கன்னி ராசியில் உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங் கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள் உள்ளன. உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு சூரிய தசையும், அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசையும், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசையும் முதலில் வரும்.
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந் தவர்கள் பிரசித்திபெற்ற குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தரித்திரத்தையும், வறுமையையும் அனுபவிக்க நேரிடும். இவர்கள் முக்கியமாக யாரையும் நம்பக் கூடாது. ஏனென்றால் உற்றார்- உறவினர், நண்பர்களும் செல்வத்தை ஏமாற்றிப் ப
கன்னி ராசியில் உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங் கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள் உள்ளன. உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு சூரிய தசையும், அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசையும், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசையும் முதலில் வரும்.
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந் தவர்கள் பிரசித்திபெற்ற குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தரித்திரத்தையும், வறுமையையும் அனுபவிக்க நேரிடும். இவர்கள் முக்கியமாக யாரையும் நம்பக் கூடாது. ஏனென்றால் உற்றார்- உறவினர், நண்பர்களும் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்பார்கள். கவனம் தேவை.
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது ஒன்பது வயதுவரை வறுமையுடன் வாழ்வார்கள். சந்திர தசையில் பிறப்பதால் தாயாருக்கு சிரமங்கள் ஏற்படும். இவர்களுக்கு ஒன்பது வயது முடிந்தவுடன் அடுத்தடுத்து நல்ல திருப்புமுனை உண்டாகும். தெய்வீக வழிபாடுகளில் சிறந்தவர்களாகவும், ஆச்சார சீலர்களாகவும், நீதி, நேர்மையுடனும் இருப் பார்கள். எக்காரியங்களிலும், எவ்விதத் தொழில்களிலும் ஞானத்தைப் பெற்றிருப் பார்கள். பிற்காலத்தில் செல்வாக்குடன் விளங்குவார்கள். தான, தர்மங்கள், பிறருக்கு உபகாரங்கள் செய்வதை லட்சியமாகக் கொண்டிருப்பார்கள். ஒன்பது வயதுக்குமேல் சிறப்பான வாழ்வு அமையவில்லையென் றால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளதென்று அறியவும். 18 வயதுக்குமேல் பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி செய்துகொண்டால்தான் வாழ்வில் முன்னேறமுடியும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழிற்கல்விக்குரியவர்கள். இவர்களது திருமணத்தைப் பொருத்தளவில் பெரும்பாலும் இவர்களாகவே முடிவுசெய்வார்கள்.
பொறு மையான சுபாவத்தாலும், அன்புகலந்த பேச்சாலும், எதிர்காலத்தில் சிறப்பைப் பெறுவார்கள்.
பரிகாரங்கள்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் மூவனூர் வாஞ்சியம்மனை வணங்கிவர வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அருகிலிலுள்ள அம்மன் கோவில் சென்று வழிபட்டுவர வேண்டும். ஏழை, எளியோருக்கு மாதம் ஒருமுறை ஒருவேளை உணவு கொடுத்தால் நற்பலனை அடையலாம்.
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒருமுறையேனும் திருவாரூர் அருகிலுள்ள ராஜதுர்க்கையை வணங்கிவர வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள துர்க்கையம்மனை வழிபட்டுவரவும். மேலும் இவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் இருக்கும். அதற்கான நிவர்த்தி செய்யவேண்டும். கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலில் எல்லா நாட்களிலும் காலை 7.00 முதல் 9.00 மணிக்குள் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்வதுண்டு. வருடம் ஒருமுறையாவது குலதெய்வ வழிபாடு செய்துவரவேண்டும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் திருவாரூர் ராஜதுர்க்கையை வணங்கிவர வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அருகிலுள்ள துர்க்கையம்மனை வணங்கிவர நன்மையுண்டு. இவர்கள் வாழ்நாள் முழுவதும் மாமனார், மாமியாரைக் காப்பாற்றுவதோடு, அவர்கள் காலத்திற்குப்பின்பு அவர்கள் படத்தை வைத்து வணங்கிவருதல் நன்று. மேலும் ஒரு குதிரை லாடத்தை வீட்டின் முகப்பில் மாட்டி வைத்தால் தீயசக்திகள் நுழையாது.
செல்: 94871 68174