Advertisment

மணவாழ்வில் சுக்கிரன் தரும் சுகபோகங்கள்! -எஸ். விஜயநரசிம்மன்

/idhalgal/balajothidam/venus-brings-happiness-marriage-s-vijayanarasimhan

சுக்கிரனுடன் சூரியன் இணைய- ஜாதகர் உடலுறவில் தேர்ந்தவர். அரசகுல மங்கைபோன்ற உருவ அமைப்புகொண்ட, செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மனைவி அமைவாள்.

சந்திரன் இணைய- உயர் சமூகத்தில் உதித்த மனைவி; முரண்பாடுகள் உள்ள வள்.

Advertisment

செவ்வாய் இணைய- ஜாதகர் காமம்மிக்கவர். மனைவி இளமை யான, வாளிப்பான, வசீகரத் தோற்றமுடையவர்.

புதன் இணைய- அறிவுள்ள, புத்திசாலித்தனம்மிக்க, இளமைமிக்க, பெருந்தன்மைமிக்க மனைவி அமைவாள். எப்போதும் காமத்தைப் பற்றியே பேசுபவளாகவும், ஒழுக்கக் கேடான இலக்கியங்கள்மீது ஆர்வ முடையவளாகவும் இருப்பாள்.

குரு இணைய- அழகிய, பரிசுத்த மான, ஒழுக்கம்மிக்க மனைவி அமை வாள். நல்ல குழந்தைகளைப் பெற்றெடுப்பாள். திருமண பந்தத்திலிருந்து விலகி தவறான வழிகளில் செல்லமாட் டார்கள்.

Advertisment

சனி இணைய- சாந்தமான, தன்னடக்கம்மிக்க மனைவி அமைந்து, மணவாழ்வில் மகிழ்ச்சி பொங்க வாழ்வார். சனி பாதிப்படைய மோசமான மனைவி அமைவாள்.

ராகு இணைய- ரகசிய காதல் விவகாரங்களில் வெற்றி. கேது இணைய- மிகவும் உணர்ச்சிகரமான காம விவகாரங்களை உடையவர்.

பன்னிரு பாவங்களில் சுக்கிரன் தரும் பலன்கள்

லக்ன பாவம்: பெண்களால் மிகவும் கவரப்படுவார். சிருங்கார ரசமுள்ளவர். மனைவியை மிகவும் நேசிப்பவர்.

2-ஆம் பாவம்: மனைவிக்கு அடங்கி நடப்பவர். மணவாழ்வில் முழுத் திருப்தி அடையமாட்டார். எதிலும் திருப்தியடையாத மனைவியை உடையவர்.

3-ஆம் பாவம்: கடமை உணர்வுள்ள மனைவி அமைந்து, நல்ல குடும்பமும் அமையும். பல பெண்களோடு மகிழ்வோடு உறவாடுவார்.

4-ஆம் பாவம்: சரசம் செய்வதில் சமர்த்தர். மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமையும்.

5-ஆம் பாவம்: காதல் விவகாரம் உடையவர். சிருங்கார ரசனையுள்ளவர்.v 6-ஆம் பாவம்: ஒழுக்கமற்றவர். வீரியக் குறைவுள்ளவர். எதிர்பாலரால் வெறுக்கப்படக்கூடியவர். நோயுள்ள மனைவியை உடையவர்.

7-ஆம் பாவம்: காம விருப்பம் அதிகமுடையவர். அழகுமிக்க துணையை உடையவர். காமரசம் ததும்பும் குணமுடையவர்.

8-ஆம் பாவம்: தவறான உறவுகள் இருக்கும். காதல் விவகாரங்களில் கஷ்டங்கள் ஏற்படும். ஆரோக்கியக் குறைவுள்ள மனைவி உடையவர்.

9-ஆம் பாவம்: பக்தியுள்ள மனைவி; மகிழ்ச்சியான மணவாழ்க்கை உடையவர்.

10-ஆம்

10-ஆம் பாவம்: சிறப்பாகத் திருமணம் நடக்கும். மனைவியால் லாபங்களும், உடலுறவில் உன்னத மகிழ்ச்சியும் இருக்கும்.

11-ஆம் பாவம்: மனைவிமூலம் செல்வம் சேரும். காதல் உணர்வுமிக்கவர்.

12-ஆம் பாவம்: காமசுகம் அடைவதில் அதிக நாட்டமுடையவர். கொள்கைகள் அற்றவர். நோயுள்ள மனைவி அமைவாள்.

மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கைக்குரிய கிரக இணைவுகள்

வலுவான, அனுகூலமான 7-ஆமதிபதி இருத்தல்; 6, 8, 12-க்கு அதிபதியாக இல்லாத கிரகம் 7-ல் இருத்தல்; 7-ஆம் வீட்டைத் தன் சுய வீடாகக்கொண்ட அசுபரும் மகிழ்ச்சியான மணவாழ்வைத் தருவர்.

கேந்திரம் அல்லது கோணத்தில் அமர்ந்த 2, 7 மற்றும் 12-ஆமதிபதிகள் குருவால் பார்க்கப்படல்; 7-ஆம் வீட்டில் அமர்ந்த கிரகத்திற்கு 2, 7, 11-ல் சுபர் இடம்பெறுதல்; 5 மற்றும் 7-ஆம் பாவாதிபதிகள் வலுவுடன் இருத்தல்; 7-ஆமிடத்தையும், 7-ஆமதிபதியையும் சுபர் பார்த்தல்;

குருவும், களத்திர பாவாதிபதியும் வலுவுடன் இருத்தல்; 5 அல்லது 9-ஆம் பாவாதிபதிகள் சுக்கிரன்மீது பார்வை செய்தல்; லக்னம், 3, 7, 11 ஆகிய பாவாதிபதிகளின் பார்வை சுக்கிரன்மீது விழுதல்; வலுமிக்க கோள்களுடன் குடும்ப, களத்திர பாவாதிபதிகள் இணைதல்; சுப ராசியில் லக்னாதிபதியும், களத்திர பாவாதிபதியும் இணைந்திருத்தல்;

லக்னாதிபதி, 7-ஆம் பாவாதிபதிக்கு மிகவும் அருகிலிருத்தல்; 7-ஆமதிபதி சுக்கிர னாகி, குருவின் இணைவு அல்லது பார்வை பெறுதல்; 2 மற்றும் 7-ஆமதிபதிகள் பலம் பொருந்தியவர்களாக இருத்தல் அல்லது அவர்கள் தங்கள் ஆட்சி வீட்டிலிருத்தல்; 2 மற்றும் 11-ஆமிடத்திற்கு குறிகாட்டியான சூரியன் அல்லது சந்திரனைப் பார்த்தல்; நவாம்ச சக்கரத்தில் லக்னாதிபதியும், 7-ஆமதிபதியும் 6-8 அல்லது 2-12-ஆக இல்லாதிருத்தல்.

dd

விரைவில் திருமணமாவதற்குரிய கிரக இணைவுகள்

சுக்கிரன் தனது ஆட்சி வீட்டிலோ உச்ச வீட்டிலோ இருந்து, 7-ஆமதிபதி சுபர் ராசியில் இருத்தல்; சூரியன் 7-ல், சுக்கிரன் 7-ஆமதிபதியுடன் இணைதல்; சுக்கிரன் 2-ல் இருக்க, 7 ஆமதிபதி 12-ல் இருத்தல்; கேந்திர கோணங்களில் குருவும், குடும்பாதிபதியும் இணைந்திருத்தல்; லக்னாதி பதியும், 7-ஆமதிபதியும் லக்னத்தில் இருத்தல்;

7-ஆமதிபதியோ சுக்கிரனோ சுப கர்த்தாரியில் அல்லது கேந்திரத்தில் இருத்தல்; 7-ஆமதிபதி சுபராகி லக்னாதிபதியுடன் இணைதல்; லக்னாதிபதி, குடும்பாதிபதி மற்றும் களத்திர பாவாதிபதி முறையே லக்னம், 2, 7 ஆகிய பாவங்களில் இருத்தல்; லக்னாதி பதியுடன் இணைவுபெற்ற பலம்மிக்க சுக்கிரன்;

லக்னாதிபதி 7-ஆமிடத்திலும் 7-ஆமதிபதி கேந்திரத்திலும் இருத்தல்; குடும்பாதிபதி மற்றும் லாபாதிபதி பரிவர்த்தனை பெறுதல்; சுக்கிரன் கேந்திரத்திலிருந்து, சுக்கிரனுக்குக் கேந்திரத்தில் லக்னாதி பதியும் சனியும் இருத் தல்;

7-ஆமதிபதி பாதிப்படையாமல், வலுவுடன் இருந்து, சனி 7-ஆமிடத்திலோ 5-ஆமிடத்திலோ இடம்பெறுதல்; 7-ஆமிடத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சமாகி இருத்தல்; சுப ராசியில் வலுமிக்க 7-ஆமதிபதி இருத்தல்; 7-ஆமதிபதி லக்னத் திலோ 2-ஆமிடத்திலோ இருந்து சுபரின் இணைவோ, பார்வையோ பெறுதல்.

தாமதத் திருமணம்- திருமண மறுப்புக்கான கிரக நிலைகள்

புதன் அல்லது சனி தொடர்புடைய சுக்கிரன் 8-ஆமிடத்தில் இருத்தல்; 7-ஆம் வீடு, 7-ஆமதிபதி, களத்திர காரகன்மீதான அசுப கிரகத் தாக்கம்; சுபரின் தாக்கமில்லாத சனி 7-ஆமிடத்திலோ 5-ஆமிடத்திலோ இருத்தல்; தனுசு லக்னமாகி அதில் புதன் இருத்தல்; 7-ஆமதிபதி அல்லது நவாம்ச லக்னாதிபதி அல்லது நவாம்சத்தில் சந்திரன் நின்ற ராசியாதிபதி அஸ்தங்கம் அடைதல்;

அஸ்தங்கம் அடைந்த சுக்கிரன் நீசமடைந்து அசுப கிரகங்களுக்கிடையே இருத்தல்; செவ்வாய் மற்றும் சனியால் பாதிப்படைந்த சந்திரன் மற்றும் சுக்கிரன்; சனி- செவ்வாய், சந்திரன் மற்றும் சுக்கிரனுக்கு 7-ல் இருத்தல்; 7-ஆமிடத்தில் அசுப கிரகமிருந்து, அலி கிரகங்களான புதன் அல்லது சனியின் பார்வை பெறுதல்; சுபரின் தொடர்பில்லாமல் அல்லது அசுபரின் பார்வை பெற்ற ராகு களத்திர பாவத்தில் அமர்தல்; லக்னாதிபதி, 7-ஆமதிபதி மற்றும் லக்னம், 7-ஆமிடம் ஸ்திர ராசியில் இருக்க, சந்திரன் சர ராசியில் இருத்தல்;

லக்னம், 7-ஆம் வீடு, 2-ஆம் வீடு ஆகியவை சனியின் ராசியில் இடம்பெறுதல்; சூரிய- சந்திரர்கள் மற்றும் சுக்கிரன் ஆகியோர் சனியின் தாக்கம்பெறுதல்-

அதாவது சனியின் சாரம், ராசி, நவாம்சத்தில் இருத்தல்; வக்ர கிரகங்கள் குடும்பத்திலோ அல்லது களத்திர பாவத்திலோ இருந்து, அதன் அதிபதிகள் ஆட்சி பெற்றோ, பார்வை புரிந்தோ இருத்தல்; பாதிப்படைந்த 2-ஆம் வீடு அல்லது 7-ஆம் வீடு, அந்த வீட்டின் கிரகங்கள் ஸ்திர ராசியில் இருத்தல்; 7-ஆமிடத்து தொடர்போடு, கீழ்க்கண்ட கிரகங்களின் இணைவு அல்லது பரஸ்பரப் பார்வை பெறுதல்: சனி- செவ்வாய், சுக்கிரன்- சந்திரன், சுக்கிரன்- சூரியன், சூரியன்- சனி;

சூரியன்- சுக்கிரனுக்கிடையே உள்ள தூரம் 43 டிகிரிக்கு மேலிருக்க, சுக்கிரன் நீசமாக மற்றும் சனியால் பார்க்கப்படுதல்; ராகு- கேது 2-8 அல்லது 5-11 -ஆக இருக்க தாமதம், தடைப்பட்ட திருமணமாகும்.

எப்படியிருக்கும் திருமண வாழ்க்கை?

சுக்கிரன் வர்கோத்தமம்பெற- பண்புள்ள மனைவி அமைவாள்.

நவாம்சத்தில் சுக்கிரன் உச்சம்பெற- கௌரவம்மிக்க மனைவி அமைவாள்.

லக்னாதிபதியும், 7-ஆமதிபதியும் 6-8 -ஆக அமைய- சதாசர்வ காலமும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் மனைவி அமைவாள்.

குடும்பம் மற்றும் களத்திர பாவமும், அவற்றின் அதிபதிகளும் பாதிப்படைந் திருந்தால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குத் தொல்லை தரும் மனைவி அமைவாள்.

லக்னாதிபதியும் 7-ஆமதிபதியும் 2-12 -ஆக அமைய- கணவனை வெறுக்கும் மனைவி அமைவாள்.

களத்திர பாவத்தில் தேவகுரு இருக்க- தம்பதிகள் தங்களுக்குள் பரஸ்பர அன்பு மழை பொழிவார்கள்.

லக்னாதிபதி 7-ல் இடம்பெற்றாலும் ஒருவருக்கொருவர் அன்புடையவராக இருப்பர்.

சுப ராசியில் 7-ஆமதிபதி இருந்து, 7-ல் சுபர் இடம்பெற- ரூபவதியான மனைவி அமைவாள்.

களத்திர பாவத்தில் சுப பார்வைபெற்ற சூரியன் அல்லது சுக்கிரன் இடம்பெற- ஜாத கருக்கு மிகவும் விசுவாசமுள்ள மனைவி அமைவாள்.

களத்திர பாவத்தை தேவகுரு பார்க்க- கற்புள்ள மனைவி அமைவாள்.

கன்னி ராசியில் 7-ஆமதிபதி இருக்க- தைரியமான, எதையும் எதிர்கொள்கிற மனைவி அமைவாள்.

குருவின் இணைவு அல்லது பார்வைபெற்ற 7-ஆமதிபதி ஜாதகருக்கு, அவரை நன்றாகப் புரிந்துக்கொள்ளக்கூடிய பண்புமிக்க மனைவியைத் தருவார்.

மீன ராசி 7-ஆமிடமாகி குருவின் பார்வைபெற- சந்தோஷமற்ற இல்லற வாழ்க்கையை அளிக்கிறது.

செவ்வாயின் ராசிகளிலோ சனியின் ராசிகளிலோ 12-ஆமிடத்திலோ சுக்கிரன் இடம்பெற ஜாதகர் உணர்ச்சிமிக்கவர் ஆகிறார்.

பலம்மிக்க களத்திர காரகனும், பாக்கிய பாவத்தில் இடம்பெற்ற பலம்மிக்க 7-ஆமதிபதியும் மனைவிமூலமான அதிர்ஷ்டத்தை குறிகாட்டுகிறார்கள்.

7-ஆமிடம், 7-ஆமதிபதிமீதான சனி மற்றும் செவ்வாயின் தாக்கம் எதற்கும் எரிச்சலடையக்கூடிய மனைவியைத் தருகிறது.

கடகம், சிம்ம ராசிகளை லக்னமாகக்கொண்ட தம்பதிகளிடையே பிரிவு ஏற்படும் அல்லது மனைவி விதவையாவாள்.

சுக்கிரன், சனி இணைவு மண வாழ்க்கையில் துன்பங்களையும் வழக்கு விவகாரங்களையும் தருகிறது.

செவ்வாய் அல்லது சனி வர்க்கங்களில் சுக்கிரன் இருக்க அல்லது இவர்களில் ஒருவரின் பார்வைபெற- ஜாதகருக்கு மாற்றான் மனைவியோடு நெருக்கத்தை உண்டாக்கிவிடுகிறது.

பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் ஆணின் சூரியன் இருக்க- மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கை அமையும்.

ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு திரிகோணத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது சூரிய- சந்திரர்கள் பரிவர்த்தனை அடைந்தாலும் இணக்கமான- சந்தோஷமிக்க மணவாழ்வை மலரச்செய்கிறது.

ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் ராசியில் மற்றவரின் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டதும் காதல் கொள்வர். 5-ஆம் வீட்டில் அசுப கிரகம் இருக்க, ஜாதகர் அழகில்லாத, அருவருப்பான, வெறுக்கப்படவேண்டிய பெண்மேல் காதல் கொள்வார்.

7-ஆமதிபதிக்கு, லக்னாதிபதி இயற்கை அல்லது தற்காலிக நண்பரானாலும் உண்மை அன்பு செலுத்தும் மனைவி அமைவாள்.

7-ஆமதிபதி, 7-ஆம் வீடு சுப சம்பந்தம் பெற- வருகிற மனைவி அடக்கமுள்ள வளாகவும், விசுவாசம் மிக்கவளாகவும் அமைவாள். லக்னாதிபதி மற்றும் சுபருடன் கூடிய சுக்கிரன் 2, 3, 6, 7, 11-ல் இருந்தால் திருமணத்திற்குப் பின்னர் வாழ்க்கையில் அதிர்ஷ்ட ஒளி வீசும்.

சுக்கிரன் 2 அல்லது 10-ஆம் வீட்டிலிருந்து, 7-ஆமதிபதி திரிகோணத்தில் இருந்தால், திருமணத்திற்குப்பிறகு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் பல ஏற்படும்.

7-ஆமதிபதி அசுப கிரகத்துடன் இணைந்து, தன, பாக்கிய அல்லது கர்ம பாவத்தில் இருந்தாலும் மேற்சொன்ன பலன்களே ஏற்படும்.

லக்னாதிபதியைவிட 7-ஆமதிபதி வலுமிக்கவராக இருப்பின்- மனையாள் உயர் குடும்பத்திலிருந்து வருவாள்.

7-ல் குரு இருக்க- ஜாதகர் மதிப்புமிக்க குடும்பத்திலிருந்து வந்த, செல்வம் மிக்க, கற்புள்ள மனைவியுடன் மகிழ்ச்சியோடு வாழ்வார்.

செல்: 97891 01742

bala240622
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe