Advertisment

சுபிட்சமான மணவாழ்வு பெற வழி! - க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/way-prosperous-marriage-ka-gandhi-murugeshwar

ணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் திருமணம் முக்கியமான நிகழ்வு. வாழ்க்கையில் திருமணத்தை இன்னொரு பிறவி என்றுகூட சொல்லலாம். கால்யாணத்திற்கு முன்புவரை நன்றாக இருந்த சிலர், திருமணம் முடிந்தபின் படாதபாடு படுவார்கள். பலருக்குத் திருமணம் நடந்தபின் திடீர் முன்னேற்றம், பெயர், புகழ், வாழ்க்கைத்தரம் போன்றவை எண்ணிப் பார்க்கமுடியாத யோகத்தைத் தந்துவிடும். ஆதலால் சரியான வரனைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளவேண்டும்.

Advertisment

mm

நாம் விரும்புகிறவர்களைவிட நம்மை விரும்புகிறவர்களைத்தான் திருமணம் செய்யவேண்டுமென்று சொல்வதற்குக் காரணம், இல்லறத்தில் ஒருவராவது அன்போடு இருக்கவேண்டும். அன்பில்லாத இல்லறம் இந்தப் பிறவியைக் கெடுத்துவிடும். தாலிகட்டும் மணநாள்வரை அதற்கான அவகாசம் உண்டு. பிடிக்காத ஏதாவது சிறிய சந்தேகம் இருந்தால்கூட உடனடியாகத் திருமணத்தைத் தவிர்த்தல் நலம். இதில் நம் வாழ்க்கை மட்டுமல்ல; இன்னொருவர் வாழ்க்கையும் சேர்ந்துள்ளது.

"இன்னார்க்கு இன்னார் என்கிற விதியின் அடிப்படையில்தான் வரன் அமையுமென்றால், திருமணத்திற்கான எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை; ஜாதகமோ, பொருத் தமோ பார்க்கவேண்டியதில்லை; தானாகத் தேடி வருமென்று இருக்கலாமே' என்னும் அசட்டுத் தனமான கேள்வியைக் கேட்பதால் யாருக் கென்ன லாபம்?

ணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்கும் திருமணம் முக்கியமான நிகழ்வு. வாழ்க்கையில் திருமணத்தை இன்னொரு பிறவி என்றுகூட சொல்லலாம். கால்யாணத்திற்கு முன்புவரை நன்றாக இருந்த சிலர், திருமணம் முடிந்தபின் படாதபாடு படுவார்கள். பலருக்குத் திருமணம் நடந்தபின் திடீர் முன்னேற்றம், பெயர், புகழ், வாழ்க்கைத்தரம் போன்றவை எண்ணிப் பார்க்கமுடியாத யோகத்தைத் தந்துவிடும். ஆதலால் சரியான வரனைத் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளவேண்டும்.

Advertisment

mm

நாம் விரும்புகிறவர்களைவிட நம்மை விரும்புகிறவர்களைத்தான் திருமணம் செய்யவேண்டுமென்று சொல்வதற்குக் காரணம், இல்லறத்தில் ஒருவராவது அன்போடு இருக்கவேண்டும். அன்பில்லாத இல்லறம் இந்தப் பிறவியைக் கெடுத்துவிடும். தாலிகட்டும் மணநாள்வரை அதற்கான அவகாசம் உண்டு. பிடிக்காத ஏதாவது சிறிய சந்தேகம் இருந்தால்கூட உடனடியாகத் திருமணத்தைத் தவிர்த்தல் நலம். இதில் நம் வாழ்க்கை மட்டுமல்ல; இன்னொருவர் வாழ்க்கையும் சேர்ந்துள்ளது.

"இன்னார்க்கு இன்னார் என்கிற விதியின் அடிப்படையில்தான் வரன் அமையுமென்றால், திருமணத்திற்கான எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை; ஜாதகமோ, பொருத் தமோ பார்க்கவேண்டியதில்லை; தானாகத் தேடி வருமென்று இருக்கலாமே' என்னும் அசட்டுத் தனமான கேள்வியைக் கேட்பதால் யாருக் கென்ன லாபம்? அவரவர் வாழ்க்கையை, வாழ்க்கைத் துணையை அவரவர்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். சுயமாகத் தேர்ந் தெடுக்க முடிந்தவர்களைவிட இயலாத வர்கள்தான் ஜாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து தற்காத்துக்கொள்கிறார்கள்.

தாமதத் திருமணம் ஏன் நடக்கிறது? எந்தவிதமான தோஷம்? அதற்கான பரிகாரம் என்ன என்பதைத் தெரிந்து வாழ்க்கைத்துணையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

களத்திர ஸ்தானம்

திருமணம் என்றாலே ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாமிடத்தைப் பார்ப்பார்கள். ஏழாமிடத்தில் இருக்கும் கிரகம், ஏழாமிடத்தைப் பார்த்த கிரகம், ஏழாமதிபதி நின்ற, அதனுடன் இணைந்த, பார்த்த கிரக அடிப்படையில் பார்க்கவேண்டும். பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது மட்டுமல்லாமல், சுப கிரகங்களான சந்திரன், சுக்கிரன், புதன், குருவும்கூட சிலருக்குத் திருமணத்தைத் தடுக்கும். 2, 4, 5, 7, 8, 9-ஆமிடங்களையும், ஜாதகப் பொருத்தம், தோஷங்களைப் பார்த்தும் திருமண செய்யவேண்டும்.

திருமணத் தாமதத்திற்குக் காரணங்கள்

ராகு- கேது தோஷம்

லக்னத்திற்கு 2-ல் குடும்ப ஸ்தானத்தில் கேது, ராசிக்கு ஏழில் கேது இருப்பது கடுமையான நாக தோஷம். லக்னத்திற்கு எட்டில் சந்திரன், ராகு இணைவு, மாங்கல்ய ஸ்தானத்தில் கிரகண தோஷம்- இது திருமணம், குடும்ப வாழ்க்கை, வருமானத் தைக் கெடுக்கும். பொதுவாக 2, 4, 7, 8-ஆமிடங்களில் ராகு- கேதுக்கள் இருப்பது, இருக்கும் இடத்தைக் கெடுத்து தீயபலனைத் தரும். குரு பார்வை மட்டுமே கெடுபலன் தராமல் தாமதத் திருமணத்தைத் தந்து தோஷநிவர்த்தியைத் தரும்.

செவ்வாய் தோஷம்

லக்னம், சந்திரன், சூரியனுக்கு 2, 4, 7, 8-ல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம். பெண்களுக்கு மாங்கல்ய அதிபதி செவ்வாய் கன்னியில், செவ்வாய் ஆறில் மறைவு, விரயாதிபதி குருவுடன் இணைவது- கணவர் விரயத்தைத் தரும். கன்னிச் செவ்வாய் கடலையும் வற்றவைக்குமளவு நஷ்டம்- அதாவது களத்திர தோஷத்தையும் சிலருக்குத் தரும். திருமணம் நடக்காமல் செய்வதும், திருமணத்தைத் தடுத்து விரக்தியடைய வைப்பதும் செவ்வாய் தோஷத்தால்தான். செவ்வாய் தோஷமென்பது ஜாதகத்தின் குறையல்ல. குண வேறுபாடுதான். எல்லாம் உடனே நடக்கவேண்டுமென நினைப் பவர்களுக்கு தாமதத் திருமணமே தீர்வு. லக்ன அடிப்படையில் ஒரே குணம் கொண்டவர்களை இணைத்து வைப்பது சிறப்பு.

களத்திர தோஷம்

சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பெற்று சுக ஸ்தானத்தில் பலமடைவது கடுமை யான களத்திர தோஷம். ஏழாமிடம், ஏழாமதி பதி ஏதாவது ஒரு வகையில் பாதித்தாலும் களத்திர தோஷம் உண்டாகும். 8-ல் (மாங்கல்ய ஸ்தானத்தில்) சுக ஸ்தானாதிபதி சந்திரன் நீசம் பெற்று மறைந்தால் பருவ வயதில் சந்தோஷம் கிடைக்காது. திருமணத்தைத் தாமதப்படுத்தி, குரு பலமிக்க கோட்சாரத்தில் திருமணம் முடித்துவைத்தால் ஓரளவு பாதுகாக்க முடியும்.

பிதுர் தோஷம்

லக்னம், சந்திரன், சுக்கிரனுக்கு 2-ல் சூரியன் இருந்தால் பிதுர் தோஷமாகி, தந்தையில்லா திருமணம், கடமைக்காக, காலதாமதத் திருமணம் ஏற்படும். தந்தைக்குப் பிடிக்காத வரன் அல்லது ஜாதியில், தந்தை தலையிடாமல் திருமணம் செய்தால் தந்தையின் ஆயுளையும் பாதிக்காது. திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

புத்திர தோஷம்

ஐந்தில் சூரியன் ஆட்சிபலம் பெறுவது கடுமையான புத்திர தோஷம். தாமத குழந்தை பாக்கியம் தரும். தாமதமாக ஆண்வாரிசு ஏற்படும். புத்திரகாரகன் குரு ஆறில் மறைவது புத்திர தோஷம். நான்கில் கேது, ஐந்தாமதிபதி சூரியனுடன் தொடர்பு, சாரம் பெறுவது, கருக்கலைப்பு நடைபெற்று தாமதமாக குழந்தை பாக்கியம் தரும். ஐந்தாமிடத்திற்கு பாவகிரகங்கள் பலம் இருப்பது புத்திர தோஷத்தைத் தரும்.

காலசர்ப்ப தோஷம்

ராகு- கேதுவுக்குள் சுப கிரகங்கள் அடைபட்டால், காலசர்ப்ப தோஷம் ஏற்பட்டு சுபப் பலன்கள் அனைத்தையும் தாமதப்படுத்தும். வாழ்வின் முதல் பாதியில் ராகு- கேதுக்கள் தசை வந்தால் பல சோதனைகளைத் தரும். குடும்ப வாழ்க்கையையும் பாதிக்கும்.

இரண்டாமிடம் குடும்ப ஸ்தானத்தில் கேது இருப்பது குடும்பத்தைக் கெடுக்கும். நான்காமிட சுக்கிரன் சுகத்தைக் கெடுக்கும். ஐந்தாமிட சூரியன் புத்திர தோஷத்தையும், ஆறாமிட குரு குழந்தை பாக்கி யத்தையும் கெடுக்கும். ஏழாமிட சுக்கிரன், நான்கில் கேந்திராதிபதி தோஷத்தால் தாமதத் திருமணத் தையும், எட்டில் இருக்கும் சந்திரன், ராகு மாங்கல்ய தோஷத்தையும், சந்திரனுக்கு ஏழில் கேது சன்யாசி யோகத்தையும் திருமண விரக்தி யையும், பாக்கியாதிபதி குரு ஆறில் மறைவது தாமத நன்மையை யும் தருகிறது. அனைத்து தோஷங் களும் திருமண வாழ்க்கை யில் பாதிப்பைத் தரும்.

பரிகாரம்

அனைத்துவிதமான களத்திர தோஷத்திற்கும் தாமதத் திருமணமே மிகச்சிறந்த பரிகாரம். தவிர்க்கமுடியாத காரணத்தால் அமைந்துவிட்டால், திருமணம் முடிந்தபின் நல்ல நாள் பார்த்து, சம்மந்தப்பட்ட தசை நடக்கும் அல்லது குரு ஸ்தலத்தில் சென்று மறு மாங்கல்யம்- அதாவது மறுமணம் செய்து கொண்டால் கடுமையான களத்திர தோஷத்தைத் தவிர்க்க லாம். தாமதத் திருமணம் செய்பவர்களில் பலர், "இருந்திருந்து செய்கிறோம்; வயது குறைந்த அழகான பெண்ணை மணக்கவேண்டு'மென்று சொல்வது, இன்றைய சமூகப் பெண்களின் வாழ்க்கையில் திருமணத்திற்குப்பின் பல வகை பிரச்சினைக்குக் காரண மாகிவிடுகிறது. கிடைத்த பெண்ணோடு சந்தோஷமாக வாழ்வதைவிட்டு, ஏக்கம், எதிர்பார்ப்பின்படி திருமணம் செய்வது பாதிப்பையே தரும்.

வாழ்வின் ஒருமுறை செய்ய வேண்டிய திருமணத்தைப் பல முறை யோசித்து முடிவெடுத்துச் செய்வது வாழ்க்கையை சுபிட்ச மாக்கும்.

செல்: 96003 53748

bala111220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe