Advertisment

வீட்டின் தோஷத்தால் செல்வம், தொழில் அழிந்தது! - சித்தர்தாசன் சுந்தர்ஜி

/idhalgal/balajothidam/wealth-and-business-destroyed-by-dosha-house

சுமார் 55 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.

"இளம் வயதிலேயே வாழைக் காய் வியாபாரம் செய்து, நிறைய சொத்து, பணம் என சம்பாதித் தேன். ஆனால் கடந்த ஏழு வருடங் களில், தொழில் முடங்கியது. சொத்துகளையும் இழந்தேன். கெட்ட செயல்களைச் செய்து பணத்தை அழிக்கவில்லை. இப் போது சிரமத்துடன் வாழ்கிறேன். இந்நிலைக்குக் காரணத்தையும், என் எதிர்கால வாழ்விற்கு வழி கேட்டும் வந்துள்ளேன்'' என்றார்.

Advertisment

ss

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத்தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன் கூறினார்.

"இளம் வயதிலேயே தந்தையை இழந்து, பிழைப்பிற்காக ஒரு வாழைக்காய் வியாபாரி யிடம் வேலைக்குச் சேர்ந்தான். உண்மை யாக உழைத்தான். அந்தத் தொழில் நுணுக் கங்களை அறிந்துகொண்டு, சில வருடங் களில் தனியாக வியாபாரம் செய்யத்

சுமார் 55 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.

"இளம் வயதிலேயே வாழைக் காய் வியாபாரம் செய்து, நிறைய சொத்து, பணம் என சம்பாதித் தேன். ஆனால் கடந்த ஏழு வருடங் களில், தொழில் முடங்கியது. சொத்துகளையும் இழந்தேன். கெட்ட செயல்களைச் செய்து பணத்தை அழிக்கவில்லை. இப் போது சிரமத்துடன் வாழ்கிறேன். இந்நிலைக்குக் காரணத்தையும், என் எதிர்கால வாழ்விற்கு வழி கேட்டும் வந்துள்ளேன்'' என்றார்.

Advertisment

ss

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத்தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றிப் பலன் கூறினார்.

"இளம் வயதிலேயே தந்தையை இழந்து, பிழைப்பிற்காக ஒரு வாழைக்காய் வியாபாரி யிடம் வேலைக்குச் சேர்ந்தான். உண்மை யாக உழைத்தான். அந்தத் தொழில் நுணுக் கங்களை அறிந்துகொண்டு, சில வருடங் களில் தனியாக வியாபாரம் செய்யத் தொடங் கினான். இவன் உழைப்பு, திறமை, நாணயம், நேர்மை மீது நம்பிக்கை வைத்தான். விவசாயிகள் சிலர், தங்கள் தோட்டத்தில் வாழைத்தார்களை வெட்டி வியாபாரம் செய்ய உதவினார்கள்.

வெளிமாநிலங்களுக்கும் வாழைத்தார் களை அனுப்பி வியாபாரம் செய்தான். இரவு- பகலாக உழைத்தான். செல்லம், சொத்து நிறைய சம்பாதித்து செல்வந்தனா னான். ஊரில் பெரியமனிதன் என்ற சமூக அந்தஸ்தும் வந்தது. இவன் வசிக்கும் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது. இனிப்பைத் தேடி எறும்பு வருவதுபோல் அந்த கோவிலைச் சேர்ந்தவர்கள் இவனைத் தேடிவந்து, "இவன் சேர்த்த சொத்து பணம் எல்லாம் கடவுள் கொடுத்தது. இவன் செல்வ நிலைக்கு கடவுளே காரணம்' என்று ஏதேதோ கூறி, "கடவுளுக்குப் பணம், பொருள் கொடுத்து தொண்டுசெய்தால், இன்னும் பெருஞ்செல்வம் கடவுள் தருவார்' என்று கூறி, கோவில் பிரசாதங்களைக் கொடுத்துச் சென்றனர்.

அவர்கள் புகழ்ந்ததைக் கேட்ட இவன், தன் சுயஅறிவு, திறமை, உழைப்பினால்தான் செல்வந்தனானேன் என்பதை மறந்தான். கோவில் திருப்பணி, திருவிழா, பூஜை, யாகம் எனக்கூறி, அவர்கள் கேட்டபோதெல்லாம் பணத்தைக் கொடுத்தான். "செய்யும் தொழிலே தெய்வம்'' என்று நடைமுறையில் வாழ்ந்தவன், கடவுள் நம்பிக்கையில் வாழத்தொடங்கினான். செல்வம் சரியத் தொடங்கியது. இது முதல் சரிவு. சிவன் கோவில் சுற்றுப்பிராகார வீதிகள் ஒன்றில் ஒரு இடத்தை வாங்கி, மூன்றுமாடி வீடு ஒன்றைக் கட்டி வசிக்கத் தொடங்கினான்.

கோவிலில் இவனுக்கு தர்மகர்த்தா என்ற பதவியையும் கொடுத்தார்கள். அந்த வீட்டில் குடியேறியது முதல் தொழில் முடங்கியது; வருமானம் குறைந்தது. இது இரண்டாவது சரிவு.

வாழைத்தோட்டம் விட்டவர்களுக்கு சரியாகப் பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் இவனைப் புறக் கணித்தார்கள். சொத்துகள் அழியத் தொடங்கின. இவனிடம் பணம் இல்லை யென்று தெரிந்தவுடன், கோவில் தர்ம கர்த்தா பதவியிலிருந்து, இவனை விலக்கி விட்டார்கள். இன்று ஏழையாக என்னைத் தேடிவந்துள்ளான்.''

அகத்தியர் கூறியதைக் கேட்ட அவர், "கோவில் மாடவீதியில் வசித்ததால்தான் என் செல்வம், தொழில் அழிந்தது என அகத்தியர் கூறக் காரணம் என்ன?'' என்றார்.

"கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் வியாபாரக் கடைகள். அன்னச்சத்திரம், தர்மஸ்தாபனங்கள் இருக்கலாம். கோவில் குருக்கள், பணியாளர்கள், மற்ற மனிதர்கள் வசிக்கக்கூடாது! அப்படி வசிப்பவர்கள் குடும்பம் விருத்தியாகாது. எவ்வளவு பணம் வந்தாலும் விரயமாகும். குடும்பத்திலும், வம்ச வாரிசுகளின் வாழ்க்கையிலும் ஏதாவது குறையிருக்கும்; நிம்மதி இராது.

கடவுளை வணங்க வருபவர்கள் யாரும் உலக அமைதி, பொது நன்மைக்காக வருவதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கஷ்டம், காரியத்தடை, எதிரி, நோய் போன்ற இன்னும் பல குறைகளைக்கூறி, புலம்பி பிரார்த்தனை செய்வார்கள். சுபமான, மங்களமான வார்த்தை இராது. இந்த குறை, புலம்பல் அதிர்வலைகள், கோவிலைச் சுற்றி செயல்படும். இவனைப் போன்று வசிப்பவர்களிடம் விசாரித்து உண்மையை அறிந்துகொள்ளச் சொல். எல்லார் குடும்பத்திலும் குறை இருக்கும்.

இவன் முதலில் அந்த வீட்டை விற்றுவிட்டு, அந்தப் பணத்தில் விவசாயி களுக்குக் கொடுக்கவேண்டிய பாக்கிப் பணத் தைக் கொடுக்கச் சொல். தன் மகன்களைத் துணையாகக்கொண்டு, முன்புபோல் தன் சுயஅறிவு, உழைப்பினைக் கொண்டு, வியாபாரத்தை நாணயமாக செய்யச்சொல். நம்பிக்கையைவிட்டு, நடைமுறையில் வாழச்சொல்; நன்மை அடைவான்'' என்று கூறி ஓலையிலிருந்து அகத்தியர் மறைந்தார்.

செல்: 99441 13267

bala090824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe