வாக்கால் கெடுபவர்! - க. காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/voter-ka-gandhi-murugeshwar

வாழ்க்கையில் முதன் முதலில் எல்லாரும் எல்லார்மீதும் அன்புடனும், மரியாதையுடன்தான் நடந்துகொள்வர். எதிரே இருப்பவர் பேசும் விதத்தை வைத்துதான் எப்படிப் பேசவேண்டும், ஏன் பேசவேண்டுமென முடிவு செய்வார்கள். தன் நிலையிலிருந்து யாரும் காரணமின்றி எப்போதும் இறங்கி வரமாட்டார்கள். எல்லாருக்கும் தன்மானம் இருக்கும். திட்டினாலும் திரும்பத் திரும்ப வருகிறார்கள் என்றால், நம் தேவை அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். கோபத்தை அடக்கிக்கொண்டே சிலர் காரியத்திற்காக குழைந்து, புகழ்ந்து பேசுவர். திடீர் நண்பர்களின் திடீர்ப் புகழ்ச்சியை நம்பி வீணாய்ப் போனவர்கள் அதிகம். வாய்ப்பேச்சினால் எல்லாரையும் பகைக்கவும் முடியும்; பயனடையவும் முடியும்.

voter

நாம் பேசும் வார்த்தைகளை வைத்தே, நம்மை மற்றவர் எடைபோடுவர். சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருந்தால், நம்மேல் நம்பகத்தன்மை இழந்து, யாரும் நம்மோடு உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். பொய்யானவர்களுக்கு இனிமையாகப் பேசும் தனித் திறமை இருக்கும். உண்மையானவர்கள் மனதில் பட்டதைப் பேசி பலரைப் பகைத்துக்கொள்வர். "என்னிடம் நேர்மையிருக்கிறது; ஆதலால் வெளிப்படையாக உண்மையைப் பேசுகிறேன்' என பேசி, வாழ்க்கையைத் தொலைத்து தண்டனை பெற்றவர்களே அதிகம்.

பொய் சொல்லுதல், கோள் சொல்லுதல், பிறரைக் குற்றம், குறை கூறிக்கொண்டே இருந்தல் போன்றவை ஆரம்பத்தில் சந்தோஷத்தைத் தந்தாலும், உண்மை யறிந்தபின் சகிக்கமுடியாமல் நம்மேல் அன்பு, அக்கறை கொண்டவர்க

வாழ்க்கையில் முதன் முதலில் எல்லாரும் எல்லார்மீதும் அன்புடனும், மரியாதையுடன்தான் நடந்துகொள்வர். எதிரே இருப்பவர் பேசும் விதத்தை வைத்துதான் எப்படிப் பேசவேண்டும், ஏன் பேசவேண்டுமென முடிவு செய்வார்கள். தன் நிலையிலிருந்து யாரும் காரணமின்றி எப்போதும் இறங்கி வரமாட்டார்கள். எல்லாருக்கும் தன்மானம் இருக்கும். திட்டினாலும் திரும்பத் திரும்ப வருகிறார்கள் என்றால், நம் தேவை அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். கோபத்தை அடக்கிக்கொண்டே சிலர் காரியத்திற்காக குழைந்து, புகழ்ந்து பேசுவர். திடீர் நண்பர்களின் திடீர்ப் புகழ்ச்சியை நம்பி வீணாய்ப் போனவர்கள் அதிகம். வாய்ப்பேச்சினால் எல்லாரையும் பகைக்கவும் முடியும்; பயனடையவும் முடியும்.

voter

நாம் பேசும் வார்த்தைகளை வைத்தே, நம்மை மற்றவர் எடைபோடுவர். சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருந்தால், நம்மேல் நம்பகத்தன்மை இழந்து, யாரும் நம்மோடு உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். பொய்யானவர்களுக்கு இனிமையாகப் பேசும் தனித் திறமை இருக்கும். உண்மையானவர்கள் மனதில் பட்டதைப் பேசி பலரைப் பகைத்துக்கொள்வர். "என்னிடம் நேர்மையிருக்கிறது; ஆதலால் வெளிப்படையாக உண்மையைப் பேசுகிறேன்' என பேசி, வாழ்க்கையைத் தொலைத்து தண்டனை பெற்றவர்களே அதிகம்.

