ன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்கு, பேசும் தெய்வங்களான வெற்றி ஜோதிடரின் உதவி வாசகர்களுக்குத் தேவை! படித்தவர்முதல் பாமரர்வரை பருவ வயதில் திருமணத்தால் ஜாதகக் கட்டம் தங்களுக்குத் தரவிருக்கும் பரிசு என்னவாகத்தான் இருக்கும் என அறிய ஆவல் கொண்டிருப்பர். சில பேராசைப் பெருநெஞ்செங்கள் இரண்டு திருமணம் நடக்குமா? ஆண் பிள்ளை மட்டுமே பிறக் குமா? சினிமா ஸ்டார்போல் துணைவர் அமைவாரா? கோடீஸ்வரன் ஆவேனா என அறியத் துடிப்பர். உங்கள் ஜாதக கிரகங்கள் தரவிருக்கும் பரிசு எவை என ஜோதிட நியதிப்படி விளக்கவே இங்கு சிலவரிகள்- குருவின் திருப்பாதம் வணங்கி. பருவப் பெண்களின் ஜாதகத்தில் குரு 5 , 9, 4 ,7 ,10 மற்றும் 3 , 8 ல் ஆட்சி, உச்சம் பெற்று நின்றாலும் அல்லது வேறு சுபர் குருவைப் பார்த்தாலுமே ஜாதகி கொடுத்து வைத்தவர். தனவசதி, மன நிம்மதியுடன் இல்லற வாழ்வை அனுபவிப்பார்கள்.

planets

7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், சனி நின்று ராகு- கேதுக்களால் பார்க்கப்பட்டவர்களுக்கே, மாங்கல்ய தோஷத்தால் கணவரால் புறக் கனிக்கப்படுவது, 36 வயதிற்குள் தனிமரமாகி புகுந்த வீட்டாரால் கஷ்டப்பட நேரிடுவது, நிம்மதியற்ற மணவாழ்வு போன்ற இல்லறத் துயரை அனுபவிக்கிறார்கள்.

வருங்கால மாமியார்கள் கவனிக்க வேண்டியது: தேர்ந்தெடுக்கும் வதுவின் 7-ஆம் பாவம் பாவகிரக வீடாகி, அதில் குருவின் பார்வையின்றி செவ்வாய், சனி கூடிநின்றவரை அப்பாவிப் பையனுக்குப் பொருத்தக் கூடாது. காசு பணம் உள்ளவள் என்றபோதும் இக்கிரக நிலை பெற்ற மகனுக்கு உடல்வழி, மனவழி தோஷம் தரும்.

மதி வதனம் தரும் சந்திரனும், சிருஷ்டியின் சகல சிருங்காரத்தையும் வழங்கும் சுக்கிரனும் மங்கையரின் 7-ஆம் வீட்டில் கூடிநின்றபோதும், தன்னிலும் வயது, அந்தஸ்தில் ஏற்றத்தாழ்வுடைய கணவரையே ஏற்க நேரிடும் என்பது ஜோதிடப் புரிதல்.

ஆணுக்கும் பெண்ணுக்குமே லக்னத்தில் பாவியர்களான செவ்வாய், ராகு, சூரியன் கூடி கொட்டமடித்தால், ராமன் சீதையாக வாழ இயலாமல் , டபுள் சிம் ( இரட்டை) நாயகர்களாக ஒழுக்கப் பிழையுடனே மணவாழ்வைக் கழிக்க நேரிடுகிறது . .

லக்ன ராகு சாதூர்ய- துணிச்சலான நெஞ்சம் தரும். இது மாறாத ஜோதிட விதி. இத்துடன் சல்லாப 12-ஆம் வீட்டில் அல்லது மாங்கல்ய 8-ஆம் வீட்டில் செவ்வாயுடன் பாவிகள் இணைந்து நின்றால், ஆணுக்கு அடிபணிந்து வாழ இயலாது. மாமியார்- மாமனாரை எதிரியாக மதித்துப் புறக்கணிப்பர். கோர்ட்டு வாசல் வரவேற்கும் காலமிது. கேதுவின் அந்தர காலங்களில் இல்லறம் தடுமாறும்; உஷார்.

படித்தவளோ பாமரளோ பணக்காரியோ- இளம் நெஞ்சங்களின் 2-ஆம் வீட்டில் ஒரு சுபகிரகம் நின்று , 8-ல் பாவ கிரகங்கள் சம்பந்தம் உள்ளவர், 'கணவனுக்கு முன் காடு செல்லும்' சுமங்கலி யோகம் அமைந்தவரே. பெண்ணின் 8-ல் பாவகிரகங்கள் நின்றாலும் கும்பத்தில் ஒரு சுபர் நின்றவள் தீர்க்கசுமங்கலியே...

ஆண்களின் லக்னதிற்கு 2-ல் பாவர் நின்றால் கூட பல முயற்சிகளுக்குப்பிறகு திருமணம் நடந்துவிடும். ஆனால் சுக்கிரனும்,7-ஆமதிபதியும் கூடி 12, 8, 6-ல் நின்ற அபாக்கியசாலிகளுக்கு கல்யாணம் கனவாகி, நிராசை ஆகின்றது. 7-ஆமதிபதி மற்றும் 11-ஆமதிபதி நல்லவர்களாக மேன்மை பெற்று, இவர்களுடன் 2,10-க்குடைய கிரகமும் சேர்ந்தவருக்கே ,திருமணத்திற்கு அப்பாலும் பல பெண் சிநேகிதிகள் அமைவது காமதேவனின் பரிசு.

பணிக்கர் பெருமகனார் என்னக்களித்த என்றும் மாறாத ஜோதிட வேதமிது. ஆண் மகனின் கேந்திர கோணங்களிள் சுக்கிரன், குரு இணைந்திருந்தால், அமைபவள் உயர்குலத்து ஓவியேமே. இனிய இல்லறமே எந்நாளும்! இதற்கு மேலாக எந்த ஒரு ராசியிலும் சந்திரன், புதன், சுக்கிரன் கூடிநின்ற வாலிபனுக்கு பெரிய ரியல்எஸ்டேட் அல்லது மில் தொழிலதிபரின் மகள் மனைவியாக அமைவது அனுபவ ஜோதிடம். கேந்திர சுபர்கள் தரும் கிரகப் பரிசு- ஒய்யார இல்லறத் துணை.

இரு பாலருக்குமே 11, 7,' 2-க்குடைய வர்களின் சாரம்பெற்ற கிரகங்கள் தக்க பருவத்தில், மிகச் சரியான வயதில் திருமணத்தை அனுபவிக்க அருள்புரியும். .இந்த சுபமங்கள பாவங்களான 7, 11, 2-ல் அமர்ந்த கிரகங்களின் புக்தி, அந்தர காலங்களில் வேதியர் வைத்த திருமணம் நிச்சயம் நடக்குமென வெற்றி ஜோதிடர்கள் குறிப்பர்.

அல்லி மலர்க்கொடி அங்கதமே ஆனாலும் 31 வயதான பின்னும் மணமாலை கூடவில்லை என ஏங்கித் தவிக்கும் காதல் நெஞ்சினருக்கு, சுக்கிர வீடான துலாம், ரிஷபத்தில் சூரியன் நிச்சயம் தங்கியிருப்பார். கலப்பு மணம், காதலித்த பின்புதான் திருமணம் என கச்சைகட்டி வாழ்பவரின் 7-ஆமதிபதி கன்னி ராசி, மிதுன ராசியில் பாழ்பட்டு நிற்கும். எந்த ஆணின் 7-ஆம் அதிபதி கிரகம் விருச்சிகம் அல்லது மேஷத்தில் நின்றவர்கள்- ஒரு கையால் மணமாலை தந்தாலும், மறுகரத்தில் கடுஞ்சொல், அதீத கோபம் எனும் சாட்டையுடனேதான் இல்லறம் புகுவார்கள். பெண்னே உஷார். விதியை கிரகங்கள் உணர்த்தும்.

முடிவுரையாக, கிரகங்கள் உணர்த்தும் பரிசு யாதென்றால், உங்கள் பிள்ளைகளின் லக்ன 7-ல் சூரியன், 5-ல் சுக்கிரன், 4, 10-ல் ரத்தகாரகன் செவ்வாய் நின்ற ஜாதகங் களுக்கு வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்து இணைக் காமல், ஜாதக கிரகக் கட்டப் பொருத்தமும், அவர்களின் வருங்கால தசா புக்திகளையும் தீர்க்க அனு சரித்து முகூர்த்தம் குறித்தால், பிரிவினைத் துயரில்லா இனிய இல்லறம் குடும்ப நிம்மதி தரும். மனதிற்கு ஏற்ற மணமாலை அனைவருக்கும் அமைய குருவை வேண்டி வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்!

செல்: 94431 33565