Advertisment

வாஸ்து குறைகளைத் தீர்க்கும் வழிமுறைகள்!

/idhalgal/balajothidam/ways-solve-vastu-defects

Ways to solve Vastu defects!

"ஜோதிடரீதியாக ஜாதகத்தில் சந்தான பாக்கியம் தரும் 5-ஆம் இடத்தில், ராகு, கேது, சனி, மாந்தி இருந்தால் குழந்தை பிறப்பதில் காலதாமதம் அல்லதுகருச்சிதைவு ஏற்படலாம். இத்துடன் வாஸ்துக்குறையும் இணைந்தால் சோதனையும், வேதனையும் பின்தொடரும். எனவே படுக்கையறையில் இருக்கும் குறைகளை அகற்றியே ஆகவேண்டும்.

Advertisment

நீலம், கருப்பு வண்ண படுக்கை விரிப்பைத் தவிர்க்கவும். படுக்கைக்கு நேராக முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடி கூடாது! இருந்தால் திரைபோட்டு மூடிவிடவும். சமையல் கூடத்தில் தென்திசை நோக்கி கண்ணாடி இருத்தல் வேண்டும். அகால மரணமடைந்தோரின் புகைப்படம் படுக்கையறையில் இருப்பது கூடாது. கொடிய விலங்குகளின் படங்கள், காலண்டர் இருந் தால் அகற்றிவிடவும். சட்டை போன்ற மேலாடைகள் அணியாவிடிலும் பரவாயில்லை ஆனால் வெள்ளிக்கிழமை தூய ஆடைதான் அணிதல் வேண்டும். தீயில் கருகிய ஆடைகள் கூடாது; சுக்கிர பலம் போய்விடும். வீட்டில் வடமேற்கு மூலையில் செம்புப் பாத்திரத்தில் பழைய நாணயங்களை நிரப்பி வையுங்கள்; பணத்தடை அகலும்.

Advertisment

உங்கள் ராசிக்கேற்ற திசை

மேஷம், சிம்மம், தனுசு- வடக்கும் கிழக்கும் நன்மை தரும்.

ரிஷபம், கன்னி, மகரம்- தென்திசை உத்தமம்.

மிதுனம், துலாம், கும்பம்- மேற்கு அதிர்ஷ்டமானது.

கடகம், விருச்சிகம், மீனம்- கிழக்கு வாயில் நன்று.

கட்ட

Ways to solve Vastu defects!

"ஜோதிடரீதியாக ஜாதகத்தில் சந்தான பாக்கியம் தரும் 5-ஆம் இடத்தில், ராகு, கேது, சனி, மாந்தி இருந்தால் குழந்தை பிறப்பதில் காலதாமதம் அல்லதுகருச்சிதைவு ஏற்படலாம். இத்துடன் வாஸ்துக்குறையும் இணைந்தால் சோதனையும், வேதனையும் பின்தொடரும். எனவே படுக்கையறையில் இருக்கும் குறைகளை அகற்றியே ஆகவேண்டும்.

Advertisment

நீலம், கருப்பு வண்ண படுக்கை விரிப்பைத் தவிர்க்கவும். படுக்கைக்கு நேராக முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடி கூடாது! இருந்தால் திரைபோட்டு மூடிவிடவும். சமையல் கூடத்தில் தென்திசை நோக்கி கண்ணாடி இருத்தல் வேண்டும். அகால மரணமடைந்தோரின் புகைப்படம் படுக்கையறையில் இருப்பது கூடாது. கொடிய விலங்குகளின் படங்கள், காலண்டர் இருந் தால் அகற்றிவிடவும். சட்டை போன்ற மேலாடைகள் அணியாவிடிலும் பரவாயில்லை ஆனால் வெள்ளிக்கிழமை தூய ஆடைதான் அணிதல் வேண்டும். தீயில் கருகிய ஆடைகள் கூடாது; சுக்கிர பலம் போய்விடும். வீட்டில் வடமேற்கு மூலையில் செம்புப் பாத்திரத்தில் பழைய நாணயங்களை நிரப்பி வையுங்கள்; பணத்தடை அகலும்.

Advertisment

உங்கள் ராசிக்கேற்ற திசை

மேஷம், சிம்மம், தனுசு- வடக்கும் கிழக்கும் நன்மை தரும்.

ரிஷபம், கன்னி, மகரம்- தென்திசை உத்தமம்.

மிதுனம், துலாம், கும்பம்- மேற்கு அதிர்ஷ்டமானது.

கடகம், விருச்சிகம், மீனம்- கிழக்கு வாயில் நன்று.

கட்டிய- கட்டப் போகும், வீட்டின் தலைவாயில் படி உயர்ந்தும், உள்பாகம் தாழ்ந்தும் இருப்பதுகூடாது; நன்மைகள் நாடிவர தடை ஏற்படும். சமதளமாக இருந்து தெற்கும், மேற்கும் உயர்வது மிக நல்லது.

கதவுகள்

எந்த சந்தர்ப்பத்திலும், மூன்று பலகைகளை இணைத்து தலைவாயில் அமைப்பது கூடாது. வெவ்வேறு ஜாதி பலகைகள் மிக கெடுபலனைத் தரும். காற்றில் முறிந்த மரம், ஆலயங்களின் உள்பாகத்தில் வளர்ந்து முற்றிய மரப்பலகை தீய பலன் தருபவை. ஆலமரம், இச்சி, அரசு, இலவு, பூவரசு, இலந்தை, விளாமரம் போன்றவற்றின் பலகைகளை உபயோகித்து அலங்காரம் செய்தால், செல்வாக்கு படிப்படியாகக் குறையும். பர்னிச்சர் செய்ய ஏற்ற மரங்கள்: தேக்கு, நுங்கமரம், வெண்தேக்கு, ரோஸ்வுட், கருந்தேக்கு, ஒயிட் சிடால், கடம்பு போன் றவை. இவை பஞ்சபூத தாக்குதலிலிருந்து காப்பாற்றும், வலிமை நிறைந்தவை. கட்டிலாகப் பயன்படுத்தினால் ஆயுளை அதிகரிக்கும். கனவுத் தொல்லை வராது.

சமையலறை

வடகிழக்கு போன்ற தெய்வீக சக்திக்குரிய இடங்களில் சமையலறை அமைப்பது கூடாது. தென்கிழக்குதான் உத்தமம்: தென்கிழக்கில் சுக்கிரன் அருள் நிலையாகஅமையப்பெறும். எப்போதுமே, அரிசி, நவதானியம் செழிப்பாக இருக்க பாடுபடும் திசை. மின் அடுப்பு, மைக்ரோ ஓவன் போன்றவை நெடுநாள் பாழ்படாமல் இருக்கும். பதார்த்தங்களும் விரைவில் கெட்டுப் போகாத நிலை தொடரும். கணவன்- மனைவியிடையே மனபேதம் இல்லாது செயல்பட ஏற்றதிசை. ஷ்பேசினும் அடுப்பும் அடுத்தடுத்து இருப்பது கூடாது. பால் பொருட்கள் கெட்டுப்போகாதிருக்க ஒரு பீங்கான் கிண்ணத்தில் நான்கு துண்டு, மரக்கரியையும், ஒரு எலுமிச்சைக் கனியையும் மூலையில் இருக்கச் செய்தால் சுக்கிரனின் அருள் நிலையாகும். உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு 4-ல் ராகு இருந்தால் மாதத்தில் இரு முறை சமயல்கூடத்தில் உணவுண்ணல் நல்லது.

தூங்கும்போது வாஸ்து முறையில் கடைப்பிடிக்க வேண்டியவை

பெரிய தூண்கள் (பீம்) மரத்திலோ சிமென்டிலோ இருந்தால் அதனடியில் படுக்கை போட்டுத் தூங்குவது கூடாது.

படுக்கையைச் சுற்றிலும் ஒரு அடி இடைவெளி இருப்பது நல்லது. மூலையில் பொருட்கள் வைப்பதைத் தவிர்த்தல் நன்று.

அட்டாச்டு பாத்ரூம் வாயிலுக்கு நேராகப் படுக்கை போட்டுத் தூங்குதல் கெடுபலனைத் தரும்.

நமது கால்களை நேராக ஏதாவது வாயிலை நோக்கி வைத்துக்கொண்டு தூங்குவது கூடாது.

மருத்துவமனை, கல்லறை, சுடுகாடு, இடுகாடு, கோவில், மசூதி, தேவாலயம் (சர்ச்) போன்ற இடங்களின் அருகே நெருக்கமாக வீடு அமைந்திருந்தால், மேல்மாடியில் வடகிழக்கில் குமிழ் விளக்கு (டூம் லைட்) எரியச் செய்வது நன்று.

புதிதாக திருமண வரன் பேசிமுடிக்க வருவோரை தென்திசை நோக்கி உட்காரவைத்துப் பேசுவது கூடாது. பிற திசை நோக்கி உட்கார வைத்துப் பேசுதல் நன்று.

வீட்டில் வளரும் மரங்களை நினைத்த மாத்திரத்தில் வெட்டுவது கூடாது. வெட்டி னால் தீமைகள் பின்தொடரும்.

கிருத்திகை, நட்சத்திரத்தில் சூரியன் இருக்க, திருவோணம், அவிட்டம் 3-ஆம் பாதத்தில் சுக்கிரன் நிற்கும் நிலையில் மரம் வெட்டுதல் கூடாது. வெளியிடங்களில் வெட்டினாலும் அதனை வீட்டினுள் கொண்டுவருதல் கூடாது.

கட்டடத்திற்கு மேல்தளம் கான்கிரீட் போட நல்லநாள் பார்த்து செயல்பட வேண்டும். அப்போதுதான் வாஸ்து அருள் கிடைக்கப்பெறும். மதில்சுவர் எழுப்பி சென்டரிங் போட்டபின் கம்பியைப் பரப்பி அதனை சீராக்கி, மணல், சிமென்ட், சல்லி பரப்ப நல்ல நாள் இன்றியமையாதது.

அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி நட்சத்திர நாட்கள் பொருத்தமானவை.

திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம் ஆகியவற்றை இறங்கு நாள் என்பர். இந்த நாட்களில் நற்செயல்கள் வேண்டாம்.

மிருகசீரிடம் சுமாரானது. மகம், பூரம், உத்திரம், அஸ்தம் இவையாவும் சிறப்பானவை.

சித்திரை சுமார். சுவாதி, விசாகம் அனுஷம், கேட்டை தவிர்க்க வேண்டியவை.

மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் மிகச்சிறப்பானவை. சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய நாட்களில், சிக்கலான விவகாரங்களைத் தவிர்க்கவும். கிணறு அமைக்க தகுதியான மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மூன்றும் அதிக வளமிக்க நீரை ஊற்றாக வழங்கும். நீர் நிலைத்திருக்கும். ஆடி, ஆவணியில் கிணறு அமைக்கலாம். ஆனால் கிணற்று ஊற்று குறையும்.

புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகையில் உருவாக்கினால், ஆரம்பத்தில் செழிப்பாக ஊறிய தண்ணீர் மெல்லமெல்ல குறையும்.

விஷ்ணு கோவில்களில் வடக்கிலும், சிவாலயங்களில் கிழக்கிலும் கிணறு இருப்பது நன்று. பொதுவில் வடகிழக்கு மூலை உத்தமம். ஆனால் சுற்றிலும் நான்கு

அல்லது ஐந்தடி வெற்றிடம் விடுதல் வேண்டும். வாஸ்து பலன் அதிகமாகும்.

அகால மரணம் ஏற்பட்ட நபர் தங்கியிருந்த அறையில், மகிழ்ச்சியாக ஒன்றுகூடி பேசுவதை 41 நாட்கள் தவிர்க்கவேண்டும். தெற்கு, மேற்கு ஜன்னலை மூடிவிடவும்.

தனவரவு தடைப்பட்டால் வடகிழக்கு பாகக் குறையை அகற்றவேண்டும். வேண்டாத குப்பைகளை அங்கே சேர்ப்பதுக் கூடாது.

குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டால் தென்கிழக்கை சீர்செய்யவேண்டும். சுக்கிரன் அருள்புரிவார்.

பரிகாரம்: ஒரு பீங்கான் கிண்ணத்தில் பச்சரிசியை நிரப்பி, அதில் அமெரிக்கன் டைமண்ட் ராசிக்கல்லைப் போட்டு தென்கிழக்கு மூலையில் வைக்கவும். வயோதிகர்களுக்கு ஆரோக்கியக்குறை தென்பட்டால் தென்மேற்கை சீர்செய்யவேண்டும். தென்மேற்கு கன்னி மூலையில் கழிவறை இருந்தால் அதை மூடிவிடவும். வாய்வு சார்ந்த தொல்லைகளுக்கு வடமேற்கை சீர்செய்யவேண்டும். கருவுற்ற பெண்கள் அங்கு தங்குதல் நற்பலன் தரும்.

செல்: 93801 73464

bala jothidam 12-07-2024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe