சிம்ம லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்தைக் கொண்டிருப் பார். அழகை ரசிக்கக்கூடியவர். அவருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். உடன்பிறப்புகளால் மனதில் குழப்பமிருக்கும். 10-க்குரிய சுக்கிரன் லக்னத்தில் இருப்பதால், ஜாதகர் கடுமையாக உழைக்கவேண்டியதிருக்கும். தைரிய சாலியாக இருப்பார். தன் காரியங்களை மிகுந்த கவனத்துடன் முடிப்பார். சாதுரியமாக செயல் பட்டு பெயர், புகழ்பெறுவார்.
2-ஆவது பாவத்தில் கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைகிறார். அதனால் பணம் சம்பாதிப்பதில் ஜாதகருக்கு பிரச்சினை இருக்கும். குடும்ப சந்தோஷத்தில் குறையிருக்கும். தைரியமும் குறைவாக இருக்கும். வியாபாரத்தில் தடங்கல்கள் ஏற்படும். அரசாங்க விஷயங் களில் சில பிரச்சினைகள் இருக்கும். எனினும் ஜாதகர் கடுமையாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sukiran_6.jpg)
3-ஆவது பாவத்தில் துலா ராசியில் சுக்கிரன், சுய வீட்டில் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன்பிறப்பு களால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் ஆதாயமிருக்கும். தந்தையின் சொத்து கிடைக்கும். பெரிய அளவில் வர்த்தகம் நடக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார். சாதுரியமாக செயல்பட்டு பணத்தை சம்பாதிப்பார்.
4-ஆவது பாவத்தில், விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகருக்கு தாயுடன் கருத்து வேறுபாடிருக்கும். எனினும் அவர் சந்தோஷமாக இருப்பார். வீடு வாங்கி விற்பதில் லாபம் கிடைக்கும். உடன்பிறப்புகளால் சந்தோஷம் இருக்கும். பணக்காரரைப்போல ஜாதகர் வாழ்வார்.
5-ஆவது பாவத்தில் மூலத் திரிகோணத்தில் குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் மிடுக்காகக் காணப்படுவார். நன்கு படித்தவராக இருப்பார். குழந்தை பாக்கியம், பெயர், புகழ் இருக்கும். அவரின் தகுதிகளை வைத்து பலரும் பாராட்டுவார்கள். தந்தையால், உடன்பிறப்புகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் நன்கு சம்பாதிப்பார்.
6-ஆவது பாவத்தில் சுக்கிரன், சனியின் மகர ராசியில் இருந்தால் ஜாதகர் மிகவும் எச்சரிக்கையான மனிதராக இருப்பார். பகைவர்களை வெல்வார். தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். அரசாங்க விஷயத்தில் மிகவும் கடுமையாக உழைத்து பணத்தைச் சம்பாதிப்பார். பெயர், புகழைப் பெறுவர்.
7-ஆம் பாவத்தில் சுக்கிரன் கும்ப ராசியில் தன் நண்பர் சனியின் வீட்டில் இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். மனைவியால் சந்தோஷம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உடன் பிறப்புகளுடன் உறவு நன்றாக இருக்கும். ஜாதகர் நல்ல புகழுடன் வாழ்வார். தைரிய சாலியாக இருப்பார். அனைவரிடமும் கட்டளையிடும் தொனியிலேயே பேசுவார்.
8-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். அதனால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். உடன்பிறப்புகளுடனான உறவில் குறையிருக் கும். தந்தையுடனான உறவில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் நல்ல புகழுடன் விளங்கு வார். அரசாங்க விஷயங்களில் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகர் தைரிய குணம் கொண்டவ ராக இருப்பார்.
9-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். தந்தையால் சந்தோஷம் கிடைக்கும்.
அரசாங்க விஷயத்தில் பணம் சம்பாதித்து சந்தோஷமாக வாழ்வார். ஜாதகருக்கு பாராட்டு, விருது ஆகியவை கிடைக்கும்.
10-ஆம் பாவத்தில் சுக்கிர பகவான் தன் ரிஷப ராசியில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். பிறரை ஈர்க்கக்கூடியவராக விளங்குவார். தந்தையால் சந்தோஷமிருக்கும். பல விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ஜாதகருக்குப் பலரும் உதவுவார்கள். ஜாதகரும் பலருக்கு உதவுவார். அதிர்ஷ்டசாலியாகத் திகழ்வார். மிகவும் சாதுரியமாக செயல்படுவார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.
11-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்கு நல்ல வருமானமிருக்கும். தந்தையாலும் உடன்பிறப்புகளாலும் அவருக்கு சந்தோஷம் கிடைக்கும். தொழில் நன்றாக நடக்கும். ஜாதகர் தன் பேச்சால் பலரையும் ஈர்ப்பார். பணத்தை சம்பாதிப்பார். பெயர், புகழ் பெறுவார்.
12-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் அதிக மாக செலவழிப்பார். வெளித் தொடர்புகளை வைத்து பணம் சம்பாதிப்பார். தந்தையாலும், உடன்பிறப்புகளாலும் சிறிய பிரச்சினைகள் ஏற்படும். உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-04/sukiran-t.jpg)