Advertisment

உயர்வின் பாதையில் உத்திரட்டாதி! (26) -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/way-rise-26-melmaruvathur-s-kalaivani

னித வாழ்வியல் பயணத்தில் ஒவ்வொரு நொடியையும் தீர்மானிக்கும் கிரகங்களுக்கு பாதையினைப் பகுத்து வழங்குகின்ற 27 நட்சத்திரங்களின் வரிசையில், 26-ஆவது நட்சத்திரம் உத்திரட்டாதி நட்சத்திரமாகும்.

Advertisment

ஆயுள் காரகன், கர்ம காரகன் என்று போற்றப்படும் சனியின் இறுதி நட்சத்திரமாகும்.

Advertisment

இந்த நட்சத்திரம் காலபுருஷனுக்கு 12-ஆம் வீடான குருவின் ஆளுமைக்குரிய மீன ராசியில் தனது நான்கு பாதங்களையும் பதித்து அமர்ந்துள்ளது.

இந்திய பஞ்சாங்க முறையிலும், வானிய-லும், சந்திரன் உத்திரட்டாதி நட்சத்திர கோணப் பிரிவுக்குள் பயணிக்கும் காலம், உத்திட்டாதி நட்சத்திரத்திற்குரிய காலமாகும், இவர்கள் தங்களை மீன ராசி என்றும் உத்திரட்டாதி நட்சத்திரம் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த நட்சத்திரத்தைக் காணும்பொழுது கட்டில் கால் போன்றும், காமதேனு போலவும் காட்சியளிக்கும். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் இது ஒற்றைக் கொம்புடன்கூடிய குதிரையின் வடிவமாக இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

உத்திரட்டாதி என்பது தமிழ்ப் பெயர்தான். பல தமிழ் நிகண்டுகளில் மன்னன், அறிவன் நாள், பிற்கொழுங்கோல், என்றும்; சமஸ்கிருதத்தில் உத்தர பத்ராபதா என்றும் அறியப்படுகிறது.

ஒற்றைக் காலைத் தூக்கி ஆடும

ஒற்றைக் காலைத் தூக்கி ஆடும் நடராஜப் பெருமானின் இடது பாதத்தையும், அந்தப் பாதத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் பராசக்தியையும் குறிக்கும் நட்சத்திர மாகும். இதுவொரு சிவசக்தி கலவை நட்சத்திரமாகும். பசுவின் பின்னங்கால் என்று பெரும்பாலும் கூறுகின்றனர். இதன் அதிதேவதை பிரம்மா என்றும், அகிர் புத்திரன் என்றும்- அதாவது கருட பகவான் என்றும் கூறப்படுகிறது.

இதன் ராசிநாதன் குருவாகவும், நட்சத்திர நாதன் சனியாகவும், நவாம்ச நாதர்களாக உத்திரட்டாதி ஒன்றாம் பாதமென்றால் சூரியனாகவும், உத்திரட்டாதி இரண்டென் றால் புதனாகவும், மூன்றென்றால் சுக்கிர னாகவும், நான்கென்றால் செவ்வாயாகவும் அமையப்பெறும்.

ff

இந்த நட்சத்திரம் சந்திரனின் கர்மப் பதிவைக் கொண்ட நட்சத்திரமாகும்.

சுகங்களையும் செல்வத்தையும் அள்ளி வழங்கும் கிரகமான சுக்கிரன் இந்த நட்சத்திரத்தில்தான் உச்சமடைகிறார். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதுமே சுகபோகங்களுடனும், செல்வ வளத்துடனும் பயணிப்பார்கள். அழகியல் அழகு சார்ந்த உணர்வுகளோடு இவர்களின் வாழ்க்கைப் பயணம் அமைந் திருக்கும்.

இந்த நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாகக் கொண்டவர்களின் வம்சாவளிகளில் நீரினால் கண்டம் ஏற்பட்டவர்களும், ஊனமுற்றவர்களும் இருப்பார்கள்.

சுக்கிரனை உச்சமடைய வைக்கும் தகுதிபெற்ற நட்சத்திரம் என்பதால் இவர்களுக்கு இயல்பிலேயே அதிர்ஷ்டம் அருகி-ருக்கும். அனைத்துவிதமான யோகங்களும் இவர்களுக்குண்டு. கலைகளில் ஆர்வம், ஆன்மிகத்தில் தேர்ச்சி, இணைபிரியா தன்மை, இளமை, இனிமை போன்ற சூழ்நிலைகள் இவர்களைப் பின்தொடரும்.

இளமையில் பெரும் சுகபோகங்களை அனுபவிக்கும் இந்த நட்சத்திரம் நடுத்தர காலத்தில் சற்று நெருடலான சூழ்நிலையை சந்திக்க வேண்டியதிருக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரம் உட-ல் காமம் சற்று மிகுதியான நட்சத்திரம் என்று நிகண்டுகளில் கூறப்படுகின்றது. சுகபோகங்களுக்காக சேமிப்பைக் கரைக்கும் அளவுக்குக்கூட இவர்கள் இருப்பார்கள்.

புகழ், அன்பு காட்டுவதில் கனிவு, உயர் சிந்தனை என்ற எல்லா நற்குணங்களும் ஒருங்கிணைந்தவர்கள் இவர்கள்.

இந்த நட்சத்திரக்காரர்கள் சட்டம் பயில்பவர்கள், வானவியல், ஜோதிடம், மருத்துவம், லங்கிப் பணி, பள்ளி, கல்லூரி, கட்டுமான நிறுவனம், சீட்டு பிடிப்பது, பதிப்பகம், வெளியூர், வெளிநாடுகளுக்கு ஆட்கள் அமர்த்துவது போன்றவற்றின்மூலம் பல யோகங்களை அனுபவிக்கும் நட்சத்திர மாகும்.

வயது கடந்தபிறகு துறவறம் மேற்கொள்ளும் தன்மை இந்த நட்சத்திரத் தில் பிறந்தவர்களுக்கு மிகுதியாகக் காணப் படுகிறது.

அடிக்கடி பயணம், நீர் தொடர்பான பாதிப்புகள் போன்றவை இவர்களுக்கு இருக்கும்.

நீர் தொடர்பான பாதிப்புகள் எனும்பொழுது கருப்பை, சிறுநீரகம், போன்ற உறுப்புகளிலும் சிற்சில பாதிப்புகளை இவர்களின் ஆறு, எட்டாம் தசா புக்திக் காலங்களில் அனுபவிப்பார்கள்.

உத்திரட்டாதி ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சூரியனின் வீடான சிம்மத்தில் அமையும். இவர்களுக்கு அரசுத் துறை, முதல்நிலை பதவி, அரசாங்கத்தில் மேன்மை பெறுவது, மருந்துப் பொருட்கள் விற்பனை, உயர்கல்வி போன்றவை எளிதில் கிடைக்கும்.

உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் புதனின் வீடான கன்னி ராசியில் அமையப்பெறும், இந்நிலையானது உயர் பதவி, அந்நிய தேசத்தில் வியாபாரம், அரசு கான்ட்ராக்ட்- அதாவது பாலம் கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற நிலைகளும், அந்நிய தேசத்திற்கு ஆட்களை அமர்த்தும் பணியும், அரசாங்கத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்புகளின்மூலம் பணம் ஈட்டுவது போன்ற சூழ்நிலைகளின்மூலம் இவர்கள் சிறப்புறுவதைக் காணமுடிகிறது.

உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவம்ச வீட்டில் சுக்கிரனின் வீடான துலாத்தில் அமையப்பெறும். இந்நிலையானது கலைத்துறை, கலையின்மூலம் பொருட்கள் ஈட்டுவது, நிதித்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், அரசு அலுவலர்கள், மாட-ங், பியூட்டீஷியன், ஆடை அலங்கார வடிவமைப்பு, ஆர்க்கிடெக்ட் போன்ற துறைகளில் தங்களை சிறப்புர அமைத்துக்கொள்வார்கள்.

உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் அமையப்பெறும். இந்நிலையானது பொறியியல் அறிவில் தேர்ச்சி ஏற்படும். இவர்கள் கட்டுமானப் பணி, கனரக வாகனம், ரியல் எஸ்டேட், வட்டித் தொழில், நகை சம்பந்தமான தொழில்கள், ஏலச்சீட்டு, கல்வி நிறுவனம், சமையல் சார்ந்த தொழில் போன்றவற்றின்மூலம் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வார்கள்.

இந்த நட்சத்திரத்தின் வடிவமாக ஒற்றைக் கொம்புடன்கூடிய குதிரையையும், காமதேனுவையும், குறிப்பிடுகின்றனர். யூனிகான் என்று கூறப்படும் ஒற்றைக் கொம்புடன்கூடிய வெள்ளை குதிரை அல்லது காமதேனுவின் உருவப்படத்தை லோகோவாக அமைத்துக்கொள்வதன் மூலமாகவும், பணியில் செய்யும் இடங்களிலும், தொழில் கூடங்களிலும், இந்த சின்னத்தை வைத்திருப்பதன்மூலமும் தொழில் மற்றும் பணியில் செல்வ நிலையை உயர்த்தமுடியும்.

வணங்கவேண்டிய தெய்வம்: குரு தட்சிணாமூர்த்தி.

வணங்கவேண்டிய விருட்சம்: வேம்பு.

அணியவேண்டிய ரத்தினம்: சனியின் ஆளுமைகொண்ட நீலக்கல்.

(அடுத்த இதழில் ரேவதி)

செல்: 80563 79988

bala020623
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe