ரிஷப லக்னத் தில் புதன் தன் நண்பரான சுக்கிரனின் வீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல தோற்றத் தைக் கொண்டிருப்பார். வர்த்தகத்தில் புகழ் கிடைக்கும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

2-ஆம் பாவத்தில் சுயவீட்டில் புதன் இருந்தால் குடும்பத் தில் சந்தோஷ சூழல் நிலவும். குடும்பத்திலுள்ள அனைவரும் நல்லவர் களாக இருப்பார்கள். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினை இருக்கும். நல்ல பணவசதி இருக்கும். அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.

dd

3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறப்புகளால் சந்தோஷம் உண்டாகும். ஜாதகர் சிறந்த வியாபாரியாகத் திகழ்வார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். அறிவாளியாகவும், நல்ல மனிதராகவும் இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்.

Advertisment

4-ஆம் பாவத்தில் தன் நண்பர் சூரியனின் ராசியில் புதன் இருந்தால் தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். ஜாதகர் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார். நல்ல படிப்பாளி; அறிவாளி. நிறைய பணம் சம்பாதிப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

5-ஆம் பாவத்தில் புதன் சுயவீட்டில் உச்சமடைகி றார். அதனால் ஜாதகர் அறிவாளியாக இருப்பார். குழந்தை பாக்கியம் இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். குழந்தைகளால் புகழ் கிடைக்கும்.

6-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ராசியில் புதன் இருந்தால் மனதில் அமைதியிருக்காது. பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

Advertisment

ஆனால், ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி வெற்றிகாண்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித்தொடர்புகளால் புகழ் கிடைக்கும்.

7-ஆம் பாவத்தில் புதன், செவ்வாயின் வீட்டில் இருந்தால் மனைவி புத்திசாலியாக இருப்பாள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவி, குழந்தை களால் புகழ் கிடைக்கும். நல்ல பணவசதி இருக்கும். ஜாதகர் நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். புத்திசாலித்தனமாக செயல்படுவார். தைரியசாலியாக இருப்பார்.

8-ஆம் பாவத்தில் புதன், குருவின் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும்.

ஜாதகர் கடுமையாக உழைப்பார். குடும்பத்தில் உள்ளவர்களால் மகிழ்ச்சி கிட்டும்.

9-ஆம் பாவத்தில் தன் நண்பர் சனியின் வீட்டில் புதன் இருந் தால் ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். தர்ம காரியங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார். மனைவி, பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும். ஜாதகர் செல்வச் செழிப்பு டன் இருப்பார். எல்லாருக்கும் உதவுவார்.

10-ஆம் பாவத்தில் புதன் இருந்தால் தந்தையுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் புகழுடன் வாழ்வார். தன் அறிவுக்கூர்மையால் வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதித்து சேமித்து வைப்பார். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

11-ஆம் பாவத்தில் குருவின் வீட்டில் புதன் நீசமடைவதால், செலவுகள் அதிகமாக இருக்கும். வருமானம் குறையும். பணத்தை சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு படிப்பில் இடையூறுகள் இருக்கும். சிலருக்கு தலைவலி உண்டாகும்.

12-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். எனினும் ஜாதகர் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். பிள்ளைகளால் நஷ்டம் ஏற்படும். சிலருக்கு வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் தன் புத்திக்கூர்மையால் பகைவர்களை வெல்வார்.

செல்: 98401 11534