Advertisment

எதிர்நீச்சல் போடும் நீர் ராசிகள்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/water-signs-swim-against-tide-melmaruvathur-s-kalaivani

"நீரின்றி அமையாது உலகு'' என்பது வள்ளுவன் வாக்கு.

நம்மை ஆளும் ஜோதிடவியலில் பஞ்ச பூதங்களின் வரிசையில் நெருப்பு, நிலம், காற்று இவற்றைக் கடந்து தற்பொழுது நீரின் மூழ்கி முத்து எடுக்கலாம்.

நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை கால புருஷனுக்கு நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய பாவகங்களுக்கு பொறுப் பேற்று அமைந்துள்ளது.

சர ராசியான கடகம், ஸ்திர ராசியான விருச்சிகம், உபய ராசியான மீனம் இவை மூன்றும் நீர் தத்துவத்தில் அமையப்பெற்ற மிகப்பெரும் சக்திவாய்ந்த ராசிகள் ஆகும்.

நீரின் தன்மை இடத்திற்கு ஏற்றார்போல் தன்னை தகவமைத்து கொள்வது. இந்த ராசி களில் பிறந்தவர்களும் தன்னை இடத்திற்கு தகுந்தாற்போல் நல்லவிதமாக தகவமைத்து வெற்றிபெறும் ரகசியத்தை கைக்குள் வைத்துள்ளனர்.

நீருக்கு இன்னும் ஒரு சிறப்பு உள்ளது, மாசு, தோஷம், அழுக்கு, ஆகிய வற்றை போக்கும் குணமும் நீரைச் சார்ந்தது. இவர்களின் குணமும் இவற்றுக்கிடையே சற்று பிரதிபலிக்கும்.

Advertisment

ww

சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மனதை கல்லாக்கிக் கொண்டு இவர்கள் எடுக்கும் சில முடிவுகள் இவர்களின் மனசாட்சியை உறுத்திக்கொண்டே இருக்கும்.

சில காலங்களிலேயே மீண்டும் தன் நிலைக்கு மாறி இளகிய மனதோடு இவர்கள் பயணிப்பார்கள். கூட்டத்தோடு கூட்டமாக பயணிக்கும் மனப்பான்மை இவர்களுக்கு ஒரு பெரும் சிறப்பை அளிக்கின்றது.

அன்பு, மென்மை, உண்மை ஆகிய வற்றிற்கு பேர் போனது இந்த நீர் ராசிகள்.

Advertismen

அமைதி, தாய் என்று விட்டுக் கொடுக்கும் தன்மை ஆகியவை இவற் றுடன் சேர்ந்தே பயணிக்கும்.

நீர் ராசிகளில் முதல் ராசியான கடகம் கடகத்தின் நீர் மனித உயிர்களின் உன்னதமான பயன்பாட்டிற்கு பயன் படக்கூடிய நீராக அமைந்துள்ளது.

கடகம் தாய் அன்பை தனதாக்கிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் மணமுடைய ராசி.

இவர்களை தட்டிக்கொடுத்தால், தயங் காமல் அனைத்தையும் செய்து முடிப்பார்கள். அடாவடிமூலம் இவர்களிடம் ஒரு அணுவை யும் அசைக்கமுடியாது.

மேலும் கற்பனை திறன் அதிகமுடைய வர்கள். கவி எழுதும் ஆற்றல் இவர்களிடம் இயல்பாகவே இயற்கை அளித்துள்ளது.

குருவின் புனர்பூசமும், கர்மகாரர்களின் பூசமும், நுண்ணறிவாளனின் ஆயில்யமும், இங்கே கூட்டமைத்து தாய்மையில் பதிய மிட்டு, பந்தலிட்டு, கொடிபறப்பி வளர்ந்து தழைக்கும்.

சந்திரன் குரு, சந்திரன், சனி, சந்திரன், புதன் போன்றவை எண்ணம், செயல், ஆற்றல் ஆகியவற்றை தூண்டி அதன்மூலம் பல வெற்றி களை அடையும் தன்மையை இவர்களிடையே விதைத்திருக்கும்.