பொய் சொல்லுதல், கோள் சொல்லுதல், பிறரைக் குற்றம், குறை கூறிக்கொண்டே இருந்தல் போன்றவை ஆரம்பத்தில் சந்தோஷத்தைத் தந்தாலும், உண்மை யறிந்தபின் சகிக்கமுடியாமல் நம்மேல் அன்பு, அக்கறை கொண்டவர்களும் விலகிவிடுவார்கள். எந்த நேரமும் புலம்பிக்கொண்டே இருந்தால் நம்மைப் பார்த்தாலே ஓடிவிடுவர். ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள்கூட "தலையெழுத்தே' என வாழப்பழகி, கிடைத்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பர். ஆனால் சிலர் நன்றாக வாழ்ந்துகொண்டே, எங்கு நம்மிடம் உதவி எதிர்பார்த்துவிடுவார்களோ என பயந்து, தான் கஷ்டத்தில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டே இருப்பர். இதனால் அருகிலிருப்பவர்கள் கோபமடைந்து, "பிச்சைகாரரிடம் யாராவது பிச்சை எடுப்பார்களா' என வெறுத்து, தனக்கு கஷ்டம் வந்தாலும் அவர்கள் முகத்தில் விழிக்காமல் ஒதுங்குவர். யாராக இருந்தாலும் நம் குணத்தைப் பேசும் விதத்திலேயே கண்டறிந்துவிடுவார்கள். எல்லாவற்றையும், எல்லாரிடமும், எல்லாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். மனதில் நினைப்பதைதான் வார்த்தைகளில் கொட்டுவார்கள். நல்ல குணம் படைத்தவர்களை இழப்பது வாய்ப்பேச்சினால்தான். நல்ல வாக்கு கொடுப்பதும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதும் மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமானது.

இரண்டாமிடம்

வாக்கு ஸ்தானத்தை குறிக்கக்கூடிய இடம் லக்னத்திற்கு இரண்டாவது ஸ்தானமாகும். இரண்டாமிடத்தில் நின்ற கிரகங்கள், இரண்டாமிடத்தைப் பார்த்த கிரகங்கள், இரண்டாமதிபதி நின்ற இடம், இரண்டாமதிபதியுடன் இணைந்த கிரகம், இரண்டாமதிபதி நின்ற நட்சத்திரத்தின் நிலையைப் பொருத்துதான் வாக்குநிலையைக் கண்டறியமுடியும்.

வாக்கு

பிறருக்குப் பிடிப்பதுபோல நகைச்சுவை யாகப் பேசுதல், ஆபாசமின்றி நல்ல வார்த்தைகளைக் கோபப்படாமல் பேசுவது, அடுத்தவருக்குப் புரியும்படி பேசுவது, உண்மைத் தன்மையை ஆராய்ந்தறிந்து பேசுவது, யாருடைய வாழ்க்கையையும் கெடுக்காமல் பிறரை இகழாமல் பேசுவது, நல்வாக்கு கொடுத்தல், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் போன்றவைதான் ஒருவரை நல்லவிதமாக வாழவைக்கும். பொய் பேசாமல் இருந்தால் எதையும் நினைத் துக்கொண்டிருக்காமல் நிம்மதியாக வாழலாம்.

இரண்டாமிடத்தில் சுப கிரகங்கள் இருந்தால், மனதில் கள்ளங்கபடமின்றி எதார்த்தமாகப் பேசுவார். சுப கிரகங்கள் வலுத்தால் உண்மையே பேசுவர். லக்னம், கேந்திர, திரிகோணாதிபதிகள் இரண்டாமிடத்தில் இருந்தால், பிறருக்குப் பிடித்தது போல் பேசுவர். சுபகிரகமாக இருந்தால் நகைச்சுவையுடனும், கேது இருந்தால் சிரிப்புடன் சிந்திக்க வைக்கும்படியும் பேசுவர். சந்திரன், சுக்கிரன், புதன் தனித்தோ, சேர்க்கைபெற்றோ, பார்வை பலம்பெற்றோ இருந்தால் கலகலப்பாகப் பேசுவர். பிறரை சிரிக்கவைக்கும் பிறவிக்கலைஞராக இருப்பர்.

இரண்டாம் அதிபதி லக்ன, கேந்திரங் களில் இருந்தால் வாக்கு கொடுத்தால் காப்பாற்றுவார். இரண்டாம் அதிபதியுடன் சுப கிரகங்கள் சேர்ந்து நல்ல இடத்தில் இருந்தால் இன்சொல் பேசுவார். சொன்ன சொல்லைக் காப்பார்.

கெட்ட வாக்கு

இரண்டாம் இடத்தில் பாவகிரகங்கள் இருப்பது, இரண்டாம் அதிபதி 3, 6, 8, 12-ல் இருப்பது, சாரம் பெறுவது, இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தம் பெறுவது, மறைவிட, பாவ அதிபதியின் பார்வை படுவது, பாவகிரகப் பார்வை, இணைவு ஆகிய அனைத்தும், ஜாதகர் நம்பி சொன்ன ரகசியங்களைப் பாதுகாக்காமல் உளறுவது, முகத்திற்கு முன்னால் சிரித்துப் பேசிவிட்டு, சென்றதும் நையாண்டி செய்வது, காட்டிக்கொடுப்பது, இல்லாத நேரத்தில் இல்லாததைப் பேசுவது, போட்டுக்கொடுத்து வாழ்க்கையை அழிக்கநினைப்பது, பிறர் நோக வார்த்தைகளால் காயப்படுத்துவது, தரக்குறைவாக தரம்தாழ்ந்து பேசுவது, உண்மைக்குப் புறம்பானவற்றைப் பேசிக் குழப்புவது, தன் தேவைக்காக மட்டும் பேசுவது, நன்றியில்லாமல் பேசுவது, கெட்ட வாக்கு கொடுப்பதால், தானும் கெட்டு, பிறரை யும் கெடுத்து நிம்மதியில்லாமல் வாழ நேரும்.

வாக்கு தவறுதல்

இரண்டாமிடம் என்னதான் சுபகிரக வலுப்பெற்று நன்றாக இருந்தாலும் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, மறைவிட அதிபதி தசைகள் நடக்கும்போது நல்லவரை யும் கோபத்தில் வாக்கு தவறுதல், பொறாமை யால் வாக்கு தவறுதல், நம் பேச்சைக் கேட்கவேண்டும் என்கிற உந்துதலில் வாக்கு தவறுதல் போன்றவற்றைச் செய்து நம்பிக்கையைக் கெடுத்துக்கொள்வார். பாவத் தன்மை பெற்றவர் எப்போதும் கெடுதல் நினைத்து தேவைக்கேற்ப பேசி எந்த நிலையிலும் நம்பியவரைக் கைவிடுவார். தனக்கு சரியில்லாத தசை மற்றும் சனி பாதிப்பு நடக்கும் காலங்களில் நல்லவரை நம்பி ஏமாறுதல் நடைபெறும். நம்முடைய நேரம் சரியில்லையென்றால் நல்லவரையும் சில நேரங்களில் கெட்டவராக்கி வாக்கு கொடுத்ததை மீற வைத்துவிடும்.

பொய், புரளி பேசுதல்

எதையும் தைரியமாக சந்திக்கமுடியாத கோழைகள்தான் பொய் பேசுவர். இரண்டாம் அதிபதி 6, 8, 12-ல் மறைந்தால் பொய்பேசுவர். குறிப்பாக சூரியன், சனி, ராகு போன்ற கிரகங்களுடன் இணைந்தாலோ பார்த்தாலோ சரளமாகப் பொய்பேசுவர். சுக்கிரனுடன் இருந்தால் சிரித்துக்கொண்டே கழுத்தறுப்பார். நீச கிரகங்கள், பாவ கிரகங்கள் இரண்டாம் வீட்டோடு தொடர்புகொண்டால் கட்டாயம் பொய்பேச நேரும். இரண்டில் செவ்வாய் கொண்டவர் பேசினால் கோபம் வரும். சூரியன் எரிச்சல் உண்டாக்கும். சனி- உள்நோக்கத்தோடு பேசுவர். ராகு ஏமாற்றுப் பேச்சு தரும். பொதுவாக பாவகிரக வலு பொய் பேசுதல், புரளி பேசுதல், கோள்மூட்டுதல் போன்ற கெட்ட குணங்களைத் தரும். தசாபுக்தி சரியில்லாத நேரங்களில் பொய்பேசி மாட்டிக்கொள்வர். சிலநேரம் தண்டனைபெற நேரிடும். மானத்தைப் பற்றிக் கவலைபடாதவராக இருப்பார். ஐந்தாமிடத் தொடர்பு- அதாவது ஐந்தாமிடத்திற்கு நீச, பாவகிரக பாதிப்பு ஏற்பட்டால் உளறுவாயர்களாகவும், செவ்வாயால் ரகசியங்களைக் காக்கத் தெரியாதவர்களாகவும் இருப்பர். புத்திசாலித் தனத்தைக் குறிக்கும் ஐந்தாமிடம் கெட்ட வர்கள், பாவகிரகச் சேர்க்கை, தொடர்பு பெற்றால் அவர்களிடம் ரகசியம் நிற்காது.

பரிகாரம்

வாக்கு தவறுதல், பொய்பேசுதல், கோள்சொல்லுதல், ரகசியம் காக்கத் தெரியாதவர்கள் தங்களைத் திருத்திக் கொண்டால்தான் சமூகத்தில் நல்ல பெயருடன் புகழுடன் நிம்மதியாக வாழமுடியும். இல்லையென்றால் குடும்பத்தில்கூட ஒதுக்கிவைத்து விடுவர். இரண்டாமிடம் கெட்டவர்கள் அளவோடு உண்மைபேச முயன்றால் நலமுடன் வாழலாம்.

செல்: 96003 53748

bala150121
இதையும் படியுங்கள்
Subscribe