ஆண்டவன் அருள்பெற அகத்தியர் காட்டிய வழி! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/way-agathiyar-showed-get-blessings-lord-siddharthasan-sundarji-jeevanadi

னது சென்னை அலுவலகத்திற்கு சுமார் 28 வயதுடைய இளைஞர் ஜீவநாடியில் பலன்காண வந்தார்.

அவரை அமரவைத்து பிரசன்ன ஓலையை எடுத்துப் பார்த்தேன். அதில் "கடவுளின் கருணை எனக்குக் கிடைக்குமா?

அவர் என்னைக் காப்பாற்றுவாரா' என்று அறிந்துகொள்வதற்காக வந்துள்ளார் என்று தெரிந்தது.

எனக்கு அது சற்று ஆச்சரியமாக இருந்தது. இதுவரை என்னிடம் ஜீவநாடிப் பலன்காண வந்தவர்கள் குழந்தை பாக்கியம், திருமணம், கணவன்- மனைவி கருத்துவேறுபாடு, தொழில், வியாபாரம், அரசியல் பதவி, தேர்தலில் வெற்றி என இதுபோன்று இன்னும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகேட்டு வந்துள்ளனர். ஆனால் இவர் கடவுள் அருள் கிட்டுமா என்று வந்துள்ளாரே! இதுவரை கடவுள் அருளைத் தவமிருந்து பெற்றார்கள் என்றுதான் படித்திருக்கிறோம். நாடியில் கேட்க வந்தவரை இப்போதுதான் காண்கிறோம் என்று எண்ணிக்கொண்டு, அவரிடமே கேட்போம் என்றெண்ணி, ""நீங்கள் எதற்காக ஜீவநாடிப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்?'' என்றேன்.

""ஐயா, கடவுளின் அருள் எனக்குக் கிட்டுமா என்பதை அறிந்துகொள்ள வந்தேன்'' என்றார். ஜீவநாடியை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் அகத்தியர் தோன்றி பலன்கள்கூறத் தொடங்கினார்.

""இந்த மகனுக்கு எட்டு வயதாகும்போது இவனது தந்தை இறந்துவிட்டான். இவனது தாய் அந்தத் தெருவிலுள்ள சில வீடுகளில் வேலைசெய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் மகனை வளர்த்துவந்தாள். இவன் கல்வி கற்க வழியில்லாத நிலையில், இவர்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன், "வேதம் படித்தால் பிற்காலத்தில் அந்த தொழில் செய்து இவன் பிழைத்துக்கொள்

னது சென்னை அலுவலகத்திற்கு சுமார் 28 வயதுடைய இளைஞர் ஜீவநாடியில் பலன்காண வந்தார்.

அவரை அமரவைத்து பிரசன்ன ஓலையை எடுத்துப் பார்த்தேன். அதில் "கடவுளின் கருணை எனக்குக் கிடைக்குமா?

அவர் என்னைக் காப்பாற்றுவாரா' என்று அறிந்துகொள்வதற்காக வந்துள்ளார் என்று தெரிந்தது.

எனக்கு அது சற்று ஆச்சரியமாக இருந்தது. இதுவரை என்னிடம் ஜீவநாடிப் பலன்காண வந்தவர்கள் குழந்தை பாக்கியம், திருமணம், கணவன்- மனைவி கருத்துவேறுபாடு, தொழில், வியாபாரம், அரசியல் பதவி, தேர்தலில் வெற்றி என இதுபோன்று இன்னும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகேட்டு வந்துள்ளனர். ஆனால் இவர் கடவுள் அருள் கிட்டுமா என்று வந்துள்ளாரே! இதுவரை கடவுள் அருளைத் தவமிருந்து பெற்றார்கள் என்றுதான் படித்திருக்கிறோம். நாடியில் கேட்க வந்தவரை இப்போதுதான் காண்கிறோம் என்று எண்ணிக்கொண்டு, அவரிடமே கேட்போம் என்றெண்ணி, ""நீங்கள் எதற்காக ஜீவநாடிப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்?'' என்றேன்.

""ஐயா, கடவுளின் அருள் எனக்குக் கிட்டுமா என்பதை அறிந்துகொள்ள வந்தேன்'' என்றார். ஜீவநாடியை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் அகத்தியர் தோன்றி பலன்கள்கூறத் தொடங்கினார்.

""இந்த மகனுக்கு எட்டு வயதாகும்போது இவனது தந்தை இறந்துவிட்டான். இவனது தாய் அந்தத் தெருவிலுள்ள சில வீடுகளில் வேலைசெய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் மகனை வளர்த்துவந்தாள். இவன் கல்வி கற்க வழியில்லாத நிலையில், இவர்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன், "வேதம் படித்தால் பிற்காலத்தில் அந்த தொழில் செய்து இவன் பிழைத்துக்கொள்வான்' என்று சொல்லி இவனை ஒரு வேத பாடசாலையில் சேர்த்துவிட்டான். இவனும் அங்குதங்கி வேதம், சாஸ்திரம், ஆகமம் என அனைத்தையும் தெளிவாகக் கற்றுத்தேறி முழுமையான வேதஞானம் பெற்றுவிட்டான்.

ஆனால் இவன் வேதம் படித்தானே தவிர, அதைத் தொழிலாகச் செய்து பிழைக்கும் சூட்சுமம் தெரியாதவனாக இருக்கிறான். அதற்கும் காரணம் இவனல்ல.

siddhar

இவன் வாழ்ந்துவந்த வாழ்க்கை முறைதான் காரணம்.

இவன் பிறப்பிலேயே ஏழை. தந்தையின் பாதுகாப்பில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழ்ந்தவன். இவனது தாய் வீடுகளில் வேலை செய்ததால், அந்தத் தெருவில் வசித்தவர்கள் இவன் தாயையும் இவனையும் அடிமைபோல் எண்ணினார்கள். இவன் வேத பாடசாலையில் படிக்கும்போதும், அவனுடன் படித்த மாணவர்கள் இவனை அடிமைபோல் நடத்தினார்கள். அதனால் இவனுக்கு தன்னம்பிக்கை, தைரியம் இல்லாமல் போய்விட்டது. இவன் தாய் இளம்வயதில் இவனிடம், "கடவுள் நம்மைக் காப்பாற்றுவார்;

அவர் நம்மைக் கைவிடமாட்டார்' என்று அடிக்கடி கூறுவாள். அவை இவன் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அதனால்தான், "கடவுள் என்னைக் காப்பாற்றுவாரா' என்று அறிந்துகொள்ள என்னைநாடி வந்துள்ளான்.

மைந்தனே, இந்த பூமியில் கடவுள்பற்றிய உண்மையைப் புரிந்துகொண்டவர்களுக்கும், கடவுளின் கருணையை அடைய சரியான வழிமுறைகளைத் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே அவர் கருணைபுரிந்து உதவிசெய்வார்; காப்பாற்றுவார் என்பதைப் புரிந்துகொள். வெறுமனே கடவுளை வணங்கியும் வாழ்த்தியும் பாடிக்கொண்டிருப்பவர்களுக்கு அவர் கருணைசெய்ய மாட்டார் என்பதையும் அறிந்துகொள்.

"வேத ஞானமும் அதைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் இருந்தும், என்னால் வாழ்வில் உயர முடியவில்லையே- வறுமை தீரவில்லையே' என்ற வருத்தம் உன் மனதில் உள்ளது. கடவுளின் கருணையைப் பெற்று நீ வாழ்வில் உயர்ந்திட சரியான முறைகளைக் கூறுகிறேன். அதை நடைமுறைச் செயல்களில் கடைப்பிடித்து வாழ்ந்தால் மட்டுமே கடவுள் காப்பாற்றுவார். முதலில் உன் மனதிலுள்ள தாழ்வுமனப்பான்மையை நீக்கிவிடு. எல்லாரையும்விட அறிவு, ஞானமுள்ளவன் என்பதை உன் மனதில் உருவாக்கு. நான் செய்யும் தொழிலை சிறப் பாக- நுணுக்கமாகச் செய்வேன் என்ற கொள்கையை உனக்குள் உருவாக்கிக்கொள். முதலில் நீ உன்னையே உயர்ந்தவனாக எண்ணிக்கொள்.

மகனே, நீ படித்த வேதம் ஒரு தொழிற்கல்வி. அதனை உனது வாழ்க்கைக்கான தொழிலாகச் செய். இந்த கலிகாலத்தில் கடவுளைப்பற்றி பிரசங்கம் செய்வது, கடவுள் சம்பந்தமான பொருட்களை வியாபாரம் செய்வது, ஹோம, யாக காரியங்கள் செய்வது என இதுபோன்ற கடவுள் சார்ந்த செயல்களைத் தொழிலாகச் செய்பவர்களைக் கடவுள் காப்பாற்றுவார்; அவர்களை வாழ்வில் உயர்த்துவார். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து முறையாகச் செய்துவாழ்ந்தால், அந்த தெய்வசக்தி தொழில்மூலம் உயர்த்திவைக்கும். நீயும் கடவுளின் கருணையைப் பெறுவாய். எந்தவிதமான உழைப்பும் ஆதாரமும் இல்லாமல், வெறுமனே கடவுள் காப்பாற்றுவார் என்று சோம்பேறியாய் இருந்து கடவுளை வணங்கிவந்தால் அவரது கருணை கிட்டாது.

மகனே, வேத பாடசாலையில் உன்னுடன் படித்த சிவஞானம், தீர்த்தகிரி, ருத்ரமூர்த்தி, நடராசன் ஆகிய நால்வரையும் உன்னுடன் சேர்த்துக்கொண்டு, நீங்கள் ஐவரும் நீங்கள் படித்த வேதத்தொழிலைச் செய்யத் தொடங்குங்கள். அதில் நீ படிப்படியாக வளர்ச்சிபெற்று பிரபலமடைவாய்.

மகனே, அகத்தியன் யான் கூறுவதை கவனமாக மனதில் வைத்துக்கொள். "எங்கள் கிராமத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டிவிட்டோம். ஆனால் அதற்கு கும்பாபிஷேகம் செய்யமுடியாமல் தடையாகிக்கொண்டே வருகிறது. நீங்கள் வந்து கும்பாபிஷேகம் நடத்தித் தாருங்கள்' என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உன்னைத் தேடிவந்து கேட்பார்கள். நீ அதற்கு ஒப்புக்கொள்.

உன் நண்பர்களுடன் சென்று அந்தக் கோவிலைப் பார்வையிட்டு, அந்தக் கோவிலின் தென்மேற்கு மூலையில் ஒரு மண்டபம் கட்டி, அதில் ஒரு சிவலிங்கத்தை வைத்து, கும்பாபிஷேக நாளன்று அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை செய்துவிட்டு, அதன்பிறகு கோபுர கலசங்களுக்கு நீரூற்றி கருவறை சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனை போன்ற அனைத்தையும் செய். கும்பாபிஷேகம் முடிந்தபிறகு நாள்தோறும் காலையில் அந்த தென்மேற்கு திசையிலுள்ள சிவலிங்கத்திற்கு முதல்பூஜை செய்துவிட்டு, அதன்பிறகு கருவறை சிவலிங்கத்திற்குப் பூஜைசெய்யவேண்டும் என்று கோவிலில் வழிபாட்டு முறையை ஏற்படுத்து. இதற்கான காரணத்தையும் கூறுகிறேன்.

அந்தக் கோவில் கட்டப்படுவதற்குமுன்பு, அதன் தென்மேற்கு மூலையில் பல நூற்றாண்டு களுக்குமுன்பு ஒரு சித்தர் இருந்தார். அது அந்த சித்தரின் பீடமாகும். இன்றும் அவரது சக்தியும் ஆன்மாவும் அங்கு சூட்சுமமாக உள்ளது. ஒரு குறுநில மன்னன் அந்த இடத்தில் இந்த சிவாலயத்தைக் கட்டி வைத்தான். காலப்போக்கில் அந்த சித்தர் சக்தி இருக்கும் தென்மேற்கு மூலையை குப்பைமேடாக்கிவிட்டார்கள். இதனால் அந்த ஆலயத்தின் சக்தி குறைந்துபோய் கோவிலும் பாழடைந்துவிட்டது. நீண்டகாலத்துக்குப்பிறகு கிராமமக்கள் ஒன்றுசேர்ந்து இப்போது அந்த சிவாலயத்தை செப்பனிட்டுக் கட்டிவிட்டார்கள். ஆனால் கும்பாபிஷேகம் செய்ய முயலும்போதெல்லாம் ஏதாவதொரு துர்சம்பவம் நடந்து தடையாகிவருகிறது. இந்த ரகசியம் யாருக்கும் தெரியாது. முதன்முதலில் உனது தொழில் சிவாலய கும்பாபிஷேகத்திலிருந்து தொடங்கட்டும். அதன்பின்னர் தொழில் விருத்தியடையும். கடவுள் உன்னைக் காப்பாற்றுவதை நடைமுறை வாழ்வில், அனுபவத்தில் நீயே அறிவாய்.

மகனே, மிக செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் உனக்கு மனைவியாக அமைவாள்.

உன்னை யாரெல்லாம் இன்று கீழாக நினைக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் உன்னைத் தேடிவந்து புகழ்வார்கள். தாயை முதல்தெய்வ மாகக் கொண்டாடு. அடுத்து, செய்யும் தொழிலை முக்கிய தெய்வமாக வணங்கி வாழ்ந்து வா.

ஒரு தொழிலைச் செய்பவனுக்கு அந்தத் தொழில் மூலம்தான் கடவுள் கருணைசெய்து காப்பாற்று வார். அகத்தியன் அருள் உனக்கு எப்போதும் உண்டு'' என்று கூறி, அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.

இன்றைய நாளிலும் புகழ்பெற்ற ஆலயங் களாகவுள்ள பழனி, சிதம்பரம், திருப்பதி, இராமேஸ்வரம், மதுரை போன்ற பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ள இடங்கள், முற்காலத்தில் சித்தர்கள் அமர்ந்து குண்டலினி யோகம் புரிந்து சித்திபெற்ற இடங்களாகும். பிற்காலத்தில் அவ்விடங்களில் ஆலயங்கள் கட்டப்பட்டன. சித்தர்களின் சக்திகளும் மறைக் கப்பட்டன.

bala190321
இதையும் படியுங்கள்
Subscribe