ருவர், எதிர்பாராமல் பல நோய்களால் தாக்கப்படலாம். பல விஷக் கிருமிகள் அவரைத் தாக்கலாம். இதற்கு மருத்துவரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், அவரின் ஜாதகத்திலிருக்கும் சில கிரகங்களும் காரணங்களாக இருக்கின்றன.

ஜாதகத்தில் மாரகாதிபதியின் தசை நடக்கும் போது அந்த மனிதரை நோய் தாக்கலாம். அவரின் ஜாதகத்தில் ராகு பகவான் 6, 8, 12-ல் இருந்து, அந்த ராகுவுடன் சந்திரன் இருந்தால், அதன் தசாகாலத்தில் அவரை நோய்க் கிருமிகள் தாக்கும். ஒருவரை நோய்க்கிருமி தாக்குவதற்கு ராகுதான் காரணம் என சாஸ்திரம் கூறுகிறது. அந்த ராகு எந்த இடத்தில் இருக்கிறது, எந்த கிரகத்துடன் இருக்கிறது என்பதைப் பார்த்து, அந்த நோய்க்கிருமியின் பாதிப்பு எந்தளவிற்கு இருக்கும் என்பதைக் கூறிவிடமுடியும்.

ஜாதகத்தில் 6-ஆம் அதிபதியையும், 11-ஆம் அதிபதியையும் பார்த்து, ஜாதகரை ஜலதோˆம் எந்தளவிற்கு பாதிக்கும் என்பதைக் கூறிவிட முடியும்.

ஜாதகத்தில் 6-ல் சனி, 11-ல் சந்திரன் இருந்தால், அவருக்கு அடிக்கடி ஜலதோˆம் பிடிக்கும்.

Advertisment

11-ல் இருக்கும் சந்திரன் ஹிருதயக் காரகனாக இருந்து, அந்த நோயை உண்டாக்கும்.

அந்த சந்திரனிலிருந்து 8-ல் இருக்கும் சனி வயிற்றில் செரிமானக்கோளாறை உண்டாக்கும்.

அதனால், அந்த ஜாதகர் வெளியே செல்லும்போது சூழ்நிலை சரியில்லாமலிருந்தால் நோய்க்கிருமி களால் பாதிக்கப்படுவார். அதைத் தொடர்ந்து ஜலதோˆம், ஜுரம், வயிற்றில் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்.

Advertisment

ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், அவருக்கு நோய்க் கிருமிகளின் தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. சந்திரன் 6, 8, 12-ல் இருந்தால், ஜாதகருக்கு ஜலதோˆம் உண்டாகும்.

ஜாதகத்தில் ராகு பகவான் ரிஷபத்தில் இருந்தால், அந்த ஜாதகருக்கு பிறந்த நேரத்திலிருந்தே தொண்டையில் 'டான்ஸில்' என்னும் நோயின் பாதிப்பு இருக்கும். அந்த நோயின் கிருமியால் அவருக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். அதே ஜாதகத்தில் சனி 6 அல்லது 8-ல் இருந்தால், அவருக்கு இளம்வயதிலேயே வயிற்றில் புழு, பூச்சி இருக்கும். சிலருக்கு இதயத்தில் நோய்க் கிருமிகளின் பாதிப்பிருக்கும்.

ஒருவருக்கு ராகு தசை நடக்கும்போது, அந்த ராகு 12-ல் இருந்து, அந்த ஜாதகத்தில் சந்திரன் 8-ல் இருந்து, ராகு தசையில் சந்திர புக்தி நடக்கும்போது அவருக்கு நோய்க்கிருமி களின் பாதிப்பு இருக்கும். எதிர்பாராமல் மருத்துவமனையில் சேரவேண்டிய சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு நுரையீரல் தொற்றுண்டாகும்.

ஜாதகத்தில் சந்திர தசையில் சனி புக்தி நடக்கும்போது நோய்க்கிருமியின் தாக்குதல் உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது.

sukiran

ஒருவர் வெளியூர் அல்லது வெளிமாநிலம் அல்லது வெளிநாடு செல்லும்போது, அவரின் ஜாதகத்தில் ராகு, சந்திரன், சனி சரியில்லாமலிருந்தால், அவர் சென்றிருக்கும் இடத்தில் நோய்க்கிருமியின் பாதிப்பு உண்டாகும். காய்ச்சல் வருவதற்கும் வாய்ப் பிருக்கிறது. அந்த ஜாதகத்தில் சந்திரன் விருச்சிக ராசியில் இருந்து, அந்த சந்திரனுக்கு 6, 8, 12-ல் சனி பகவான் இருந்தால், அவருக்கு அந்த சமயத்தில் நோயின் பாதிப்பிருக்கும்.

ஜாதகத்தில் சந்திரன், கேது அல்லது சந்திரன் ராகுவுடன் இருந்து, அதே கோட் சாரம் மீண்டும் வரும்போது, அந்த ஜாத கருக்கு 8-ஆம் அதிபதி அல்லது 12-ஆம் அதிபதியின் தசை நடந்தால், அவருக்கு அந்த சமயத்தில் நோய்த்தொற்று உண்டாகும். ஜுரம் வரும்.

ஜாதகத்தில் சந்திரனும் சனியும் 6, 8-ல் இருந்தால், அந்த ஜாதகருக்கு நோய்த் தொற்றுண்டாகும். சிலருக்கு காய்ச்சல் வரும்.

ஜாதகத்தில் 7-ல் சனி, 12-ல் செவ்வாய் அல்லது லக்னத்தில் செவ்வாய், 7 -ல் சனி இருந்து, அந்த ஜாதகத்தில் சந்திரன் நீசமாக 6, 8 அல்லது 12-ல் இருந்தால், அந்த ஜாத கருக்கு நோய்க்கிருமியின் தாக்குதல் உண்டாகும்.கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படுவார்.

ஒருவரின் வீட்டில் காற்று சரியாக வராமலிருந்து, சூரிய வெளிச்சம் சரியாக வராமலிருந்தால், அந்த வீட்டில் நோய்க் கிருமியின் தாக்குதல் இருக்கும்.

வீட்டின் வடகிழக்கில் அவசியமற்ற பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு நோயின் தாக்குதல் இருக்கும்.

வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு அல்லது கழிவறை இருந்தால், அங்கு வசிப்பவர்களுக்கு நோய் உண்டாகும்.

நோய்க்கிருமிகளிடமிருந்து தப்பித்து, நல்ல உடல்நலத்துடன் இருப்பதற்கு இந்தப் பரிகாரங்களைச் செய்யவேண்டும்...

காலையில் எழுந்தவுடன் சூரியனை வழிபடவேண்டும். ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை வாசிக்கவேண்டும்.

வெந்நீரைத்தான் பருகவேண்டும்.

நீரில் உப்பு போட்டு தரையைச் சுத்தம் செய்யவேண்டும்.

இரவில் சாப்பிட்டபிறகு பாத்திரங்களைக் கழுவி வைக்கவேண்டும்.

ராகு- கேதுவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்கவைத்து காலையிலும் மாலையிலும் பருகவேண்டும்.

ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவர வேண்டும்.

குலதெய்வத்தை வழிபடவேண்டும்.

மகாமிருத்யஞ்ஜய மந்திரத்தைக் கூறவேண்டும்.

தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும்.

கறுப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது.

செல்: 98401 11534