Advertisment

ஓவியாவை மிரட்டும் வில்லன்கள்!

/idhalgal/balajothidam/villains-bullying-oviya

டந்த இருபது நாட்களுக்குமுன்பு டைரக்டர் சற்குணத்தின் "களவாணி-2' டீசர் வெளியானது. அதில் ஹீரோ விமல் பேசும் அரசியல் டயலாக்கால் டீசர் செம வைரலாகி, படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலவித கஷ்டங் களுக்கிடையே டைரக்டர் சற்குணம், படத்தை நல்ல படியாக எடுத்த முடித்த நிலையில்தான், விநியோகஸ்தர் சிங்காரவேலன் ரூபத்தில் வில்லங்கம் வந்தது. சிங்காரவேலனுக்கே உரிய சில திருகு ஜாலவேலைகளால் அரண்டுபோனார் சற்குணம்.

இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் "களவாணி-2'-வை ரிலீஸ் பண்ணும் மும்முரத்தில் சற்குணம் இருந்தபோதுதான், கோர்ட்டில் ஸ்டே வாங்கினார் சிங்காரவேலன். ஸ்டே வாங்கிய இரண்டாவது நாளே அந்த ஸ்டே ஆர்டர் ரத்து செய்யப் பட்டதும், நிம்மதிப் பெருமூச்சு விட்டார் சற்குணம். இப்போது சகலவழிகளிலும் சந்தோஷமாக இருக்கும் சற்குணம், பட ரிலீஸ் வேலைகளில் செம பிஸியாகிவிட்டார்.

Advertisment

oviya

படத்தின் ஹைலைட்டே, அரசியல்வாதியாக வரும் "பப்ளிக் ஸ்டார்' துரை சுதாகர்தானாம். "ராவன்னா' என்கிற ராஜேந்திரன் என்ற கேரக்டரில் வில்லத்தனத் தில் மிரட்டியிருக்காராம் துரை சுதாகர். ஹீரோவாக "தப்பாட்டம்' படத்தில் அறிமுகமானாலும், "களவாணி-2'-வில் வெயிட்டான வில்லன் என்பதால் ஓ.கே. சொல்லிலிட்டாராம் துரை சுதாகர். ""ரொம்ப கேஷுவலா நடித்து அசத்தியிருக்கார். இந்தப்பட ரிலீசுக்குப்பிறகு துரைசுதாகரைத் தமிழ் சினிமாவில் சிறந்த வாய்ப்பு கள் தேடிவரும்'' என்று பெருமிதமா கச் சொன்னார் டைரக்டர் சற்குணம்.

துரை சுதாகர் பொளலிடிக்கல் வில்லன் என்றால், இன்னொரு வில்லனும் படத்தில் இருக்கிறார். ராஜ்மோகன் என்பவர் வில்லன் ராஜ் என்ற பெயருடனேயே ஹீரோயின் ஓவியாவின் அப்பாவாக- வில்லனாக அறிமுகமாகிறார். டைரக்டர் சற்குணத்திற்கு சிங்காரவேலன் வில்லன் என்றால், ஹீரோயின் ஓவியா விற்கு துரை சுதாகர், வில்லன் ராஜ் என்ற இரண்டு வில்லன்கள்.

படத்தைப் பற்றிய சென்டி மென்ட் நியூஸ் ஒன்று. படம் சிறப்பாக வரவேண்டியும், சூப்பர் வெற்றியைத் தரவேண்டியும் டைரக்டர் சற்குணமும் அவரது அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் ஏழுபேரும் தைப்பூசத் தன்று பழனி முருகனுக்கு மாலை போட்டு, விரதமிருந்து பங்குனி உத்திரத்தன்று பழனிக்குப்போய் நேர்த்திக் கடன் செலுத்திவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

சிங்காரவேலனின் இம்சையை அந்த பழனி மலைமீது அமர்ந்திருக்கும் முருகவேலன் துடைத்தெறிந்திருக்கிறார் போல. பரவாயில்லையே இதுவும் நல்ல ஸ்கிரிப்டாத்தான் இருக்கு.

cine070519
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe