புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந் தால், ஜாதகர் பொய் பேசுவார். பெண் மோகம் இருக்கும். மற்றவர்களின் ரகசியங் களைப் பிறரிடம் கூறும் பழக்கம் இருக் கும். ஏமாற்றும் குணம் இருக்கும். அடிக்கடி பயணங்கள் செய்வார். தைரிய குணம் இருக் கும். அதிகமாக தூங்குவார்.
புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், பெண் மோகம் இருக்கும். ஜாத கர் வீட்டில் சண்டை போடுவார். ஒரு கண்ணில் பிரச்சினை இருக்கும். பணம் சம்பாதிப்பதற்காக பயணம் செய்வார். சகோதரர்களுடன் வாதம் செய்வார். நிறைய பேசுவார். கமிஷன் ஏஜென்ட், தரகர் ஆகிய தொழில்களில் இருப்பார்.
புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வியாபாரம்
புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந் தால், ஜாதகர் பொய் பேசுவார். பெண் மோகம் இருக்கும். மற்றவர்களின் ரகசியங் களைப் பிறரிடம் கூறும் பழக்கம் இருக் கும். ஏமாற்றும் குணம் இருக்கும். அடிக்கடி பயணங்கள் செய்வார். தைரிய குணம் இருக் கும். அதிகமாக தூங்குவார்.
புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், பெண் மோகம் இருக்கும். ஜாத கர் வீட்டில் சண்டை போடுவார். ஒரு கண்ணில் பிரச்சினை இருக்கும். பணம் சம்பாதிப்பதற்காக பயணம் செய்வார். சகோதரர்களுடன் வாதம் செய்வார். நிறைய பேசுவார். கமிஷன் ஏஜென்ட், தரகர் ஆகிய தொழில்களில் இருப்பார்.
புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வியாபாரம் செய்வார். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். சீதளம் இருக்கும். சிலர் ஓவியர்களாக, நடிகர்களாக இருப்பார்கள். சிலர் பாடகர்களாக இருப்பார்கள்.
புதன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு வியாபாரம் நன்றாக நடக்கும். அதன்மூலம் பணம் சம்பாதிப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
ஜாதகருக்கு மற்றவர்களைக் குறைகூறும் பழக்கம் இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும். ஜாதகர் பிறரை மதிக்க மாட்டார். ஆணவம் அதிகமாக இருக்கும்.
புதன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், எஞ்சீனியர் களாக இருப்பார்கள். சிலர் ஊடகங்களில் இருப்பார்கள். சிலர்
ஓவியர்களாக இருப் பார்கள். சிலர் நகைகள் செய்பவராக இருப்பார்கள். பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும்.
புதன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், மன நோய் இருக்கும். பெண் மோகம் இருக்கும். தோலில் நோய் இருக் கும். அதிகமாக தூங்கும் பழக்கம் இருக்கும். ஜாதகர் நிறைய சாப்பிடுவார். அதிகமாக பயணங்கள் செய்வார்.
புதன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல மனைவி அமைவாள். உயிரணுக்களில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். வியாபாரம் செய்வதற்காக சிலர் வெளியூர் செல்வார்கள். பெயர், புகழ் இருக்கும். நன்கு பணம் சம்பாதிப்பார்கள். சிலரின் ஜாதகத்தில் புதன் சரியில்லையெனில், அவர்கள் திருநங்கைகளாக இருப்பார்கள்.
புதன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், ஜீரண பிரச்சினை இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்கள். சிலர் வெளியூர்
களில் வியாபாரம் செய்வார் கள். கண்ணில் பிரச்சினை இருக்கும். சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும்.
புதன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தர்மசீலனாக இருப்பார். பொய் பேசுவார். 28 வயதிற்குப்பிறகு, பணம் சம்பாதிப்பார். 36 வயதிற்குப்பிறகு, மேலும் அதிகமாக சம்பாதிப்பார். சிலர் சோம்பேறியாக இருப்பார்கள்.
புதன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். வியாபாரம் செய்வார். நல்ல மனைவி அமைவாள்.
அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்றம், இறக்கம் இருக்கும். கவனமாக இருக்கவேண்டும். சிலர் துறவியாக இருப்பார்கள்.
புதன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். பல வியாபாரங்களையும் செய்வார்கள். பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பார்கள். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.
புதன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், 32 வயதிற்குப்பிறகு, ஜாதகர் நிறைய சம்பாதிப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். இளம் வயதில் வயிற்றில் நோய் இருக்கும். சிலருக்கு மஞ்சள் காமாலை இருக்கும். சிலரை டைஃபாய்ட் நோய் பாதிக்கும். சிலர் அதிகமாக பயணங்கள் செய்வார்கள். சிலர் போதைக்கு அடிமையாக இருப்பார்கள்.
செல்: 98401 11534