Advertisment

செல்வ யோகம்! -முனைவர் முருகு பாலமுருகன்

/idhalgal/balajothidam/wealth-yoga-dr-murugan-balamurugan

ன்றைய உலகில் பணமென்பது மிகவும் முக்கியமான விஷயமாகிவிட்டது. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தற்போதைய சூழ்நிலையாகும். பணமானது குறிப்பிட்ட சிலருக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது. பலருக்கு அவ்வளவு எளிதில் பணவரவு ஏற்படுவதில்லை. ஜோதிட ரீதியாக யாருக்கு எளிதில் பணம் கிடைக்கி றது? திடீர் பணக்காராகும் யோகம் யாருக்கு உண்டாகும் என்பதனை பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

fff

பொருளாதாரரீதியாக சிறப்பான பலன்கள் ஏற்பட ஜனன ஜாதகம் சாதகமாக இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி கோட்சார கிரக சூழ்நிலையும் சாதகமாக இருந்தால்தான் பணவரவு சிறப்பாக இருக்கும். அதைவிட மிக முக்கியமான ஒன்று, ஒரு ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது முக்கியமல்ல. யோகத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களின் தசாபுக்தி நடக்கவேண்டும். தசாபுக்தி நடப்பதுகூட முக்கியமில்லை. அந்த தசாபுக்தி பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய தசாபுக்தியாக இருக்கவேண்டும்.

ஜனன ஜாதகமும் தன யோகமும்

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடு தன ஸ்தானமாகு

ன்றைய உலகில் பணமென்பது மிகவும் முக்கியமான விஷயமாகிவிட்டது. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது தற்போதைய சூழ்நிலையாகும். பணமானது குறிப்பிட்ட சிலருக்கு எளிதில் கிடைத்துவிடுகிறது. பலருக்கு அவ்வளவு எளிதில் பணவரவு ஏற்படுவதில்லை. ஜோதிட ரீதியாக யாருக்கு எளிதில் பணம் கிடைக்கி றது? திடீர் பணக்காராகும் யோகம் யாருக்கு உண்டாகும் என்பதனை பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

fff

பொருளாதாரரீதியாக சிறப்பான பலன்கள் ஏற்பட ஜனன ஜாதகம் சாதகமாக இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி கோட்சார கிரக சூழ்நிலையும் சாதகமாக இருந்தால்தான் பணவரவு சிறப்பாக இருக்கும். அதைவிட மிக முக்கியமான ஒன்று, ஒரு ஜாதகத்தில் யோகங்கள் இருப்பது முக்கியமல்ல. யோகத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகங்களின் தசாபுக்தி நடக்கவேண்டும். தசாபுக்தி நடப்பதுகூட முக்கியமில்லை. அந்த தசாபுக்தி பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய தசாபுக்தியாக இருக்கவேண்டும்.

ஜனன ஜாதகமும் தன யோகமும்

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடு தன ஸ்தானமாகும். 9-ஆம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 10-ஆம் வீடு ஜீவன ஸ்தானமாகும். 11-ஆம் வீடு லாப ஸ்தானமாகும். பொதுவாக வீடு, வாகன யோகத்தையும், அசையா சொத்து யோகத்தையும் உண்டாக்குவதற்கு வழிவகுக் கக்கூடிய ஸ்தானமாக 4-ஆம் வீடு அமைகி றது. அதுபோல 5-ஆம் வீடு பலம்பெற்றிருந் தால் பூர்வபுண்ணிய வகையில் பொருளாதார ரீதியாக யோகத்தினை அடையமுடியும்.

நவகிரகங்களில் தனகாரகன் என வர்ணிக் கப்படக்கூடியவர் குரு பகவானாவார். ஒருவர் ஜாதகத்தில் குரு பலமாக அமையப்பெற்றால் பொருளாதார மேன்மைகள் எளிதில் உண்டாகும். மேற்கூறியவாறு 2, 9, 10, 11 ஆகிய வீடுகளில் பலம்பெறுவது முக்கியம். அதுமட்டுமின்றி 6, 8, 12-ல் மறையாமலிருப்பது மிகவும் முக்கியமாகும்.

2, 9, 10, 11-க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றிருப்பதும், ஆட்சிபெற்று பலமாக அமைவதும் வலிமையான தன யோகத்தை உண்டாக்கும். குறிப்பாக 4, 7, 10 ஆகியவை கேந்திர ஸ்தானங்களாகும். 1, 5, 9 ஆகியவை திரிகோண ஸ்தானங்களா கும். ஒருவர் ஜாதகத்தில் கேந்திர திரிகோணாதி பதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தா லும், இணைந்து பலமாக அமையப்பெற்றிருந் தாலும் எதிர்பாராத வகையில் பொருளாதார ரீதியான ஏற்றத்தினை அடையமுடியும்.

ஒருவர் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தால், அந்த ஜாதகர் எவ்வளவு ஏழ்மையான நிலையிலிருந்தாலும் சமுதாயத்தில் சொல்லக்கூடிய அளவிற்கு ஏற்றம், உயர்வினை என்றா வது ஒருநாள் கண்டிப்பாக அடைவார். 4-ஆமதிபதி பலமாக அமையப்பெற்றால், கிடைத்த பணத்தை வைத்து சொத்துகள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அது போல ஒருவர் ஜாதகத்தில் எந்த பாவம் பலம்பெறுகிறதோ அந்த பாவத்தின் வழியில் தாராளமான பணத்தினை அடையநேரிடும். உதாரணமாக, ஒருவர் ஜாதகத்தில் 9-ஆம் பாவம் பலம்பெற்றிருந்தால் தந்தை மூலமாக வும், 7-ஆம் பாவம் பலம்பெற்றால் மனைவி மற்றும் கூட்டுத்தொழில் மூலமாகவும், 4-ஆம் பாவம் பலம்பெற்றால் தாய்வழியிலும், 3, 11-ஆம் பாவங்களும் செவ்வாயும் பலம் பெற்றால் உடன்பிறந்தவர்கள் மூலமும் எதிர் பாராத தன வரவுகளையும் பொருளாதார மேன்மைகளையும் அடையமுடியும்.

கோட்சாரமும் தன யோகமும்

கோட்சாரரீதியாக ஜென்ம ராசிக்கு குரு பகவான் 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங் களில் சஞ்சாரம் செய்யும்போது பணவரவு திருப்திகரமாக இருக்கும். அது போல சனி, ராகு- கேது 3, 6, 11 ஆகிய பாவங்களில் சஞ்சாரம் செய்கின்றபோது பொருளாதாரரீதியாக மேன்மைகள் உண்டாகிறது.

தசாபுக்தியும் தன யோகமும்

ஒருவர் சம்பாதித்து அத்தியாவசிய செலவுகள் செய்வதென்பது தன யோகமாகக் கருதமுடியாது. அவர்களது அத்தியாவசிய செலவுகளுக்கு அப்பாற் பட்டு, அபரிமிதமாக அதிகப்படியாக சேரும் பணமே தன யோகமாகும். அப்படிப்பட்ட சேர்க்கையானது தசாபுக்தி மிகவும் சாதகமாக இருக்கின்ற காலத்தில்தான் ஏற்படுகிறது.

குறிப்பாக எதிர்பாராத விதத்தில் தன யோகத்தை அடையவைக்க தசாபுக்திரீதியாக சில கிரகங்கள்தான் மிகவும் உதவியாக இருக்கின்றன.

அதுவும் குறிப்பாக சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய தசைகள்தான் எதிர்பாராத யோகத்தினை உண்டாக்குகின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது ஆகிய தசைகள் நடக்கின்றபோது தன வருவாயானது ஒரு சீரானதாக இருக்கும். அதுமட்டுமின்றி நேர்மையான வழியிலும், நல்வழியிலும், பல பொதுக் காரியங்கள் செய்வதற்கும் வழிவகுக்கும் தசையாகவே விளங்கும். ஆனால் ஒருவருக்கு கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் அமையப் பெற்று, அந்த தசையானது நடைமுறை யில் வந்தால் திடீர் செல்வந்தராகக்கூடிய அமைப்பினை உண்டாக்குகிறது. பொது வாக 3-ஆவது தசை பெரிய யோகத் தினை ஏற்படுத்துவதில்லை.

உதாரணமாக, சனியின் நட்சத்திர மான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 4-ஆவது தசையாக சுக்கிர தசை வருவதால், சுக்கிரன் பலம்பெற்றுவிட்டால் எதிர்பாராத தன யோகத்தினை சுக்கிர தசையில் அடையமுடியும்.

அதுபோல புதனின் நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு சுக்கிர தசை 3-ஆவது தசையாக வருமென்பதால் பெரிய யோகத்தினை ஏற்படுத்த இடையூறுகள் உண்டாகும்.

சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை 3-ஆவது தசையாக வருவதால் அனுகூலத்தை ஏற்படுத்துவதில்லை. அதுவே சனி பலம்பெற்றிருந்தால், காலம் கடந்து வரக்கூடிய சனி தசை பெரிய அளவில் யோகத்தினை உண்டாக்குகிறது.

bala150422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe