டக லக்னத்தில் சுக்கிர பகவான் சந்திரனின் ராசியிலிருந்தால், ஜாதகர் அழகான தோற்றத் தைக் கொண்டிருப்பார். சாதுரியத்துடன் நடப் பார். நன்கு பணம் சம்பாதிப்பார். தாயாரின் உடல் நலம் நன்றாக இருக்கும். பூமி, வாகனம் இருக் கும். பல வெற்றிகளை ஜாதகர் பார்ப்பார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சுக்கிரன், சூரியனின் சிம்ம ராசியில் இருந்தால், குடும்பத்தில் சந்தோஷமிருக்காது. ஜாதகர் அனைவரிடமும் நன்கு பழகுவார். பூமி, வாகனம் இருக்கும்.

அன்னையின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். மனைவி சந்தோஷமாக இருப்பாள்.

3-ஆம் பாவத்தில், கன்னி ராசியில் சுக்கிரன் நீசமடைகிறார். அதனால் உடன்பிறப்பு களுடன் உறவு சுமாராகத்தான் இருக்கும். ஜாதகருக்கு தைரியம் குறையும். தாயாரின் உடல்நலத்தில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் தன் குறைகளை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். வியாபாரத்தில் பல தடங்கல்கள் இருக்கும்.

ss

Advertisment

4-ஆம் பாவமான கேந்திர ஸ்தானத்தில்- சுய வீட்டில் சுக்கிரன் இருப்பதால், பூமி வாங்கும் வாய்ப்பிருக்கிறது. தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். நல்ல வீடு, வாகனம் இருக்கும். ஜாதகர் மிகவும் கவனமாக எதிலும் இருப்பார். நல்ல பேச்சாற்றல் இருக்கும். நன்கு பணம் சம்பாதிப்பார்.

5-ஆம் பாவமான திரிகோணத்தில், செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிர பகவான் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சந்தோஷமாக வாழ்வார். குழந்தை பாக்கியம் இருக்கும். ஜாதகர் சாதுர்யமாகப் பேசி பணத்தை சம்பாதிப்பார். பேசுவதில் மன்னராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும்.

6-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் பகைவர்களை வெல்வார். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். தாயாரின் உடல்நலம் சுமாராக இருக்கும். ஜாதகருக்குப் பல பெண்களுடன் தொடர்பிருக்கும். அவர் தன் வெளித் தொடர்புகளை வைத்து பணம் சம்பாதிப்பார். நல்ல வருமானம் இருக்கும்.

7-ஆம் பாவத்தில் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால், வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். மனைவியால் சந்தோஷம் இருக்கும். தினமும் பணம் வரும். சிலருக்கு திருமணம் தாமதமாக நடக்கும். பூமி, வாகனம் வாங்கலாம்.

8-ஆம் பாவத்தில் சுக்கிரன், சனியின் கும்ப ராசியில் இருந்தால், ஜாதகருக்கு இளம் வயதிலேயே உடல்நலத்தில் குறையிருக்கும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். வீடு, மனை வாங்குவதில் சில சிக்கல்கள் இருக்கும். ஜாதகர் வெளித் தொடர்புகளைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிப்பார். பெயர், புகழ் இருக்கும். குடும்ப சந்தோஷத்தில் சில பிரச்சினைகள் இருக்கும்.

9-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். அதனால், ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்.

அன்னையின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி வாங்க வாய்ப்பிருக்கி றது. ஜாதகர் வசதியாக வாழ்வார். வீடு, வாகனம் வாங்குவார். தர்மச் செயல்களைச் செய்வார். தைரிய குணமுள்ளவராக இருப்பார்.

10-ஆம் பாவத்தில் மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்கு தந்தையால் சந்தோஷம் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் ஆதாயம் இருக்கும். வர்த்தகத் தில் லாபம் இருக்கும்.

ஜாதகர் சந்தோஷமாக வாழ்வார். வீட்டில் பல அலங்காரப் பொருட்கள் இருக்கும்.

11-ஆம் பாவத்தில் ரிஷப ராசியில், சுய வீட்டில் சுக்கிரன் இருந்தால், நல்ல பணவரவிருக்கும். தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூமி வாங்கும் வாய்ப்பிருக்கிறது. ஜாதகர் பிறரிடம் இனிமையாகப் பேசி பணம் சம்பாதிப்பார். பல வித்தைகளையும் கற்றவ ராக இருப்பார்.

12-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் வெற்றி கிடைக்கும்.

அன்னையின் உடல் நலத்தில் சிறிய பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப்பார். சிலர் வெளியூருக்கோ, வேற்று மாநிலத்திற்கோ, வெளிநாட்டிற்கோ சென்று வேலை அல்லது சொந்தத் தொழிலைச் செய்வார்கள். சிலர் நிலம் வாங்கும்போது அதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு காமவெறி அதிகமாக இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.

செல்: 98401 11534