மேஷ லக்னத்தில் புதன், தன் நண்பரான செவ்வாயின் வீட்டில் இருப்பதால், ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். ஆனால் அவரை அவ்வப்போது சிறிய சிறிய நோய்கள் பாதிக்கும். சகோதர- சகோதரி உறவில் சிறிய பிரச்சினை ஏற்படும். புதனின் 7-ஆம் பார்வை 7-ஆம் பாவத்திற்கு இருப்பதால், வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகரின் மனைவி சந்தோஷத்துடன் இருப்பாள். ஆனால் மனைவிக்கு சிறுசிறு நோய் களின் பாதிப்பிருக்கும்.

2-ஆம் பாவத்தில் புதன் தனது நண்பர் சுக்கிரனின் ராசியில் இருப்பதால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பணத்தை சேமிப்பதில் சிரமம் இருக்கும். சகோதரர்களுக் குள் உறவு சரியாக இருக் காது. புதன் 7-ஆம் பார்வையால் 8 -ஆம் பாவத்தைப் பார்ப்பதால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும்.

ff

3-ஆம் பாவத்தில் புதன் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமானதாக இருக்கும். எதிரிகளை வெற்றிகொள்வார். ஆனால் புதன் 6-ஆம் பாவத்திற்கு அதிபதியாக இருப்பதால், சகோதர- சகோதரி உறவில் பிரச்சினை இருக்கும். புதன் 7-ஆம் பார்வையால் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால், புத்திசாலித்தனமாக செயல்பட்டு பெரிய வெற்றியைக் காண்பார். ஜாதகர் கடுமையாக உழைப்பார்.

Advertisment

4-ஆம் பாவத்தில் பகைவரான சந்திரனின் ராசியில் புதன் இருந்தால், ஜாதகரின் தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்படும். வீடு, மனை வாங்குவதில் சில தடைகள் ஏற்படும். புதன் 7-ஆம் பார்வையால் மகர ராசியைப் பார்ப்பதால், ஜாதகருக்கு அவருடைய தந்தையால் ஆதாயம் இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெயர், புகழ் கிடைக்கும்.

5-ஆம் பாவத்தில் புதன் இருந்தால், ஜாதகருக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் நன்றாக அமையும். புகழ்பெற்ற மனிதராக இருப்பார். கடுமையாக உழைத்துப் புகழ் பெறுவார். புதன் தன் 7-ஆம் பார்வையால் 11-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், ஜாதகர் புத்திசாலித் தனமாக செயல்பட்டு பகைவரை வெல்வார். அதனால் அவருக்கு நல்லவை நடக்கும்.

6-ல் (ரோக ஸ்தானத் தில்) புதன் சுயவீட்டில் இருக்கும்போது, அவர் அங்கு உச்சமடைகிறார். அதனால் பகைவர்கள் குறைவார்கள். உடன் பிறப்புகளுக்குள் உறவு சரியாக இருக்காது. புதன் 7-ஆம் பார்வையால் 12-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், அதிக செலவுகள் உண்டாகும். எனினும், ஜாதகர் தைரியத்துடன் இருப்பார்.

Advertisment

7-ல் புதன் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைத்து தன் தொழிலில் புகழ்பெறுவார். ஆனால் 7-ஆம் பார்வையால் புதன் லக்னத் தைப் பார்ப்பதால், சில நேரங்களில் நோயின் பாதிப்பு இருக்கும். எனினும் ஜாதகர் எப்போ தும் புத்திசாலித்தனத்துடன் இருப்பார்.

8-ல் புதன் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைத்தாலும் சில பிரச்சினைகள் உண்டா கும். சிறிய நோய்கள் அவ்வப்போது வந்து தொல்லையைத் தரும். பகைவர்களால் பிரச் சினைகள் உண்டாகும். புதன் தன் 7-ஆம் பார்வை யால் 2-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், கடுமை யாக உழைத்தபிறகுதான் பணம் வந்துசேரும்.

9-ல் புதன் இருந்தால், அதிர்ஷ்டம் உண்டாவ தில் சில தடைகள் இருக்கும். ஆனால் ஜாதகர் பகைவர்களை வெற்றிபெறுவார். புதன் 7-ஆம் பார்வையால் 3-ஆம் பாவத் தைப் பார்ப்பதால், ஜாதகர் தைரியசாலியாகவும், அறிவாளியாகவும் இருப்பார். ஜாதகருக்கு தந்தையுடனும் சகோதரருடனும் உறவு நன்றாக இருக்கும். கடுமையாக உழைத்தபிறகே புகழ் கிடைக்கும்.

10-ல் புதன் இருந்தால், நண்பர் சனி பகவானின் ராசியில் இருப்பதால், ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிப்பார். அவருக்குப் புகழ் இருக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவார். புதன் தன் 7-ஆம் பார்வையால் 4-ஆம் பாவத்தைப் பார்ப்பதால் நிலம் வாங்குவதில் சில தடைகள் ஏற்படும்.

11-ல் புதன் இருந்தால், ஜாதகர் கடுமையாக உழைப்பார். நன்கு சம்பாதிப்பார். புதன் 7-ஆம் பார்வை யால் 5-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப் பார். தன் வாரிசுகளால் அவருக்கு சந்தோஷம் கிடைக்கும். செய்யும் தொழிலில் நல்லபெயர் கிடைக்கும்.

12-ல் புதன் இருந்தால் அதிக செலவுகள் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பில் பிரச்சினை இருக்கும்.

ஆனால் புதன் 7-ஆம் பார்வையால் தன் உச்சவீடான கன்னியைப் பார்ப்பதால் வெற்றி கிடைக்கும். சிலர் ரகசிய மாக செயல்பட்டு பணக்காரர்களா வார்கள்.

செல்: 98401 11534