Advertisment

திருமணப் பொருத்தம்! -ஏ.ஆர்.ஆர். சுதர்சனன்

/idhalgal/balajothidam/wedding-match-arr-sudarsanan

ணமக்களின் ஜாதகங்களிலுள்ள கிரக நிலையை வைத்து-

1, 5, 9- ஆயுள், புத்திர ஸ்தானங்கள்;

2, 6, 10- குடும்ப, ஜீவன ஸ்தானங்கள்;

3, 7, 11- திருமண சிந்தனை ஸ்தானங்கள்;

4, 8, 12- சுக ஸ்தானங்கள்

என பார்க்கிறோம். இருவருக்கும் லக்னத் தில் ராகு இருக்கக்கூடாது. எந்த லக்னமாய் இருந்தாலும் லக்னத்தில் ராகு இருந்தால் வைராக்கியம், பிடிவாதம், எல்லாரையும் சந்தேகப்படும் குணமிருக்கும். தம்பதிகள் இருவருக்கும் இதுபோன்ற குணங்கள் இருந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப் பான்மை இருக்காது. ஆதலால் தம்பதிகள் ஜாதகங்களில் இருவருடைய லக்னத்திலும் ராகு இருக்கக்கூடாது. ஒருவர் ஜாதகத்தில் ராகு இருந்தால் மற்றவர் ஜாதகத்தில் அவரது லக்னத்தில் ராகு, சூரியன், கேது, தேய்பிறைச் சந்திரன

ணமக்களின் ஜாதகங்களிலுள்ள கிரக நிலையை வைத்து-

1, 5, 9- ஆயுள், புத்திர ஸ்தானங்கள்;

2, 6, 10- குடும்ப, ஜீவன ஸ்தானங்கள்;

3, 7, 11- திருமண சிந்தனை ஸ்தானங்கள்;

4, 8, 12- சுக ஸ்தானங்கள்

என பார்க்கிறோம். இருவருக்கும் லக்னத் தில் ராகு இருக்கக்கூடாது. எந்த லக்னமாய் இருந்தாலும் லக்னத்தில் ராகு இருந்தால் வைராக்கியம், பிடிவாதம், எல்லாரையும் சந்தேகப்படும் குணமிருக்கும். தம்பதிகள் இருவருக்கும் இதுபோன்ற குணங்கள் இருந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப் பான்மை இருக்காது. ஆதலால் தம்பதிகள் ஜாதகங்களில் இருவருடைய லக்னத்திலும் ராகு இருக்கக்கூடாது. ஒருவர் ஜாதகத்தில் ராகு இருந்தால் மற்றவர் ஜாதகத்தில் அவரது லக்னத்தில் ராகு, சூரியன், கேது, தேய்பிறைச் சந்திரன், செவ்வாய் இல்லாமல் மற்ற கிரகங்கள் இருக்கலாம்.

Advertisment

dd

இருவருக்கும் லக்னத்தில் சூரியன் இருக்கக் கூடாது. எந்த லக்னமாய் இருந்தாலும் லக்னத் தில் சூரியன் இருந்தால் முன்கோபம், சட்டென முடிவெடுத்து (யோசிக்கும் தன்மை இருக்காது) செயல்படும் தன்மை இருக்கும். தான் என்னும் அகந்தை அதிகம் இருக்கும். எல்லாமும் தன்னால் தான் நடக்கிறது; நாம் சொல்வதைத்தான் அடுத்தவர் கேட்கவேண்டுமென நினைப் பார்கள். எதைப் பற்றியாவது தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருப்பது, அடிக்கடி டென்ஷன் ஆவது போன்றவற்றைக் கொடுக்கும். இதுபோல் கணவன்- மனைவி இருவருக்கும் இருந்தால் எப்படி குடும்பம் நடக்கும்? ஆதலால் மணமக்களை சேர்க்கும் போது ஒருவருக்கு லக்னத்தில் சூரியன் இருந்தால், மற்றவருக்கு லக்கனத்தில் சூரியன், ராகு, செவ்வாய், கேது இல்லாமல் மற்ற கிரகங்கள் இருக்கலாம்.

இருவருக்கும் லக்னத்தில் சந்திரன் இருக்கக் கூடாது. எந்த லக்னமாய் இருந்தாலும் லக்னத்தில் சந்திரன் (வளர்பிறைச் சந்திரன், தேய்பிறைச் சந்திரன்) இருந்தால் சந்தேக எண்ணம் அதிகமிருக்கும். ஞாபகமறதி இருக்கும். ஆதலால் இருவர் ஜாதகத்திலும் லக்னத்தில் சந்திரன் இல்லாமல் தேர்ந் தெடுப்பது நல்லது.

இருவருக்கும் லக்னத்தில் கேது இருக்க லாம். எந்த லக்னமாய் இருந்தாலும் லக்னத் தில் கேது இருந்தால் அதற்கு 7-ஆமிடத்தில்- அதாவது களத்திர (களத்திர சிந்தனை) ஸ்தானத்தில் ராகு இடம்பெறும். களத்திரம் சம்பந்தமான ஆசைகள், கற்பனைகள் அதிகமிருக்கும். ஆதலால் மணமக்கள் இருவருக்கும் களத்திரம் சம்பந்தமான ஆசைகள் ஒரேமாதிரியாக இருக்கும்.

ஒருவருக்கு 7-ல் ராகு, மற்றவருக்கு 7-ல் கேது இருந்தால் சேர்க்கக்கூடாது. ஒருவருக்கு லக்னத்தில் ராகு இருந்து, மற்றவருக்கு லக்னத் தில் சூரியன் இருந்தால் சேர்க்கக்கூடாது. ஒருவருக்கு லக்னத்தில் சூரியன் அல்லது ராகு இருந்தால், மற்றவருக்கு லக்னத்தில் கேது இருந்தாலும், சந்திரன் இருந்தாலும் சேர்க்கக் கூடாது.

ஒருவருக்கு லக்னத்தில் சூரியன் அல்லது ராகு அல்லது சந்திரன் இருந்தால், மற்றவரின் ஜாதகத்தில் அவரது லக்னத்தில் எந்த கிரகமும் இல்லாமல் இருக்கலாம். அல்லது பஞ்சபூத தத்துவ கிரகங்களில் (செவ்வாய் இல்லாமல்) புதன் அல்லது குரு அல்லது சுக்கிரன் அல்லது சனி இருக்காலம்.

இருவருக்கும் லக்னத்தில் குரு இருக்கலாம்; சுக்கிரன் இருக்காலாம்; சனி இருக்கலாம்.

இருவருக்கும் லக்னத்தில் செவ்வாய் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் இருவரும் கோபக்காரர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்பட்டு யோசிக்காமல் சண்டை யிட்டுக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.

இருவருக்கும் லக்னத்தில் புதன் இருக்கக் கூடாது. லக்னத்தில் புதன் தனித்திருந்தால் எதையும் வித்தியாசமாக சிந்திப்பார்; செயல் படுவார். எவரையும் பார்த்துப் பின்பற்ற மாட்டார். புதிய பாதைகளை வகுப்பவர்கள் இவர்கள்தான். அபரிமிதமான தன்னம்பிக்கை இருக்கும். குறுக்குபுத்தி போன்றவை இருக்கும். ஆதலால் தம்பதிகளை சேர்க்கும்போது இருவரது லக்னத்திலும் புதன் தனித்து இடம் பெறக் கூடாதென்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

செல்: 98403 69513

Advertisment

bala030223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe