Advertisment

துலாம் லக்னத்திற்கு 12 பாவங்களில் சுக்கிரன்!

/idhalgal/balajothidam/venus-12-sins-libra

சுக்கிர பகவான் துலாம் லக்னத்தில், சுய ராசியில் இருந்தால் ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும். சுக்கிரன் 8-ஆம் பாவத்திற்கு அதிபதி யாக இருப்பதால், சிலநேரங்களில் உடல்நலத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்படும். பிறர் பாராட்டுவதை ஜாதகர் விரும்புவார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் பணத்தை சம்பாதிப்பதற்கு கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். குடும்பத் தில் உள்ளவர்கள் பணத்திற்காக எப்போதும் பிரச்சினையை உண்டாக்குவார்கள்.

Advertisment

ss

3-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறந் தோருடன் கருத்து வேறுபாடிரு

சுக்கிர பகவான் துலாம் லக்னத்தில், சுய ராசியில் இருந்தால் ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். உடல்நலம் நன்றாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும். சுக்கிரன் 8-ஆம் பாவத்திற்கு அதிபதி யாக இருப்பதால், சிலநேரங்களில் உடல்நலத்தில் சிறிய பிரச்சினைகள் ஏற்படும். பிறர் பாராட்டுவதை ஜாதகர் விரும்புவார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் பணத்தை சம்பாதிப்பதற்கு கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். குடும்பத் தில் உள்ளவர்கள் பணத்திற்காக எப்போதும் பிரச்சினையை உண்டாக்குவார்கள்.

Advertisment

ss

3-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு உடன்பிறந் தோருடன் கருத்து வேறுபாடிருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நீண்ட ஆயுள் உண்டு. முன்னோர்களின் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

4-ஆம் பாவத்தில் சனியின் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால் தாயின் உடல்நலம் நன்றாக இருக்கும். சொந்தத்தில் வீடு இருக்கும். சுக்கிரன் 8-ஆம் பாவத்திற்கு அதிபதியாக இருப்பதால் சில நேரங்களில் குடும்பத்தில் உள்ளவர்கள் விவாதம் செய்வார்கள்.

5-ஆம் பாவத்தில் சனியின் கும்ப ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். நன்கு படித்தவராக இருப்பார். நிறைய பணம் சம்பாதிப்பார். அஷ்டமாதிபதியாக சுக்கிரன் இருப்பதால், வாரிசுகளால் சில பிரச்சினைகள் உண்டாகும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு.

6-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். அதனால் ஜாதகர் பகைவர்களை வெல்வார். பெயர், புகழ் பெறுவார். கடுமையாக உழைப்பார். முன்னோர்களின் சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.ஆடம்பர மான மனிதராக வெளியே தன்னைக் காட்டிக் கொள்ள ஆடம்பரமாக செலவழிப்பார்.

7-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் சிலருக்கு திருமண விஷயத்தில் சில தடங்கல்கள் ஏற்படும். சிலருக்கு மனைவியுடன் பிரச்சினை உண்டாகும். ஜாதகர் கடுமையாக உழைத்துப் பணத்தை சம்பாதிப்பார். நீண்ட ஆயுள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைப் பதற்கு வாய்ப்பிருக்கிறது.

8-ஆம் பாவத்தில் தன் சுய ராசியான ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் முன்னோர்களின் சொத்து கிடைக்க லாம். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். சுமாரான தோற்றத்துடன் இருப்பார். சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவார்கள். ஆடம்பரமாக வாழ்வார்கள். இளம்வயதில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும்.

9-ஆம் பாவத்தில் சுக்கிரன் மூலத் திரிகோணத்தில், புதனின் மிதுன ராசியில் இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்ம காரியங்களில் ஈடுபடுவார். ஆனால் அவற்றைச் செய்யும்போது அவரது மனதில் ஏதாவது குறையிருக்கும். சிலர் அலட்சிய குணத்துடனும், சோம்பேறியாகவும் இருப்பார் கள். ஜாதகர் அழகான தோற்றத் தைக் கொண்டிருப்பார். சிலர் வெளியே தங்களை கம்பீரமாகக் காட்டிக்கொள்வார்கள்.

10-ஆம் பாவத்தில் சந்திர னின் கடக ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு தந்தை யுடனான உறவு சரியாக இருக் காது. வியாபாரத்தில் தடை உண் டாகும். ஆனால் சாதுரியமாகப் பேசி தன் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வார். அதில் அவ ருக்கு வெற்றி கிடைக்கும்.

11-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சுக்கிரன் இருந் தால் ஜாதகர் கடுமையாக உழைப் பார். நன்கு பணம் சம்பாதிப்பார். சாதுரியத்துடன் வாழ்வார். நீண்ட ஆயுள் இருக்கும். சந்தோஷமாக வாழ்வார்.

12-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைகிறார். அதனால் செலவுகள் அதிகமாக ஏற்படும்.

சிலருக்கு வெளித் தொடர்பு களால் நிறைய பிரச்சினைகள் ஏற்படும். சிலர் மெலிந்த தோற்றத்துடன் இருப்பார்கள். பலர் தங்களை வெளியே பணக் காரராகக் காட் டிக் கொள்வார் கள்.

செல்: 98401 11534

bala190822
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe