Advertisment

திருமணம் பொருத்த சூட்சுமம்! -அஸ்ட்ரோ பாபு

/idhalgal/balajothidam/wedding-match-astro-babu

திருமணப் பொருத்தம் எதற்கு என்றும், ஏன் திருமணப் பொருத்தம் பெண்ணிலிருந்து ஆணுக்கு பார்கிறார்கள் என்ற கேள்விக்கும் எனக்குப் புரிந்த நான்- உணர்ந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Advertisment

நான் ஏற்கெனவே என் கட்டுரைகளில் எழுதியுள்ளபடி, பூமியில் இருக்கிற அனைத்து ஜீவராசிகளின் தலையாய கடமை இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. மனிதர்கள் உட்பட இதுதான் இயற்கை வழங்கிய ஒன்று. வாழ்க்கை, வசதி, பணம் எல்லாம் நாம் ஏற்படுத்திய விஷயம். இயற்கைக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த இனப் பெருக்கத்திற்கான செயல்தான் கலவி. இயற்கையின் பரிணாம தத்துவத்தில் பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவின் உதவியால் அந்த செயலை (காரணத்தை) வைத்துக்கொண்டு பலனை (காரியத்தை) மறந்து போனோம்.

சிற்றின்பம், பேரின்பம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் கால அளவு மட்டுமே. மனம் இறந்த நிலையை- ஒன்றுமில்லா தெய்வீக நிலையை இரண்டிலும் பெறமுடியம். சிற்றின்பத்தில் சிறிது நேரம் உணரமுடியும். பேரின்பத் தில் அதே நிலையில் இருக்கமுடியும். இரண்டின் கடைசி எல்லையும் ஒன்றுதான். ஒன்றுமில்லா நிலை. அந்த தன்மைதான் பிரபஞ்ச மூலத்தோடு

திருமணப் பொருத்தம் எதற்கு என்றும், ஏன் திருமணப் பொருத்தம் பெண்ணிலிருந்து ஆணுக்கு பார்கிறார்கள் என்ற கேள்விக்கும் எனக்குப் புரிந்த நான்- உணர்ந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Advertisment

நான் ஏற்கெனவே என் கட்டுரைகளில் எழுதியுள்ளபடி, பூமியில் இருக்கிற அனைத்து ஜீவராசிகளின் தலையாய கடமை இனப்பெருக்கம் செய்வது மட்டுமே. மனிதர்கள் உட்பட இதுதான் இயற்கை வழங்கிய ஒன்று. வாழ்க்கை, வசதி, பணம் எல்லாம் நாம் ஏற்படுத்திய விஷயம். இயற்கைக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த இனப் பெருக்கத்திற்கான செயல்தான் கலவி. இயற்கையின் பரிணாம தத்துவத்தில் பகுத்தறிவு என்ற ஆறாம் அறிவின் உதவியால் அந்த செயலை (காரணத்தை) வைத்துக்கொண்டு பலனை (காரியத்தை) மறந்து போனோம்.

சிற்றின்பம், பேரின்பம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் கால அளவு மட்டுமே. மனம் இறந்த நிலையை- ஒன்றுமில்லா தெய்வீக நிலையை இரண்டிலும் பெறமுடியம். சிற்றின்பத்தில் சிறிது நேரம் உணரமுடியும். பேரின்பத் தில் அதே நிலையில் இருக்கமுடியும். இரண்டின் கடைசி எல்லையும் ஒன்றுதான். ஒன்றுமில்லா நிலை. அந்த தன்மைதான் பிரபஞ்ச மூலத்தோடு தொடர்பு ஏற்படுத்தும்.ஏனெனில் மூலமும் ஒன்றுமில்லாததுதான். இதுதான் கடவுள் தன்மை. இந்த தன்மையில் கலவியில் இருக்கும்பொழுது அச்செயலின் உச்சத்தில்தான் மனம் இறந்து ஒன்றுமில்லா நிலையில் கடவுள் தன்மையில்தான் சிருஷ்டி நடக்கிறது. இது மனிதனுக்கு மட்டும் இறை என்ற பிரபஞ்ச சக்தி வழங்கிய வரம். ஜீவ ராசிகளில் மனிதன் மட்டுமே தான சிருஷ்டிப்பதை உணரமுடியும்.

இனப் பெருக்கத்திற்கும் சந்ததி விருத்திக்கும் வித்தியாசம் இருக்கிறது. இனப் பெருக்கம் பொதுத் தன்மைக்கான சொல். சந்ததி விருத்தி சுய நலம். நான் என்ற அகங்காரம் வேலை செய்கிற இடம்.கூட்டமாக மனிதன் வாழ்ந்த இடத்தில், தான் என்ற தன்மையை நிலை நாட்ட, திறமையை வெளிப்படுத்தி செய்கிற செயல்களில் (வேட்டையாடுதல், விவசாயம், காத்தல்) மாற்றத்தையும், திறமையையும் கொண்டு வர செயல் செய்கிற பொருளான மனிதனை, திறம்பட படைத்தல். அதனால் கிடைக்கிற பலனில் தன்னை முன்னினிலைப் படுத்தல், என் சந்ததி தான் திறமை படைத்தவர் என்ற நிலையை உருவாக்குதல். இந்த அகங்காரம்தான் மனித குலம் இன்று இவ்வாறு மேம்பாடடைய வழி வகுத்தது.

Advertisment

ff

இவ்வாறு மேம்படுத்தப்பட்ட படைப்பிற்கு படைப்பாளிகள் ஆகிய இரண்டு சக்திகள் தேவைதானே. ஆண், பெண் (விதை, விளைவிக்கிற இடம் பூமி) விதை சிறப்பாக விளைய செழிப்பான பூமி வேண்டும். வேறு முறையில் சொன்னால் செழிப்பான பூமியில் விதைக்கிற விதை சீரிய விளைச்சலைத் தரும்தானே?

அதேபோல் தரமான பூமியைத் தேர்ந் தெடுக்கும்போதே அப்பூமிக்குத் தகுந்த விதையையும் தேர்தெடுத்து, விளைச்சலில் திறமையான,சிறப்பானவற்றைக் கொண்டு வந்தனர். பூமியின் (பெண்) தன்மை விதையின்(ஆண்) தன்மை இரண்டையும் அவர்கள் உருவான நட்சத்திரத்தை வைத்து தீர்மானித்து இணைத்தனர். இதுதான் அந்த காலத்தைய பெயர் பொருத்தம் மற்றும் நட்சத்திரப் பொருத்தம்.

பின்னர் மனிதர்கள் வாழ்வியல் ஆசைகளில் ஈடுபட தொடங்கியபோது "நான்'' பெரிதுபடத் துவங்கி, என் மனைவி, என் குடும்பம், என் சந்ததி, என் பொருள், என் சொத்து, என்ற தன்மைக்கு மாறியபொழுது, இணைந்து வாழ்தல் தவிர்க்க இயலாததாய் போனது. அப்பொழுதுதான் இணைந்து வாழ்வதற்கான அடுத்த பரிமாணம் ஆன குணம் (நட்சத்திரம்), கணம் (உடல் அமைப்பு), ராசி (குணம் கணம் கட்டமைப்பு), பூமியாகிய பெண்ணின் ஸ்திர தன்மை (ஸ்திரீ தீர்க்கம்) யோனி (கலவிக்கான பொருளான உறுப்பு) வசியம் (கவருகிற தன்மை) மகேந்திரம் (அழகு), ரஜ்ஜு (உடல் கூருகலின் திடம்), வேதை (கருத்து, பரிமாற்ற ஒற்றுமை) போன்றவற்றை நம் முன்னோர்கள் கணக்கிட்டு ஒரு பெண்ணையும் (பூமி) ஆணையும் (விதை) இணைத்தார்கள், ஆனால் ஆண் மற்றும் பெண்ணின் முழுதன்மையையும் அறிய அவர்கள் பிறந்த சூத்திரமான ஜாதகத்தை வைத்துதான் அறியவேண்டும்.

திருமணம் ஆனவர்களுக்கு தெரியும் இனைவாக அல்லது ஒத்துபோகிற மனம் மற்றும் குணம், சிறந்த உடல் அமைப்பு, கவருகிற அழகும் சேர்ந்தால் திருமண வாழ்க்கை எத்தனை சுகம் என்று.

சரி ஏன் இத்தனை பொருத்தங்களையும் பெண்ணிலிருந்து பார்க்க வேண்டும்?

விளைச்சலுக்கு விதையைவிட பூமி முக்கியம். பூமியின் (பெண்ணின்) வளமை (பொருத்தங்கள்), பூமியின் திடத்திற்கு ஏற்ற விதை (செவ்வாய் நிலை), பூமியின் தட்ப நிலை (சந்திரன், சுக்கிரன், குரு நிலைமை), பூமி எந்த விதைக்கு ஏற்றது (ராகு கேது நிலைமை) போன்றவற்றை பார்த்து பூமிக்கு விதையாகிய ஆணை தேர்வு செய்தார்கள். இயற்கையாக பூமிக்குதானய்யா விதையை தேர்ந்தெடுப்பார்கள். எங்கும் விதைக்கு பூமியை தேர்ந்தேடுப்பதில்லையே. இயற்கை உயிர் ஜனனத்தை பெண்ணில் தானே வைத்திருக்கிறது. ஆதலால்தான் பூமியாகிய பெண்ணுக்கு விதையாகிய ஆணை தேர்ந்தெடுக்க சொன்னார்கள். இவ்வாறு தேர்ந்தேடுத்தலில் விளைச்சல் (குழந்தைகள்) சிறந்த மனநிலை, உடல்நிலை, அறிவு, அறிவு நுட்பம், செயல்திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம் முன்னோர் களின் கணக்கு.

இவ்வாறு ஒரு உயிர் ஜனனதிர்கான உன்னதமான விஷயமான காமம் ஏனோ இன்றைய சமூகத்தில் அருவருக்கிற விசயமாகி போனதுதான் வருத்தம். காமத்தை சரிவர புரிந்துகொள்ளாதது கூட ஒரு காரணம். கடவுள் தன்மைகளான, ருத்திரர் அர்த்த நாரிஸ்வரர், நடராஜர், காலபைரவர், சதாசிவம் போன்ற நிலைகளை காமத்தில் உணரமுடியம் (அதைபற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்).

மேலும் மேற்கூறிய முறைகளோடு பெண்ணையும், ஆணையும் தேர்ந்தெடுக்கும் போது பூமி, (பெண்) மற்றும் விதைகளின் (ஆண்) மூலம் (9-ஆம் பாவம்), இப்பூமி, விதைகளின் தன்மை (1-ஆம் பாவம்), இப்பூமி, விதை உற்பத்தி செய்கிற குழந்தை (5-ஆம் பாவம்) என விருத்திகளை கையாண்டு, இன்னும் இன்னும் சிறப்பான சந்ததிகளின் தன்மையை மேம்படச் செய்ததால்தான் இன்றைக்கு இந்தியர்களின் அறிவும் ஆற்றலும் மூளைத் திறனும் உலக மேடையில் போற்றப்படுகிறது.

செல்: 73394 44035

bala110823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe