மிதுன லக்னத் தில் தன் நண்பரான புதன் வீட்டில் சுக்கிரன் விரய ஸ்தானாதிபதியாக இருந்தால், ஜாதகர் மிகவும் மெலிந்து காணப்படுவார். ஆனால் அவர் சாதுர்ய குணம் கொண்டவ ராக இருப்பார். அறிவு நன்றாக வேலைசெய்யும். அதிகமாக செலவுசெய்வார். வெளித் தொடர்பால் பணம் சம்பாதிப்பார். புகழிருக்கும். ஜாதகர் உல்லாசப் பேர்வழியாக இருப்பார்.

தன- குடும்ப ஸ்தானமான 2-ஆம் பாவத்தில், சாமானிய எதிரியான சந்திரனின் கடக ராசியில் விரயாதிபதியாக சுக்கிரன் இருக்கும்போது, செலவுகள் அதிகமாக இருக்கும். பணத்தை சேமிப்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் ஜாதகர் புத்திசாலித்தனமாக செயல்படுவார். புகழ் கிடைக்கும். படிப்பால் லாபம் இருக்கும். ஜாதகர் சுயநலவாதியாக இருப்பார். கம்பீரமான தோற்றமிருக்கும்.

mm

3-ஆம் பாவத்தில் எதிரியான சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால், தம்பி- தங்கையுடன் ஜாதகரின் உறவு சுமாராகவே இருக்கும். படிப்பில் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை தோன்றும். ஜாதகர் புத்திசாலித் தனமாக பணம் சம்பாதிப்பார். அவ ருக்கு வாக்குசாதுரியம் இருக்கும்.

4-ஆம் பாவத்தில்- சுக ஸ்தானத் தில் சுக்கிரன் நீசமடைகிறார். அத னால், அன்னையின் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். பூமி, வீடு வாங்குவதில் தடை இருக்கும். குழந்தை பாக்கியத்தில் சிறு குறை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். அதன்காரணமாக மனதில் கவலை உண்டாகும்.

5-ஆம் பாவத்தில் திரிகோணத் தில் சுக்கிரன் இருந்தால் படிப்பு நன்றாக இருக்கும். வர்த்தகம் சிறப்பாக நடக்கும். சிலருக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப்பார். வெளித் தொடர்பைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். அதிகமாகப் பேசுவார்.

6-ஆம் பாவத்தில் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில்- செவ்வாயின் விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் தன் எதிரிகளிடம் சாதுரியமாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வார். செலவுகள் அதிகமாக இருக்கும். நீதிமன்றம், வழக்கு விஷயங்களுக்குப் பணத்தை அதிகமாக செலவழிக்க வேண்டியதிருக்கும். ஆனால், ஜாதகர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி பெறுவார். வெளித் தொடர்புகளின்மூலம் ஆதாயம் இருக்கும்.

7 ஆம் பாவத்தில் சுக்கிரன், குருவின் தனுசு ராசியில் இருந்தால் இல்வாழ்க்கை நன்றாக இருக்கும். புத்திசாலித்தனமான மனைவி கிடைப்பாள். ஜாதகர் தன் செலவுகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார். வெளித் தொடர்புகளை வைத்து ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். படிப்பு நன்றாக வரும். குழந்தை பாக்கியம் இருக்கும்.

8-ஆம் பாவமான ஆயுள்பாவத்தில் தன் நண்பரான சனிபகவானின் மகர ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். கடுமையாக உழைப்பார். அவருக்கு பலருடன் வர்த்தகத் தொடர்பிருக்கும். பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடனே எப்போதும் இருப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும்.

9-ஆம் பாவத்தில் தன் நண்பர் சனியின் கும்ப ராசியில் சுக்கிரன் இருந்தால், ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். தர்மச் செயல்களைச் செய்வார். ஆனால், இளமையில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். உடன்பிறப்புகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். ஜாத கர் கடுமையாக உழைத்து வெற்றிபெறுவார்.

10-ஆம் பாவமான தந்தை ஸ்தானத்தில்- குருவின் மீன ராசியில் சுக்கிரன் உச்சமாக இருப்பதால், வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் உண்டாக வாய்ப்பிருக்கிறது. தந்தையின் சொத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்பைக்கொண்டு பணம் சம்பாதிப்பார். ஆணவம் கொண்டவராக இருப்பார். அதனால் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும்.

11-ஆம் பாவத்தில் செவ்வாயின் வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்ல வருமானம் வரும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பார். நல்ல படிப்பிருக்கும். பிள்ளைகளால் புகழ் கிடைக்கும்.

12-ஆம் பாவத்தில் விரய ஸ்தானாதி பதியான சுக்கிரன் தன் வீட்டில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் தன் வெளித் தொடர்பால் நிறைய பணம் சம்பாதிப்பார். பிள்ளைகளால் மனக் கஷ்டம் ஏற்படும். ஜாதகர் புத்திசாலித்தனம் உள்ளவர். ஆனால் மனதில் கவலை இருக்கும்.

செல்: 98401 11534