11-ஆம் பாவகம்
பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5-ஆம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ள லாம். அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர் களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப்பெரிய பணத்தை, வாழ்வா தாரத்தை பாதிக்கக்கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள். பணம் யாருக்கெல்லாம் வேலை செய்கிறதோ அவர்கள் ஜாதகத் தில் 11-ஆமதிபதி மிகச் சுபத்துவத் துடன் இயங்கும். உலகிலுள்ள அனைத்துவிதமான தொழிலையும் முயற்சி செய்வார்கள். புதிய புதிய தொழிலை, தொழில் யுக்தியைக் கண்டுபிடிப்பார்கள். பல தொழில் வித்தகர்கள். குறைந்தது நூறு பேரை வைத்து வேலைசெய்பவர்களுக்கு ஜாதகத்தில் 11-ஆமிடம் சாதகமாக இருக்கும்.
உபஜெய ஸ்தானமான 11-ஆம் பாவகத்தின்முலம் பல்வேறு வகையில் தனப்பிராப்தி, சொத்து சேருதல், எதிர் பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவை ஏற்படும். தேவைக்கு அதிகமாக பணம், பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11-ஆமிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒருசிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து பெறுவது 11-ஆமதிபதியின் தசை புக்திக் காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது.
பதினொன்றாம் அதிபதி மற்றும் 11-ல் நின்ற கிரகம் பலம்பெற்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள். அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கௌரவம் உண்டு. தொட்டதெல்லாம் பொன்னாகும்.
கூட்டுத் தொழில் வெற்றி தரும்.
அதிகமான ஆசைகளும் எதிர் பார்ப்புகளும் இருக்கும் குடும்பம் அமைந்தபிறகு பணவரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த
11-ஆம் பாவகம்
பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5-ஆம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ள லாம். அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர் களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப்பெரிய பணத்தை, வாழ்வா தாரத்தை பாதிக்கக்கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள். பணம் யாருக்கெல்லாம் வேலை செய்கிறதோ அவர்கள் ஜாதகத் தில் 11-ஆமதிபதி மிகச் சுபத்துவத் துடன் இயங்கும். உலகிலுள்ள அனைத்துவிதமான தொழிலையும் முயற்சி செய்வார்கள். புதிய புதிய தொழிலை, தொழில் யுக்தியைக் கண்டுபிடிப்பார்கள். பல தொழில் வித்தகர்கள். குறைந்தது நூறு பேரை வைத்து வேலைசெய்பவர்களுக்கு ஜாதகத்தில் 11-ஆமிடம் சாதகமாக இருக்கும்.
உபஜெய ஸ்தானமான 11-ஆம் பாவகத்தின்முலம் பல்வேறு வகையில் தனப்பிராப்தி, சொத்து சேருதல், எதிர் பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவை ஏற்படும். தேவைக்கு அதிகமாக பணம், பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11-ஆமிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒருசிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து பெறுவது 11-ஆமதிபதியின் தசை புக்திக் காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது.
பதினொன்றாம் அதிபதி மற்றும் 11-ல் நின்ற கிரகம் பலம்பெற்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள். அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கௌரவம் உண்டு. தொட்டதெல்லாம் பொன்னாகும்.
கூட்டுத் தொழில் வெற்றி தரும்.
அதிகமான ஆசைகளும் எதிர் பார்ப்புகளும் இருக்கும் குடும்பம் அமைந்தபிறகு பணவரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டுப் பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலில் சாதனை படைப்பார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள்.
சுருக்கமாக கௌரவத் தொழில் உண்டு.
லாப ஸ்தானம் கெட்டால் பொது வாழ்ககையில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள் வரும். தீய சகவாசத்தால் பெயர் கெடும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களால் பணத்தை சேமித்துவைக்கவே முடியாது. பணபர ஸ்தானத்திற்கு கேந்திர, திரிகோணாதிபதிகள் சம்பந்தம் இருப்பது மிகமிகச் சிறப்பு. லக்னரீதியான அசுப கிரகங்களின் சம்பந்தம் இருப்பது பொருளாதாரத்தில் தன் நிறைவற்ற நிலையைத் தரும்.
பொருள் காரகத்துவரீதியாக 10-ஆமிடமான தொழில் ஸ்தானத் திற்கு 2-ஆமிடம் 11-ஆமிடமான லாப ஸ்தானம்.
2-ஆம் பாவத்திற்கு 10-ஆம் பாவகமே 11-ஆமிடமான லாப ஸ்தானம். 5-ஆம் பாவகத்திற்கு 7-ஆமிடமே 11-ஆமிடமான லாப ஸ்தானம். 5-க்கு சம சப்தமம் 11-ஆமிடமான லாப ஸ்தானம். 5-ல் நிற்கும் அனைத்து கிரகங்களுமே 11-ஆமிடமான லாப ஸ்தானத் தைப் பார்க்கும். 11-ல் நிற்கும் கிரகம் 5-ஆமிடத்துடன் சம்பந்தம் பெறும்.
5, 7 அல்லது 5, 11 சம்பந்தம் விருப்ப விவாகம். இதை மேலும் புரியும்படி கூறினால் ஒருவர் அதிர்ஷ்டம் மற்றும் தொழிலில் அதிகம் சம்பாதித்தால் 5, 11 சம்பந்தம் உள்ளது எனப் பொருள். பொருள் காரகத்துவரீதியாக வாழும் காலத்தில் துயரத்தை அனுபவித்து பிள்ளைகள் காலத்தில் வாரிசுகளால் நல்ல வசதியான வாழ்க்கையை அனுபவித்தால் அந்திமக் காலத்தில் 5-ஆம் பாவகம் சுபத்துவம் பெறுகிறது என்பதை உணரலாம். தங்கள் வசதி, வாய்ப்பிற்குப் பொருத்தமே இல்லாத இடத்திலிருந்து மருமகன், மருமகள் கிடைத்தால் காலம் தாழ்ந்து 11-ஆமிடம் பலன் தருகிறது. மருமகன், மருமகள் தயவில் வாழ்பவர்களுக்கும் 11-ஆம் பாவகம் பலன் தரும். முதல் திருமணத்தில் தோல்வியடைந்து மகிழ்ச்சியான மறு திருமண வாழ்க்கை வாழ்பவர்களுக்கு 11-ஆம் பாவகம் சுபத்துவம் மிகுந்து இருக்கும்.
வசதி குறைந்த பெண் பணக்கார வீட்டிற்கு மருமகளாகச் செல்வதும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பையன் தொழில் அதிபரின் வீட்டு மருமகனாவதும் 11-ஆம் பாவகமாகும். காதல் திருமண வெற்றியும் 5, 11-ஆம் பாவக சம்பந்தம் இருந்தால் மட்டுமே நடக்கும். காதல் திருமணத்தில் வெற்றியடைந்தவர்களுக்கு பெரும் பொருள் சேரும்.
7-ஆம் பாவகம்
கணவருக்கு மனைவியையும் மனைவிக்கு கணவரையும் குறிக்கும் பாவகம் 7. இந்த பாவகத்தை 11-ஆம் அதிபதி பார்வை செய்ய வாழ்க்கைத் துணை வழியிலான தனச் சேர்க்கை, பணப் புழக்கம் உண்டாகும். மனைவி வழியிலான தொழில் ஆதரவு, வேலையில் பதவி உயர்வு, அதிர்ஷ்டம், சீரான பணப் புழக்கத் தைத் தரும். குறிப்பாக 7-ஆம் அதிபதி 2, 9, 10, 11-ஆமதிபதியோடு இணைந்து 2, 3, 4, 5, 9, 10, 11-ஆமிடங்களில் இருப்பதும் ஐந்தாம் அதிபதியோடு ஏழாம் அதிபதி இணைந்து 11-ஆமதிபதி பார்வை பெறுவது, ஐந்தாம் இடத்தில் ஏழாம் அதிபதி இருப்பது, ஏழாமிடத்தில் ஐந்தாம் அதிபதி இருப்பது போன்றவை திருமணத்திற்குப் பிறகு மனைவி வந்தபிறகான அதிர்ஷ்டம் காரணமாக தொழில், உத்தியோகம் முன்னேற்றத்தைத் தரும்.
2, 7, 11-ஆம் பாவக சம்பந்தம் குடும்பஸ்தானமான இரண்டாம் மிடத்திற்கு 7, 11-ஆமதிபதி சம்பந்தம் இருந்தால் வாழ்க்கைத்துணை வசதியானவாரக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமையும். திருமணத்திற்குப் பிறகு பொருளாதாரம் உயரும். வசதி வாய்ப்பு பெருகும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் லாபம் ஈட்டுவார்கள். தம்பதிகள் நல்ல அதிர்ஷ்டம், வசதி மிகுந்தவராக வாழ்வார்கள்.
5, 7, 11-ஆம் பாவக சம்பந்தம் எந்த லக்னமாக இருந்தாலும் ஏழுக்கு டையவன் ஐந்தாமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் நின்றால் காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.
திருமணத்திற்குப் பிறகு அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். 5, 7, 11-ஆம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாதவரை எந்த தொந்தரவும் இருக்காது. நல்ல வசதியான சமுதாய அந்தஸ்து நிறைந்த வாழ்க்கை, தொழில், உத்தியோகம், பங்குச் சந்தை, ஆதாயம், பிள்ளைகள்மூலம் வருமானம், பூர்வீகச் சொத்தால் வருமானம் போன்ற நன்மைகள் ஏற்படும். நிலைத்து நிற்கும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தர்ம காரியங்கள்மூலம் தமது வாரிசுகளுக்கு புண்ணியப் பலனைச் சேர்த்து வைப்பார்கள்.
7, 11-ஆம் பாவக சம்பந்தம் ஏழாம் அதிபதிக்கு லாப ஸ்தான சம்பந்தம் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரிகளாப் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கைத் துணை உண்டு. வருமானம் எந்த வழியில் வருகிறதென்று உணர முடியாதவகையில் குபேர சம்பத்து கிடைக்கும். 7-ஆம் அதிபதி பலம் குறைந்திருந்தால் இருதார தோஷத்தை ஏற்படுத்திவிடும். கூட்டுத் தொழிலுக்கு உகந்த கிரக அமைப்பு. பொருளாதார அந்தஸ்து மிகுந்தவர்கள். சிலருக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்த பிறகும் அதிர்ஷ்டம் கூடும்.
வாழ்க்கைத் துணையை, மனைவியைக் குறிக்கும் கிரகமான சுக்கிரன் ஆணின் ஜாதகத்தில் 2, 4, 5, 9, 10, 11 பாவகத்தில் நட்பு வலுவோடு இருக்கவேண்டும். 1, 4 10-ஆமிடங் களில் ஆட்சி, உச்சம் பெற்று தனித்த சுக்கிர னாக இருந்து பிற சனி, செவ்வாய் கிரகப் பார்வையின்றி இருக்கவேண்டும். இத்தகைய அமைப்பை மாளவியா யோகம் என்று அழைக்கப்படும், இத்தகைய அமைப்பு இருந் தால் மனைவி வந்தபிறகு ஜாதகருக்கு வண்டி வாகன யோகம் அதன்மூலமான வருமானம், தொழில் முன்னேற்றத்தைத் தரும்.ஆடம் பரமான பொருட்களால் வீடு நிரம்பி சந்தோஷ மான சூழல் நிலவும்.
பொருளாதாரம் மனித வாழ்க்கைக்கு மிக அவசியம். திருமணத்திற்குப் பிறகே மனித வாழ்க்கையின் அனைத்து சம்பவங்களையும் பொருளாதாரம் நிர்ணயம் செய்கிறது. அத் தகைய பொருளாதாரம் மனைவிமூலம் கிடைத்தால் அந்த மனிதன் அதிர்ஷ்டசாலிதான். பிறப்புமுதல் இறப்புவரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக் கப்பட்டவை. அப்படியிருக்க உழைப்பு, உழைப்பு என்று உண்ண, உறங்க நேரமின்றி உழைப்பவர்களையும் பார்த்திருக்கிறோம்.
அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என உழைக்காமல் அதிர்ஷ்ட குதிரையை நம்பி வாழ்வைத் தொலைப்பவர்களையும் பார்க்கிறோம். உழைத்தவர்கள் எல்லாம் உயர்ந்துவிடவும் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள் அதிர்ஷ்டத்தைத் துரத்துவதை ஆயுள் முழுவதும் நிறுத்தப்போவதுமில்லை. மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ் டத்தின்மேல் தனி ஆர்வம் உண்டு. மாட மாளிகையில் வாழ்பவர்கள் முதல் பிளாட் பாரத்தில் வசிப்பவர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின்மேல் தனி விரும் பம்... தனி மரியாதை.... தனி கவனம் உண்டு.
பரிகாரம்
அஷ்டமி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் ஸ்ரீ சொர்ணா கர்ஷண பைரவர் வழிபாடு செய்தால் லாப ஸ்தானம் நல்ல பலன் தரும்.
சத்திய நாராயணர் பூஜை செய்பவர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் உயரும்.
வியாழக்கிழமை மாலை 5.00- 6.00 மணிக்குள் ஸ்ரீ லட்சுமி குபேர வழிபாடு தொடர்ந்து செய்வதால் பெரும் செல்வம் கிடைக்கும்.
வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மச்ச எந்திரம் வைத்து வழிபட தனாகர்ஷன சக்தி அதிகரித்து பொருளாதார மேன்மையை அடையமுடியும்.
இன்றைய போட்டி சூழ்ந்த உலகில் மக்கள் தங்களை சிறப்பாக நிரூபிக்க தங்கள் செல்வத்தை வைத்திருப்பது முக்கியம் என்று கருதுகின்றனர். பணத்தால் எல்லா மகிழ்ச்சியையும் வாங்க முடியும் என்று அவன் நினைக்கிறான். அது தவறு. பணத்துடன் குடும்பம், குடும்ப உறுப்பினர் களின் அன்பும் இருந்தால் மட்டுமே வாழ்க்கை அழகாக இருக்கும்.
(முற்றும்)
செல்: 98652 20406