Advertisment

விஷக் கன்னிகா தோஷம்!

/idhalgal/balajothidam/vishak-kannika-tosham

ந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் இருக்கும் யோகங்களும் தோஷங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படு கிறது. அதன்படி, என்னென்ன யோகங்கள், தோஷங்கள் ஏற்படும் என்பதை நம் முன்னோர் கள் சொல்லியுள்ளனர். ஜாதகத்தில் பல்வேறு யோகங்கள், தோஷங்கள் இருந்தாலும், பல பெண்களுக்குத் திருமணமற்ற நிலை அல்லது திருமண வாழ்விலும் நிம்மதியற்ற நிலையைத் தரும் விஷக் கன்னிகா தோஷம் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

Advertisment

பெண்களின் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே நடக்கவேண்டிய சம்பவங்கள் பல உள்ளன. அதில் ஒன்று திருமணம். ஒரு பெண்ணின் கழுத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே திருமாங்கல்யம் ஏறவேண்டும் என்பது நமது சம்பிரதாயம். அந்தத் திருமாங் கல்யம் ஒரே ஒருமுறைகூட கழுத்தில் ஏறாத பெண்களும் இருக்கின்றனர். புத்தாடைபோல் பலமுறை தாலியையும், வாழ்க்கைத் துணையையும் மாற்றவேண்டிய நிர்ப்பந்தமும் சில பெண்களுக்கு

ந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் இருக்கும் யோகங்களும் தோஷங்களும் கிரகங்கள் இருக்கும் நிலையை வைத்து கணிக்கப்படு கிறது. அதன்படி, என்னென்ன யோகங்கள், தோஷங்கள் ஏற்படும் என்பதை நம் முன்னோர் கள் சொல்லியுள்ளனர். ஜாதகத்தில் பல்வேறு யோகங்கள், தோஷங்கள் இருந்தாலும், பல பெண்களுக்குத் திருமணமற்ற நிலை அல்லது திருமண வாழ்விலும் நிம்மதியற்ற நிலையைத் தரும் விஷக் கன்னிகா தோஷம் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

Advertisment

பெண்களின் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே நடக்கவேண்டிய சம்பவங்கள் பல உள்ளன. அதில் ஒன்று திருமணம். ஒரு பெண்ணின் கழுத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே திருமாங்கல்யம் ஏறவேண்டும் என்பது நமது சம்பிரதாயம். அந்தத் திருமாங் கல்யம் ஒரே ஒருமுறைகூட கழுத்தில் ஏறாத பெண்களும் இருக்கின்றனர். புத்தாடைபோல் பலமுறை தாலியையும், வாழ்க்கைத் துணையையும் மாற்றவேண்டிய நிர்ப்பந்தமும் சில பெண்களுக்கு ஏற்படுகிறது. இந்த இரண்டு நிலைகளுமே ஒரு பெண்ணுக்கு சகிக்கமுடியாத கொடுமைதான். பெண் ஜாதகத்தில் அமைந்திடும் சில அவயோக அமைப்புகளே இதற்குக் காரணம். விஷக் கன்னிகா தோஷத்திற்கான ஜோதிட ரீதியான அமைப்புகளைக் காணலாம்.

Advertisment

amman

ஜனனகால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 5, 7, 8, 12 ஆகிய பாவகங்களும் அதன் அதிபதிகளும் முழுவதுமாகக் கெட்டு, குரு, சுக்கிரனும் வலிமையற்றிருந்தால் அந்த ஜாதகம் விஷக் கன்னிகா தோஷமுடைய ஜாதகமாகும்.

லக்னம், லக்னாதிபதியின்மூலம் ஒருவரின் விதியையும், இரண்டாமிடம் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஐந்தாமிடத் தின்மூலம் புத்திரத்தைப் பற்றியும், ஏழாமிடம் திருமண வாழ்க்கை பிரச்சினையா, தாமதத் திருமணமா என அறியவும், எட்டாமிடம் மாங்கல்ய பாக்கியம் மற்றும் ஆயுள்பலம் அறியவும், 12-ஆமிடம் இல்லற இன்பம் பற்றி அறியவும், சுக்கிரனின் நிலையை வைத்து தாம்பத்தியம் சார்ந்த நிலையையும் அறியமுடி யும். குருவை வைத்து கரு உருவாகுமா, குழந்தை பிறக்குமா என்றறிய முடியும்.

இவையனைத்தும், ஒருசில பெண்களுக்கு ஒருசேர கெட்டிருக்கும் பட்சத்தில், திருமண மென்ற ஒரு அத்தியாயம் இல்லாமல் போகி றது. இந்த தோஷமுடைய ஜாதகத்திற்குத் திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது.

இந்திய சமூதாயக் கட்டமைப்பில் ஒரு ஆண்மகன் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்துகொண்டாலும் பெரியதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு முதல் திருமணம் விவாகரத்தானாலோ அல்லது கணவனை இழந்தாலோ அவளை சமூகம் வேறு கண்ணோட் டத்தில் பார்க்கிறது. பெண்ணும், ஆணைப்போல் மறுமணம் செய்து கொண்டாலும் நிம்மதியற்ற நிலையே தொடர் கிறது. இதுவே கர்மா. விஷக் கன்னிகா தோஷம்.

ஒரு பெண்ணுக்கு முதல் திருமணம் தோல்வியில் முடிந்தால், அடுத்த வாழ்க்கையை அனுசரித்து வாழ்ந்தால் மட்டுமே யோகமாக இருக்கும். இல்லா விட்டால் ரோகமாகவே அமைகிறது. ஜாதகத்தில் மேற்சொன்ன அமைப்புகள் ஒருசேர கெட்டால் அவர்களுக்குத் திருமணம் செய்யாமலிருப்பது உத்தமம். மறுமணமாக, வாழ்க்கை இழந்த நபரைத் திருமணம் செய்துகொண்டால் தோஷத்தின் தன்மை குறையும். ஆனால் இந்த தோஷத்தால், பெற்ற வர்கள் எத்தனை திருமணம் செய்துவைத்தாலும் மணவாழ்க்கை விரைவில் முடிந்துவிடுகிறது.

உரிய வயதில் திருமணம் நடைபெற்றால்தான் அப்பெண்ணுக்கும், அவளைப் பெற்றவர்களுக்கும் நிம்மதி. வயது ஏற ஏற பெண்ணுக்கும், பெண்ணைப் பெற்றோருக்கும் ஒருவித பயம் வந்துவிடுகிது.

இது ஒருபக்கம் இருந்தாலும், சொந்தக்காரர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் திருமணம் ஏன் செய்ய வில்லை என்று கேள்வியாலேயே அவர்களைக் கொன்றுவிடுகின்றனர்.

திருமணத்திற்குப்பிறகு ஒருவரின் திருமண வாழ்க்கையில், "ஒத்துவர வில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள்' என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. மிகக் கொடூர சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிறுசிறு விஷயங்களுக்கு "ஈகோ' பார்த் துக்கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும், நண்பர்களின் தேவை யற்ற ஆலோசனைகள் போன்றவையும் இளம் வயதினர் விவாகரத்தை நாடிச் செல்லக் காரணமாகி விடுகின்றன. ஆண்களைச் சார்ந்து பெண் வாழும் சமுதாயச் சூழல் இப்போது இல்லையென்பதே மிகப்பெரிய காரணமாகும்.

மேலும் ஒருவரின் வாழ்வில் நடை பெறும் அனைத்துப் பலன்களுக்கும் வினைப்பயனே காரணம். மத்திமமான அசுபப் பலன்கள் நடைபெறும் காலத்தில், அதற்கேற்ப செயல்பாடு களை மாற்றியமைத்துக்கொண் டால் வினையின் அளவைக் குறைக்க லாம். ஆனால் அனுபவித்தே தீரவேண்டுமென்ற நிலை யிலுள்ள சில தோஷங்களுக்கு, நடப் பதை யாராலும் தடுக்க முடியாது.

உளவியல்ரீதியாக இந்த தோஷத் திற்குத் தீர்வுகாண முயன்றால், திருமணம் நடக்காதவர்கள் தங்கள் கவனத்தை ஆன்மிகம், பொதுத் தொண்டில் ஈடுபடுத்துதல் சாலச் சிறந்தது. முதல் திருமண முறிவுக்குப் பிறகு இரண்டாம் திருமணமும் நிலைக்காதவர்கள், அடுத்த திருமண வாழ்க்கையைப் பற்றி யோசிப்பதைத் தவிர்ப்பது சிறப்பு. பரிகாரமில்லாத- அனுபவித்துத் தீர்க்கவேண்டிய பெண்களுக்கான திருமண தோஷம் இதுவென்பது நிதர்சனமான உண்மை.

bala180222
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe