Advertisment

சகல குறைகளையும் தீர்க்கும் விக்னேஸ்வர மகாஎந்திரம்! -ஆர். சுப்பிரமணியன்

/idhalgal/balajothidam/vigneswara-mantra-solve-all-grievances

ந்தியத் திருநாட்டின் அனைத்து மக்களும் தத்தம் வீடுகளிலும் திருக்கோவில்களிலும் கொண்டாடி மகிழும் தெய்வத் திருவிழாக்களில் விநாயக சதுர்த்தி விழா முதன்மையாகக் கருதப்படுகிறது. சகலவிதமான சங்கடங்களையும் தீர்த்துவைக்கும் முழுமுதற் கடவுளாக விநாயகரே அமைகிறார். எந்தவொரு சுபகாரியத்திலும் முதன்முதலில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை செய்வதை வழக்கமாக இன்றும் தொடர்ந்து வருவதைக் காணலாம். சக்தி வாய்ந்த விநாயகர் எளியமுறையில் ஆறு மற்றும் குளக்கரைகளிலும் கம்பீரமாகக் காட்சி தருவதைப் பார்க்கிறோம். இந்த விநாயகர் ஆனைமுகம் கொண்டதன் புராணப் பின்னணி பெரும்பாலோர் அறிந்ததே.

Advertisment

சாஸ்திர

ந்தியத் திருநாட்டின் அனைத்து மக்களும் தத்தம் வீடுகளிலும் திருக்கோவில்களிலும் கொண்டாடி மகிழும் தெய்வத் திருவிழாக்களில் விநாயக சதுர்த்தி விழா முதன்மையாகக் கருதப்படுகிறது. சகலவிதமான சங்கடங்களையும் தீர்த்துவைக்கும் முழுமுதற் கடவுளாக விநாயகரே அமைகிறார். எந்தவொரு சுபகாரியத்திலும் முதன்முதலில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை செய்வதை வழக்கமாக இன்றும் தொடர்ந்து வருவதைக் காணலாம். சக்தி வாய்ந்த விநாயகர் எளியமுறையில் ஆறு மற்றும் குளக்கரைகளிலும் கம்பீரமாகக் காட்சி தருவதைப் பார்க்கிறோம். இந்த விநாயகர் ஆனைமுகம் கொண்டதன் புராணப் பின்னணி பெரும்பாலோர் அறிந்ததே.

Advertisment

சாஸ்திர நூல்களில் குறிப்பிட்டபடி விநாயகப் பெருமான் அவதரித்த ஜனனக் குறிப்புகள் பின்வரு மாறு அமைகின்றன.

vin

மாதம்: ஆவணி.

திதி: வளர்பிறை சதுர்த்தி திதி.

நட்சத்திரம்: ஹஸ்தம்.

ராசி: கன்னி.

லக்னம்: விருச்சிகம்.

இவற்றை அடிப்படையாகக்கொண்டு விநாயகப் பெருமானின் உன்னத ஜாதகம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜாதக மேன்மைகள்

Advertisment

ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் உச்சம் என்ற நிலை பெற்றுள்ளன. கடகத்தில் குருவும், கன்னியில் புதனும், மகரத்தில் செவ்வாயும் உச்சம். சூரியன் சிம்மத்தில் ஆட்சியாகவும் அமைகிறது.

லக்னத்திற்கு ஐந்தாம் இடத்து (பூர்வபுண்ணிய ஸ்தானம்) அதிபதியான குரு ஒன்பதாம் வீட்டில் (பாக்கிய ஸ்தானத்தில்) உச்சம் பெற்றமைவது சிறப் பான அம்சம்.

லக்னாதிபதியான செவ்வாய் உச்சம் பெற்று, உச்சம் பெற்ற குருவின் நேரடி ஏழாம் பார்வை பெறு வது, ஞானத்தின் உறைவிடமாக விளங்கு வதை அறியலாம்.

பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று அறியப்படும் ஐந்தாம் வீட்டை சுபகிரகங்களான குரு (ஒன்பதாம் பார்வை), சந்திரன், புதன், சுக்கிரன் (ஏழாம் பார்வை) பார்வையிடுவதால் முழுமுதற் கடவுளாகக் கருதப் படுகிறார். எந்த ஒரு காரியத்திற்கும் முக்கியத்துவம் பெறுகிறார்.

லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் மூன்று சுபகிரகங்கள் அமைவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.

ஞானகாரகன் எனப்படும் கேது லக்னத்தில் அமைந்து, உச்சம் பெற்ற வேதங்களுக்குத் தலைவரான குரு பார்வை பெறுவதால், குறைகளைத் தீர்க்கும் கணநாயகனாக விளங்குவது புரிகிறது. கேதுவுக்கு அதிதேவதையாகவும் அறியப்படு கிறார்.

பத்தாவது வீட்டில் சூரியன் ஆட்சியாக அமர்ந்து திக்பலம் பெறுவதுடன், மூன்றாம் வீட்டில் செவ்வாய் உச்சம், பெற்றதாலும் சனி பகவான் இவரைப் பிடிக்காமல் விலகிநின் றார் என்றே கூறப்படுகிறது. சனி தரும் கஷ்ட- நஷ்டங்களைத் தீர்த்துவைப்பவர் இவரே என்பது தெளிவாகிறது.

விக்னேஸ்வர எந்திரம் இப்படிப்பட்ட ஒப்பற்ற விநாயகர் ஜாதகத்தை பக்தர்கள் பயன்படுத்தி பெரும்பயன்கள் பெறலாம். மேற்கூறிய அற்புத ஜாதகத்தை தூய செப்புத் தகட்டில் வரைந்துகொள்ளலாம்.

அதற்கு பிரேம் போட்டு நாம் அன்றாடம் வழிபடும் விநாயகர் திருவுருவத்தின் அருகே வைத்து வழிபட்டும் வரலாம். தினமும் சந்தனம், குங்குமம் சாற்றி அறுகம்புல் மற்றும் நறுமண மலர் தூவி வணங்கலாம். சதுர்த்தி தின விரதம் அனுஷ்டிக்க லாம். முழுக்கடலை சுண்டல் வாரம் ஒருமுறை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு அளிக்கலாம். தமக்குத் தெரிந்த விநாயகர் துதிகளை தமிழிலோ, வடமொழியிலோ உச்சரித்து வரலாம்.

தூய்மையான மனதுடன், பக்தியுடன் மேற்கூறிய வாறு வழிபட்டுவர சங்கடங்களை நீக்கி எல்லா வரங்களையும் அள்ளித்தருவார் விநாயகப் பெருமான் என்று உறுதியாக நம்பலாம்.

செல்: 74485 89113

bala280619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe