Advertisment

கலையில் விஞ்சி நிற்கும் விசாகம்! (15) -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/visakham-excels-art-15-melmaruvathur-s-kalaivani

னித வாழ்வில் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங்கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 16-ஆவது நட்சத்திரம் விசாகம். இது நவகிரகங்களில் முழு சுப கிரகமாகக் கருதப்படும் குருவின் நட்சத்திரமாகும்.

Advertisment

இந்த விசாகம் துலாத்தில் தனது முதல் மூன்று பாதங்களையும், விருச்சிகத்தில் நான்காம் பாதத்தையும் பதித்து அமர்ந்துள் ளது. குருவின் மூன்று நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாக அமைந் துள்ளது. புனர்பூசம், பூரட்டாதி, விசாகம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் விசாகம் பெண் நட்சத்திரமாக பரிமளிக்கிறது.

இது ஒரு காலற்ற, உடைபட்ட நட்சத்திர மாகத் திகழ்கிறது. மேலும் இது ராகுவின் கர்மப் பதிவைக் கொண்டுள்ளது. விசாகம் என்றால் இரண்டாகப் பிரிப்பதென்று பொருள்.

இங்கு விசாகம் ஒன்று, இரண்டு, மூன்றாம் பாதங்கள் என்றால் ராசிநாதன் சுக்கிரனுகவும், நான்காம் பாதமென்றால் ராசிநாதன் செவ்வாயாகவும், நட்சத்திர நாதன் சுக்கிர னாகவும், நவாம்ச நாதர்களாக விசாகம் ஒன்றாம் பாதமென்றால் செவ்வாயும், இரண்டென்றால் சுக்கிரனும், மூன்றென் றால் புதனும், விசாகம் நான்காம் பாதமெஎன்றால் சந்திரனும் அமையப் பெறுவார்கள்.

Advertisment

vv

இது முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக அறியப்படுகின்றது. இந்த விசாகம் குயவனின் சக்கரம்

னித வாழ்வில் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய கிரகங்கள் பயணிக்கும் 27 நட்சத்திரக் கூட்டமைப்பில் 16-ஆவது நட்சத்திரம் விசாகம். இது நவகிரகங்களில் முழு சுப கிரகமாகக் கருதப்படும் குருவின் நட்சத்திரமாகும்.

Advertisment

இந்த விசாகம் துலாத்தில் தனது முதல் மூன்று பாதங்களையும், விருச்சிகத்தில் நான்காம் பாதத்தையும் பதித்து அமர்ந்துள் ளது. குருவின் மூன்று நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாக அமைந் துள்ளது. புனர்பூசம், பூரட்டாதி, விசாகம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் விசாகம் பெண் நட்சத்திரமாக பரிமளிக்கிறது.

இது ஒரு காலற்ற, உடைபட்ட நட்சத்திர மாகத் திகழ்கிறது. மேலும் இது ராகுவின் கர்மப் பதிவைக் கொண்டுள்ளது. விசாகம் என்றால் இரண்டாகப் பிரிப்பதென்று பொருள்.

இங்கு விசாகம் ஒன்று, இரண்டு, மூன்றாம் பாதங்கள் என்றால் ராசிநாதன் சுக்கிரனுகவும், நான்காம் பாதமென்றால் ராசிநாதன் செவ்வாயாகவும், நட்சத்திர நாதன் சுக்கிர னாகவும், நவாம்ச நாதர்களாக விசாகம் ஒன்றாம் பாதமென்றால் செவ்வாயும், இரண்டென்றால் சுக்கிரனும், மூன்றென் றால் புதனும், விசாகம் நான்காம் பாதமெஎன்றால் சந்திரனும் அமையப் பெறுவார்கள்.

Advertisment

vv

இது முருகப்பெருமான் அவதரித்த நட்சத்திரமாக அறியப்படுகின்றது. இந்த விசாகம் குயவனின் சக்கரம் போன்று அமைந்த சின்னமாக விளங்குகிறது. மேலும் விசாகமென்பது பாயும் புலி வடிவம் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவர்களை கொள்கைவாதிகள் எனலாம். விரும்பியதை அடைய அர்ப் பணிப்புடன் செயல்படுவார்கள். எப்பொழுதும் ஏதாவதொரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் கலைகளின்மீது பேரார்வமும் பெருங்காதலும் உடையவர்களாக இருப்பார்கள்.

கல்வியில் மேன்மை பொருந்திய வர்களாகவும், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் உடல் நோக கடினமாக உழைக்கமாட்டார்கள்.

ஆழ்ந்த சிந்தனையும் அகன்ற அணுகுமுறையும் இந்த நட்சத்திரத்தின் குணமாகும். நிதர்சன வாழ்க்கையில் இந்த நட்சத்திரத்தில் ஜனித்தவர்கள் பிறந்த இடத்தைவிட்டு வேறிடத்தில் சென்று வசிப்பவர்களாகவே பெரும்பான்மையினர் திகழ்கிறார்கள்.

வயதில் மூத்தோரிடம் காதல் வயப்படுவது விசாக நட்சத்திரத்தின் குணமாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த விசாக நட்சத்திரத்தில் நிற்கும் கிரகம் எந்த காரகம் கொண்டுள்ளதோ அந்த உறவு- மத்திய வயதில் இறந்த வர்கள், காணாமல் போனவர்கள், நாய் கடிபட்டவர்கள் போன்றோரைக் குறிக்கும்.

ராகுவின் கர்மப் பதிவைக்கொண்ட நட்சத்திரமாக இருந்தாலும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூழ்ச்சி மனப்பான்மை தெரியாது. நேர்வழியில் நடப்பது இவர்களுக்குப் பிடித்தமான ஒன்று. சற்று குழந்தைத்தனமாகவும் விளையாட்டுத்தனமாக வும் இருப்பார்கள். இவர்களின் வம்சா வளிகளில் காதல் திருமணம், கலப்புத் திருமணம், அந்நிய நாடு மற்றும் மாநிலத்தவர்களிடம் சம்பந்தம் சேய்துகொண்டவர்கள் இருப்பார்கள்.

மேலும் இந் நட்சத்திரத்தில் ஜனித்தவர்கள் திருமணத் தடைகள், உடல் நலிவு, அந்நியர் தொடர் பால் அவமானங்கள் போன்ற நெருடல்களை சந்தித்திருப்பார்கள்.

விசாகம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் மேஷத்தில் அமையப்பெறும். இங்கு சந்திரன், செவ்வாய், குரு மற்றும் சுக்கிரன் ஆகியவர்களின் இணைவு நிகழும். இந்த சூழ்நிலையானது அரசு வேலை, அரசுப் பதவி, கல்வியில் மேன்மை உண்டாகும். சூரியன் அங்கே உச்சம் பெறுவதனால் தகப்பனாரின் தொழிலைக் கைக்கொள்ளும் சூழ்நிலையும் இவர்களுக்கு உருவாகும். துடுக்குத்தனமும் விடாமுயற்சியும் இவர்களிடம் இருக்கும். துலாத்தில் நீசமடைந்த சூரியன் நவாம்சத்தில் உச்சத்தில் பயணிப்பதனால் அரசு மற்றும் தந்தையினால் முதலில் பாதிக்கப்பட்டாலும், பின்னர் சிறப்படையைக் கூடும்.

விசாகம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் அமையப் பெறும். இங்கு சந்திரன் உச்ச வலிமை அடை வதனாலும், சுக்கிரனுக்கு மற்றொரு ஆட்சி வீடாக அமைவதனாலும் இவர்கள் கலைத் துறை, டிரான்ஸ்போர்ட் போன்றவற்றில் கோலோச்சுவார்கள். 64 கலைகளில் ஏதேனும் ஒரு கலை யினை இவர்கள் கற்றிருப்பார்கள். மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வார் கள். விவசாயம் சார்ந்த பொருட்களின்மூலம் வரவு, சிறப்படையும் வாய்ப்புகள் அமையப் பெறும். மனவலிமை, பேச்சாற்றல் போன் றவை இவர்களுக்கு அமையப் பெற்றிருக் கும்.

விசாகம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் புதனின் வீடான மிதுனத்தில் அமையப் பெறும். இவர்கள் கல்வியாளர்கள் மற்றும் கணக்காளர்களாகத் திகழ்வார்கள். ஒப்பந்தம், புத்தகம் எழுதுவது, பத்திரிகை சம்பந்தப்பட்ட வேலை, போட்டோகிராபி தொடர்பான வேலைகள், தொடர்புகளைப் பணமாக்கும் வேலைகள் போன்றவற்றில் சிறப் படைவார்கள். கமிஷன் அடிப்படையிலான தொழில்கள் இவர்களை சிறப்படையச் செய்யும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான எழுத்து சம்பந்தப்பட்ட தொடர்புகளான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றவை வாங்கித் தருவது போன்ற மீடியேட்டர் வேலைகளின்மூலமும் இவர்கள் சிறப்படைவார்கள்.

விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் கடக வீட்டில் அமையப்பெறும். இங்கு சந்திரன் ஆட்சி பெற்றாலும், நான்காம் பாதம் விருச்சிகத்தை வந்தடைந்து சந்திரன் அங்கே நீசநிலையில் அமர்ந்திருப்பார். இது மனரீதியான சில குழப்பங்களையும், சிறிசில பிரச்சினைகளையும் அளிக்கும். இவர்கள் விவசாயம், இராணுவம் போன்ற சீருடைப் பணிகளில் பயணிப்பார்கள். உணவு வகை, விளைபொருட்கள் போன்ற விற்பனையில் கொடிகட்டிப் பறப் பவர்களில் விசாக நட்சத்திரத்தைச் சார்ந் தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப் படுகின்றது. இந்த நட்சத்திரத் தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சூது, ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் பயணிக்காமலிருப்பது மேன்மை தரும். துலாத் தில் நீதிமான் என்று கருதப்படும் சனிபகவான் உச்சம் பெறுவதனாலும், விருச்சிகத்தில் தனது முழு நட்சத்திரமான அனுஷம் இடம் பெற்றிருப்பதாலும் இந்த நட்சத்திரக்காரர்கள் நீதிக்குப் புறம்பான செயல்களைச் செய்தால் பெரும் பாதிப்பினை எதிர்கொள்கிறார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் மற்றும் தொழிற்கூடங்களில் புலிக் கொடி அல்லது குயவனின் சக்கரம் ஆகிய சின்னங்களைப் பயன்படுத்துவதன்மூலம் தொழிலில் சிறப் படையலாம்.

வணங்கவேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர்.

வணங்கவேண்டிய தலம்: பழநி.

வணங்கவேண்டிய விருட்சம்: விளா மரம்.

அணியவேண்டிய ரத்தினம்: வைரம்.

(அடுத்த இதழில் அனுஷம்)

செல்: 80563 79988

bala240323
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe