வைடூரியம் என்பது கேதுவுக்கான ரத்தினம்.
ஒரு ஜாதகத்தில் கேது நன்றாக இருந்தால், அந்த ஜாதகர் அறிவாளியாக- நிறைய படித்தவராக இருப்பார். பலருக்கு நன்மைகள் செய்வார். புகழ் பெற்ற மருத்துவராகவோ ஜோதிடராகவோ, சிறந்த குருவாகவோ, பெரிய அரசியல் தலைவராகவோ, அமைச்சராகவோ, ஆராய்ச்சி நிபுணராகவோ, சிற்பியாகவோ, விமானப்படை அதிகாரியாகவோ, பொருளாதார மேதையாகவோ, தகவல் தொழில் நுட்ப அதிகாரியாகவோ, சிறந்த பேச்சாளராகவோ, மருந்து தயாரிப்பவராகவோ இருப்பார்.
ஜாதகத்தில் கேது கெட்டுப்போயிருந்தால், உணவு ஜீரணமாகாது. பெண்களுக்கு கேது சரியில்லை யென்றால் கர்ப்பம் தங்காது. சிறுநீரகத்தில் கல், சுவாச நோய், இருமல், வாய்வுப் பிரச்சினை, காம இச்சை ஆகியவை இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருந்தால் ஜாதகர் சில நேரங்களில் தேவையற்றதைப் பேசுவார். சிலர் அதிகமாக சிந்திப்பார்கள். கேதுவை பாவகிரகம் பார்த்தால் அல்லது பாவகிரகத்துடன் இருந்தால், களத்திர தோஷம் உண்டாகும். திருமணத்தில் தடை இருக்கும். கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. வீண்விவாதம் உண்டாகும்.
ஒருவரின் ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் கேது இருந்தால், அவர் சிறந்த பேச்சாளராக இருப்பார். சிலர் தேவையற்றதைப் பேசுவதால், காரியத்தில் தடை உண்டாகும். கேது 2-ல் இருக்கும்போது ராகு 8-ல் இருப்பார். அதனால் சிலருக்கு இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு திருமணத் தடை உண்டாகும். சில ஜோதிடர்கள் "திருமணமே செய்யக்கூடாது' என்று கூறுவார்கள். ஆனால் அந்த ஜாதகருக்கு சுக்கிரன் சரியாக இருந்தால், திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குருவால் பார்க்கப்பட்டாலும் இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். (கேது 2-ஆம் பாவத்தில் இருப்பதால், வைடூரியம் அணியக்கூடாது.)
3-ஆவது பாவத்தில் கேது இருந்தால் ஜாதகர் தைரியசாலிலியாக இருப்பார். அனைத்து காரியங் களையும் வெற்றிகரமாக முடிப்பார். இளம்வயதில் கஷ்டங்கள் இருக்கும். 14 வயதிலிலிருந்து 28 வயதுவரை பல சிரமங்களையும் அனுபவிப்பார்கள். ஆராய்ச்சியாள ராகவோ ஜோதிடராகவோ இருந் தால், அவருடைய ஜாதகத்தில் லக்னாதி பதியும், 10-க்கு அதிபதியும் நல்ல நிலைமையில் இருந்தால், அவர் பல வெற்றிகளைப் பார்ப்பார். சகோதரர் களுடன் உறவு சரியாக இருக்காது.
4-ஆவது பாவத்தில் கேது இருந்தால் தாய்க்கு சில நேரங்களின் தசா காலங்கள் சரியில்லாமலிலிருந்தால், நோயின் பாதிப்பு ஏற்படும். 4-க்கு அதிபதி நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்தால் அல்லது கேதுவுடன் சூரியன், செவ்வாய் அல்லது சூரியன்- சனி இருந்தால், அவருடைய வீட்டில் பலவிதமான தோஷங்கள் இருக்கும். பல கஷ்டங்கள் இருக்கும்.
5-ஆவது பாவத்தில் கேது இருந்து, 5-க்கு அதிபதி அஸ்தமனமாகவோ அல்லது 5-க்கு அதிபதி 12-லோ இருந் தால், அந்தக் கேதுவை சூரியன், செவ் வாய் பார்த்தால், குழந்தை பாக்கியத் திற்குத் தடைகள் உண்டாகும். சில பெண் களுக்கு வயிற்றில் நோய் இருக்கும். சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படும்.
6-ல் கேது இருந்தால், அவர்களுக்குப் பகை வர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், அவர் எப்போதும் பயத்துடனே இருப்பார். அந்தக் கேதுவுடன் சந்திரன் இருந்தால், சரியாகத் தூக்கம் வராது. கேதுவுடன் சனி, செவ்வாய், இருந் தால், விபத்து நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
சிலர் வெளியே செல்வதற்குபயப்படுவார்கள்.
7-ல் கேது இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். கேது, செவ்வாயுடன் அல்லது சனியுடன் அல்லது சூரியனுடன் இருந்தால், திருமணத் தடை உண்டாகும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். அவர்கள் கேதுவை பூஜை செய்யலாம். வைடூரியம் அணியக்கூடாது.
8-ல் கேது இருந்தால், சிலர் அதிகமாக சிந்திப் பார்கள். சிலருக்கு உணவு சரியாக ஜீரணமாகாது. சிலருக்கு சிறுநீரகத்தில் கல் இருக்கும். கேது பாவகிரகமான செவ்வாய், சனியுடன் இருந் தால், திருமண விஷயத்தில் தடை உண்டாகும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சிலருக்கு விபத்து நடக்கும். அவர்கள் வைடூரி யத்தை அணியக்கூடாது.
9-ல் கேது இருந்தால், அவருக்கு இளம்வ யதில் பல பிரச்சினைகள் இருக்கும். அலைச்சல் அதிகமாக இருக்கும். வீட்டில் பித்ரு தோஷம் இருக்கும். சிலர் தந்தையுடன் சேர்ந்திருக்க முடியாது. கேது, சனி அல்லது செவ்வாயுடன் இருந்தால், வீட்டில் வீணாக சண்டை நடக்கும்.
10-ல் கேது இருந்தால், அவர் சுயமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார். ஆனால், அத்துடன் சனி இருந்தால், முயற்சிகளுக்குத் தடைகள் ஏற்படும். கேது, சந்திரன், சனியுடன் 10-ல் இருந்தால் தோல்விகள் ஏற்படும். அதனால் மனதில் கவலை உண்டாகும். கேது, சந்திரன், குருவுடன் அல்லது கேது, குரு 10-ல் இருந்தால் பெரிய வெற்றிகளைப் பார்ப்பார்.
கேது 11-ல் இருந்தால், அவர் பெரிய வெற்றியைக் காண்பார். பண வசதி உண்டாகும். குருநாதராகவோ, உபதேசம் செய்யக்கூடியவராகவோ இருப்பார். ஆனால், கேது, சூரியனுடன் அல்லது செவ்வாய், சூரியனுடன் அல்லது சனி, செவ்வாயுடன் இருந்தால், பிள்ளைகளால் பிரச்சினை ஏற்படும்.
சிலருக்கு வாரிசே இருக்காது. பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினை இருக்கும்.
12-ல் கேது இருந்தால், "மோட்சம் கிடைக்கும்' என்று பொதுவாகக் கூறுவார்கள். ஆனால், அவருக்கு பல பிரச்சினைகள் இருக்கும்.
அவர் அறிவாளியாக இருப்பார். ஆனால், இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. கேது, சனி, செவ்வாயுடன் இருந்தால், வாழ்க்கையில் பல பிரச்சினைகள் உண்டாகும். கேது, சூரியனுடன் இருந்தால், சிலருக்கு மனநோய் ஏற்படும். கேது, சந்திரனுடன் இருந்தால், பலருக்கு சரியாகத் தூக்கம் வராது. அவர்கள் கேதுவை பூஜை செய்யலாம்.
ஆனால், வைடூரியம் அணியக்கூடாது.
வைடூரியம் அணியக்கூடாதவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் அணிந்தால் தொல் லைகள் விலகும்; வளங்கள் பெருகும்.
செல்: 98401 11534