புதன் தரும் யோகம்! -மகேஷ் வர்மா

/idhalgal/balajothidam/wednesday-yoga-mahesh-verma

ரு ஜாதகத்தில் புதன் பலமாக இருந்தால் அவருக்கு பேச்சுத்திறமை, கலைத்திறமை, சிந்தனைத் திறன் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும்.

புதனின் நிலையை வைத்து சகோதரி கள், தாய்மாமன் ஆகியோருடனான உறவைப் பற்றிக் கூறிவிடலாம்.

pu

ஜாதகரின் நிறத்தையும் கூறலாம்.

ஒரு ஜாதகத்தில் புதன் சுய வீட்டிலோ, உச்சமாகவோ இருந்தால் அவர் நன்கு படித்தவராக இருப்பார். நிறைய சிந்திக்கக்கூடியவர். வேகமாக செயல்படுவார். கலைத்துறையில் புகழுடன் விளங்குவார். சிலர் புகழ் பெற்ற எழுத்தாளராகத் திகழ்வார்கள்.

ஒரு ஜாதகத்தில் புதன் லக்னத் தில் இருந்தால் அந்த ஜாதகர் சுறுசுறுப்பாக செயல்படுவார். நல்ல நினைவாற்றல் இருக்கும்.

அந்த புதனை குரு பார்த்தால் நல்ல படைப்பாளியாகத் திகழ்வார்.

ஆனால் புதன் பலவீனமாக இருந்தால் அவருக்கு வயிறு சார்ந்த நோய் இருக்கும். புதன் சூரியனுடன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால், புதாத்திய யோகம் காரணமாக ஜாதகர் ஆழ

ரு ஜாதகத்தில் புதன் பலமாக இருந்தால் அவருக்கு பேச்சுத்திறமை, கலைத்திறமை, சிந்தனைத் திறன் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும்.

புதனின் நிலையை வைத்து சகோதரி கள், தாய்மாமன் ஆகியோருடனான உறவைப் பற்றிக் கூறிவிடலாம்.

pu

ஜாதகரின் நிறத்தையும் கூறலாம்.

ஒரு ஜாதகத்தில் புதன் சுய வீட்டிலோ, உச்சமாகவோ இருந்தால் அவர் நன்கு படித்தவராக இருப்பார். நிறைய சிந்திக்கக்கூடியவர். வேகமாக செயல்படுவார். கலைத்துறையில் புகழுடன் விளங்குவார். சிலர் புகழ் பெற்ற எழுத்தாளராகத் திகழ்வார்கள்.

ஒரு ஜாதகத்தில் புதன் லக்னத் தில் இருந்தால் அந்த ஜாதகர் சுறுசுறுப்பாக செயல்படுவார். நல்ல நினைவாற்றல் இருக்கும்.

அந்த புதனை குரு பார்த்தால் நல்ல படைப்பாளியாகத் திகழ்வார்.

ஆனால் புதன் பலவீனமாக இருந்தால் அவருக்கு வயிறு சார்ந்த நோய் இருக்கும். புதன் சூரியனுடன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால், புதாத்திய யோகம் காரணமாக ஜாதகர் ஆழ்ந்து சிந்திப்பார். புகழுடன் விளங்குவார்.

ஒரு ஜாதகத்தில் புதன் சூரியனுடன் உச்சமாக இருந்தால், பத்ர யோகம் காரணமாக அவர் அரசரைப்போல வாழ்வார். முன்கூட்டியே பலவற்றையும் கணிக்கும் ஆற்றல் இருக்கும்.

புதன் 2-ஆம் பாவத்தில் இருந்தால் ஜாதகருக்கு நல்ல பேச்சுத்திறமை இருக்கும். சூழலுக்குத் தகுந்தபடி பேசுவார். அந்த புதன் சூரியனுடன் இருந்தால் ஜாதகர் 23 வயதிற்குப்பிறகு நிறைய பணம் சம்பாதிப்பார்.

3-ல் புதன் இருந்தால் ஜாதகர் நல்ல பேச்சாளராகத் திகழ்வார். புதன் சூரியனுடன் இருந்தால் மிகுந்த தைரியசாலி; தன் செயல்களில் வெற்றி பெறுவார். புதனை குரு பார்த்தால் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து புகழுடன் விளங்குவார்.

4-ல் புதன் இருந்தால் அந்த ஜாதகர் ராஜயோகத்தை சந்திப்பார். புதன் சூரியனுடன் 4-ல் இருந்தால் ஜாதகர் எதையும் தைரியமாகச் செய்வார். ஆனால் செவ்வாயுடன் புதன் இருந்தால் திருமண விஷயத்தில் பிரச்சினை உண்டாகும். அதே புதன் சனியுடன் இருந்தால் அந்த ஜாதகரின் தாயின் உடல்நலத்தில் தொல்லை கள் உண்டாகும். இல்வாழ்க்கையிலும் சிக்கல்கள் ஏற்படும். சிலருக்குப் பேச்சு திக்கும். அந்த புதன் ராகுவுடன் இருந்தால் பெரிய வெற்றி கிட்டும் நேரத்தில் வீட்டில் பிரச்சினைகள் தோன்றும்.

5-ல் புதன் இருந்தால் ஜாதகர் பல கலைகளை அறிந்தவராக இருப்பார். புதன் சூரியனுடன் இருந்தால் ஜாதகர் நிறைய படித்தவர். புகழுடன் விளங்குவார். புதன், சூரியன், குரு, செவ்வாய் 5-ல் இருந்தால் அந்த ஜாதகர் அரசுப் பதவியில் இருப்பார். காவல்துறை உயரதிகாரியாகவோ, ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவோ இருப்பார். புதன், சனி, செவ்வாயுடன் இருந்தால் அவருக்கு குழந்தைப் பிறப்பதில் சிக்கல் இருக்கும். பெண்களுக்கு வயிற்றில் பிரச்சினை ஏற்படலாம்.

6-ல் புதன் இருந்தால் ஜாதகருக்கு தைரியம் குறைவாக இருக்கும். புதன், சூரியன், செவ்வாயுடன் இருந்தால் தைரியசாலியாக விளங்குவார். சிலருக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய் வரும்.

7-ல் புதன் தனித்திருந்தால் வாழ்க்கைத் துணை சரியாக அமையாது. புதன் சனியுடன் இருந்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும். சிலர் பெண்தன்மையுடன் இருப்பார்கள். புதன், சனி, செவ்வாயுடன் இருந்தால் இல்வாழ்க்கையில் பல சிக்கல்கள் தோன்றும்.

8-ல் புதன் சூரியனுடன் இருந்தால் அந்த ஜாதகர் புகழுடன் விளங்குவார். புதன், சந்திரன், சனி சேர்ந்திருந்தால் நீரில் கண்டம் ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் கெட்ட கனவுகள் தோன்றும். அல்சர் நோயால் பாதிக்கப்படுவர்.

9-ல் புதன் இருந்தால் அந்த ஜாதகர் திறமைசாலி. அந்த புதன் சூரியனுடன் இருந்தால், புதன் அந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாக இருப்பார். எனவே ஜாதகர் தன் பூர்வீக சொத்தை அழிப்பார். புதன், சனி, செவ்வாயுடன் இருந்தால் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் நிறைய பணம் ஈட்டுவார்.

10-ல் புதன் இருந்தால் அந்த ஜாதகர் எதையும் தைரியமாகச் செய்வார். புதன், சூரியன், செவ்வாயுடன் இருந்தால் உயரதி காரியாக விளங்குவார். சிலர் பெரிய அரசியல்வாதியாக புகழுடன் இருப்பார்கள்.

11-ல் புதன் இருந்தால் ஜாதகர் பெரிய கமிஷன் ஏஜென்டாகவோ விநியோகஸ்தராகவோ கணக்காளராகவோ இருப்பார். புதன், சூரியன், சந்திரனுடன் இருந்தால் அரசியல்வாதியாக இருப்பார்.

12-ல் புதன் இருந்தால் அந்த ஜாதகர் பேச்சாற்றல் உள்ளவர். சிலருக்கு புதையல் யோகம் கிடைக்கக்கூடும். புதன், குரு சுக்கிரனுடன் இருந்தால் அவர் அரசரைப் போல வாழ்வார்.

பரிகாரங்கள்

தினமும் விநாயகரை வழிபடுவது நன்று. புதன்கிழமையன்று விநாயகருக்கு மலர்கள், லட்டு, அறுகம்புல் வைத்துப் பூஜைசெய்யவேண்டும். வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு, நீர்த்தொட்டி போன்றவை இருப்பது கூடாது. சகோதரிகள், தாய்மாமன் ஆகியோருடன் நல்லுறவைப் பேணவேண்டும். கறுப்பு, பிரவுன், அடர்நீலவண்ண ஆடைகளைத் தவிர்க்கவும்.

செல்: 98401 11534

bala150121
இதையும் படியுங்கள்
Subscribe