மேஷ லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப் பார். மற்றவர்களை மதிக்கக்கூடியவராக இருப்பார். பணவரவு நன்றாக இருக்கும். சுக்கிரன் தன் 7-ஆம் பார்வையால் 7-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், ஜாதகருக்கு அழகான மனைவி இருப்பாள். வர்த்தகத்தில் நல்ல வருமானம் இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும்.

மேஷ லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தில் சுயவீட்டில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் பணக் காரராக இருப்பார். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுக்கிரன் தன் 7-ஆம் பார்வையால் 8-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், சிலருக்கு புதையல் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

12

3-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் புத்திசாலியாக இருப்பார். தைரியகுணம் கொண்டவர். சுக்கிரன் 7-ஆம் பார்வையால் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால், ஜாதகர் தர்மத்தின் படி நடப்பார். நல்ல பணவசதி இருக்கும்.

4-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால், நல்ல பணவரவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். சுக்கிரன் 7-ஆம் பார்வையால் 10-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், தந்தை புகழுடன் இருப்பார்.

ஜாதகரும் நல்ல புகழுடன் இருப்பார்.

5-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் படிப்பு நன்றாக இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 7-ஆம் பார்வையால் 11-ஆம் பாவத் தைப் பார்ப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலி. நன்கு படித்தவராக இருப்பார். ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இருக்கும்.

6-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் தன் பகைவர்களிடம் மிகவும் புத்தி சாலித்தனமாக நடந்து, அவர்களிட மிருந்து தப்பித்துக்கொள்வார். மிகவும் எச்சரிக்கை குணம் கொண்டவர். சுக்கிரன் 7-ஆம் பார்வையால் 12-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தேவை யற்ற விஷயங்களில் தன் சக்தியை வீணடிப்பார்.

7-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். சுக்கிரன் 7-ஆம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பதால், ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார். பெயர், புகழ் கிடைக்கும்.

ஜாதகர் தன் காரியங்களை மிகுந்த கவனத்துடன் முடிப்பார். நல்ல பணவசதி இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

8-ஆம் பாவத்தில் சுக்கிரன் தன் விரோதியான செவ்வாயின் வீட்டில் இருந்தால், செய்யும் செயல்களில் தடை இருக்கும். மனைவியுடன் பிரச்சினை உண்டாகும். தொழிலில் பல கஷ்டங்கள் இருக்கும். சுக்கிரன் தன் 7-ஆம் பார்வையால் 2-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், கடுமையாக உழைத்தால்தான் பணவரவு கிட்டும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

9-ஆம் பாவத்தில்- குருவின் வீட்டில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் மிகவும் கவனமாக இருப்பார். பிறரை ஈர்க்கக்கூடியவர். சிறந்த குடும்பத் தலைவராக இருப்பார். நல்ல மனைவி வாய்ப்பாள். சுக்கிரன் தன் 7-ஆம் பார்வையால் 3-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், ஜாதகர் தன் தம்பி- தங்கையைக் காப்பாற்றுவார்.

10-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்கு தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயத்தில் புகழ் கிடைக்கும். சுக்கிரன் 7-ஆம் பார்வையால் 4-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், தாயார் நல்ல உடல்நலத்துடன் இருப்பார். வாகன வசதி இருக்கும்.

11-ஆம் பாவத்தில் சுக்கிரன் தன் நண்பரான சனியின் வீட்டில் இருந் தால், ஜாதகர் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நிறைய பணத்தை சம்பாதிப்பார். சுக்கிரன் 7-ஆம் பார்வையால் 5-ஆம் பாவத்தைப் பார்ப்பதால், மனைவி, குழந்தைகள் நல்லவர்களாக இருப்பார்கள். வர்த்தகம் சிறப்பாக நடக்கும்.

12-ஆம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் அங்கு உச்சமடைவார். ஜாதகர் அதிகமாக செலவழிப்பார். மிகுந்த புத்திசாலித்தனத்துடன் இருப்பார். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். சிலருக்கு பெண்மோகம் இருக்கும்.

செல்: 98401 11534