குரு பார்க்க கோடி தீமை விலகும் என்பார்கள். ஆனால் முதிர்ந்த ஜோதிட பண்டிதர்கள் குரு பார்க்கக்கொடிய குற்றங்கள் தீரும் என்பார்கள். ஒரு ஜாதகத்தில் எத்தகைய தீமைகளை தருகின்ற கிரக அமைப்பு அமைந்து காணப்பட்டாலும், சுப கிரகத்தின் பார்வை அமைந்தால் அத்தகைய தீமைகள் பாதிப்பை தருவதில்லை. உண்மையில் சுபகிரகம் என்றால் அது குருபகவான் மட்டுமே. சட்டநாத சுவாமிகள் ஜாதக வெண்பா என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஜோதிட கருத்து ஒரு ஜாதகத்தில் லக்ன வீட்டின் அதிபதி, இரண்டாம் வீட்டில் அமர வேண்டும். அவர் சுப கிரகமாகவும் இருக்கவேண்டும்; அவர் வலுவோடும் இருக்கவேண்டும். அவரை குருபகவான் பார்க்கவேண்டும். இத்தகைய அமைப்பைப்பெற்ற ஜாதகர் திடீர் செல்வந்த னாக, புதையல், லாட்டரியின்மூலமாக செல்வம் பெற்றவராக விளங்குவர் என்று அந்த நூல் கூறுகின்றது. ஆக, தீமைகளை விலக்குவது மட்டுமல்ல; சுப பலன்களைத் தருவதிலும் குருபகவான் பார்வை தேவை என்பதனை இதன்மூலம் நாம் உணர முடிகின்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gurubahavan.jpg)
மேஷம் முதலான 12 ராசிகளை அல்லது மேஷம் முதலான பன்னிரண்டு லக்னங்களை குருபகவான் பார்க்க எத்தகைய பலன்கள் ஏற்படுகின்றது என்பதனை மூல நூல்களில் இருந்து காண்போம். மேஷ ராசி அல்லது லக்னத்தை குருபகவான் பார்க்க அதிக வேலைக்காரர்களை கொண்டவனும், நிரம்பிய செல்வத்திற்குச் சொந்தக்காரனும், மன்னனின் மந்திரியாகவோ, சேனையின் தலைவனாகவோ இருப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது.
ரிஷப ராசியில் அமர்ந்த சந்திரனை, ரிஷப லக்னத்தை குருபகவான் பார்க்க, நிலையான புதல்வர்களையும், மனைவியையும், சுற்றத் தினரையும் கொண்டவன் எனவும், அதாவது தன்னைவிட்டு அகலாத அன்பும், (அகலாத சூழலும்கொண்ட புதல்வர்களையும், மனைவி யையும், சுற்றத்தையும் கொண்டவன் என பொருள் படும்.) அவ்வாறே தாய்- தந்தை யரிடம் பக்தி மிகுந்தவனாகவும், அதிக திறமைப் பெற்றவனாகவும், தர்ம காரியங்களைச் செய்வனாகவும், மிகவும் பிரசித்தி பெற்றவனாக வும் விளங்குவான் என்று சொல்லப்பட்டுள்ளது. சட்டநாத சுவாமிகள் ஜாதக வெண்பாவின் ரிஷப ராசி சந்திரனை குரு பார்க்க ஜாதகர் குறைந்த நேரத்தில் ஆயிரம் கவிதைகளை எழுதும் ஆற்றல் பெற்றவனாக விளங்குவான் என்று கூறப்பட்டுள்ளது.
மிதுன ராசியில் சந்திரனை குரு பகவான் பார்க்க எல்லா கல்வியையும், சாஸ்திரங் களையும் உபதேசம் செய்பவனாகவும், அதாவது கற்பிப்பவனாகவும், பிரசித்தி பெற்றவனாகவும், அழகு உடையவனாகவும், எல்லா காரியங்க ளிலும் வெகுமதிக்கப்படுவதாகவும், நாவரச னாகவும் விளங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.
கடக ராசி சந்திரனை குரு பார்க்க மன்னனோ மன்னனுக்கு சமமான குணங்களைக் கொண்டவனும், நயம் வினையம், பராக்கிரமம் இவற்றை கொண்டவனாகவும், சுகம் அனுபவிப்பவனாகவும், நல்ல மனைவியை கொண்டவனாகவும் இருப்பான் என்று கூறப் பட்டுள்ளது.
சிம்ம ராசி சந்திரனை குருபகவான் பார்க்க உயர்ந்த வம்ச பாரம்பரியத்தோடு கூடியவனாக வும், அதிக சாஸ்திரங்களை கற்றுப் பயிற்சி செய்தவனாகவும், பிரசித்தி உள்ளவனாகவும், அதிகமான நற்குணங்களை கொண்டவனாக வும், மன்னனுக்கு சமமானவனாகவும் விளங்கு வான் என்று சொல்லப்பட்டுள்ள.
கன்னி ராசி அல்லது லக்னத்தை குரு பகவான் பார்க்க சிற்றத்தினரோடு கூடியவனாகவும், சுகம் அனுபவிப்பவனாகவும், மன்னனுக்குரிய செயல்களைச் செய்வோமாகவும், வாக்கியங்களை உணர்ந்து கொள்வோமாகவும், செல்வந்தனாகவும் விளங்குவான் என்று சொல்லப்பட்டுள்ளது.
துலா ராசியை லக்னத்தை சந்திரன் பார்க்க எங்கும் வணங்கப்படுபவனாகவும், வணிகம் அறிந்தவனாகவும், திறமைசாலியாகவும் உங்கள் பாத்திரங்களை வியாபாரம் செய்வதில் வல்லவனாகவும் விளங்குவான் என்று சொல்லப்பட்டுள்ளது.
விருச்சிக ராசி அல்லது லக்னத்தை குருபகவான் பார்க்க செயல்களில் ஆற்றல் கொண்டவனாகவும், மக்களால் புறக் கணிக்கப்பட்டவனாகவும், செல்வந்தனாக வும், அழகு உடையவனாகவும் விளக்குவான் என்று சொல்லப்பட்டுள்ளது.
தனு ராசி அல்லது லக்னத்தை குரு பகவான் பார்க்க ஒப்பற்ற தேகம் கொண்டவ னும், மன்னனின் மந்திரியாகவும், செல்வம் தர்மம், சுகம் இவற்றோடு கூடியவனாகவும் விளங்குவான் என்று சொல்லப்பட்டுள்ளது.
மகர ராசி அல்லது லக்னத்தை குருபகவான் பார்க்க மிக பிரபலமான நபராகவும், மன்னனாகவும், மன்னனுக்கு சமமான குலங்களோடு கூடியவனும், அதிக மனைவி, புத்திரர்கள், உறவினர்களை கொண்டவனாகவும் விளங்குவான் என்று சொல்லப்பட்டுள்ளது.
கும்ப ராசி அல்லது லக்னத்தை குரு பகவான் பார்க்க கிராமங்கள், விளை நிலங்கள், மரங்கள், சிறப்பான வீடுகள், சிறந்த பெண்கள் இவற்றின்மூலமாக செல்வத்தையும் சுகத்தையும் பெற்றவனாக வும் வணங்கத்தக்கவன் ஆகவும் விளங்கு வான்.
மீன ராசி அல்லது லக்னத்தை குரு பகவான் பார்க்க குழந்தை குணம் கொண்டவனாகவும், மண்டலத்தின் அதிபதியாகவும், மிகவும் பிரபலனாக வும், மிகவும் அழகுடையவன் ஆகவும், அதிக பெண்களோடு கூடியவனாகவும் விளங்குவான் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி பன்னிரண்டு ராசிகளை அல்லது லக்னத்தை குருபகவான் பார்க்க அதற்குரிய பலனாக சாராவழி நூலில் சொல்லப்பட்டுள்ளது.
செல்: 94438 08596
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/gurubahavan-t.jpg)