Advertisment

விம்சோத்திரி தசா சுழற்சி! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/vimsotri-dasha-cycle-s-vijayanarasimhan

ரு ஜாதகர் பிறந்த நேரத்தில் சந்திரனின் நிலைகொண்டு, முதல் கிரக தசாவின் சுழற்சி அல்லது வட்டம் ஆரம்பமாகிறது. முதல் தசா காலம் நட்சத்திர அதிபதி யால் தீர்மானிக்கப்படுகிறது. சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் பயணிக்கும் தூரத்தின் சதவிகித அளவு சராசரியாக தசா காலத்தில் கழிக்கப்பட்டு முதல் தசாவின் இருப்பு கண்டு பிடிக்கப்படவேண்டும்.

Advertisment

விம்சோத்திரி தசா சந்திரனிலிருந்து துவங்கப்படுகிறது. ஏனேனில், சந்திரனிலிருந்துதான் எல்லாம் வளர்கின்றன. முதலில் நமது உள்மனம், பிறகு இந்த உலகத்தில் அனைத்தும் வளர்கின்றன.

கேது

நம் வாழ்க்கையில் முடிக்கவேண்டிய கர்மாக்களை முடிக்க நமக்குத் துணை புரிவதே கேதுவின் முக்கிய வேலையாகும். நமது ஆத்மாவுக்கு தேவையானவற்றை மட்டும் கொடுத்து தேவையில்லாத வற்றை எடுத்துக்கொண்டு ஆன்மாவை அபிவிருத்தி செய்ய வழிவகுப்பது கேதுவின் வேலையாகும்.

கேது தசா காலத்தில்தான் உலகில் நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கிறது. ஆனால் பல நேரங்களில் இந்த தசாவில்தான் எப்போதும் இல்லாத அளவிற்கு பொருள் நஷ்டம் ஏற்படுகிறது. முன்னர் கொடுத்த கேது, பின்னர் எடுத்துக்கொள்கிறான். நாம் எதன்மீது ஆசையும், நெருக்கமும் காட்டுகிறதோ, அப்போதுதான் கேது தீமை செய்கிறார். ஜோதிடத்தைப் போன்ற அறிவுக்கு எட்டாத மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும் தொழில்களுக்கு கேதுவின் ஆதரவு எப்போதும் உண்டு. இத்தசை மிகவும் வேகமாக ஓடி விடுவதால் வாழ்வு அதன் கட்டுப்பாட்டை இழந்து செல்வதுபோல் காட்சியளிக்கிறது. இந்த தசா காலத்தில் நீண்டகால புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாதிருப்பது நல்லது. ஏனெனில் வாழ்க்கையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்படலாம். நாம் அர்த்தமற்ற வாழ்க்கையில் ஒன்றினோமானால், வாழ்க்கைக்கு ஆழமான அடிகொடுக்கிறார் கேது. கேதுவின் தசா காலத்திற்குப் பிறகு தொடரும் சுக்கிர தசை, மிகவும் இலாபகரமானதாகத் தொடர்கிறது.

Advertisment

சுக்கிர தசையில் நாம் உலக இன்பங்களை யும், அன்பான துணைவியையும் தேடிக் கொள்கிறோம். பெண்கள், மனைவிபோன்று செல்வமும் சுக்கிரனின் காரகமாகும். சுபர் சுக்கிரன் நமக்கு நல்லதை அளிக்கவே விரும்புவார். ஆனால் நாம் அவர் காட்டும் கவர்ச்சியிலும், உணர்ச்சிமிக்க சந்தோஷத்திலும் மயங்கிவிடக்கூடாது. அழகுக்கும், செல்வத் திற்கும் கடவுள் லட்சுமியாக சுக்கிரன் இருந்தபோதும்,

அவள் நம்மை எல்லாம் போஷிப்பவளாகவும் இருக்கிறாள். வாழ்க்கையில் நாம் மற்றவர்

அவள் நம்மை எல்லாம் போஷிப்பவளாகவும் இருக்கிறாள். வாழ்க்கையில் நாம் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பதும், நல்ல காரியங்களைச் செய்வதும், செய்யவில்லை என உணரவைப்பதும், நாம் மதிக்கக் கூடிய பிறர் நம்மை மதிக்காதிருப்பதும் போன்ற நிகழ்வுகள் இந்த தசா காலத்தில் நிகழ்கின்றன. அவள் (சுக்கிரன்) நமக்கு குருவாக, ஆசிரியையாகப் பல நல்லவழிகள் புதிய பாடங்களை ஆழமாகக் கற்றுத்தர நினைத்தாலும், சுக்கிரன் தரும் சுகமான, சந்தோஷமான வாழ்க்கையில் நாம் லயித்தூவிடுவதால், துரதிஷ்டவசமாக நாம் அவற்றைக் கற்றுக்கொள்ளமுடியாது போகிறது. பொதுவாக நாம் கஷ்டங்களிலிருந்து புதிய பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம்.

அவள் நம்மை அக்கரையோடு போஷிப் பவளாதலால், பொதுச் சேவை மற்றும் இறைச்சேவையில் நாம் ஈடுபடுவதையே விரும்புவாள். ஏனெனில் அவள் தெய்வீகத் தன்மை உடையவள் மற்றும் சரணாகதி தத்துவத்தை விரும்புபவளுமாவாள். அதிபரான அவள் நமக்குக் கடவுளின் அரசவையில், வெள்ளித்தட்டில் உணவு பரிமாற விரும்புபவள். அவளது தசாக் காலத்தில் மிகுந்த கஷ்டத்துக்குள்ளானாலும் நாம் பல பாடங்களைக் கற்க முடிகிறது என்பதே உண்மை.

thasa

சந்திரன்

நாம் தொடர்புகளைத் தேடும் காலமாகும். திருமணம், குடும்பம் மற்றும் தாய்மை (பெண்ணுக்கு), பொதுஜனம், மக்கள் அவர்களின்மீதான ஆர்வம் ஆகியவை சந்திரனின் மூலக் கருத்தாகும். வியாபாரம் தொடங்குதல், வீடு வாங்குதல், பந்தயப் பொருளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை மிக முக்கியமானதாகும். பலம் மிக்கச் சந்திரன், அவள் தசையில் நம் வாழ்க்கையை மிகச் சிறந்ததாக ஆக்கிவிடுகிறாள். ஆனால் அவளே பலமற்றவளாக இருப்பின், மற்றவர்களைப்போல் நமக்கும் ஏன் நல்வாழ்க்கை அமையவில்லை என மருக வைத்திடுவாள்.

மனம் மற்றும் நினைவுக்கு அதிபதியான சந்திர தசையில், குடும்பம், குழந்தைகள் மற்றும் வீட்டோடு தொடர்பற்று இருக்க நேரிட்டால், சில நேரங்களில் பால்ய நினைவுகள் தோன்றலாம். நாம் எவ்வாறு வளர்க்கப்பட்டோம், நம் சந்ததியை எப்படி வளர்த்தோம் என்றெல்லாம் சிந்தித்து, மன நோய்க்கும், மன உளைச்சலுக் கும் ஆளாகலாம். சந்திரன், சாதுவான கிரகமாதலால் அவள் தசையில் என்ன கஷ்டங்கள் வந்தாலும், அவை மென்மையானதாக இருக்கும். மனோகாரகனான சந்திரன் நிலையற்ற மனம், கவர்ச்சி, காதல் ஜுரம் ஆகியவற்றைத் தந்து அத் தசை நமது வாழ்க்கையில் ஒரு ஊறுபட்ட, காயப்பட்ட பகுதியாகிவிடுகிறது.

செவ்வாய்

செவ்வாய் தசையும் ஒரு சுறுசுறுப்பான மற்றும் வேகமான தசாவாகும். இக்காலத்தில் தான் நாம் பொறுமையாகவும், தைரியத் துடனும், மிகுந்த சக்தியுடனும் நம் குறிக் கோள்களை அடைய முனைப்புடன் முயற்சி செய்வோம். விளையாட்டு, போட்டிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைத்தும் இக்காலத்தில் முக்கியமானதாகும். ஒழுக்கமான நடவடிக்கைகளால், நம் வாழ்க்கையில் நம்மை முன்னேற்றத்துக்கு மிக அருகில் அழைத்துச்செல்வது பலம்மிக்க செவ்வாய் தசையாகும். பலமிழந்த செவ்வாய் தைரியமற்ற தன்மையை கொடுத்து முன்னேற்றத்துக்குத் தடை தரும். இத்தசை திருப்தி அளிக்கலாம் அல்லது மற்றவர்களுடன் வீண் விவாதம், சண்டையிடல் மற்றும் அதிகாரப் போராட்டங்கள் ஆகியவற்றைத் தரலாம். பலவீனமான செவ்வாய், எடுபடாமல் போகும் நியாயத்திற்கான போராட்டம், அதில் தோல்வி அடைதல் ஆகியவையும் ஏற்படும். மேலும் கூட்டாளிகள், நண்பர்களிடம் மற்றும் உடன்பிறப்புகளுடன் போராடும் நிலையும் ஏற்படும். பூமி காரகன் செவ்வாய் நிலபுலன் களையும் வாங்கும் சக்தி அளிப்பான்.

ராகு

ராகு தசாவில் வாழ்க்கை தன் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறது. அவருடைய சக்தி கிரகண மாவதால், இக்காலத்தில் நம் மனதை, உள்மனம் கிரகணமாக்கி, எதுவும் நமக்கு புரியாததுபோல் உணர்கிறோம். மாயையினால், நாம் கற்பனைக்கு எட்டாத இடங்களிலெல்லாம் இருக்க நேரிடுகிறது. பிறகு, அனைத்தும் மாறி நாம் ஏதோ செய்துகொண்டிருப்போம். ராகு நம்மைக் கட்டுப்படுத்தும் உள்மனம், அந்தக் கட்டுப்பாட்டினால் நம் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காண்கிறோம். ராகு தசாவில் நாம் வெற்றிகளை அடைகிறோம். குண்டலினி சக்தியை நம்மால் அனுபவிக்க முடிகிறது. அந்த அனுபவங்களை நாம் ஒரு முதிர்ச்சியின்றி, புத்திசாலித்தனத்தை உபயோகிக்காமல் அடைந்துவிடுவதால், நம் வாழ்க்கை கட்டுப்பாடின்றி செல்வதுபோல் உணர்கிறோம்.

குரு

இவருடைய தசா காலம் நமக்குக் குழந்தைகள், செல்வம் மற்றும் கௌரவம் ஆகியவற்றைத் தருகிறது. குரு நமக்கு சிலவற்றை கற்றுத் தருகிறார். நம்பிக்கை மற்றும் மத நம்பிக்கைகள் கிரகமான குரு வாழ்க்கையில் மிகுந்த நம்பிக்கைகளைத் தருகிறார். குருவுடன் தொடர்புகொண்டு நம்மை மதப்பற்று மிக்கவராகவும், ஒழுக்கமுடையவராகவும் ஆக்குகிறார். மேலும் எப்போதும் நல்லவற்றையே செய்வதற்கும், மற்றவர்களுக்கு கெடுதல் செய்யக்கூடாது என்ற நல்லறிவும் நமக்கு வழங்குகிறார். பலவீனமான குரு நம்மை உண்மையற்றவராகவும், சுயநலவாதியாகும், அகந்தை மிக்கவராகவும் ஆகிவிடுகிறார். நமக்கு மோசமான ஆசிரியர்களைத் தருகிறார் அல்லது ஆசிரியர்களுடன் பிரச்சினைகளை உருவாக்குகிறார். இக்காலத்தில் ஆரோக்கியக் குறைவு, செல்வமிழப்பு, குழந்தை இழப்பு மற்றும் பொருள் இழப்பு ஆகியவற்றைத் தருகிறார். ஆயினும், குரு ஒரு சாதுவான கிரகமாவதால், நமக்குக் கஷ்டங்களை தாங்கும் பக்குவத்தை யும், அறிவையும் மற்றும் பிரச்சினை கள் புரிந்துகொள்ளும் தன்மையையும் தருகிறார். எவராவது நமக்குக் குரு என அறிமுகப் படுத்திக்கொண்டு, நம் வாழ்க்கையில் திடீரென நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவார். குரு ஒரு கருணைக்கடல், சொல்ல முடியாத பெரும் சக்தி, நல்ல கர்மாக்களை நாம் அனுஷ்டிப்பதன் மூலமாக நம்மை வாழ்க்கையின் உச்சத்துக்கே அழைத்துச் செல்வார்.

சனி

மனதில் உள்ளதை சுதந்திரமாக வெளியிடக் கூடிய குரு தசையில் இருந்து, எதையும் அனுபவபூர்வமாக உணரக்கூடிய சனி தசைக்கு வழிவிடுகிறார் குரு. சனி தசையில் நாம் உணரும் உண்மை என்னவென்றால் இந்த எண்சாண் உடம்பும், மனமும் ஒருநாள் அழிந்துபோகும் என்பதுதான். இதை நமது உடலில் ஏற்படும் வலிகளாலும், வேதனைகளாலும், நமக்குப் பிரியமானவர்கள் இறப் பின்மூலமாகவும், தீராத நோய்கள், அதனால் ஏற்படும் பயம், இவைகளால் நிலைமை மோசமாகுதல் ஆகியவற்றின்மூலமாகவும், அவர் உணரவைக்கிறார். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உலகத்தில் கிடைக்கின்ற லாபங்களோடும், சந்தோஷங் களோடும், நெருக்கமாக இருக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு சனி தசா நம்மைக் காயப்படுத்துகிறது. ஆயினும் அனுபவத்தையும், ஊக்கத்தையும், விடாமுயற்சியும் தரும் சனி, அதன்மூலமாக நம்மை நமது இலக்கை அடைய, பொறுப் பான குணத்தையும், வெற்றிக்கான ஆசைகளை யும் ஏற்படுத்துகிறார்.

சனியானவர் உணர்வுபூர்வமாகவும், உடலளவிலும் நாம் உடைந்து, ஓய்ந்து, இடிந்து அமரும் வரை, பொறுப்பு எனும் மிகப்பெரிய பளுவை நமது தலையில் ஏற்றிவிடுகிறார். சனி தசாவில் நம்மை நமக்குப் பிரியமானவர்களோடு மருத்துவமனையில் இருக்கச் செய்யமுடியும். முதியவர்கள் இறப்பு, அவர்கள் விட்டுசென்ற பொருட்கள், பிதுரார்ஜித சொத்துகள், ஆயுள் காப்பீடு, உயில்கள், வங்கிக்கணக்கிலுள்ள சேமிப்புக்கள், குடும்ப சம்பந்தமான சரித்திரம் ஆகியவற்றைப் பற்றி பேசவைக்கும். நாம் உண்மையை மறைக்கும் தன்மைக்கு ஈடாக கஷ்டங்கள் தருபவன். கடமை தவறாது இரும்புப்பிடி கொண்டு ஆட்சி செய்பவன். எனவே சனி தசா மிகுந்த ஆன்மிக வளர்ச்சிக்கு, விடாமுயற்சிமூலம் உயர்வடைவதற்கும் மற்றும் உண்மையை மட்டுமே காண்பதற்குமான காலமாகிறது. சனி நாம் இந்த உலகக் கவலைகளில் உழல்வதைவிட, தனிமையில் வாழ்வதற்குக் கற்றுத்தருகிறார். மேலும், ஆடம்பரமற்ற, எளிமையான வாழ்க்கை வாழக் கற்றுத் தருகிறார். மனிதாபிமானம், மற்றவர் இன்னல் கண்டு இரக்கம் கொள்ளும் மனது ஆகிய வற்றையும் கற்றுத்தருகிறார். ஏனெனில், நாம் கஷ்டப்படும் போதுதானே மற்றவர்களின் கஷ்டங்களை உணர்ந்து, அவர்களுக்கு உதவ முன்வருகிறோம்.

சனி தசா மன அழுத்தம், பயம், என்ன நடக்குமோ என்ற கவலை, தாழ்வு மனப் பான்மை ஆகியவற்றையும் தந்துவிடுகிறான்.

புதன்

ஒரு வரைமுறை மற்றும் தடைகளைத் தரும் சனி தசை, விளையாட்டுத்தனமான, விநோதமான சக்திகளைக்கொண்ட புதன் தசைக்கு வழிகாட்டுகிறது.

புதியன கற்றுக்கொள்வதற்கும், ஆய்வுகளில் ஈடுபடுவதற்கும் அவற்றில் வெற்றிபெறுவதற்கான மன தூண்டுதலையும், ஆர்வத்தையும், சிரத்தையும் அளிப்பவன் புதனாவான். ஆயின், இவ் அதீத தூண்டுத லான நாம் செய்யும் செயல்களை வெளியில் தெரியாத அளவுக்கு ஆக்கிவிடுகிறான். இவ்வாறு நடுநிலை வகிக்கும் புதனின் குணமானது எப்போதும் பிரச்சினைகளைக் கொடுத்துவிடுகிறது.

நம் வெற்றிக்குத் தேவையான சரியான தகவல்களை நமக்கு அளித்து, நமது வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்துத்தருவது புதனின் வேலையாகும். சரியானவற்றை சொல்லுதல், சரியான முடிவுகளை எடுத்தல், சரியான நபர்களிடம் நட்புக்கொள்ளுதல் ஆகியவையே நம்மை எதிலும் வெற்றிபெற புதன் காட்டும் வழியாகும்.

புதன் தசா காலங்களில் நம் வாழ்க்கை யின் முன்னேற்றங்களை ராக்கெட் போல் உயர்த்தும் புதன் திடீரென கீழே அதல பாதாளத்துக்கு கொண்டு சென்றுவிடுகிறான். நாம் திட்டமிட்டுச் செய்யும் காரியங்களால் சிகரத்தையும் அடையலாம் அல்லது கடினமான காரியங்களால், வாழ்க்கையில் சிறு சிறு எதிர்மறை நிகழ்வுகளால் நசுக்கவும்படலாம். இதன்காரணமாக, சத்தியிழப்பு, கற்பனை கலந்த வாழ்க்கை, மனரீதியாக பாதிப்படைதல் போன்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன.

புதன் வேகமான மனதின் தன்மைக்கு ஒளியூட்டக்கூடியவர். அவர் தரும் மன உறுதிப்பாட்டுக்கு இத்தகைய வேகம் தேவைப்படுகிறது. நாம் உடனடியாக முடிக்கவேண்டிய காரியங்களில், எதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும், என முடிவெடுக்கும் திறன், அதை துல்லியமாக அனுமானித்து நிறைவேற்றும் திறன், ஆகியவையே புதனை எதையும் பகுத்துணர்வதற்கான கடவுளாக உயர்த்தி விடுகிறது. மற்ற கிரகங்களைவிட புதன் மட்டுமே நம்மை நமது உணர்ச்சிகளிலிருந்து விடுவிக்கிறது. இதுவே பகுத்துணரும் செயலாகிறது.

செல்: 97891 01742

bala180823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe