மிதுன லக்னத்தில் புதன், சுயவீட்டில் இருந்தால் ஜாதகர் நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். 4-ஆம் பாவத்திற்கு அதிபதியான புதன் லக்னத்தில் இருப்பதால், அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். ஜாதகர் ஒழுக்கமானவராக இருப்பார். பூமி வாங்குவார். பெயர், புகழ் இருக்கும். வீட்டில் நல்ல வசதி இருக்கும்.
2-ஆம் பாவத்தில் தன, குடும்ப ஸ்தானத்தில் தன் எதிரியான சந்திரனின் வீட்டில் புதன் இருந்தால் ஜாதகர் தன் புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். தன் குடும்பத்தை நன்கு கவனித்துக்கொள்வார். உடல்நலத்தில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். தாயாரின் உடல்நலம் சில நேரங்களில் பாதிக்கும். பூமி வாங்குவார். நன்கு பணம் சம்பாதிப்பார்.
3-ஆம் பாவத்தில் புதன், சகோதர, தைரிய வீட்டில், சிம்ம ராசியில் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறப்புகள் நன்றாக இருப்பார்கள்.
அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். அறிவைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். வீடு வாங்குவார். நல்ல மனிதராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.
4-ஆம் பாவத்தில் சுயவீட்டில் புதன் உச்சமடைகி றார். அதனால் ஜாதகருக்கு அன்னையின் ஆசிர்வாதம் இருக்கும். பேச்சாற்றல் உண்டு. பூமி, வாகனம், நகைகள் வாங்குவார். ஜாதகர் கேளிக்கைகளில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார். உடல்நலத்தில் அக்கறை உள்ளவர். ஆனால் சில நேரங்களில் அலட்சியமாகவும் இருப்பார்.
5-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில் வித்யாகாரகனாக புதன் தன் நண்பரான சுக்கிரனின் வீட்டில் இருந்தால் ஜாதகர் அறிவாளியாக இருப்பார். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் அறிவைப் பயன்படுத்தி புகழை சம்பாதிப்பார். எதையும் ஆழமாக யோசித்தே செயல்படுவார். கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார். மிகுந்த தைரியசாலி. அனைவரிடமும் நல்ல பெயர் இருக்கும். எப்போதும் அமைதியாக இருப்பார்.
6-ஆம் பாவத்தில் புதன், செவ்வாயின் வீட்டில் இருந்தால் ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி பகைவர்களை வெல்வார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். அன்னையின் உடல்நலத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். பூமி வாங்குவதில் சிக்கல் இருக்கும். ஜாதகரின் உடல்நலம் சில வேளைகளில் பாதிக்கப்படும்.
7-ஆம் பாவத்தில் புதன், குருவின் தனுசு ராசியில் இருந்தால் ஜாதகருக்கு மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். அன்பு, பாசத்துடன் மனைவி பேசுவாள். ஜாதகர் வீடு வாங்குவார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அன்னையின் உடல்நலத்தில் சிறு பிரச்சினை இருக்கும்.
8-ஆம் பாவத்தில் புதன், சனியின் மகர ராசியில் இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தன் அன்னையின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். சிலர் வெளியூருக்குச் சென்று வாழ்க்கையை நடத்துவார்கள். அதனால் சில வாய்ப்புகளை இழக்க வேண்டியதிருக்கும்.
9-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில், சனியின் கும்ப ராசியில் புதன் இருந்தால் ஜாதகர் ஆழமாக சிந்தித்து வாழ்க்கையில் முன்னேறுவார். தர்ம காரியங்களில் ஈடுபாடிருக்கும். அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி, வாகனம் வாங்கும் வாய்ப்பிருக்கும்.
ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தான் ஆசைப்படும் பொருட்கள் அனைத்தையும் வாங்குவார். நல்ல வசதி படைத்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.
10-ஆம் பாவத்தில் குருவின் வீட்டில் புதன் இருந்தால் ஜாதகர் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
அதன்மூலம் வெற்றி கிடைக்கும். தந்தையால் குறைந்த சந்தோஷமே கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சில நேரங்களில் தோல்வியும், சில நேரங்களில் வெற்றியும் கிடைக்கும்.
11-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் புதன் இருந்தால், ஜாதகர் நல்ல லாபத்தைக் காண்பார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். வீட்டில் அனைத்து வசதிகளும் இருக்கும். பூமி, வாகனம் வாங்குவார். ஆளுக்கேற்றபடி பேசி தன் காரியங்களை சாதித்துக்கொள்வார்.
12-ஆம் பாவத்தில், விரய ஸ்தானத்தில் தன் நண்பரான சுக்கிரனின் ரிஷப ராசியில் புதன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். அன்னையால் கிடைக்கக்கூடிய சந்தோஷத்தில் சிறிய குறை இருக்கும். வீடு, வாகனம் வாங்குவதில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் வெளியே சென்று புகழ்பெறுவார்.
செல்: 98401 11534