மனித வாழ்வின் மகத்தான அத்தியாயம் திருமணம். பருவ வயதையடைந்த ஆண்- பெண்ணுக்குத் திருமண வாழ்க்கையில் ஈடுபடும் தகுதியும் ஆர்வமும் வருவது இயற்கை.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆனந்தத்தைத் தரும் திருப்பமாகவும் ஆரம்பமாகவும் அமைவது திருமணம். வாழ்வியல்ரீதியான இரண்டு காரணங்களால் பலருக்குத் திருமண வாழ்க்கை கானல் நீராக இருக்கிறது. திருமணத்தடைக்காகப் பிராதானப்படுத்தப்படும் இரண்டு காரணிகள் உண்டு.
1. தர்மகர்மாதிபதி யோகம்.
2. கன்னி மூலையும் கன்னியும்.
தர்மகர்மாதிபதி யோகம்
காலபுருஷ தத்துவப்படி காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும். கால புருஷ ஒன்பதாம் அதிபதியான குருவுக்கும், கர்மாதிபதியான சனிக்கும் சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு, சனி சம்பந்தமென்பது முன்ஜென்மத்தில் செய்த பாவ- புண்ணியங் களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.
தர்மமென்றால், ஒருவர் தனது செயல்களால் தன் குடும்பத்தினருக்கும், தன் சந்ததியினருக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ- புண்ணியங்கள். கர்மமென்றால், தான் செய்த, செய்யும் தொழில்மூலம் தன் வாரிசுகளுக்கும், தன் தலைமுறை யினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ- புண்ணியங்கள்.
ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணியப் பலன்கள் கிடைக்க ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெற வேண்டும். நீசம், வக்ரம், அஸ்தமனமாகாமல் இருப்பதோடு, அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்கவேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவிகிதம் சுபத்தன்மையுடன் செயல்படும். இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள், குடும்பமே கஷ்டப்பட்டா லும் ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்துவிடுவார்.
ஜனனகால ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும்; நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றாலும் இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக, பிரம்மஹத்தி தோஷமாகவும் செயல்படும். இவர்களுக்கு வசதிவாய்ப்புகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்தமுடியாது.
குரு, சனி இணைவு எவ்வாறு திருமணத் தைத் தடைசெய்கிறதென்பதைக் காணலாம்.
குரு என்றால் குழந்தை (பிள்ளைகள்); சனி என்றால் கர்மா. குருவுக்கு சனி பார்வை இருப்பவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் பற்றிய சிந்தனையும் கவலையும் இருந்துகொண்டே இருக்கும்.
பிள்ளைகளை "கங்காரு'போல் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப் பார்கள். பிள்ளைகள் சாப்பிடும் உணவு, உடை, கல்லூரிப் படிப்பு, திருமண வாழ்க்கை என அனைத்து செயல்களிலும் தங்கள் விருப்பத்தைத் திணிப்பார்கள். எந்த விஷயத்திலும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு இடம் கொடுக்கமாட்டார்கள். இந்த கிரகச் சேர்க்கை இருக்கும் பல பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண காலகட்டங்களில் சரியான வரனைத் தேர்வுசெய்ய முடியாமல் தவிக்கிறார்கள். அழகு, அ
மனித வாழ்வின் மகத்தான அத்தியாயம் திருமணம். பருவ வயதையடைந்த ஆண்- பெண்ணுக்குத் திருமண வாழ்க்கையில் ஈடுபடும் தகுதியும் ஆர்வமும் வருவது இயற்கை.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஆனந்தத்தைத் தரும் திருப்பமாகவும் ஆரம்பமாகவும் அமைவது திருமணம். வாழ்வியல்ரீதியான இரண்டு காரணங்களால் பலருக்குத் திருமண வாழ்க்கை கானல் நீராக இருக்கிறது. திருமணத்தடைக்காகப் பிராதானப்படுத்தப்படும் இரண்டு காரணிகள் உண்டு.
1. தர்மகர்மாதிபதி யோகம்.
2. கன்னி மூலையும் கன்னியும்.
தர்மகர்மாதிபதி யோகம்
காலபுருஷ தத்துவப்படி காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும். கால புருஷ ஒன்பதாம் அதிபதியான குருவுக்கும், கர்மாதிபதியான சனிக்கும் சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகமாகும். குரு, சனி சம்பந்தமென்பது முன்ஜென்மத்தில் செய்த பாவ- புண்ணியங் களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.
தர்மமென்றால், ஒருவர் தனது செயல்களால் தன் குடும்பத்தினருக்கும், தன் சந்ததியினருக்கும், தன் தலைமுறையினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ- புண்ணியங்கள். கர்மமென்றால், தான் செய்த, செய்யும் தொழில்மூலம் தன் வாரிசுகளுக்கும், தன் தலைமுறை யினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ- புண்ணியங்கள்.
ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணியப் பலன்கள் கிடைக்க ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெற வேண்டும். நீசம், வக்ரம், அஸ்தமனமாகாமல் இருப்பதோடு, அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்கவேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவிகிதம் சுபத்தன்மையுடன் செயல்படும். இக்கிரக சேர்க்கை இருப்பவர்கள், குடும்பமே கஷ்டப்பட்டா லும் ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைமைக்கு வந்துவிடுவார்.
ஜனனகால ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும்; நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றாலும் இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக, பிரம்மஹத்தி தோஷமாகவும் செயல்படும். இவர்களுக்கு வசதிவாய்ப்புகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்தமுடியாது.
குரு, சனி இணைவு எவ்வாறு திருமணத் தைத் தடைசெய்கிறதென்பதைக் காணலாம்.
குரு என்றால் குழந்தை (பிள்ளைகள்); சனி என்றால் கர்மா. குருவுக்கு சனி பார்வை இருப்பவர்களுக்கு எப்பொழுதும் குழந்தைகள் பற்றிய சிந்தனையும் கவலையும் இருந்துகொண்டே இருக்கும்.
பிள்ளைகளை "கங்காரு'போல் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப் பார்கள். பிள்ளைகள் சாப்பிடும் உணவு, உடை, கல்லூரிப் படிப்பு, திருமண வாழ்க்கை என அனைத்து செயல்களிலும் தங்கள் விருப்பத்தைத் திணிப்பார்கள். எந்த விஷயத்திலும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு இடம் கொடுக்கமாட்டார்கள். இந்த கிரகச் சேர்க்கை இருக்கும் பல பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமண காலகட்டங்களில் சரியான வரனைத் தேர்வுசெய்ய முடியாமல் தவிக்கிறார்கள். அழகு, அந்தஸ்து, படிப்பு, கௌரவம் என பல்வேறு "மணல்கயிறு' கண்டிஷன்போட்டு வரனைத் தேர்ந்தெடுப்பதால் திருமணத்தடை ஏற்படுகிறது.
எல்லாவிதத்திலும் சிறப்பான ஒரு வரனைத் தேர்வுசெய்ய முயற்சித்து திருமணத்தடைக்குத் தாங்களே காரணமாகிறார்கள். பிள்ளைகளின் பருவ வயதில் வரும் நல்ல வரன்களைத் தவறவிட்டு, பிற்காலத்தில் வருந்துகிறார்கள்.
ஜனன ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களில் பெரிய பிரச்சினை எதுவுமில்லாத பல பிள்ளைகள் பெற்றோரை மதித்து காலம்கடந்து திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். வெகுசில பிள்ளைகள் தங்களின் சாமர்த்தியத்தால் பெற்றோரை சரிசெய்து திருமணத் தடையைத் தகர்த்து விடுகிறார்கள். ஒருசிலரின் பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் நடந்தாலும், பெற்றோரை அடிக்கடி சந்திக்கமுடியாமல் வெளிநாட்டில் அல்லது வெளிமாநிலத்தில் வாழும் சூழல் ஏற்படுகிறது. அல்லது திருமணத்திற்குப்பிறகு திருமண வாழ்கையில் மனக் கசப்பு ஏற்படுகிறது.
சனி என்றாலே கசப்பு தானே. இந்த கிரக இணைவின் வேலையே திருமணம் தொடர்பான ஏதாவதொரு விஷயத்தில் பெற்றோர் களுக்கும் பிள்ளைகளுக்கும் மன சங்கடத்தைத் தருவது தான்.
இதில் இன்னொரு ஆச்சரியப்படும் விஷயமும் இருக்கிறது. இந்த கிரக சம்பந்தமிருக்கும் பெற்றோர் களின் பிள்ளைகளில் பலர் திருமண வாழ்க்கையை விரும்பாமல், பெற்றோர்களின் அன்பிற்காக 40-45 வயதைக் கடந்தும் பெற்றோருடன் வாழ்கிறார்கள். பிள்ளைகளின் அன்பைக்கண்டு வியப்பதா? பெற்றோர்களின் அக்கறையை மதிப்பதா என்ற கேள்விக்கு வாசகர்கள்தான் பதில் சொல்லவேண்டும். இதில் பெற்றோர்களையோ பிள்ளைகளையோ குறைசொல்லமுடியாது. நடப்பவை அனைத்தும் கர்மகாரகன் சனி பகவானின் வேலைகள்.
குருவுக்கு சனி பார்வை இருப்பதால்- அதாவது கர்மகாரகன் சனி தன் பார்வை பலத்தால் பொருளாதாரத்தை மிகைப்படுத்தலாக வழங்கி, கர்மவினையை அனுபவிக்க, ஜாதகரின் பிள்ளைகளின் வாழ்க்கையால் வேதனையைத் தருகிறார்.
திருமணம் மட்டுமல்ல; கல்லூரிப் படிப்பைத் தேர்வு செய்வதிலும், தொழிலைத் தேர்வு செய்வதிலும் இதே நிலைதான். இந்த கிரக சம்பந்தமுள்ள பெற்றோர்கள் சுயதொழில் செய்பவர்களாக இருந்தால், தங்களின் வாழ்வின் கடைசி நாள்வரை தொழில் பொறுப்பைப் பிள்ளைகளிடம் ஒப்படைக்க முன்வருவதில்லை. பிள்ளை களின்மீதுள்ள அதீத அன்பு மற்றும் அக்கறையில், பொறுப்புகளைத் தாங்களே சுமக்கிறார்கள்.
பரிகாரம்
உளவியில்ரீதியாக இந்தப் பிரச்சினைக் குத் தீர்வு தரமுயன்றால், பெற்றோர் கள் 30-35 வயதில் பெற்ற வாழ்வியல் ஞானத்தை, அறிவியல் வளர்ந்த இக்காலத் துப் பிள்ளைகள் தகவல்தொடர்பு சாதனங் கள்மூலம் 20 வயதிலேயே பெற்றுவிடுகிறார் கள். வாழ்வின் எதார்த்தத்தையும் பக்குவத் தையும் தகவல்தொடர்பு சாதனங்கள்மூலம் தெரிந்துகொள்கிறார்கள். சில குடும்பங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எதையும் கலந்தாலோசிப்பதில்லை. பிள்ளைகளுடன் பெற்றோர்கள் கலந்தாலோசிக்கும்போது, எத்தகைய பாதகமும் சாதகமாகும்.
ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற் றம், சுப நிகழ்வுகள் தடைப்படுகிறதென்றால், கட்டாயம் கர்மவினை காரணமாக இருக்கும். குரு, சனி சம்பந்தம், அஷ்டம, பாதக ஸ்தானத் தோடு சம்பந்தம் பெறுவது, குருவுக்கு சனி பார்வை இருப்பது, நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்ற குரு சனிக்கு சம்பந்தம் இருப்பது போன்ற அமைப்புகள், ஒருவருக்கு யாருடைய சாபத்தாலோ ஏற்பட்ட கர்மவினைத் தொடர்ச்சியாகும். எத்தனையோ குடும்பங்கள் வசதியிருந்தும் இதுபோன்ற சில சாபத்தினால் கடைசிவரை பிள்ளைகளைப் பற்றிய கவலையுடனே வாழ்கிறார்கள்.
ஒருசில குடும்பங்கள் தலைதூக்கமுடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசுகூட இல்லாமல் அழிந்து போவதற்கும் இதுவே காரணம். ஒரு குடும்பத்தையே அழிக்குமளவிற்கு அடுத்தவர்கள் வயிறெரிந்து விடும் சாபம் பலிக்குமென்பது நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் இருந்ததென்றால், அதை பிரசன்னத்தில் கண்டறிந்து நிவர்த்தி செய்யவேண்டும்.
சனிக்கிழமையன்று குளித்துவிட்டு, நூறு ஆண்டுகளான வேப்பமரத்தின் குச்சி களை எடுக்கவேண்டும். குச்சி வளையாமல், கோணாமல் நேராக இருக்கும்படியானதாக இருக்கவேண்டும். குச்சிகளைப் பிசிறுகளில்லாமல் கல்லில் தேய்த்து வழுவழுப்பாக்கிக் கொள்ளவும். பின் அதன் மேல் நயமான சந்தனம் பூசிக் காயவைத்து விடவும். இப்போது தெய்வீக வேப்பங்குச்சி தயார். இந்த குச்சிகளை தினமும் மாலையில் ஊதுபத்திபோல் ஏற்றி புகைபோட, சனிபகவானால் ஏற்படும் தாக்கம் குறைந்து சுப நிகழ்வுகள் கைகூடும். 90 நாட்களுக்குள் வெற்றி உறுதி.
அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறும் குரு, சனி சம்பந்தத்தால் பிரம்மஹத்தி தோஷத்தை அனுபவிப்பவர்கள் மாதந்தோறும் அமாவாசையில் பித்ருக்களை நினைத்துத் தர்ப்பணம் கொடுத்து, படை யலிட்டு வணங்குவது மிகவும் சிறப்பானது. அவ்வாறு செய்ய இயலாதவர்கள் தவறாமல் தை மாத அமாவாசைகளில் பித்ருவழிபாடு செய்வது அவசியம்.
இந்தநாளில் நதி, குளம் அல்லது சமுத்திரம் போன்ற நீர்நிலைகளில் மூழ்கி நீராடி, பித்ருக்களுக்குரிய தர்ப்பணம் செய்த பின் வீட்டுக்குவந்து படையல்போட்டு முன்னோர்களை வணங்கவேண்டும். இந்த வருடம் "கொரோனா' பாதிப்பிருப்பதால் வீட்டிலேயே பித்ருக்களுக்கு எள்ளும் நீரும்கொண்டு தர்ப்பணம் கொடுப்பதுடன், காகத்துக்கு எள் கலந்த தயிர்சாதம் வைப்ப தும் பித்ருக்களின் பரிபூரண ஆசிகளைப் பெற்றுத்தரும்.
திருநள்ளாறு அல்லது குச்சனூர் சனிபகவானை வணங்கிவந்தால் மனக் கவலைகள் மற்றும் கெடுபலன்கள் நீங்கி விடும். மனம் தளராமல் தொடர்ந்து குல தெய்வத்தை வழிபடவேண்டும். வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபாடு செய்யவேண்டும்.
சனி பகவானால் கெடுபலன் ஏற்படாமல் தப்பிக்க நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்கவேண்டும். வஞ்சக எண்ணம், பொறாமை, அடுத்தவர்களின் முன்னேற்றத் தைக் கெடுக்கும்- பழிவாங்கும் எண்ணத்தை முற்றிலும் கைவிடவேண்டும்.
கன்னிமூலையும் கன்னியும்
ஒருவருடைய ஜாதகத்திலுள்ள யோகங் களின் அடிப்படையிலேயே குடியிருக்கும் வீடு அமையும். மனித வாழ்வின் அடிப் படைத் தேவையில் வசிக்கும் வீடு முக்கிய பங்குவகிக்கிறது. வாழும் வீடு வளமாக இருந்தால் மட்டுமே மனிதனுக்கு நிம்மதி இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்ப உறவுகள் மகிழ்சியாக வாழமுடியும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கும்.
பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னிமூலை, அக்னிமூலை, வாயுமூலை, ஈசானமூலை என பிரித்துக் கூறுவதுண்டு. அதில் ஒருவர் வசிக்கும் வீட்டின் தென் மேற்குப் பகுதியைத்தான் கன்னிமூலை என்று சொல்வார்கள். தென்மேற்கு மூலை வீட்டில் வசிக்கும் கன்னிகளுக்கும், கன்னி தெய்வத்திற்குமுரிய மூலையாகும். ராசிச் சக்கரத்தில் காலபுருஷ ஆறாமிடமான கன்னி ராசியே கன்னிமூலை என்றழைக்கப்படும். பொதுவாக கன்னிமூலை என்பது உயர்ந்து, நீரோட்டமில்லாமல் இருப்பதுடன் எப்பொழுதும் மூடியே இருக்கவேண்டும்.
வாஸ்து சாஸ்திரப்படி கன்னிமூலை என்றழைக்கப்படும் தென்மேற்குப் பகுதி தாழ்வாக இருந்தாலோ, நீரோட்டம் இருந்தாலோ, மூடப்படாமலோ இருப்பின், அந்த வீட்டில் தீராத வியாதிகள், பொருள் பற்றாக்குறை மற்றும் சுபகாரியத்தடை இருந்துகொண்டே இருக்கும். இந்தியாவில் கன்னிமூலையென்று அழைக்கப்படுவது கன்னியாகுமரி மற்றும் கேரள நாட்டின் தென்மேற்குப் பகுதிகள். இந்தப் பகுதிகள் நீரோட்டம் மிகுந்ததாகவும் தாழ்ந்தும் காணப்படுகிறது. ஆக, இந்தியாவின் கன்னிமூலைப் பகுதிகள் பாதிக்கப்படுகிறது.
தென்மேற்குப் பகுதி பாதிக்கப்பட்ட காரணத்தால் நமது முன்னோர்கள் அங்கே பிரம்மச்சாரி கடவுள்களை ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்து வழிபட்டு கன்னிமூலை பாதிப்பை வெகுவாகக் குறையும்படி செய்தனர்.
அதாவது ராசிச் சக்கரத்தில் கன்னிமூலையைக் குறிக்கும் தென்மேற்குப்பகுதி கன்னி ராசியாகும். அந்த கன்னி ராசியின் ஆரம்ப நட்சத்திரம் உத்திரமாகும். உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர் சுவாமி ஐயப்பன். சபரிமலை ஐயப்பன் ரூபமானது, இந்திய மக்கள் அனைவருக்கும் கன்னிமூலை பாதிப்பிலிருந்து காப்பாற்ற பிரதிஷ்டை செய்யப்பட்ட ரூபமாகும்.
இதேபோல் குடியிருக்கும் வீட்டிற்கும் கன்னிமூலைக்கும் திருமணத்திற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு. ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காமிடத் தில் ராகு, கேது, மாந்தி மற்றும் நீச, அஸ்தமன கிரகங்கள் இருந்தாலோ, கன்னி ராசியில் மேலே கூறிய கிரகங்கள் இருந்தாலோ கன்னி மூலை பாதிப்பு நிச்சயம் இருக்கும்.
போரிங், செப்டிக் டேங்க், குளியலறை, கிணறு, சம்ப் போன்ற ஏதோவொரு வாஸ்துக் குறைபாடாவது இருக்கும். சிலருக்கு பூமிக்குமேலே பாதிப்பு தெரியாமல், கிணறு இருந்து மூடப்பட்ட இடமாகவோ அல்லது சல்லியப் பொருட்களோ தங்கியிருக்கும்.
கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத கன்னிமூலை பாதிப்புடைய வீட்டில் பிறந்த பெண்களின் திருமணத்தை தடைசெய்கிறது. அல்லது குலத்திற்கு மாறான திருமணத்தை நடத்திவிடுகிறது. முதிர்கன்னிகள் இருக்கும் வீட்டில் அல்லது ஜனனகால ஜாதகத்தில் விஷ கன்னிகா தோஷமிருக்கும் பெண்கள் வாழும் வீட்டில் கன்னிமூலை பாதிப்பிருக்கும். தென்மேற்குப் பகுதியின் பாதிப்பால் பலர் பலவிதங்களில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் கட்டாயம் அது பொய்யாகாது. இதுபோன்ற அமைப்பால் பாதிப்பு ஏற்படுவதாக சிறிய சந்தேகம் வந்தால்கூட, உடனடியாக அந்தப் பிரச்சினை என்னவென்று ஆராய்ந்து பார்த்துத் தீர்வுகொள்வது மிகவும் நல்லது.
பெண்கள் மட்டுமல்ல; ஜாதகரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லாத ஆண்களும் கன்னிமூலை பாதிப்பால் திருமணத் தடையைச் சந்திக்கிறார்கள்.
அதேபோல் வீட்டில் கன்னிமூலை எப்போதுமே அடைத்துதான் வைத்திருக்க வேண்டும். வீட்டில் கன்னி மூலையானது திறந்தநிலையில் இருக்கும்பட்சத்தில், துர்தேவதைகள் கட்டாயம் வீட்டிற்குள் வந்து வாசம் செய்யும். அப்போது வீட்டில் கண்ணுக்குத் தெரியாத பிரச்சினைகள் தலைவிரித்தாடும் என்பதில் சந்தேக மில்லை.
பரிகாரம்
கன்னிமூலை பாதிப்பை சரிசெய்யாமல், திருமணத்தடைக்கு எவ்வளவு பரிகாரம் செய்தாலும் பலிப்பதில்லை. காலபுருஷ ஆறாமிடமான கன்னியில் புதன் உச்சம் பெறுகிறார். சுக்கிரன் நீசம் பெறுகிறார்.
புதன் என்ற புத்தியைப் பயன்படுத்தி தென்மேற்குப் பகுதியை சரிசெய்பவர்களுக்கு நீச சுக்கிரனால் ஏற்படும் பாதிப்பு குறைந்து, வீட்டில் பிறந்த பெண்களுக்கு சுப வாழ்க்கை தேடிவரும்.
கன்னிமூலை பாதிப்பை சரிசெய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் தென்மேற்குப் பகுதியில் சிறிய பீடம் அல்லது "கபோர்டு' அமைத்து, அதில் ஆஞ்சனேயர், சுவாமி ஐயப்பன் மற்றும் பாலா திரிபுரசுந்தரி போன்ற படங்களை வைத்து வழிபடவேண்டும்.
குடும்பத்தில் பிறந்து கன்னியாக மறைந்த கன்னிகளை வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் வழிபடுவது சிறப்பு.
ஜோதிடத்தில் எந்த ஒரு ஸ்தானம் மூலமாக தீயபலன் நடைபெறுகிறதோ, அதன் எதிர் ஸ்தானதிபதியின் அதி தேவதையை வழிபட, அந்த ஸ்தானத்தால் வந்த தீயபலன் குறையும். ஜனனகால ஜாதகத்தில் கன்னி ராசியிலுள்ள கிரகத்தால் கன்னிமூலை பாதிக்கப்பட்டவர்கள் அதன் எதிர்வீடான மீனத்தின் அதிபதி குருவை வழிபட பாதிப்பு குறையும். சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி, ராமானுஜர் போன்ற சித்தர்களின் ஜீவசமாதியில் வழிபடலாம்.
ஜோதிடரீதியாக ஆண் ஜாதகத்தில் 2, 7-ஆம் அதிபதிகள், 2, 7-ல் நிற்கும் கிரகங்கள், சுக்கிரன், தசாபுக்திகள் ஓரளவு சுபத்தன்மையுடன் இயங்கினாலே உரிய வயதில் திருமணம் நடந்துவிடும்.
பெண் ஜாதகத்தில் 2, 7-ஆம் அதிபதிகள், 2, 7-ல் நிற்கும் கிரகங்கள், செவ்வாய் தசாபுக்திகள் ஓரளவு சுபத்தன்மையுடன் இயங்கினாலே உரிய வயதில் திருமணம் நடந்துவிடும்.
வாழ்வியல்ரீதியாக ஜனனகால ஜாதகத்தில் திருமண பாவகங்களில் எந்தக் குறைபாடுமில்லாத பலருக்கு ஏற்படும் இடர்களை ஆய்வுசெய்து, அனுபவத்தின் அடிப்படையில் புலப்பட்ட சில தகவல்களை இந்த கட்டுரையில் தெரிவித்திருக்கிறேன்.
மனிதர்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான வினைகளை அனுபவிப்பதற்குக் காரணம் விதிப் பயன்தான் என்றாலும், சுய உணர்வுவோடு செயல்பட்டு கர்மாவை மாற்றியமைக்க முயற்சிசெய்வது சாலச் சிறந்தது.
செல்: 98652 20406