Advertisment

சிம்ம லக்னத்திற்கு 12 பாவங்களில் புதன்

/idhalgal/balajothidam/wednesday-12-sins-simha-lakshman

சிம்ம லக்னத்தில் புதன் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக்கொண்டு, பிறரை ஈர்க்கும்படி இருப்பார். பக்குவப்பட்ட மனிதராக இருப்பார். புகழுடன் விளங்குவார். பணக்காரராக வாழ்வார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சுயவீட்டில் புதன் உச்சம் பெறுகிறார். ஜாதகருக்கு உடன்பிறப்புகளால் சந்தோஷம் இருக்கும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும். அன்றாட வாழ்க்கையில் சிறிய தடைகள் இருக்கும். பேச்சைக்கொண்டு பணம் சம்பாதிப்பார்.

3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் புதன் இருந்தால், ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைக்கக்கூடியவர். ஜாதகருக்

சிம்ம லக்னத்தில் புதன் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக்கொண்டு, பிறரை ஈர்க்கும்படி இருப்பார். பக்குவப்பட்ட மனிதராக இருப்பார். புகழுடன் விளங்குவார். பணக்காரராக வாழ்வார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சுயவீட்டில் புதன் உச்சம் பெறுகிறார். ஜாதகருக்கு உடன்பிறப்புகளால் சந்தோஷம் இருக்கும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும். அன்றாட வாழ்க்கையில் சிறிய தடைகள் இருக்கும். பேச்சைக்கொண்டு பணம் சம்பாதிப்பார்.

3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் புதன் இருந்தால், ஜாதகருக்கு உடன்பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைக்கக்கூடியவர். ஜாதகருக்கு நல்ல தோற்றமிருக்கும். இல்வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். ஜாதகர் தர்மச் செயல்களில் ஈடுபடுவார்.

ff

Advertisment

4-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் புதன் இருந்தால், ஜாதகரின் அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி, வாகனம் இருக்கும். ஜாதகர் பணத்தைச் சேமிப்பதிலேயே குறியாக இருப்பார். தந்தையால் அவருக்குப் பல வெற்றிகள் கிடைக்கும். அரசாங்கத்தின் ஆதரவிருக்கும். அதன்மூலம் பெயர், புகழ், வருமானம் கிடைக்கும்.

5-ஆம் பாவத்தில் குரு பகவானின் தனுசு ராசியில் மூலத் திரிகோணத்தில் புதன் இருந்தால், ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். படிப்பு நன்றாக இருக்கும். ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

6-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் புதன் இருந்தால், ஜாதகர் தன் பகைவர்களிடம் பவ்யமாகப் பேசுவார். பணத்தை செலவழித்து, தன் காரியங்களை முடிப்பார். சில நேரங்களில் பணத்தை வீணாகச் செலவழிப்பார். அதனால் பெரிய அளவில் பண இழப்பு உண்டாகலாம்.

7-ஆம் பாவத்தில், கேந்திர ஸ்தானத்தில் சனியின் கும்ப ராசியில் புதன் இருந்தால், ஜாதகரின் மனைவி அழகாக இருப்பார். வர்த்தகத்தில் லாபம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குடும்பத்தால் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் பெரிய மனிதராக இருப்பார்.

8-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் புதன் நீசமடைகிறார். அதனால் ஜாதகர் பல பகைவர்களை சந்திக்க வேண்டியதிருக்கும். முன்னோர் களின் சொத்து கிடைப்பதில் பிரச்சினை ஏற்படும். தன் குடும்பத் தைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருப்பார். அதனால் மனதில் கவலை இருக்கும்.

9-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டம் நிறைந்தவர். நல்ல வெற்றி கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடிருக்கும். செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார். ஜாதகருக்கு ஆழமான கடவுள்பக்தி இருக்கும். நேர்மையாக இருப்பார். குடும்பத் தில் சந்தோஷம் நிலவும்.

10-ஆம் பாவத்தில் கேந்திர ஸ்தானத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் புதன் இருந்தால், ஜாத கருக்கு தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயங் களில் பெயர், புகழ் கிடைக்கும். பணி செய்யுமிடத்தில் மரியாதை கிடைக்கும். ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப்பார்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

11-ஆம் பாவத்தில் புதன், தன் மிதுன ராசியில் இருந்தால் ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். அறிவாளியாக இருப்பார். பக்குவமாகப் பேசுவார். குழந்தை பாக்கியம் இருக்கும். ஜாதகருக்கு பெயர், புகழ் கிடைக்கும்.

12-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் புதன் இருந்தால் ஜாதகருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் பல கஷ்டங் கள் உண்டாகும். வெளித் தொடர்பு களின்மூலம் சிறிய அளவில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவாக இருக்கும். வாழ்க்கையின் முன்பகுதியில் பல கஷ்டங்கள் ஏற்படும். பிற்பகுதியில் ஜாதகர் சந்தோஷமாக வாழ்வார்.

செல்: 98401 11534

bala010422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe