கன்னி லக்னத்திற்கு 12 பாவங்களில் புதன்!

/idhalgal/balajothidam/wednesday-12-sins-virgo-luck

ன்னி லக்னத்தில் புதன் லக்னாதி பதியாக உச்சம்பெறுகிறார். சுயவீட்டில் உச்சம்பெறுவதால், ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். மனதில் மகிழ்ச்சியிருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். வர்த்தகத்தில் லாபம் கிட்டும். பத்ரயோகம் உண்டாகும்.

2-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் நல்ல பண வசதியுடன் இருப்பார். நிறைய பொருட்களை வாங்கிச் சேர்ப்பார். அரசாங்க விஷயத்தில் லாபம் இருக்கும். வேலை செய்யுமிடத்தில் பெயர், புகழ் இருக்கும். தந்தையால் ஆதாயம் கிட்டும். மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். பல விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

3-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடன் நல்ல உறவிருக்கும். ஜாதகர் மிகவும் தைரிய குணம் கொண்டவராகவும் பலசாலியாகவும் இருப்பார். த

ன்னி லக்னத்தில் புதன் லக்னாதி பதியாக உச்சம்பெறுகிறார். சுயவீட்டில் உச்சம்பெறுவதால், ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். மனதில் மகிழ்ச்சியிருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். வர்த்தகத்தில் லாபம் கிட்டும். பத்ரயோகம் உண்டாகும்.

2-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் நல்ல பண வசதியுடன் இருப்பார். நிறைய பொருட்களை வாங்கிச் சேர்ப்பார். அரசாங்க விஷயத்தில் லாபம் இருக்கும். வேலை செய்யுமிடத்தில் பெயர், புகழ் இருக்கும். தந்தையால் ஆதாயம் கிட்டும். மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும். பல விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

3-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடன் நல்ல உறவிருக்கும். ஜாதகர் மிகவும் தைரிய குணம் கொண்டவராகவும் பலசாலியாகவும் இருப்பார். தந்தையுடன் நல்ல உறவிருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார். பிறரை ஈர்க்கும்படி இருப்பார்.

4-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் புதன் இருந்தால் அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் பூமி, வாகனம் ஆகிய வற்றை வாங்குவார். அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கடவுள்மீது நம்பிக்கை உள்ளவராக இருப்பார். எப்போதும் சந்தோஷமாக வாழவேண்டுமென்று நினைப்பார்.

dd

5-ஆம் பாவத்தில் மகர ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். அவருக்கு குழந்தை பாக்கியம் இருக்கும். பல வெற்றிகளைக் காண்பார். பெரிய பதவிகளைப் பார்ப்பார்.

அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகருக்கு பிறரை ஈர்க்கக்கூடிய தோற்றமிருக்கும். சுயமரியாதை கொண்டவராக இருப்பார். நல்ல பண வசதியுடன் சந்தோஷமாக வாழ்வார்.

6-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு நிறைய எதிரிகள் இருப்பார்கள். ஆனால் ஜாதகர் தன் புத்திசாலித் தனத்தைப் பயன்படுத்தி அவர்களை வெல்வார். உடலில் சிறிய குறைகள் இருக்கும். வியாபாரத்தில் சிறிய தடங்கல்கள் ஏற்படும். ஜாதகருக்குத் தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. அரசாங்க விஷயத்தில் பிரச்சினை இருக்கும்.

7-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் புதன் இருந்தால் ஜாதகருடைய செயல்களில் அவ்வப்போது தடைகள் உண்டாகும். ஆணாக இருந்தால் பெண்ணாலும், பெண்ணாக இருந்தால் ஆணாலும் பாதிப்பிருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டிக்குப்பிறகு வெற்றி கிடைக்கும். ஜாதகருக்கு தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். அரசாங்க விஷயங்களில் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும்.

8-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். தந்தையால் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும். வர்த்தகத்தில் கடுமையான போட்டியிருக்கும். சிலர் வெளியே சென்று வாழ்வார்கள். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

9-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் புதன் இருந்தால் நன்மைகள் நடக்கும். தர்மச் செயல்கள் செய்வார். அதனால் ஜாதகருக் குப் பெயர், புகழ் கிடைக்கும். மனதில் சந்தோஷம் உண்டாகும். தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். ஜாதகருக்குத் தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பார்.

10-ஆம் பாவத்தில் புதன் தன் சுயவீட்டில், மிதுன ராசியில் இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். சுயமரியாதையுடன் வாழ்வார். போட்டியில் வெற்றி கிடைக்கும்.

11-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் புதன் இருந்தால், ஜாதகருக்குப் பெரிய அளவில் பணம் வரும். வர்த்தகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். மனபலம் கொண்ட வர். பேச்சாற்றல் இருக்கும். செல்வச் செழிப்புடன் சந்தோஷமாக வாழ்வார்.

12-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் புதன் இருந்தால் செலவுகள் அதிக மாக இருக்கும். வெளித் தொடர்புகளின் மூலம் பணம் வரும். ஜாதகர் அதிகமாக பயணங்களை மேற்கொள்வார். அதன்மூலம் பெயர், புகழ் கிடைக்கும். தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். வியாபாரம் செய்யு மிடத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும். சில நேரங்களில் பண இழப்பும் உண்டாகும்.

செல்: 98401 11534

bala030622
இதையும் படியுங்கள்
Subscribe