ஓடுகின்ற நீரான கடகம் எங்கேயும் தன்னை நிலைநிறுத்தி கொள்ளாமல் ஓடிக்கொண்டே தனது காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் தன்மைபெற்றது.

பூரண நிலவாக வலம்வந்தாலும் மனதில் சில துரோகிகளின் காயங்களுடனே இவர் கள் பயணிக்கும் தன்மையை இயற்கை இயல் பிலேயே அமைத்துவிடுகின்றது.

விருச்சிகம்

இரண்டாவது நீர் ராசியான விருச்சிகம் தேங்குகின்ற நீரை குறிக்கக்கூடியது.

அதாவது அசுத்தம் கலந்த பயன்படுத்த முடியாத, ஆழத்தை அளக்கமுடியாத நீரின் தன்மையை விருச்சிகம் பறைசாற்றுகின்றது.

குருவின் விசாகம், சனியின் அனுஷம், புதனின் கேட்டையும் ஒரு பெரிய மர்மத்தை தன்னில் புதைத்து வலம்வந்து கொண்டிருக்கும்.

இது காலபுருஷனுக்கு எட்டாவது வீடான செவ்வாயின் வீடாக அமைந்துள்ளது. உடல் உள் உறுப்புகளில் அமைந்துள்ள கருப்பை, இரைப்பை போன்ற அனைத்து பைகளும் விருச்சிகத்தை சார்ந்ததே.

எல்லாராலும் வஞ்சிக்கப்படக்கூடிய ராசியாக இந்த நீர் ராசி அமைந்துள்ளது.

மிக இளகிய மனம் கொண்டிருந்தாலும் மேல் தோற்றத்திற்கு பலாப்பழம் போன்று காட்சியளிக்கும் இவர்கள் உண்மையிலேயே இலகுவானவர்களே.

தனக்கு மட்டும் ஏதோ வஞ்சிக்கப்பட்ட சூழல் நிகழ்ந்து விடுகின்றது என்கின்ற தாழ்வு மனப்பான்மை இவர்களிடையே அதிகமாக புதைந்து காணப்படும்.

எல்லா திறமைகளும் இருந்தும் நிராகரிக் கப்படுகின்றோம் என்கின்ற ஆதங்கமும் இவர்களிடையே அமைந்திருக்கும்.

மீனம்

மூன்றாவது உபய ராசியில் நீர் இங்கு மீனம் முன்னிலை வகிக்கின்றது.

காலபுருஷனுக்கு 12-ஆவது வீடான மீனம் கடல் ராசியாகவே கருதப்படுகின்றது.

தன்னுள் ஆயிரம் அர்த்தங்களை பதுக்கி யார் கண்ணுக்கும் புலப்படாத பல பொக்கிஷங் களை வைத்திருக்கும் கடலின் தன்மையும், மீன ராசியில் பிறந்தவர்களின் தன்மையும் ஒன்றி ணைந்தே காணப்படும்.

எல்லா அநியாயங்களிலும் சற்று நியாயத்தை எதிர்பார்க்கும் குணமுடைய இவர் கள், மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் ஆசானாக திகழ்வார்கள்.

ஊராரை வளர்த்துவிடுவதில் இவர்களை மிஞ்சுவதற்கு ஆளே கிடையாது.

மனதில் வலியை சுமந்தாலும் மற்றவர் களுக்கு இனிப்பை வழங்க கூடிய மனம் படைத்த மீன ராசியினர், ஒரு முடிவினை சட் டென்று எடுக்க முடியாததற்கு காரணம் இந்த மூவரின் கூட்டு நீரில் கரைந்து விடுவதால்தான்.

கடலின் ஆழத்தையும், பரப்பளவையும், உள்புதைந்த தன்மையும், காணுவோரோ, அளந்துவிடுபவர்களோ புவியில் இல்லை.

இவ்வளவு மர்மத்தை புதைத்து மானுடத் திற்காக சேவை செய்வதற்காக பிறப்பெடுத்த ஒரு ராசி இந்த கடல் ராசியான மீனம்.

சில துன்பங்களையும், இடர்பாடுகளையும், சுமந்தே பயணிக்கும் இந்த மூன்று ராசியினரும் தன்னை ஒரு அளவிலிருந்து அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான தெய்வீக வழிபாடுகள் என்ன என்பதைக் காணலாம்.

இவைகள் நீர் ராசி என்பதனால் நீரின் மூலம் தனது மாசுகளையும், கர்மாக்களையும், கலைந்துவிட முடியும் என்பதில் எள்ளளவு மையம் இல்லை.

நீரினால் எப்படி என்ற கேள்வி நம்மை உலுக்கி நிறுத்தும்.

பொதுவாக முன்பெல்லாம் வருடம் தொடங்கிய முதலே வசிக்கின்ற ஊரிலுள்ள குலதெய்வம், இஷ்ட தெய்வம், காவல் தெய்வம் போன்றவற்றுக்கு அபிஷேகம் செய்யக் கூடிய தன்மை நம் தமிழ் வழி மரபில் தொன்றுதொட்டு பின்பற்றி வரப்பட்டுள்ளது.

ஆனால் இன்று அதிலிருந்து முற்றிலுமாக மனித குலம் விடைபெற்றே பயணிக்கின்றது.

அபிஷேகம் என்று வரும்பொழுது அதில் கையாளக்கூடிய எல்லா பொருட்களுமே நேர்மை தன்மைவாய்ந்ததாகக் காணப் படுகின்றது. விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், தேன் போன்றவை மங்களத்தை அருளக்கூடிய தன்மை வாய்ந்தவை.

எனவே தங்களின் இஷ்ட குலதெய்வங் களுக்கு மாதத்திற்கு ஒரு முறையேனும் அபிஷேகம் செய்வதோ அல்லது அபிஷேகத் திற்கு தேவையான ஏதோ ஒரு பொருளை வாங்கி அளிப்பதோ இவர்களின் பிரச்சினைகளை பெருமளவு குறைக்கும்.

குழந்தை வரம், செல்வ செழிப்பு போன்றவற்றுக்கு தேன் வாங்கிய கொடுப்பது சிறப்பு எல்லா அபிஷேகப் பொருட்களும் ஒருவித சுபிட்ச தன்மையை உள்ளடக்கியது. தங்களால் இயன்றவற்றை வாங்கித்தந்து அவற்றினால் விளையும் நன்மையை அனுபவிக்கலாம்.

மேலும் அசுத்தமடைந்த குலம், ஏரி, கோவிலை சார்ந்த நீர் நிலைகள் ஆகியவற்றை சுத்தம் செய்வதன்மூலம் பெரும் சிறப்பை அடைந்து வாழ்வில் நிச்சயமாக வெற்றி அடையமுடியும்.

ஏதோ ஒரு தடை, தீர்க்கமுடியாத நோய் போன்றவற்றின்மூலம் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் சிவன் கோவிலில் அமைந்துள்ள கோ முகத்தை சுத்தம்செய்து அடைபடாமல் அபிஷேகம் செய்த நீர் வெளியேறுவதற்கு வழிசெய்தால் இவர்களின் வாழ்க்கையில் தடைப்பட்ட அத்தனை சுப நிகழ்வுகளும் மிக எளிதில் நடந்தேறும்.

தண்ணீர் பந்தல், மோர் பந்தல் போன்றவை அமைத்து சாந்தி செய்வதன்மூலமும் இவர்கள் முன்னேறமுடியும்.

கடகத்தில் மாந்தி, விருச்சிகத்தில் மாந்தி, மீனத்தில் மாந்தி அமையப்பெற்றவர்கள் இறப்பு வீடுகளுக்கு தண்ணீர் மற்றும் டீ, காபி ஆகியவையை தானமாக அளிக்க மாந்தி தோஷமும் தீர்ந்து மகத்தான வாழ்க்கையை வாழமுடியும்.

செல்: 80563 79988

bala070325
இதையும் படியுங்கள்
Subscribe