லக்ன கேந்திரத்தில், குருவின் மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறது. அதனால் ஜாதகர் அழகாக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். தைரியசாலியாக இருப்பார். உடன் பிறந்தோரால் சந்தோஷம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கிடைக்கும். அன்றாட வாழ்க்கை ஆனந்தமயமாக இருக்கும்.
மனைவியால் கிடைக்கும் சந்தோஷத்தில் குறையிருக்கும். வியாபாரத்தில் தடைகளைக் கடந்து வெற்றி கிடைக்கும். ஜாதகருக்கு பெண் மோகம் இருக்கும்.
2-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக்கும். முயற்சிகளில் தடங்கல்களைக் கடந்து வெற்றி கிடைக்கும். குடும்ப சந்தோஷத்தில் சில தடைகள் இருக்கும். உடன்பிறந்தோருடன் உள்ள உறவில் சிறிய குறையிருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. வெளியே தன்னைப் பெரிய பணக்காரரைப்போல காட்டிக்கொள்வார். எப்போதும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருப்பார்.
3-ஆம் பாவத்தில் சுயராசியான ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறந்தோரால் சந்தோஷம் கிடைக்கும். எனினும், சில நேரங்களில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். பூர்வீக சொத்து கிடைக்கலாம். தர்மச் செயல்களைச் செய்வதில் தடைகள் இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். பெயர், புகழ் கிட்டும். நல்ல பணவரவுண்டு.
4-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு அன்னையுடன் உள்ள உறவில் சிறிய குறை யிருக்கும். வீடு, வாகனம் வாங்குவதில் சில பிரச்சினைகள் எழும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக்கும். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். லாபம் வருவதில் சில சிக்கல் கள் இருக்கும். ஜாதகர் சாதுரியமாகவும் கடுமையாகவும் உழைத்து, படிப்படியான வளர்ச்சியைக் காண்பார். பெண்மோகம் அதிகமாக இருக்கும்.
5-ஆம் பாவத்தில் மூல திரி கோணத்தில், சந்திரனின் கடக ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு படிப்பு நன்றாக இருக்கும். அதன்மூலம் அவர் பயன்பெறுவார். ஏதாவதொரு கலையில் ஈடுபாடிருக்கும். நல்ல பேச்சுத்திறமை உண்டு. உடன்பிறந்தோரால் மகிழ்ச்சி கிடைக்கும். மனைவி யால் சந்தோஷம் கிடைக்கும். வாரிசுகளால் ஆனந்தம் உண்டாகும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். எனினும், சுக்கிரன் 8-ஆம் பாவத்திற்கு அதிபதியாக இருப்பதால், அனைத்து விஷயங்களிலும் சிறு தடைகள் இருக்கும்.
6-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். பகைவர் களால் பிரச்சினைகள் உண்டாகும். சிறுநீர் கழிக்கும் உறுப்பில் நோய் இருக்கும். பல கஷ்டங்களைக் கடந்து வெற்றி கிடைக்கும். ஜாதகர் புத்திசாலித்தனமாக செயல் படுவார். உடன்பிறந்தோரால் கஷ்டம் இருக்கும். முன்னோரின் சொத்து கிடைக்காது. தைரியத்தில் குறையிருக்கும்.
7-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைகிறது. மனைவியால் கிடைக்கும் சந்தோஷத்தில் குறையிருக்கும். வியாபாரத்தில் பிரச்சினை ஏற்படும். உடன்பிறந்தோரால் கவலை உண்டாகும். தைரியத்தில் குறையிருக்கும். அவ்வப்போது சிறிய நோய்களின் பாதிப் பிருக்கும். அன்றாடச் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். ஜாதகர் பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.
8-ஆம் பாவத்தில் தன் சுயராசியான துலா ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. பூர்வீக சொத்து கிடைக் கும். அன்றாடச் செயல்களை ஜாதகர் தைரியமாக முடிப்பார். உடன்பிறந்தோரால் சந்தோஷம் இருக்காது. ஜாதகர் அலட்சிய குணம் கொண்டவராக இருப்பார்.
9-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், தர்மச் செயல்களை ஜாதகர் செய்யமுடியாது. தன் நல்வாழ்க்கைக்காக ஜாதகர் கடுமை யாக உழைக்க வேண்டியதிருக்கும். அன்ற ô டச் செயல்களை ஆனந்தமாக செய்வார். பூர்வீக சொத்து கிடைக்கும். பணவரவு இருக் கும். எப்போதும் பணி பற்றிய எண்ணத்து டனே ஜாதகர் இருப்பார்.
10-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் தந்தையுடன் உள்ள உறவில் குறையிருக்கும். வர்த்தகத் தில் தடைகள் இருக்கும். அரசாங்க விஷயத் தில் பிரச்சினை இருக்கும். தாயுடனான உறவில் தடங்கல்களுக்குப் பிறகு நிம்மதி நிலவும். பூமி வாங்குவதில் பல பிரச்சினைகளுக்குப்பிறகு வெற்றி கிடைக்கும். பொது வாக எல்லா விஷயங்களிலுமே தடைகள் உண்டாகும். ஜாதகர் சாதுரியமாக பல சட்ட விரோத செயல்களைச் செய்து பணம் சம்பாதிப்பார்.
11-ஆம் பாவத்தில் தன் நண்பரான மகர ராசியில் சுக்கிரன் இருந்தால் பல தடைகளைக் கடந்து பணவரவு இருக்கும். முன்னோ ரின் சொத்து கிடைக்கும். ஜாதகர் தைரிய சாலியாக இருப்பார். உடன்பிறந்தோருடன் உள்ள உறவில் குறையிருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். தன் செயல்களை மிகுந்த கவனத்துடன் செய்வார்.
12-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சுக்கிரன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளில் அதிக செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்து கிடைக்காது. உடன்பிறந் தோருடன் சிறிய பிரச் சினைகள் இருக்கும். எனினும், ஜாதகர் தைரிய மாக இருப்பார். கம்பீரமாக நடைபோடுவார்.
செல்: 98401 11534