லக்ன கேந்திரத்தில், தன் எதிரியான குருவின் தனுசு ராசியில் சுக்கிர பகவான் இருந்தால் ஜாதகரின் உடல்நலத்தில் அவ்வப்போது சிறிய பிரச்சினைகள் உண்டாகும். ஆனால்
ஜாதகர் தைரியசாலியாகவும் சாதுரிய குணம் கொண்டவராகவும் இருப்பார். கடின உழைப்பாளி. பகைவர்களை வெல்வார். சண்டை, சச்சரவுகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்.
2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் பணத்தை சேமிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார். அவருக்கு தன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடிருக்கும். பகைவர்களைப் பேச்சுமூலமாகவே வென்றுவிடுவார். கடுமையாக உழைப்பார். பெயர், புகழ் இருக்கும். நல்ல பணவசதி இருக்கும்.
3-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் தைரிய குணமுள்
லக்ன கேந்திரத்தில், தன் எதிரியான குருவின் தனுசு ராசியில் சுக்கிர பகவான் இருந்தால் ஜாதகரின் உடல்நலத்தில் அவ்வப்போது சிறிய பிரச்சினைகள் உண்டாகும். ஆனால்
ஜாதகர் தைரியசாலியாகவும் சாதுரிய குணம் கொண்டவராகவும் இருப்பார். கடின உழைப்பாளி. பகைவர்களை வெல்வார். சண்டை, சச்சரவுகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்.
2-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் பணத்தை சேமிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருப்பார். அவருக்கு தன் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடிருக்கும். பகைவர்களைப் பேச்சுமூலமாகவே வென்றுவிடுவார். கடுமையாக உழைப்பார். பெயர், புகழ் இருக்கும். நல்ல பணவசதி இருக்கும்.
3-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் தைரிய குணமுள்ளவராக இருப்பார். கடுமையாக உழைக்கக்கூடியவராக இருப்பார். பணத்தை சேமிப்பார். உடன் பிறந்தோருடன் கருத்து வேறுபாடிருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
4-ஆம் பாவத்தில் குரு பகவானின் மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். அதனால் பூமி, வாகனம் இருக்கும். நல்ல வருமானம் உண்டு. ஜாதகர் பகைவர்களை வெல்வார். பெரிய வர்த்தகத்தில் ஈடுபடுவார். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அதில் வெற்றிபெறுவார். சந்தோஷமாக வாழ்வார்.
5-ஆம் பாவத்தில், மூலத் திரிகோணத்தில், செவ்வாயின் மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் அறிவாளியாக இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். கலாரசனை கொண்டவராக இருப்பார். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடிருக்கும். அவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் பகைவர்களை வெல்வார். நீதிமன்ற வழக்குகளில் வெற்றிகிடைக்கும். தைரியமாகவும், சந்தோஷமாகவும் ஜாதகர் வாழ்வார்.
6-ஆம் பாவத்தில், சுயவீட்டில், ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். பணம் சம்பாதிப்பார். வெளித் தொடர்புகள் நன்றாக இருக்கும். நல்ல பேச்சுத் திறமை இருக்கும். மாமனார் வீட்டில் நல்லபெயர் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
7-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடிருக்கும். வியாபாரத்தில் தடைகளைக் கடந்து வெற்றி கிடைக்கும். பகைவர்களைத் தன் செயல்களின்மூலம் ஜாதகர் அச்சம்கொள்ள வைப்பார். சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருக்கும். கடுமையாக உழைத்துப் பணம் சம்பாதிக்க வேண்டியதிருக்கும்.
8-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பணவரவில் பல தடைகள் இருக்கும். வெளித்தொடர்புகளை மிகவும் சாதுரியமாக ஜாதகர் கையாள்வார். கடுமை யாக உழைத்துப் பணத்தை சம்பாதிப்பார்.
9-ஆம் பாவத்தில் மூலத் திரிகோணத்தில், சூரியனின் சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் அன்றாடச் செயல்களை முடிப்பதற்கு ஜாதகர் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடிருக் கும். சாதுரியமாகப் பேசிப் பகைவர்களை வெல்வார். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். பண வசதி உண்டு.
10-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைகிறார். அதனால் ஜாதகருக்கு தன் தந்தையுடனான உறவில் பிரச்சினை இருக்கும். அரசாங்க விஷயங்களில் சில சிக்கல்கள் உண்டாகும். பெயர், புகழில் தடை ஏற்படும். பகைவர்களால் ஜாதகருக்குத் தொல்லைகள் இருக்கும். ஆனால் ரகசிய உத்திகளைப் பயன்படுத்தி தன் செயல்களை ஜாதகர் நிறைவேற்றுவார்.
11-ஆம் பாவத்தில் சுய ராசியான துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு நல்ல லாபம் இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். ஜாதகர் தன் விரோதிகளை வெல்வார். சிக்கல்களை சமாளித்து கவனமாகப் பணத்தை சம்பாதிப்பார். வாரிசுகளால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகும்.
12-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித்தொடர்புகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். சண்டை, சச்சரவுகள் இருக்கும்.
வாழ்க்கையில் பல போராட் டங்களை ஜாதகர் சந்திக்க வேண்டியதிருக்கும்.
செல்: 98401 11534