ஒரு மரத்தின் விதையை கவனியுங்கள். அது எவ்வளவு சிறியது! ஆயினும் அதனுள் ஒரு மரமோ, சில விதைகளுக்குள் பல மரங்களோ ஒரு வனமோ மறைந்துள்ளன. அந்த விதை ஒரு மரமாக- விருட்சமாக வளர்வதற்கு எவ்வளவு மழை, புயல், தாங்கொணா வறட்சி, அதீத வெப்பம் போன்ற இடர் பாடுகளை சந்தித்து சமாளித்தி ருக்கும்? பின்புதானே பெரிய மரமாகிறது! அதன்பின் பூக்கள், காய்கள், கனிகள் என எவ்வ ளவோ தருவதோடு, உயிரினங் களுக்கு நிழலும், பறவைகளுக்கு வசிப்பிடமும் என பயனும் பலனும் தருகிறது.
ஜோதிடம், ஒவ்வொரு கிரகத்துக்கும் மரம், செடி, காய், கனி, பூக்களை ஒதுக்கியுள்ளது. அதன் விவரங்களை இங்கு காண்போம். (சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் காரகம் வசிக்கின்றன.)
சூரியன்
பெரிய மரங்கள், மருந்துச் செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம், வெண்தேக்கு, வேங்கைமரம், வாதநாராயண மரம், எட்டிமரம், புங்கமரம், பலாமரம், கடுக்காய், பனைமரம், செந்தாமரை, பாலைவன முட்செடிகள், குகைப் புதர்கள், மலை மரங்கள் போன்றவை அனைத்தும் சூரியன் குறிக்கும் தாவரங்களாகும்.
சந்திரன்
நாவல்மரம், மந்தாரை, நாகலிங்க மரம், ஆத்திமரம், தென்னை, ஒதியமரம், கருங்காலி, சிறு நாகப்பூ, பாக்குமரம், கோதுமை, நெல், பழமரங்கள், இளங்குருத்துகள், தேயிலை, காபி, முட்டைகோஸ், கிழங்கு, காளான், கரும்பு, பூசணி, பார்லி, புல் வகைகள், அனைத்து பூஞ்செடிகள், வெள்ளலரி, சங்குப்பூ, உணவு சம்பந்தமான அனைத்து விவசாயப் பயிர்களும் சந்திரன் சார்ந்தவை.
செவ்வாய்
கருங்காலி, வேப்பமரம், நீர்க் கடம்பை, வில்வம், புரசு, கொடுக்காய்ப்புளி மரம், தங்க அரளி, வன்னிமரம், கருவேலமரம், சீதாப்பழ மரம், ஜாதிக்காய், மலை மற்றும் பாறைகளுள்ள இடங்களில் வளரும் மரங்கள், கசப்புச் சுவைதரும் மரங்கள், பூண்டு, வேர்க்கடலை, கடுகு, வெல்லம், தடிமனான நெல் வகைகள், சிவப்புநிற தானியச் செடிலி மர வகைகள் போன்றவை செவ்வாய் குறிப்பிடும் தாவரங்களாகும்.
புதன்
புன்னை மரம், முசுக்கொட்டை, இலந்தைமரம், பலா மரம், பூவரசு மரம், பனைமரம், தங்க அரளி, செஞ்சந்தனம், மஞ்சள் பலா, பூந்தோட்டம், செடி கொடிகள், துளசி போன்ற பவித்திரமான செடிகள், நன்செய், புன்செய் மற்றும் அனைத்து பச்சை இலையுடைய தாவரங்களும் புதனுக்குரியவை.
குரு
மலைவேம்பு, மூங்கில், அடப்பமரம், நெல்லி, சிம்சுபா மரம், பூவன்மரம், தூங்கு மூஞ்சி மரம், தேமா, குங்கிலியம், சுந்தர வேம்பு, கள்ளி மந்தாரை, கடலருகில் வளரும் தாவரங்கள், அடர்த்தியான அகன்ற வனப் பகுதி மரங்கள், ஆன்மிகம் சம்பந்தமான மரம், செடிகள், மஞ்சள் பூக்கள், பழமரம், மருந்து சார்ந்த மரங்கள், அனைத்து விதைகள், மூலிகைத் தாவரம், ரப்பர் மரம், தாமரை, நீரில் வளரும் பூக்கள் போன்றவை அனைத்தையும் குரு குறிப்பிடுவார்.
சுக்கிரன்
அத்திமரம், மஞ்சள் கடம்பு, விளாமர

அத்திமரம், மஞ்சள் கடம்பு, விளாமரம், நந்தியாவட்டை, பலாச மரம், வாகை, ருத்ராட்ச மரம், வஞ்சிமரம், கடற்காஞ்சி, சந்தனமரம், எலுமிச்சை மரம், கால்நடைகள் மேயும் புல்வெளிகள், வயல்கள், வாசனை திரவியம் தரும் மரங்கள், இனிப்பான பழங்கள் தரும் மரங்கள், ரப்பர், பருத்தி, மல்லிகை, மசாலா தாவரம், ஆப்பிள் மரம், பட்டுப்புழு உண்ணும் இலைகள், காய்கறிகள், ஊறுகாய் மற்றும் பழக்கூழ் தயாரிக்க உதவும் தாவரங் கள், புளிப்பும் இனிப்பும் கலந்த புளியமரம் போன்ற மரங்கள் ஆகிய அனைத்தையும் சுக்கிரன் குறிப்பார்.
சனி
அரசமரம், ஆச்சாமரம், நொச்சி, மகிழமரம், பூமருது, கோங்கு, தேக்கு, வேம்பு, குல்மொஹர், செம்மரம், சேராங் கொட்டை, எண்ணெய் தரும் மரங்கள், கட்டட வேலைக்கு உதவும் மரங்கள், கடுமைத் தன்மையுடைய மரங்கள், வாழை, உருளைக் கிழங்கு, பார்லி, குளிரும் இறுக்கமுமுடைய மரங்கள், புன்செய் நிலம், வாயுவை உண்டாக் கும் காய்கனிகள், பெரிய குழிகள் தேவைப் படும் மரங்கள் போன்றவை சனியின் ஆதிக்கத்தில் வளர்பவை.
ராகு
செங்கருங்காலி, எருக்கு, ஆனைக் குன்றிமணி, மருது, புளியமரம், மஞ்சள் கொன்றை, மந்தாரை, கடம்பு, பரம்பை, திலகமரம், பெரிய வனத்திலுள்ள மரங்கள், காற்றை உருவாக்கும் பெரிய விருட்சங்கள், போதை தரும் தாவரங்கள், விஷச் செடிகள், மாந்திரீகத்திற்கு உதவும் சில செடிகள் போன்றவை ராகுவுக்குரிய தாவரங்களாகும்.
கேது
காஞ்சிரை, மகிழமரம், வாதாங்கொட்டை, நண்டாஞ்சு, ஆலமரம், முத்திலா மரம், இலுப்பை, பவளமல்லி மரம், பெருமரம், செண்பகமரம், ஆச்சாமரம், கொள்ளுச்செடி, செவ்வந்திச்செடி, மாந்திரீக தாவரங்கள், வேர்கள், உலர்ந்த புல், மூலிகைச்செடிகள், ஆலமர விழுது, கொடிகள், முட்செடிகள் போன்றவை கேதுவின் தாவரங்களாகும். இனி, சில கிரகங்களின் சம்பந்தத்தால் ஏற்படும் விளைவுகளையும், அதற்கான விருட்சப் பரிகாரங்களையும் காணலாம்.
சூரியன்+சனி: இந்த இணைவு ஜாத கருக்கும் தந்தைக்கும் எப்போதும் மன வேறுபாட்டைக் கொடுப்பதுடன், அரசு விஷயங்களில் தடை, தாமதம் கொடுக்கும். இவர்கள் நெல்லிமரம், குல்மொஹர் ஆகியவற்றை வளர்க்கலாம். இடப்பற்றாக் குறை உள்ளவர்கள் இந்த மரக்கன்றுகளை வாங்கி தானம் செய்யவும்.
சூரியன்+செவ்வாய்: இந்த கிரகச் சேர்க்கை தம்பதிகளின் பிரிவைக் குறிக்கும். தான் எனும் அகங்காரம் மிக்கவர்களாக மாற்றும். இவர்கள் வாதநாராயண மரம், வேப்பமரம் ஆகியவற்றை வளர்க்கவோ மரக் கன்று தானமோ அல்லது இந்த மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதோ மிக நன்மை தரும்.
சூரியன்+ராகு: இந்த கிரக சம்பந்தமானது ஜாதகருக்கு எப்போதும் ஒரு கிரகண மறைவு நிலையைத் தரும். ஜாதகரின் தந்தை அடிக்கடி நோய் அல்லது துன்பம் அல்லது ஏதோ வெளியில் சொல்லமுடியாத துக்கத்தில் தவிப்பார். இந்த கிரகச் சேர்க்கை யுடைய ஜாதகர்கள் தேக்கு மற்றும் மஞ்சள் கொன்றை மரம் வளர்ப்பது, அதன் மரக்கன்று தானம் தருவது, அந்த மரங் களுக்கு நீர் ஊற்றுவது போன்றவை அருமை யான பரிகாரங்களாகும்.
சூரியன்+கேது: இந்த இணைவு ஜாதகரை அல்லது அவரது தந்தையை ஒன்று பிச்சைக் காரனாக்கும் அல்லது சந்நியாசியாக்கி ஊரை விட்டு வெளியேறச் செய்யும். சிலரை நடத்தை கெடச்செய்யும். இந்த கிரகச் சேர்க்கைக்கு கடுக்காய் மற்றும் வாதாங்கொட்டை மரம் வளர்ப்பது, இந்த மரக்கன்று தானம் செய்வது, இந்த மரங்களுக்கு நீர் ஊற்றுவது சிறந்த பரிகாரமாகும்.
சந்திரன்+சனி: இந்த கிரகச் சேர்க்கை புனர்பூ தோஷம் எனப்படும். முக்கியமாக மறுமணம் செய்யும் அமைப்பையும், நோயுள்ள தாயாரையும், மந்தபுத்தியையும் கொடுக்கும். இதற்கு நாவல்மரம் மற்றும் மகிழமரம் வளர்ப்பது, இதன் கன்றுகளை தானம் செய்வது, இம்மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவது சிறந்த பரிகாரமாகும்.
சந்திரன்+செவ்வாய்: இந்த கிரகக் கூட்டு ஜாதகருக்கு கோபத்தையும், ஜாதக ரின் சகோதரருக்குக் கெடுதலையும், தீய புத்தி யையும், அவ்வப்போது அடிபட்டு ரத்தம் வரும் சூழலையும் தரும். இதற்கு சிறு நாகப்பூ மரம், வில்வமரம் வளர்ப்பது, இதன் மரக்கன்று தானம் செய்வது, இந்த மரங்கள் வளர நீர் ஊற்றுவது பயன்தரும் பரிகாரங் களாகும்.
சந்திரன்+ராகு: எப்போதும் மனத் துன்பமுடைய தாயார் அமைவார். ஜாதகர் அவ்வப்போது மூளைகுழம்பி ஒருவித பைத்தியம் பிடிக்கும் மனநிலைக்குச் செல்வார். அல்லது நீரில் கண்டம், வயிற்றில் வலி என ஏதோவொன்று பாடாய்ப்படுத்தும். இதற்கு நாகலிங்க மரம், கடம்பமரம் வளர்ப் பது, இதன் கன்றுகளை தானமளிப்பது, இவற்றுக்கு நீர் ஊற்றுவது துன்பங்களிலிருந்து மீட்கும்.
சந்திரன்+கேது: இந்த சேர்க்கை ஜாதகரை அதிகமாக சிந்திக்க வைத்து, ஒன்று சந்நியாசியாக்கிவிடும் அல்லது முட்டா ளாக்கிவிடும். மிகச்சிலர் பில்லி- சூன்ய- மாந்திரீக வழியில் திரும்பிவிடுவர். இவர் களுக்கு ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினை ஏற்படும். இவர்கள் பாக்குமரம் மற்றும் ஆலமரம் ஆகியவற்றை வளர்ப்பதும், தானமளிப்பதும், பாதுகாப்பதும் வெகு நன்மை தரும்.
செவ்வாய்+சனி: இந்த கிரகச் சேர்க்கையுள்ள ஜாதகருக்கு எப்போதும் அவமானம், தோல்வி, வேலையில் நிலையில் லாமை, அவ்வப்போது அடிபட்டு ரத்தம் சிந்துவது, கொடூர சிந்தனை, அதிர்ஷ்ட மின்மை, தாமத கலப்புத் திருமணம், மிகுந்த சுயநலம் என பிறர் வெறுக்கும் குணங்கள் நிறைந்து காணப்படும். இவர்கள் வேப்பமரம் மற்றும் அரசமரத்தை வளர்க்கவேண்டும். அதனைப் பாதுகாப்பதும், வணங்குவதும், மரக்கன்று தானம் தருவதும் ஜாதகரின் துரதிர்ஷ்டத்தைக் குறைக்க உதவும். கோவில் களில் இணைந்திருக்கும் இவ்விரு மரங்களை யும் சுற்றிவந்து வழிபடுதல் நன்று.
செவ்வாய்+ராகு: இந்த கிரக இணைவு ஜாதகருக்கு எப்போதும் ஒரு மறைவுத்தனமான- மறைந்துவாழும்- சட்டப்புறம்பான செயல்கள் செய்யும் பயன்தராத வாழ்வையே கொடுக்கும். எதிர்மறையான செயல்களை மிகத்துணிச்சலாக செய்யத்தூண்டும். இவர்கள் தங்க அரளி மற்றும் மருதமரம் வளர்ப்பு, மரக்கன்று தானம், அம்மரங் களுக்குத் தண்ணீரூற்றி உரமிட்டுக் காப்பாற்று வது போன்றவை நன்மை தரும்.
செவ்வாய்+கேது: இந்த கிரக சம்பந்தம் போலிச் சாமியார்களுக்கு ஏற்றது. புத்திசாலித் தனமாக தவறான வேலைகளைச் செய்யத் தூண்டும். சிலரை போதை வஸ்துகளைப் பயன்படுத்தச்செய்து நாசமாக்கும். பொதுவாக தீயவராக்கிவிடும். இதற்கு இலுப்பை மரம், நீர்க்கடம்ப மரம் ஆகிய வற்றை வளர்ப்பதும், இந்த கன்றுகளை தானமளிப்பதும், இவை வளர்வதற்கு ஆவன செய்வதும் நல்லறிவைத் தரும் பரிகாரங்களாகும்.
செவ்வாய்+புதன்: இந்த கிரகச் சேர்க்கை ஜாதகருக்கு படிப்பில் தடைகள், அதிக குறும்புத்தனம், எதிர்த்துப் பேசுவது, நிலத்தகராறு, தோல்நோய் போன்றவற்றைத் தரும். இதற்கு செஞ்சந்தன மரம், புரசைமரம் ஆகியவற்றை வளர்ப்பதும், தானமளிப்பதும், இந்த மரங்கள் அழிந்து போகாமல் காப்பாற்றுவதும் தூய்மையான குணத்தைக் கொடுக்கும்.
