Advertisment

கடனற்ற வாழ்வு, கல்வி மேன்மை தரும் புதன்கிழமை பரிகாரங்கள்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/wednesday-remedies-will-give-you-debt-free-life-and-educational-excellence

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்றும், "புதன் கெட்டால் புத்தி கெடும்' என்றும் புதனின் மேன்மையை நம் முன்னோர் கள் வழக்குமொழியாக அமைத்துள்ள னர்.

ஆயலைகளை அருளும் புதன் பகவானின் கிழமை வாரத்தின் நான்காம் நாளாக அமைந்து அருள் பா-க்கிறது.

பச்சை நிறத்தை தனதாக்கிக் கொண்ட புதன் மனித வாழ்விய-லும் பசுமை படரக் கை கொடுக்கும் காப்பாள னாகும்.

இளமையை யும், நகைச் சுவையையும், நுண்ணறி வையும், பேச்சாற்றலையும் ஒருவருக்கு அளிக்கும் பொறுப் பாளன் இந்த புதன் பகவானேயாகும்.

Advertisment

baba

கல்வியின் அரிச்சுவடியைத் தொடவேண்டும் என்றாலும் கலைகளின் நாயகன் புதனின் அருளன்றி அணுவும் அசையாது. தொலைத்தொடர்பு, எழுத்து, சித்திரம், சிற்பம் போன்ற நுணுக்கமான அனைத்தையும் அளிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் புதனாகும்.

Advertisment

இத்தனை வல்லமைகளையும் அளிக்கும் புதன் காலபுருஷனுக்கு ஆறா வது பாவகத்திற்குப் பொறுப்பேற்று கடன் நிவர்த்தி, நோய் எதிர்ப்பு ஆகியவற்றையளிக்கும் ஆற்றலைத் தன்னகப்படுத்தி வைத்துள்ளார்.

ஒரு குடு

"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்றும், "புதன் கெட்டால் புத்தி கெடும்' என்றும் புதனின் மேன்மையை நம் முன்னோர் கள் வழக்குமொழியாக அமைத்துள்ள னர்.

ஆயலைகளை அருளும் புதன் பகவானின் கிழமை வாரத்தின் நான்காம் நாளாக அமைந்து அருள் பா-க்கிறது.

பச்சை நிறத்தை தனதாக்கிக் கொண்ட புதன் மனித வாழ்விய-லும் பசுமை படரக் கை கொடுக்கும் காப்பாள னாகும்.

இளமையை யும், நகைச் சுவையையும், நுண்ணறி வையும், பேச்சாற்றலையும் ஒருவருக்கு அளிக்கும் பொறுப் பாளன் இந்த புதன் பகவானேயாகும்.

Advertisment

baba

கல்வியின் அரிச்சுவடியைத் தொடவேண்டும் என்றாலும் கலைகளின் நாயகன் புதனின் அருளன்றி அணுவும் அசையாது. தொலைத்தொடர்பு, எழுத்து, சித்திரம், சிற்பம் போன்ற நுணுக்கமான அனைத்தையும் அளிக்கக்கூடிய வல்லமை பெற்றவர் புதனாகும்.

Advertisment

இத்தனை வல்லமைகளையும் அளிக்கும் புதன் காலபுருஷனுக்கு ஆறா வது பாவகத்திற்குப் பொறுப்பேற்று கடன் நிவர்த்தி, நோய் எதிர்ப்பு ஆகியவற்றையளிக்கும் ஆற்றலைத் தன்னகப்படுத்தி வைத்துள்ளார்.

ஒரு குடும்பத்தில் பத்திரம், பாண்டு சம்பந்தப்பட்ட வில்லங்கங்கள் ஏற்பட்டால், அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு நிச்சயமாக புதன் தசை அல்லது புக்தி நடப்பில் இருப்ப தைப் பெரும்பான்மையாகக் காண முடிகிறது.

அதேபோன்று புதனோடு கேது வும், சந்திரனும் இணைந்து தசாபுக்தி நடத்தும் காலங்களில் மனரீதியான உணர்வுகளைச் சொல்லக்கூடிய காதல் சார்ந்த பயணத்தில் இவர்கள் இருக்கிறார்கள்.

புதன்கிழமையிலும், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங் களிலும், மிதுனம், கன்னி ஆகிய ராசி, லக்னங்களிலும், 5, 14, 23 ஆகிய தேதிகளிலும் பிறந்தவர்கள் புதனின் நேரடி ஆளுமையில் பிறந்தவர்கள்.

இவர்கள் மற்றவர்களைவிட தோற்றத்தில் சற்று இளமையாகவும், புரிந்துகொள்ள முடியாத விஷயங் களை மிக எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றலும், மந்திர உபதேசங்களை கிரகிக்கும் தன்மையும், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக வும், காதல் வயப்படக் கூடியவர்களாக வும், கல்வியில் பெருமளவு சாதனை புரியும் ஆற்றல் பெற்றவர்களாகவும் அமைந்துள்ள னர்.

எழுத்துத் துறையில் இமயத்தைத் தொட்ட பலரின் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது இந்த புதனின் லீலைகள் பெருமளவு வியக்கச் செய்கிறது.

அதேபோன்று இன்றைய கால கட்டத்தில், மாயாஜால உலகத்தில் மனிதனை இட்டுச்செல்லும் கணினியின் துணை கொண்டு சாதித்த நபர்களின் ஜாதகத்தை ஆராயும்பொழுதும் புதனின் கோலாட்டம் சிறப்பாக அமைந்துள்ளது.

ஒரு ஜாதகத்தில் புதன் மாந்தியின் தொடர்பைப் பெற்றிருக்கும் பொழுது, அவர்களின் வம்சத்தில் 12 வயதுக்குட்பட்ட ஒரு பெண் குழந்தையின் இறப்பைக் காணமுடிகிறது.

இத்தனை வல்லமை பொதிந்த புதன் மனித உடலில் நரம்பு மற்றும் தோல் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்கிறார்.v புதனின் தசாபுக்திக் காலங்களில் தோல் சார்ந்த பிரச்சினைகளும், நரம்பு சார்ந்த பிரச்சினைகளும், புதனின் நிலையைப் பொருத்து ஒருவருக்கு அளிக்கப்படுகிறது.

மாபெரும் கடன் சிக்கலில் சிக்கியவர் கள் மற்றும் கல்வியில் பிரச்சினைகளும், இடையூறுகளும் உள்ளவர்கள் புதன்கிழமை யைப் பயன்படுத்தி தங்களின் இன்னலை நிச்சயமாகத் தீர்த்துக்கொள்ள முடியும்.

கடன் தாக்கம் அதிகமாக உள்ளவர்கள் புதன்கிழமையன்று பெருமாள் கோவிலின் கொடிமரத்தின் எதிரில் மூன்று தேங்காய்களை உடைத்து, ஆறு மூடிகளிலும் பச்சைநிறத் துணியில் புதனின் தானியமான பச்சைப் பயறை முடிந்து தேங்காயில் ஆறு தீபங்கள் ஏற்றவேண்டும். இதனை 17 வாரங்கள் தொடர்ந்து செய்ய, கடன் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து கனிவான வாழ்வைப் பெறமுடியும்.

அதேபோன்று பெரிய கற்பூரக் கட்டியில் கடன் வாங்கியவரின் பெயரையும், கடன் தொகையையும், பச்சைநிற மார்க்கரினால் எழுதி, வீட்டின் வெளிப்புறத்திலுள்ள ஸ்லாப்பில் வைத்துவிடவும். இந்த கற்பூரமானது காற்றில் கரையக் கரைய கடனும் நிச்சயமாகக் கரையும். இந்தக் கற்பூரம் மழையில் நனையக்கூடாது.

மேலும் புதன்கிழமையன்று 17 சென்டிமீட்டர் பச்சைநிற ரிப்பனை வாங்கி, அதில் கடன் யாரிடம் வாங்கப்பட்டதோ அவரின் பெயரையும், கடன் வாங்கிய தொகையையும் எழுதி ஒரு கத்தரிக்கோளால் பொடியாகக் கத்தரித்து, அதை ஒரு தாளில் மடித்து தலையைச்சுற்றி நடுவாசலில் வைத்து எரித்துவிட, கடன்சுமை மிக விரைவில் குறைவதைக் காணலாம்.

கல்வியில் இடர்ப்பாடு உள்ளவர்கள் புதனின் ஆளுமைபெற்ற நாயுருவி என்னும் செடியின் குச்சியில் பல்துலக்கி, பசும்பாலி னால் வாயைக் கொப்பளித்துவர, கல்வி சார்ந்த இடர்ப்பாடுகள் நீங்கும்.

பாரிஜாதப் பூவினை பெருமாளுக்கு புதன்கிழமையில் அர்ப்பணித்து அர்ச்சனை செய்துவர, தடைப்பட்ட கல்வி சிறப்புறும்.

வீட்டில் தூபம்போடும்பொழுது நாயுருவியின் வேரைப் பொடிசெய்து போட்டுவர, கல்வி, சாஸ்திரம், வித்தைகள் போன்ற அனைத்தும் பலிதமாகும்.

ஜோதிடம் கற்கும் நபர்கள், இந்த நாயுருவிச் செடியின் வேரைப் பொடிசெய்து பல்துலக்கி வர, வாக்குப்பலிதம் உண்டாகும்.

செய்யக்கூடியவை

படிக்கின்ற குழந்தைகளுக்கு படிப்பு சார்ந்த உதவிகள் செய்யலாம். பத்திரப்பதிவு சிறப்பளிக்கும். நகை மற்றும் துணிகள் வாங்கலாம். பித்தளைப் பாத்திரங்கள் வாங்குவது சிறப்பு. பெண்பார்க்கச் செல்வது, திருமணம் சார்ந்த முடிவுகள் எடுப்பது சிறப்பு.

செய்யக்கூடாதவை

மரம், செடி, கொடிகளை வெட்டுவது பாதிப்பையளிக்கும். புதன்கிழமைகளில் இனிப்பு செய்வதைத் தவிர்ப்பது நலம்.

செல்: 80563 79988

bala291124
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe