கடக லக்னத்தில், சந்திரனின் ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் மெலிந்த தோற்றத்தைக் கொண்டிருப்பார். உடன்பிறப் புகளால் சந்தோஷம் குறைவாகவே இருக்கும். ஜாதகர் பணத்தை சேமிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும்.
2-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் புதன் இருந்தால் பணம் சம்பாதிக்கும் எண்ணம் எப்போதும் இருக்கும். ஆனால் அதை சம்பாதிப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறப்புகளுடனான உறவில் பிரச்சினை இருக்கும்.
3-ஆம் பாவத்

3-ஆம் பாவத்தில்- சுயவீட்டில்- கன்னி ராசியில் புதன் உச்சமடைவார். ஜாதகர் தைரியசாலியாகவும் அறிவாளி யாகவும் இருப்பார். உடன்பிறப்பு களுடனான உறவில் சிறிய குறைகள் இருக்கும். ஜாதகர் சாதுரியமாகப் பேசி பணம் சம்பாதிப்பார்.
4-ஆம் பாவத்தில் புதன், சுக்கிரனின் துலா ராசியில் இருந்தால் நல்ல பண வரவிருக்கும். பூமி வாங்கும் வாய்ப்பிருக்கிறது. உடன்பிறப்புகளுடன் சுமாரான உறவிருக்கும். சிலர் ஆடம்பரமாக பணத்தை செலவிட்டு வாழ்வார்கள்.
5-ஆம் பாவத்தில் புதன், செவ்வாயின் விருச்சிக ராசியில் இருந்தால் பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் புத்திசாலித் தனமாக செயல்பட்டு, தன் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பார். தைரியமானவராகவும் அறிவாளியாகவும் இருப்பார்.
6-ஆம் பாவத்தில் புதன், குருவின் தனுசு ராசியில் இருந்தால் ஜாதகர் பகைவர்களுடன் சாந்தமாகப் பேசி தன் காரியங்களில் வெற்றிபெறுவார். உடன்பிறப்புகளுடனான உறவில் குறையிருக்கும். பண வரவிருக்கும்.
7-ஆம் பாவத்தில் சனி பகவானின் மகர ராசியில் புதன் இருந்தால் மனைவியால் சந்தோஷம் இருக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். விரய ஸ்தானாதிபதியாக புதன் இருப்பதால் சிலரின் மனதில் மகிழ்ச்சியிருக்காது.
8-ஆம் பாவத்தில் புதன் கும்ப ராசியில் இருந்தால், சில தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் சிறிய பாதிப்பிருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். வெளித் தொடர்பின்மூலம் ஜாதகர் பணம் சம்பாதிப்பார்.
9-ஆம் பாவத்தில் புதன், குருவின் மீன ராசியில் இருந்தால் தடைகள் உண்டாகி, பிறகு வெற்றி கிடைக்கும். உடன்பிறப்பு களால் சந்தோஷம் இருக்கும். வெளித் தொடர்புகளால் ஜாத கருக்கு ஆதாயமுண்டு. சுமாரான வாழ்க்கை வாழ்வார்.
10-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் விரய ஸ்தானாதி பதியாக இருந்தால், பல தடைகளைக் கடந்து வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகளுடனான உறவு சுமாராக இருக்கும்.
11-ஆம் பாவத்தில் புதன், சுக்கிரனின் ரிஷப ராசியில் இருந்தால் ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். வெளித் தொடர்களின்மூலம் பணம் வரும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாத கருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும் உடன்பிறப்பு களால் ஆதாயம் உண்டு.
12-ஆம் பாவத்தில் புதன் சுயவீட்டில் இருந்தால் ஜாதகருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். தைரியம் குறைவாக இருக்கும். உடன்பிறப்பு களுடன் சுமாரான உறவிருக்கும். ஜாதகர் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார்.
செல்: 98401 11534