் விளையாட்டா? ●