க்னத்தில் தன் நண்பரான புதன் வீட்டில் சுக்கிரன் நீசமடைகிறார். அத னால் ஜாதகருக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷம் குறைவாக இருக்கும். தர்ம சிந்தனை குறையும். உடல்நலம் சுமாராக இருக்கும். கணவன்- மனைவி உறவில் பிரச்சினை ஏற்படும்.

2-ஆம் பாவத்தில் சுயவீட்டில், துலா ராசியில் சுக்கிரன் இருந்தால் பண வரவு நன்றாக இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். குடும்பத் தில் மகிழ்ச்சி நிலவும். ஜாதகர் தர்மச் செயல் களில் ஈடுபடுவார். பெயர், புகழ் இருக்கும்.

3-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் உடன்பிறப்புகளால் ஜாதகருக்கு சந்தோஷம் கிட்டும். எப்போதும் தைரியமாக இருப்பார். நன்கு பணம் சம்பாதிப்பார்.

4-ஆம் பாவத்தில் எதிரியான குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாத கருக்கு தாயால் நிம்மதி கிடைக்கும். பூமி, வாகனம் இருக்கும். சொந்தத்தில் அழகான வீடு இருக்கும். வாசனைப் பொருட்களை விருப்பத்துடன் பயன் படுத்துவார். வர்த்தகம் நல்ல லாபத்துடன் நடக்கும். ஜாதகர் தர்ம காரியங்களில் ஈடுபடுவார்.

Advertisment

sf

5-ஆம் பாவத்தில், திரிகோணத்தில் சனியின் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால் குழந்தை பாக்கியம் உண்டு. பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பார்கள். அவர் களால் ஜாதகருக்கு புகழ் கிடைக்கும். தன் அறிவைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். தர்மச் செயல்களைச் செய்வார்.

6-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சுக்கிரன் இருந்தால் அதிர்ஷ்டத்தில் குறை ஏற்படும். பணம் வருவதில் சிக்கல் இருக்கும். குடும்ப சந்தோஷத்தில் குறை உண்டாகும். தர்ம காரியங்களில் விருப்பம் இருக்காது. ஜாதகர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பணம் சம்பாதிப்பார். கடுமையாக உழைத்து தன் எதிரிகளை வெல்வார். வாழ்க்கையில் சண்டை, வழக்கு ஆகியவை இருக்கும்.

7-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். ஜாதகர் பெண்ணாக இருந்தால் கணவர் அழகாக இருப்பார். வர்த்தகத்தில் வெற்றி கிடைக்கும். ஜாதகர் தர்மச் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். காம சிந்தனைகள் அதிகமாக இருக்கும். நல்ல பணவசதி இருக்கும்.

8-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சுக்கிரன் பலவீனமடைகிறார். அதனால் ஜாதகருக்கு அதிர்ஷ்டத்தில் குறையிருக்கும். பணம் சேமிப்பதில் இடையூறு ஏற்படும். தர்மச் செயல்கள் செய்வதில் சிரமங்கள் உண்டாகும். குடும்பத்தில் வீண் சண்டை நடக்கும். ஆனால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு.

பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஜாதகர் தன்னை போதைப் பொருட்களுக்கு அடிமை யாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

9-ஆம் பாவத்தில் சுய வீட்டில், ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக் குத் தலையெ ழுத்து நன்றாக இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபடுவார். பெயர், புகழ் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி நல்லவளாக இருப்பாள்.

10-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சுக்கிரன் இருந் தால் ஜாதகரின் தந்தை புகழ் பெற்றவராக இருப்பார். ஜாத கருக்கு அவரது ஆசீர்வாதம் உண்டு. வியாபாரம்மூலம் பணம் வரும். ஜாதகர் புத்திசாலித் தனமாக செயல்பட்டு நிறைய பணம் சம்பாதிப்பார்.

11-ஆம் பாவத்தில் சந்திர னின் கடக ராசியில் சுக்கிரன் இருந்தால் வருமானம் நன்றாக இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார். பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். நியாயவாதியாக இருப்பார். தர்மச் செயல்களில் விருப்பம் உண்டு. பணக்காரராக இருப் பார். எதிலும் சாதுர்யமாக செயல்படுவார். தன் பேச்சால் பிறரை ஈர்ப்பார். சந்தோஷமாக வாழ்வார். புகழுடன் இருப்பார்.

12-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகரின் முயற்சிகளில் சிறிய தடைகள் உண்டாகும். பணத்தை சேமிக்கமுடியாது. வெளித்தொடர்புகளில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவாக இருக்கும். எனினும் வெளித்தொடர்பை வைத்து ஜாதகர் தன் குடும்பத்தைக் காப்பாற்று வார்.

செல்: 98401 11534