புதன்+ராகு: இந்த கிரகச் சேர்க்கை ஜாதகரை சட்டப் புறம் பான செயல்களை தைரியமாக- புத்திசாலித்தனமாக- எவரும் நம்பும் படி செய்யத் தூண்டும். நயமாகப் பேசி ஏமாற்றுவர். எளிதாக கள்ள நோட்டு அச்சடித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கே விநியோகம் செய்யத் தூண்டும். அவ்வளவு தெளிவாக பிறரை ஏமாற்ற சொல்லித்தரும் கிரக சம்பந்தமிது. இதற்கு இலந்தை மரம், புளியமரம் ஆகியவற்றை வளர்க்கலாம். இந்த மரக்கன்றுகளை தானம் செய்யலாம். இவை வளர ஆவன செய்யலாம். இவற்றையெல்லாம் இவர்கள் தங்கள் சொந்த பணத்தில் செய்யமாட்டார்கள்.
அடுத்தவர் பணத்தை அபகரித்து அதில் அமர்க்களமாகப் பரிகாரம் செய்துவிடுவார்கள்.
புதன்+கேது: இந்த கிரகச் சேர்க்கை பெரும்பாலும் காதல் விஷயங்களில்தான் வீரியம் காட்டும்.
இதனால் கல்வியில் தடை ஏற்படும்.
பலாமரம், இலுப்பை மரம் ஆகிய வற்றை வளர்ப்பதும், இம்மரக் கன்றுகளை தானமளிப்பதும், இவற்றைப் பாதுகாப்பதும் நன்று.
குரு+ராகு: இந்த கிரகக் கூட்டு ஜாதகரை நல்லவரா- கெட்டவரா என யோசிக்கச் செய்யும் வகையில் வாழவைக்கும். மிகமிக மேன்மை யானவர்கள்போல் நடித்து மிகச் சுலபமாகப் பிறரை ஏமாற்றிவிடுவர். அல்லது ஆச்சாரமான மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனாச்சாரமாக சீரழிவார்கள். இவர்கள் ஓரளவு நல்லவர்களாவதற்கு நெல்லி மரமும் குன்றிமணி மரமும் வளர்க்கவும். அல்லது அதன் கன்றுகளை தானம் செய்யலாம். அவை வளர உரமிட்டு ஆவன செய்யலாம்.
சுக்கிரன்+ராகு: இந்த இணைவு, ஒன்று காதல்- கலப்பு- வேறுமதத் திருமணம் செய்யத் தூண்டும். அல்லது மதுபோதை போன்ற தீய பழக்கங்களை உருவாக்கிவிடும். சிலரை லஞ்சப்பணம், கள்ளக் கடத்தல், போதை வஸ்துகள் விற்பனைமூலம் பெரும் பணக்காரராக்கிவிடும். இதற்கு எலுமிச்சை மற்றும் கருங்காலி மரம் வளர்க்கலாம். இதன் கன்றுகளை தானம் செய்யலாம். இவை வளர ஆவன செய்யலாம்.
சுக்கிரன்+கேது: இந்த கிரகச் சேர்க்கை யும் திருமண வாழ்வை சற்று பாதிக்கும். சுக்கிரன்- ராகு சேர்க்கையானது ஓடிப் போய் திருமணம் செய்துகொள்ள வைத்து வெறுப்பேற்றும். சுக்கிரன்- கேது சேர்க்கை யானது பார்த்துவைத்து சேர்த்த திருமண பந்தத்தில் முழுமையாக ஈடுபடவிடாமல் வெறுப்பேற்றும். சுக்கிரன்- கேது திருமண வாழ்வில் சற்று வெறுப்பைக் கொடுத்து சந்நியாசியாவதற்கு வழியமைக்கும். இதற்கு நந்தியாவட்டை மரம், மகிழமரம் அல்லது செண்பக மரம் வளர்ப்பதும், அவற்றின் கன்றுகளை தானமளிப்பதும் நன்று. ஏதோ வீட்டைவிட்டு ஓடாமல், வீட்டுக்குள்ளேயே கடவுளை வணங்கிக்கொண்டிருக்க இந்த விருட்ச தானம் உதவிசெய்யும்.
சனி+ராகு: இரு கடுமையான பாவிகளின் சேர்க்கை இது. ஜாதகரை எப்போது சிறையில் கொண்டு அடைக்கலாம் என்று கணக்குப் பார்த்துக்கொண்டே இருக்கும். வாழ்வு முழுவதும் ஏதோவொரு இருளான விஷயம்- மறைவான செயல்லி திருட்டுத்தனமான செயல்களை இந்த ஜாதகர் எதிர் கொள்ளவேண்டி வரும். அரசமரம் அல்லது செம்மரம், கடம்பமரம் அல்லது புளியமரம் ஆகியவற்றை வளர்த்து, தானமளித்துப் பராமரித்து வந்தால் சிறைக்குச் செல்லாமல் தப்பிக்கலாம்.
சனி+கேது இந்த இரு கிரகங்களும் சேர்ந்து ஜாதகருக்கு நல்ல வேலை கிடைக்கச் செய்யாது. வேலை கிடைத்தாலும் நீடித் திருக்க விடாது. அவ்வப்போது ஆயுள் கண்டம் ஏற்பட்டு, எப்போது இறைவனைச் சேருவோம் என விரக்தி மனப்பான்மை வந்துவிடும். வேறுசிலர் இதனை அப்படியே பயன்படுத்தி போலிச் சாமியாராகி, பின் நல்லபடியாக- செழிப்பாக- அமோக அறுவடையுடன் இருப்பர். ஆலமரம், அரச மரத்தை வளர்த்து, அதனடியில் அமர்ந்து விபூதி தர ஆரம்பித்துவிடுவர்.
ஜாதகத்தில் சூரியன் சம்பந்தமான விருட்சப் பரிகாரத்திற்கு நல்ல உயரமான- பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் மரக் கன்றுகளை தானம் செய்யவேண்டும்.சந்திரன், சுக்கிரனுக்கு உணவு சம்பந்தம் மற்றும் நல்ல இனிப்பான பழங்கள் தரும் மரக்கன்றுகளை தானமளிக்கவும். செவ்வாய்க்கு சற்று கசப்புச்சுவை தரும் காய்- கனி தரும் மரக்கன்று தானம் ஏற்புடையது. புதன் சம்பந்த பரிகாரத்திற்கு பழமில்லாத மரக்கன்று தானம் சிறப்பு.
குருவுக்கு பழமையான- பெரியதாக வளரக்கூடிய மரக்கன்றுகள் தானம் நன்று. ராகுவுக்கு பெரிய காடுகளில் வளரும் மரக்கன்று தானம் சிறந்தது.கேதுவுக்கு புதர்கள்போல் வளரும் மரக்கன்று ஏற்புடையது. சந்திரன், கேது இருவரின் பரிகாரத்துக்கு மருந்து சம்பந்தமான மரக்கன்று தானம் நல்ல பலன்தரும்.
அவரவர் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய விழாக்களில் மரக்கன்றுகளை தானம் தருவது நல்லது. ஜோதிடப்படி எவ்வளவு பரிகாரங்கள் செய்தாலும் அது அந்தந்த ஜாதகர்களுக்கு மட்டுமே நன்மை தரும். இந்த விருட்சப் பரிகாரம் மட்டுமே அவர்களுக்கு மட்டுமின்றி, பறவைகள், மிருகங்கள் என ஐந்தறிவு உயிரினங்களுக்கும் பயன்தரும். நிழல் மட்டுமல்லாது, அவை வெளியிடும் பிராணவாயுமூலம் உலகமே நன்மை பெறும். மேலும் அரசும் வனத்துறையினரும் ஜாதகர்கள் தானமளிக்கவேண்டிய விருட்சங்கள் வளர உதவி செய்தால் மிகப் புண்ணியமாகும்.
செல்: 94449 61845